எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இந்தியாவின் அஞ்சல் தொடர்புத் துறையின் மய்ய அச்சாக விளங்கும் இந்திய அஞ்சல் துறை இந்தியா போஸ்ட் என்று அனைவராலும் அறியப்படுகிறது. சமீப காலங்களில் அஞ்சல் சேவையுடன் சேர்த்து இன்ன பிற சேவைகளையும் சேர்த்து ஒரே இடத்தில் வழங்கும் புதிய அவதாரத்தையும் இத்துறை எடுத்துள்ளது. அவற்றில் ஒன்றுதான் போஸ்ட் ஆபிஸ் பேமென்ட்ஸ் பேங்க். இதில் காலியாக உள்ள இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடங்கள்: போஸ்ட் ஆபிஸ் பேமென்ட்ஸ் பேங்கில் மொத்தம் 47 காலியிடங்கள் உள்ளன. இவை டாக்சேசன், பினான்சியல் பிளானிங் அண்டு பட்ஜெட்டிங், அட்மினிஸ்ட்ரேஷன், எச்.ஆர்., ரிஸ்க் பேஸ்டு ஆடிட், கன்கரன்ட் ஆடிட், வென்டார் பெர்பார்மன்ஸ் மேனேஜ்மென்ட், ரிகன்சிலியேசன், யூசர் எக்ஸ்பீரியன்ஸ், புராடக்ட் ரிசர்ச், அனலிடிக்ஸ், ரீடெய்ல் புராடக்ட்ஸ், கம்ப்ளயன்ஸ் சப்போர்ட், ஆப்பரேசனல் ரிஸ்க், டிஜிட்டல் டெக்னாலஜி, ஆகிய பிரிவுகளின் கீழ் நிரப்பப்பட உள்ளன.

வயது: விண்ணப்பிப்பவர்கள் 23 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: சிறப்புப் பணி தேர்வுகளை உள்ளடக்கிய பதவிகள் என்பதால் விண்ணப்பிக்கும் பிரிவைப் பொறுத்து கல்வித் தகுதி மாறுபடுகிறது.

தேர்ச்சி முறை: நேர்காணல் வாயிலாக தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம் ரூ. 750.

கடைசி நாள்: 2018 ஆக., 15.

விபரங்களுக்கு:: https://ippbonline.com/web/ippb/current-openings

கதை சொல்லி மாணவர்கள்

அடிப்படைவசதி, கல்வி, பொருளாதார நிலை இப்படி எல்லாவற்றிலும் பின்தங்கி இருக்கும் மாணவர்களுக்கு நம்மால் முடிந்த திறன்களைச் சொல்லிக் கொடுப்போம் என்னும் நோக்கத்தோடு, பயணம் அறக்கட்டளையை பாஸ்கர், விநோத் உள்ளிட்ட சில நண்பர்கள் கடந்த 2012இல் தொடங்கினர்.

இந்தச் சமூகத்திலிருந்து நமக்குக் கிடைத்த நல்ல விஷயங்களை விளிம்புநிலை குடும்பங்களில் இருந்து வரும் கிராமப்புற மாணவர்களுக்குத் தருவதற்காக எங் களின் பயணத்தைத் தொடங்கினோம். கடந்த அய்ந்து ஆண்டுகளாக திருநீர்மலையை அடுத்துள்ள வழுதலம்பேடு நடுநிலைப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்குக் கல்வி, விளையாட்டு, தனித் திறன் பயிற்சிகளை வழங்கிவருகிறோம் என்கிறார் பயணம் அமைப்பின் நிறுவனர் பாஸ்கர்.

கதைசொல்லி மாணவர்கள்

பள்ளிப் பாடங்களில் மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களைத் தீர்த்துவைப்பது, ஓவியம், நடனம், இசை போன்ற கலைகளில் அவர்களின் திறனை வளர்ப்பது, சுற்றுப்புறத் தூய்மையின் அவசியத்தைப் புரியவைப்பது, கணினிப் பயிற்சி, கதைகளைக் கேட்பதோடு மாணவர் களையே கதைசொல்லிகளாக மாற்றுவது போன்ற பல்வேறு பணிகளைச் செய்கிறது இந்த அமைப்பு.

அதுமட்டுமின்றி, மாணவர்களின் பல்வேறு கலைத் திறனை வெளிப்படுத்தும் போட்டிகளை நடத்திப் பரிசளிப்பது, ஆங்கிலம் பேசுவதற்கு ஏற்படும் தயக்கத்தைப் போக்குவது, மாணவர்கள் விரும்பும் பல்வேறு விதமான விளையாட்டுகளில் அந்தந்த விளையாட்டு நிபுணர்களைக் கொண்டே பயிற்சி அளிப்பது, பெற்றோர் ஆசிரியர் சந்திப்புகளை அடிக்கடி நடத்துவதன்மூலம் அவர்களுக்கு இடையே பாலமாக இருப்பது என இவர்களுடைய பணி நீள்கிறது.

இதுதவிர, ஆதரவற்ற இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்குத் தேவைப்படும் சமையல் பொருட்களையும் வாங்கித் தருகின்றனர். ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் தாய், தந்தை இருவரில் ஒருவரை மட்டுமே கொண்டிருக்கும் 30 குழந்தைகளின் கல்விக் கட்டணங்களை இவர்கள் செலுத்திப் படிக்கவைக்கின்றனர். எங்களின் உதவியோடு படித்துப் பட்டம் வாங்கித் தற்போது பணியில் இருப்பவர் களும் இந்தப் பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொள்வது மகிழ்ச்சியாக இருக்கிறது என்கிறார் பாஸ்கர்.

இணைந்த கைகள்

நான்கு அய்ந்து நபர்களால் தொடங்கப்பட்ட பயணம், சீரிய செயல்பாட்டின் மூலமாக அடுத்தடுத்துக் கல்லூரி மாணவர்களை ஈர்த்து, அவர்களையும் இந்தப் பணியில் கைகோக்க வைத்திருக்கிறது. தற்போது 40-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் சேவைப் பயணத்தில் தன்னார் வலர்களாக இணைந்திருக்கின்றனர்.

மாற்றுத் திறனாளி மாணவர்களின் விருப்பமான விளையாட்டுகளில் அவர்களுக்குப் பயிற்சி அளித்து போட்டிகளில் பங்கேற்கச் செய்கிறார்கள். இதன்மூலம் அவர்களின் போராட்டக் குணமும் தன்னம்பிக்கையும் எவருக்கும் சளைத்தது இல்லை என்பதை உலகத்துக்கு உணர்த்துகிறார்கள். மரம் நடும் பணியிலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இவர்களால் ஊக்குவிக்கப்படுகிறார்கள். இப்படியாக கடந்த அய்ந்து ஆண்டுகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் இவர்களால் நடப்பட்டிருக்கின்றன.

தொடர்புக்கு: 9941169610

விமான நிலைய ஆணையத்தில் பணியிடங்கள்

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்திய விமான நிலைய ஆணையம் (Airports Authority of India)மேலாளர், நிர்வாகி (Junior Executive) 
ஆகிய பதவிகளில் 900-க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தேவையான தகுதி

கல்வித் தகுதியானது பி.ஏ., பி.காம்., பி.எஸ்சி., பி.இ., பி.டெக்.. எம்.பி.ஏ. எனப் பிரிவுகளுக்குத் தகுந்தாற்போல் மாறுபடும். சில பதவிகளுக்குப் பணி அனுபவம் அவசியம். சில பணிகளுக்குப் பணி அனுபவம் தேவையில்லை.

வயது வரம்பு மேலாளர் பதவிக்கு 32 ஆகவும், நிர்வாகி பதவிக்கு 27 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இட ஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓ.பி.சி.) 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

தகுதியுடையவர் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, உடல்தகுதித் திறன் அடிப்படையில் பணிக்குத் தேர்வுசெய்யப்படுவர். மேலாளர் பதவிக்கு ரூ.1.25 லட்சமும், நிர்வாகி பதவிக்கு ரூ.90 ஆயிரமும் கிடைக்கும், உரிய கல்வித் தகுதி, வயது வரம்புத் தகுதி, பணி அனுபவம் உடைய பட்டதாரிகள் இந்திய விமானநிலை ஆணைய இணையதளத்தைப் (www.aai.aero) பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

ரயில்வேயில் காலிப் பணியிடங்கள்

இந்தியாவின் தரைவழிப் போக்குவரத்தில் மிக முக்கியமான பங்கினை ரயில்வேதுறை வகிக் கிறது.

நாடு தழுவிய அளவிலான வழித்தடங்கள், நவீனமய யுக்திகள், அதிகபட்ச பயணிகளை கையா ளுதல் என்று பல்வேறு வகைகளில் இந்திய ரயில்வே உலக அளவில் புகழ் பெறுகிறது.

பெருமைக்குரிய இந்திய ரயில்வேயின் தென்னக ரயில்வே பிராந்தியத்தில், 257 சபாய்வாலா காலியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வயது: 2019 ஜன., 1 அடிப்படையில் விண்ணப்ப தாரர்கள் 19 - 33 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: அரசு அங்கீ காரம் பெற்ற கல்வி நிறுவனத்தின் மூலமாக பத்தாம் வகுப்புக்கு நிகரான படிப்பினை முடித்தவராக இருக்க வேண்டும்.  எழுத்துத் தேர்வு வாயிலாக தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆனலைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ. 500.  கடைசி நாள்: 2018 ஆக., 27.

விபரங்களுக்கு: : http://onlinedatafiles.s3.amazonaws.com/docs/Engagement_Safaiwala_Categories_ContractualBasis.pdf

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner