எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மத்திய அரசு நிறுவனமான தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம்  (Employees State Insurance Corporation-ESIC) சமூகப் பாதுகாப்பு அலுவலர் பதவியில் 539 காலியிடங்களை நேரடி நியமன முறையில் நிரப்ப இருக்கிறது. இந்தப் பணிக்குப் பட்டதாரிகள் விண்ணப் பிக்கலாம். வணிகவியல், சட்டம், நிர்வாகப் பட்டதாரி களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

கல்வித் தகுதியோடு அடிப்படை கம்ப்யூட்டர் அறிவு அவசியம். வயது 21 முதல் 27-க்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டும் ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் பணிநியமனம் நடைபெறும்.

எழுத்துத் தேர்வில் முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு, கணினித் தேர்வு என 3 தேர்வுகள் இடம்பெறும். முதல்நிலைத் தேர்வில் ஆங்கிலம், பகுத்தாராயும் திறன், அடிப்படைக் கணிதம் ஆகிய 3 பகுதிகளில் இருந்து 100 கேள்விகள் கேட்கப்படும். மொத்த மதிப்பெண் 100. இதற்கு ஒரு மணி நேரத்தில் விடையளிக்க வேண்டும். முதல்நிலைத் தேர்வில் வெற்றிபெறுவோர் 2ஆவது கட்டத் தேர்வான மெயின் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

மெயின் தேர்வில் பகுத்தாரா யும் திறன், பொருளாதாரம், நிதி, காப்பீடு, ஆங்கிலம், கணிதம் ஆகியவற்றில் இருந்து மொத்தம் 150 வினாக்கள் இடம்பெறும். மதிப்பெண் 200. தேர்வு நேரம் 2 மணி. இதில் வெற்றிபெறுவோ ருக்குக் கணினித் தேர்வு, ஆங்கி லத்தில் கடிதம், கட்டுரை எழுதும் தேர்வு நடத்தப் படும். 30 நிமிடம் கொண்ட கணினித் தேர்வுக்கு 50 மதிப்பெண். 30 நிமிடம் கொண்ட விரிவாக விடை யளிக்கும் தேர்வுக்கு 50 மதிப்பெண் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

தகுதியுடைய பட்டதாரிகள் இ.எஸ்.அய்.சி. இணையதளத்தைப் பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும். மெயின் தேர்வு மதிப்பெண் அடிப் படையில் தகுதியானோர் பணிக்குத் தேர்வுசெய்யப் படுவர். முதல்நிலைத் தேர்வு ஒரு தகுதித் தேர்வு மட்டுமே. இதில் எடுக்கும் மதிப்பெண் கணக்கில் கொள்ளப்படாது. ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, தேர்வுக் கட்டணம், தேர்வு மய்யம், தேர்வு முறை, சம்பளம் உள்ளிட்ட விவரங்களை இணைய தளத்தில் விளக்கமாகத் தெரிந்துகொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 5 அக்டோபர் 2018

இ.எஸ்.அய்.சி. இணையதளம்: www.esic.nic.in

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner