எழுத்துரு அளவு Larger Font Smaller Font


ஆளில்லாத் தெருக்களில் இரவு முழுக்க வீணாக எரிந்துகொண்டிருக்கும் தெருவிளக்கு களைப் பார்த்திருக்கிறோம். சென்னை மாநகரத் தில் மட்டும் ஆண்டுதோறும் தெருவிளக்கு களுக்கென ரூ. 52.08 கோடி செலவில் 331.32 மெகா வாட்ஸ் மின்சாரத்தைச் சென்னை மாநகராட்சி வழங்கி வருகிறது. இதில் கிட்டத்தட்ட 40 சதவீத மின்சாரம் வீணாகிறது. மின்சாரத்தைச் சேமிக்கும் விதமாகப் பொருத்தப்பட்டுள்ள எல். இ.டி. விளக்குகளும் இதில் அடங்கும். இது போன்ற செய்திகளை படித்துவிட்டுக் கடந்து போயிருப்போம்.

ஆனால், சென்னை அய்.அய்.டி. மாணவர் களான சுஷாந்த், அபிஷேக், அர்னாப் சிறீவாஸ் தவா, ஷஷாங்க் ஆகியோர் அறிவுப் பூர்வமாக இதற்குத் தீர்வு கண்டறிந்திருக்கிறார்கள். மின்சார விரயத்தைத் தடுக்கப் போக்குவரத்து இருக்கும் போது மட்டும் 100 சதவீதம் ஒளி வீசி மற்ற நேரங்களில் மங்கலாக ஒளிரும் மின்விளக்குத் தொழில்நுட்பத்தை இவர்கள் வடிவமைத்திருக் கிறார்கள். புத்திசாலித்தனமாக ஒளியூட்டும் அமைப்பு என்ற இவர்களுடைய திட்டத்தின் மூலம் சாலையில் நடமாட்டம் இல்லாதபோது 30 சதவீதம் மட்டுமே மின்விளக்குள் ஒளிரும்.  மின்சாரச் சேமிப்பு, செலவு குறைப்பு

நெடுஞ்சாலைகளைத் தவிர மற்ற தெருக் களில் மக்கள் இரவு முழுவதும் பயணித்தபடியே இருப்பதில்லை. இதை அடிப்படையாக வைத்து யோசித்தால் தற்போது செலவழிக்கப்படும் மின்சாரத்தில் 40 சதவீதத்தை மிச்சப்படுத்தலாமே! இதற்கான தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தால் என்ன என்ற யோசனை சென்னை அய்.அய்.டி.யில் சேர்ந்ததுமே எழுந்தது என்கிறார் சென்னை அய்.அய்.டி.யின் பி.இ. மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாணவரான சுஷாந்த்.

தன்னுடைய கருத்தை சுஷாந்த் நண்பர் களிடம் பகிர்ந்தபோது அதில் உற்சாகமாகப் பங்கேற்க முன்வந்ததாக, சுஷாந்த்தின் வகுப்புத் தோழர் ஷஷாங்க், பி.இ. எலக்ட்ரானிக் இன்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாணவர்களான அபி ஷேக், அர்னாப் சிறீவஸ்தவா ஆகியோர் தெரி விக்கின்றனர். 2016ஆம் ஆண்டு நவம்பரில் இதற் கான ஆய்வை நால்வரும் இணைந்து தொடங் கினர். அதை அடுத்துப் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் கார்பன் ஜீரோ சேலஞ்ச் என்னும் தென்னிந்திய அள விலான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் குறித்த போட்டியில் வெற்றிபெற்றனர்.

நம்மால் புதிய ஆற்றலை உருவாக்க முடியா விட்டாலும் இருப்பதைச் சேமித்து வீணாகாமல் தடுக்கலாம் இல்லையா? எங்களுடைய திட்டத் தின் அடிப்படையே மின்சாரத்தை சேமித்து அதற்கான செலவையும் குறைக்க வேண்டும் என்பதுதான். பொறியாளர்கள் இதுபோன்ற பிரச் சினைகளுக்குத் தீர்வு காணாவிட்டால் வேறு யார்தான் செய்வார்கள்? என்று உற்சாகமாகக் கேள்வி எழுப்புகிறார்கள் நால்வரும்.

ராணுவ வீரர் ஆள்சேர்ப்பு: 8 மற்றும் 10ஆம் வகுப்பு தகுதி  

ராணுவத்தில் படைவீரர் பணிக்கு ஆள் சேர்ப்பு முகாம் விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.

ராணுவத்தின் சென்னை மண்டல தலைமை அலுவலகம், படைவீரர் பணிக்கான ஆள்சேர்ப்பு முகாமை நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தின் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருது நகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இந்த ஆட்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம். ராணுவவீரர், டெக்னிக்கல், நர்சிங் உதவியாளர், பொதுப் பணி, கிளார்க், ஸ்டோர் கீப்பர், டிரேட்ஸ்மேன் போன்ற பிரிவுகளில் இவர்களுக்கு பணிவாய்ப்பு உள்ளது. விண்ணப்பதாரர் இந்திய குடியுரிமை பெற்றவராகவும், திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரராகவும் இருக்க வேண்டும். இதற்கான ஆட்சேர்ப்பு முகாம், பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 10.4.2018 முதல் 23.4.2018 வரை நடைபெறும்.
படைவீரர் பணிக்கான ஆள்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய இதர தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...

வயது வரம்பு: விண்ணப்பதாரர் 17 வயது முதல் 23 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண் டும். சில பணிகளுக்கு 21 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். வயது வரம்பு 1.10.2018 ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது.

கல்வித்தகுதி: பிளஸ்2 படிப்பில் அறிவியல் பாடம் படித்தவர்கள், அய்.டி.அய். மற்றும் டிப்ள மோ என்ஜினீயரிங் படித்தவர்கள் ஆகியோருக்கு ஏராளமான பணியிடங்கள் உள்ளன. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கும் குறிப்பிட்ட பிரிவில் பணியிடங்கள் உள்ளன. அந்தந்த பணிக்கான சரியான வயது வரம்பு, கல்வித்தகுதியை இணைய தளத்தில் பார்க்கலாம். விண்ணப்பதாரர் குறிப் பிட்ட உடல் தகுதி பெற்றிருப்பது அவசியம். உடல்தகுதி மருத்துவ பரிசோதனை மூலம் சோதிக்கப்படும்.

தேர்வு செய்யும் முறை: சான்றிதழ் சரிபார்த்தல், உடல் அளவுத் தேர்வு, உடல்திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப் படையில் தகுதியானவர்கள் சேர்க்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 24.2.2018 ஆம் தேதி இதற்கான விண்ணப்பப்பதிவு தொடங்குகிறது. 25.3.2018ஆம் தேதி வரை விண் ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.joinindianarmy.nic.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கலாம்.

தமிழக மருத்துவ துறையில் பார்மசிஸ்ட் பணியிடங்கள்

தமிழக அரசு மருத்துவ சேவைப் பணிகள் துறைக்கு பார்மசிஸ்ட் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

தமிழக அரசு மருத்துவ சேவைப் பணிகள் துறைக்கு ஆட்களை தேர்வு செய்ய எம்.ஆர்.பி. எனும் மருத்துவ தேர்வு வாரியம் செயல்படுகிறது. தற்போது இந்த அமைப்பு பார்மசிஸ்ட் பணியிடங்களை நிரப்ப விண் ணப்பம் கோரி உள்ளது. சித்தா பிரிவில் 148 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதேபோல ஆயுர்வேதா பிரிவில் 38 பேரும், ஓமியோபதி பிரிவில் 23 பேரும், யுனானி பிரிவில் 20 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். மொத்தம் 229 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும் புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்கள்:

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தியான வர்களாகவும், 40 வயதுக்கு உட்பட்டவர் களாகவும் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. எஸ்.சி.ஏ., பி.சி., பி.சி.எம்., எம்.பி.சி., டி.என்.சி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள் 57 வயதுக்கு உட்பட்டவர்களாக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி: விண்ணப்பதாரர் அந்தந்த மருத்துவப் பிரிவுகளில் பார்மசி டிப்ளமோ படிப்பு படித்தவர்களாக இருக்க வேண்டும்.

கட்டணம் : விண்ணப்பதாரர்கள் ரூ.500 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.250 கட்டணம் செலுத்தி னால் போதுமானது.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 5.3.2018ஆம் தேதியாகும்.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங் களை தெரிந்து கொள்ளவும் www.mrb.tn.gov.in என்ற இணைய தள முகவரியை பார்க்கலாம்.

ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

ஆவின் நிறுவனத்தின் பல்வேறு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் அமைப்பில் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சீனியர் பேக்டரி அசிஸ்டன்ட், டெக்னீசியன் உள்ளிட்ட பணிக்கு 38 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள், 12ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் அய்.டி.அய். படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக் கலாம். 16.3.2018ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும்.

கோவை மாவட்டத்தில் மேலாளர், டிரைவர், எக்சிகியூட்டிவ் அதிகாரி, எக்ஸ்டென்சன் ஆபீசர், ஜூனியர் எக்சிகியூட்டிவ் போன்ற பணிக்கு 25 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

முதுநிலை பட்டதாரி, இளநிலை பட்டதாரி மற்றும் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு இதில் பணியிடங்கள் உள்ளன.  27.2.2018ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். ஈரோடு மாவட்டத்தில் மேலாளர், எக்சிகியூட்டிவ் உள் ளிட்ட பணிக்கு 6 பேர் தேர்வு செய்யப் படுகிறார்கள்.  28.2.2018ஆம் தேதிக்குள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

புதுக்கோட்டையில் மேலாளர் பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப் படுகிறார்.

6.3.2018ஆம் தேதிக்குள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

இவை பற்றிய விவரங்களை ::http://www.aavinmilk.comஎன்ற இணையதளத்தில் பார்க் கலாம்.


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner