எழுத்துரு அளவு Larger Font Smaller Font


மத்திய அரசின் முன்னணிப் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் அதிகாரிப் பதவியில் 158 காலியிடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன.
தேவையான தகுதி

இப்பதவிக்கு ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு, எம்.பி.ஏ. பட்டம் அல்லது மேலாண்மையில் பட்டயம் அவசியம். குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் அவசியம். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. வகுப்பினர், மாற்றுத் திறனாளிகளுக்கு 55 சதவீத மதிப்பெண் போதும். சி.ஏ., கம்பெனி செக்ரட்டரிஷிப், அய்.சி.டபிள்யு.ஏ. முடித்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர் ஆவர்.

வயது குறைந்தபட்சம் 21 ஆகவும் அதிகபட்சம் 30 ஆகவும் இருக்க வேண்டும். மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும் ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

என்ன கேட்பார்கள்?

எழுத்துத் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தகுதியானோர் பணிக்குத் தெரிவுசெய்யப்படுவர். ஆன்லைன்வழியிலான எழுத்துத் தேர்வில் ஆங்கிலம், வங்கித் துறை சம்பந்தப்பட்ட பொது அறிவு, நிதி மேலாண்மை ஆகிய 3 பகுதிகளில் இருந்து தலா 50 கேள்விகள் வீதம் மொத்தம் 150 கேள்விகள் இடம்பெறும். இதற்கு மதிப்பெண் 150. தேர்வு 2 மணி நேரம் நடைபெறும்.

ஆங்கிலப் பிரிவில், நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச மதிப்பெண் எடுத்துத் தேர்ச்சி பெற்றாலே போதும். அதில் எடுக்கும் மதிப்பெண் மெரிட் பட்டியலுக்குக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும். இதற்கு 100 மதிப்பெண். எழுத்துத் தேர்வுக்கும் நேர்முகத் தேர்வுக்கும் 80:20 என்ற விகிதாச்சாரத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் அளிக்கப்படும். அதன் அடிப்படையில் மெரிட் பட்டியல் தயாரிக்கப்பட்டு தகுதியானோர் பணிக்குத் தேர்வுசெய்யப்படுவார்கள்.

உரிய கல்வித் தகுதியும் வயதும் உடைய பட்டதாரிகள் வங்கியின் இணையதளத்தைப் (ஷ்ஷ்ஷ்.தீணீஸீளீஷீயீவீஸீபீவீணீ.நீஷீ.வீஸீ ) பயன்படுத்தி மே 5-க்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

தேடி வரும் நவீன வேலை

பட்டதாரிகளின் எண்ணிக்கை தேவையை மிஞ்சிவிட்ட இன்றைய காலத்தில், வேலைப் பெறுவதற்கு வெறும் பட்டப்படிப்பு மட்டும் போதாது. பட்டதாரிகள் தங்களைக் கூட்டத்திலிருந்து தனித்துக் காட்ட வேண்டியது அவசியமாக உள்ளது. அவர்கள் பட்டப்படிப்புடன் சேர்த்து ஏதாவது ஒரு குறிப்பிட்ட பாடத்தில் சிறப்புத் தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். கல்லூரிக்குக் கட்டணம் கட்டியே மாளவில்லை, இன்னும் செலவு செய்ய வேண்டுமா என்று மலைக்க வேண்டாம். படிக்க வேண்டும் என்ற முனைப்பு மட்டும் இருந்தால் செலவு எதுவும் செய்யாமலேயே உங்களால் இப்போது படிக்க முடியும்.

எங்குப் படிக்கலாம்?

ணிபீஜ் எனும் இணைய வகுப்பறை மிகவும் பிரசித்தப் பெற்ற ஒன்று. இதன் சிறப்பு என்ன வென்றால் இங்கு அனைத்துப் பாடங்களும் இலவச மாகவே கற்றுத் தரப்படுகின்றன. உங்கள் படிப்புக்கு அங்கீகாரச் சான்றிதழ் வேண்டும் என்று விரும்பினால் மட்டுமே அதற்குச் சிறு கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். ஹார்வர்டு, எம்.அய்.டி.போன்ற புகழ்பெற்ற பல் கலைக் கழகங்கள்கூட இலவசக் கல்வியை இணைய வகுப்பில் நடத்துகின்றன.

என்ன படிக்கலாம்?

கணினித் துறை என்றவுடன் பெரும்பாலோர் பொருள் வடிவமைப்பிலும் அதன் புரோகிரமிங் லாங்குவேஜ்களிலும் சுருக்கிக்கொள்கின்றனர். ஆனால், கணினி வடிவமைப்பு, ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை நிறுவுதல், நெட்வொர்க் வடிவமைப்பு, தரவுகளைப் பாதுகாத்தல், இணையத்தில் பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்துதல் என்று அதன் எல்லைகளை விரிவாக்கிக்கொண்டே செல்லலாம். இதில் தற்போது மிகுந்த தேவையும் ஆள் பற்றாக் குறையும் நிலவும் துறையாகத் திகழும் இணையப் பாதுகாப்பைப் பற்றிப் படிக்கலாம்.

இணையப் பாதுகாப்பு

இணையத்தால் இணைக்கப்பட்டுள்ள இன்றைய நவீன உலகில், உங்கள் தனிமையையும் அந்தரங் கத்தையும் தீர்மானிப்பது நீங்கள் வசிக்கும் வீடோ நீங்கள் அணிந்திருக்கும் உடையோ அல்ல. அவற்றைத் தீர்மானிப்பது இணையப் பாதுகாப்புதான்.

