எழுத்துரு அளவு Larger Font Smaller Font


மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகளுக்குத் தேவைப்படும் எழுத்தர் உள்ளிட்ட குரூப்-சி ஊழியர்களும் குரூப்-பி சார்நிலைப் பணியாளர்களும் எஸ்.எஸ்.சி. எனப்படும் பணியாளர் தேர்வாணையம் மூலமாகத் தேர்வுசெய்யப்படுகிறார்கள்.

அந்த வகையில், கீழ்நிலை எழுத்தர், இளநிலைச் செயலக உதவியாளர், அஞ்சல் உதவியாளர், அஞ்சல் பிரிப்பு உதவியாளர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பதவிகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த மேல்நிலைக் கல்வித் தேர்வுக்கான அறிவிப்பை எஸ்.எஸ்.சி. வெளியிட்டுள்ளது.

தேவையான தகுதி: பிளஸ் 2 முடித்தவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பதவிக்கு மட்டும் அறிவியல் பிரிவில் கணிதத்தை ஒரு பாடமாகப் படித்திருக்க வேண்டும். வயது 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும். மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, அதிகபட்ச வயது எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 32, ஓ.பி.சி. பிரிவினருக்கு 30, மாற்றுத் திறனாளிகள் 37.

தேர்வு முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு (தட்டச்சு, டேட்டா என்ட்ரி) அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வு கிடையாது.

எழுத்துத் தேர்வு முதல்நிலைத் தேர்வு, 2ஆவது நிலைத் தேர்வு என இருநிலைகளை உள்ளடக்கியது. முதல்நிலைத் தேர்வு ஆன்லைன் வழியில் நடத்தப்படும். இதில், பொது ஆங்கிலம், ரீசனிங், அடிப்படைக் கணிதம், பொது அறிவு ஆகிய 4 பகுதிகளில் இருந்து தலா 25 கேள்விகள் வீதம் 100 கேள்விகள் இடம்பெறும். மொத்தம் 200 மதிப்பெண்கள். ஒரு மணி நேரத்தில் விடை அளிக்க வேண் டும். தவறான பதில்களுக்கு மைனஸ் மதிப்பெண் உண்டு.

இரண்டாம் நிலைத் தேர்வு, விரிவாகப் பதில் எழுதும் வகையில் அமைந்திருக்கும். இதற்கு 100 மதிப் பெண்.
இதில் தேர்ச்சி பெற்றவர்கள் பதவிக்கு ஏற்ப திறன் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இத்தேர்வில் தேர்ச்சி பெற்றாலே போதும். டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பதவிக்குக் கணினித் தேர்வும் இதர பதவிகளுக்குத் தட்டச்சு லோயர் கிரேடு தரத்தில் தட்டச்சுத் தேர்வும் நடத்தப்படும்.

இறுதியாக முதல்நிலைத் தேர்வு மதிப்பெண், மெயின் தேர்வு மதிப்பெண், இட ஒதுக்கீடு அடிப்படையில் மெரிட் பட்டியல் தயாரிக்கப்பட்டு அதன் பேரில் பணிக்குத் தேர்வுசெய்யப்படுவார்கள்.

ஆன்லைன்வழி முதல்நிலைத் தேர்வு நடைபெறும். சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி ஆகியவை தேர்வு மய்யங்கள் ஆகும். உரிய கல்வித் தகுதியும் வயது வரம்புத் தகுதியும் கொண்டவர்கள் www.ssconline.nic.in என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கியத் தேதிகள்

முதல்நிலைத் தேர்வு: மார்ச் 4 - 26, 2018

இரண்டாம்நிலைத் தேர்வு: ஜூலை 8, 2018

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்:
டிசம்பர் 18, 2017

தோட்டக்கலை படித்தவர்களுக்கு
தமிழக அரசில் பணி  

தமிழக அரசில் காலிப்பணியிடங்களை நிரப்பும் பணியில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஹார்டிகல்சர் (தோட்டக்கலை) துறையில் காலியாக உள்ள 130 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிட விவரம் : தோட்டக்கலை துணை இயக்குநர் பதவியில் 100 இடங்களும், தோட்டக்கலை அதிகாரி பதவியில் 30 இடங்களும் நிரப்பப்பட உள்ளன. வயது : 2017 ஜூலை 1 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். இவர்கள் முதுநிலைப் பட்டப்படிப்பு அல்லது பிஎச்.டி., ஆராய்ச்சிப் படிப்பை முடித்தவர்களாக இருந்தால் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி : தோட்டக்கலை துணை இயக்குநர் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள், எம்.எஸ்சி., (ஹார்டிகல்சர்) முடித்திருக்க வேண்டும். தோட்டக்கலை அதிகாரி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் பி.எஸ்சி., (ஹார்டிகல்சர்) முடித்தவராக இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை : பொது எழுத்துத் தேர்வு மதிப்பெண்கள், சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

தேர்வு மய்யங்கள் : சென்னை, மதுரை மற்றும் கோவையில் தேர்வு நடத்தப்படும்.

விண்ணப்பிக்க :www.tnpscexams.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். பதிவுக்கட்டணம் 150 ரூபாய். விண்ணப்பக்கட்டணம் 200 ரூபாய். கடைசி நாள் : 2017 டிச., 27.

விவரங்களுக்கு : www.tnpsc.gov.in/notifications/ 2017_29_not_horticultural.pdf

ரயில்வேயில் 1,050 காலியிடங்கள்

தென்கிழக்கு மத்திய ரயில்வே என்பது இந்திய ரயில்வேயின் அங்கம். இந்த புதிய மண்டலத்தில் பிலாஸ்பூர் கோட்டம் 2003 முதல் செயல்பாட்டுக்கு வந்தது.

நாக்பூர், பிலாஸ்பூர், ராய்பூர் என்ற கோட்டங்களை உள்ளடக்கிய தென் கிழக்கு மத்திய ரயில்வேயில் அப்ரென்டிஸ் பிரிவில் காலியாக இருக்கும் 1,050 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிட விவரம் : தென் கிழக்கு மத்திய ரயில் வேயின் நாக்பூர் கோட்டத்தில் 298ம், மோடிபாக் ஒர்க் ஷாப்பில் 15ம், ராய்பூர் கோட்டத்தில் 255ம், ராய்பூர் வேகன் ஒர்க் ஷாப்பில் 50ம், பிலாஸ்பூர் கோட்டத்தில் 432ம் என மொத்தம் 1,050 காலியிடங்கள் உள்ளன.

பிரிவுகள்: பிட்டர், கார்பென்டர், வெல்டர், பாசா, எலக்ட்ரீசியன், செக்ரட்டேரியல் பிராக்டிஸ், பைப் பிட்டர், பெயின்டர், ஒயர்மேன், எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், பவர் மெக்கானிக், மெக்கானிக் மெசின் மெயின்டனென்ஸ், டீசல் மெக்கானிக், அப் ஹோல்ஸ்டரர், பியரர், டர்னர், ஹெல்த் சானிட்டரி இன்ஸ்பெக்டர், ஸ்டெனோகிராபர், மெசினிஸ்ட், மெக்கானிக் மோட்டர் வெகிக்கிள் என்ற பிரிவுகளில் அப்ரென்டிஸ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விரிவான தகவல்களை இணையதளத்தை பார்த்து அறியவும்.

வயது : விண்ணப்பதாரர்கள் 14 - 24 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : விண்ணப்பிக்கும் பிரிவினைப் பொறுத்து கல்வித் தகுதி மாறுபடுகிறது. பொதுவாக பத்தாம் வகுப்பில் தேர்ச்சியும், என்.சி.வி.டி., அங்கீ காரம் பெற்ற அய்.டி.அய்., படிப்பையும் முடித்திருப்பது தேவைப்படும். விண்ணப்பிக்கும் பிரிவுக்கு ஏற்றபடி சிறப்புத் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி நாள் : 2017 டிச., 27. விபரங்களுக்கு : : www.secr.indianrailways.gov.in/view_section.jsp?lang=0&id=0,4,382

கப்பல் கட்டும்
தளத்தில் வேலை

நமது நாட்டிலுள்ள கப்பல் கட்டும் தளங்களில் கொச்சி கப்பல் கட்டும் தளம் முக்கியமானது. இங்கு சேப்டி அசிஸ்டென்ட் பிரிவில் 25 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன.

வயது : 2017 டிச., 10 அடிப்படையில் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு, இண்டஸ்ட்ரியல் சேப்டி பிரிவில் டிப்ளமோ அல்லது சான்றிதழ் படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறு வனத்தின் மூலமாக முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை : பிராக்டிக்கல் தேர்வு வாயிலாக தேர்ச்சி இருக்கும்.

பணியனுபவம் : ஏதாவது ஒரு பொதுத்துறை அல்லது தனியார் நிறுவனத்தில் தொடர்புடைய பிரிவில் ஓராண்டு காலம் பணி அனுபவம் தேவைப்படும்.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். கட்டணம் 100 ரூபாய். கடைசி நாள் : 2017 டிச., 10.

விவரங்களுக்கு:www.cochinshipyard.com/ca

ஆசிய மாரத்தானை வென்ற கோபி தொனாகல்

சீனாவின் டொங்குவான் நகரில் நவம்பர் 26 அன்று 2017ஆம் ஆண்டுக்கான ஆசிய மாரத்தான் வாகையர் பட்டப் போட்டி நடைபெற்றது. இந்த ஆசிய மாரத்தான் போட்டியில் ஆடவர் பிரிவில் தங்கம் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை நிகழ்த்தியிருக்கிறார் கோபி தொனாகல். 2 மணி நேரம், 15 நிமிடங்கள், 48 நொடிகளில் இந்த மாரத்தான் ஓட்டத்தைக் கடந்து இந்தப் பதக்கத்தை வென்றிருக்கிறார் கோபி.
உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரே பெட்ரோவ் வெள்ளி பதக்கமும் மங்கோலியாவைச் சேர்ந்த பியாம்பலேவ் வெண்கல பதக்கத்தையும் இந்த மாரத்தான் போட்டியில் வென்றிருக்கின்றனர். இதற்கு முன், ஆசிய மாரத்தானில் இந்தியாவைச் சேர்ந்த ஆஷா அகர்வாலும் (1985) சுனிதாவும் (1992) மகளிர் பிரிவில் தங்கப் பதக்கம் வென் றிருக்கின்றனர்.