உங்களுடைய தனிமையையும் அந்தரங்கத் தையும் குலைப்பது இப்போது மிகவும் எளிது. உங்கள் கணினி வைரசால் பாதிக்கப்பட்டிருந்தாலோ உங்கள் மின்னஞ்சலின் கடவுக்சொல்லோ உங்கள் சமூக வலைத்தளங்களின் கடவுச்சொல்லோ திருடப் பட்டிருந்தாலோ நீங்கள் உங்களுடைய தனிமை யையும் அந்தரங்கத்தையும் இழந்துவிட்டீர்கள் என்று அர்த்தம்.

ஆனால், இன்றும் பெரும்பாலோர் போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தாலோ சோம்பேறித் தனத்தாலோ கணினிக்கும் கைப்பேசிக்கும் எளிதான கடவுச் சொற்களையே பயன்படுத்துகின்றனர். உதார ணத்துக்கு 1234, குழந்தையின் பெயர், மனைவியின் பெயர் போன்றவை. அதில் இன்னும் சிலர் கடவுச் சொல்லே இல்லாமலும் அவற்றைப் பயன்படுத்து கின்றனர்.

இணையப் பாதுகாப்பு பற்றிய படிப்பு, உங்கள் கணினிக்கு என்னென்ன ஆபத்துகள் நேரச் சாத்தியமுள்ளது என்பதையும் அந்த ஆபத்துகளை எப்படி எதிர்கொள்ளலாம் என்பதையும் கற்றுத் தரும். மேலும் இணையத்தில் உங்கள் தரவுகளுக்கு இருக்கும் ஆபத்துகளையும் அந்தத் தரவுகளைப் பாதுகாக்கும் வழிமுறைகளையும் கற்றுத் தரும்.

கற்றுத் தரப்படுபவை

முதலில் இணையப் பாதுகாப்பின் எல்லைகள் உங்களுக்குக் கற்றுத் தரப்படும். பின்பு அங்கு இருக்கும் ஆபத்துகளின் வகைகள் கற்றுத் தரப்படும். இணையத்திலிருந்து உங்கள் நெட்வொர்க் பாதுகாப்பின் மீது நடத்தப்படும் தாக்குதல்களை எப்படி எதிர்கொள்வது என்பதையும் ஆபத்து நேராமல் அதை எப்படிக் கண்காணிக்க வேண்டும் என்பதும் கற்றுத் தரப்படும்.

மேலும், கணினிக்குள் நுழைந்த வைரசை எப்படிக் களைய வேண்டும் என்பதும் அது நுழை யாமல் எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்பதும் கற்றுத் தரப்படும். முக்கியமாக நீங்கள் உருவாக்கி இருக்கும் பாதுகாப்பு வளையக் கோட்டையில் இருக்கும் ஓட்டைகளை எப்படி அறிவது என்பதும் அந்த ஓட்டைகளை எப்படி அடைப்பது என்பதும் கற்றுத் தரப்படும்.

இணையப் பாதுகாப்பு பொறியியலாளருக்கான தேவை வருங்காலத்தில் மிக அபரிமிதமாக இருக்கும். இணையப் பாதுகாப்பு இப்போது மிகவும் முக்கியத் துறையாக இருப்பதோடு ஆள் பற்றாக்குறை காரணமாகச் சற்றுத் தடுமாறிக்கொண்டும் உள்ளது. பொறியியல் படிக்கும்போதே இணையப் பாதுகாப்பில் கொஞ்சம் நிபுணத்துவத்தை வளர்த்துக் கொண்டால், பட்டதாரியான பின் வேலையைத் தேடி நீங்கள் செல்ல வேண்டாம், வேலை உங்களைத் தேடிவரும்.

ஆன்லைன் கல்வி வழங்கும் பிஎஸ்என்எல்!

பிஎஸ்என்எல் தொலைத் தொடர்பு நிறுவனம் “எஜு மித்ரா’ என்ற பெயரில் இயங்கும் இணைய தளம் வாயிலாக ஆன்லைன் கல்வியை வழங்கி வருகிறது.

அரசு தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் தொலைத் தொடர்பு வசதியை மட்டும் வழங்குவதோடு நிறுத்திவிடாமல், குறிப்பிட்ட கட்டணத்தில் தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்கும் பணிகளையும் தொடங்கியுள்ளது. தற்போது பள்ளியில் படிக்கும் மாணவர்கள், கல்லூரி மாணவர்களுக்குப் பயன்படும்விதமாக போட்டித் தேர்வுகள், கணிதம், அறிவியல், திறன் மேம்பாடு, மல்டிமீடியா ஆகியவை தொடர்பான பயிற்சி களையும் வழங்கி வருகிறது.

பல்வேறு மாநிலங்களின் கல்வித்துறையின் பள்ளிப் படிப்பு, சிபிஎஸ்இ பள்ளிப் படிப்பு சம்பந்தமான பயிற்சிகளையும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் எஜு மித்ரா இணையதளத்தில் வழங்கி வருகிறது.

எஜு மித்ரா இணையதளத்தில் தங்களுடைய பெயரைப் பதிவு செய்து ஒவ்வொருவரும் தங்களுக் கென்று அய்டி (உள்ளீட்டு முகவரி), பாஸ்வேர்ட் (உள் நுழைவு ரகசிய குறியீடு) ஆகியவற்றை பெற வேண்டும்.

அதன் பிறகு எஜு மித்ரா இணைய தளத்திற்குள் சென்று தங்களுக்கு தேவையான பயிற்சியை பெறலாம்.

மேலும் தகவல்களுக்கு ::http://edumitra.net/website1 என்ற இணையதளத்தைப் பாருங்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner