எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மத்திய அரசின் பொதுப்பணித் துறை, மத்திய நீர்வள ஆணையம், அஞ்சல் துறை, மத்திய நீர் மின் ஆராய்ச்சி நிலையம், தேசியத் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் உள்பட மத்திய அரசின் பல்வேறு துறைகளிலும், பொதுத் துறை நிறுவனங்களிலும் ஜூனியர் பொறியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பணியாளர் தேர்வாணையம் மூலம் நேரடி நியமன முறையில் அவை நிரப்பப்பட உள்ளன.

சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் பொறியியல் ஆகிய பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன. சம்பந்தப்பட்ட பிரிவில் பொறியியல் பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும். சில பிரிவுகளுக்குப் பொறியியல் பட்டப் படிப்பு முடித்தவர்களும் விண்ணப் பிக்கலாம். வயதுவரம்பைப் பொறுத்த வரையில், குறிப்பிட்ட துறைகள் மற்றும் நிறு வனங்களுக்கு ஏற்ப 27, 30, 32 என வெவ்வேறு வயதுவரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

எனினும், மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, எஸ்.சி., எஸ்.டி. வகுப்பி னருக்குக் கூடுதலாக 5 ஆண்டுகளும் ஓ.பி.சி. எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பின ருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத் திறனாளி களுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு. தற்போது பி.சி., எம்.பி.சி. வகுப்பைச் சேர்ந்தவர்கள் ஓ.பி.சி. தகுதிச் சான்று பெறுவதற்கான வருமான உச்சவரம்பு ரூ.6 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு அடிப்படையில் பணிக்குத் தேர்வுசெய்யப்படு வார்கள். எழுத்துத் தேர்வில் முதல் தாள் அப்ஜெக்டிவ் முறையில் அமைந்திருக்கும். இத்தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும். இதில் ரீசனிங், பொது அறிவு, பொறியியல் ஆகிய வற்றில் இருந்து 200 கேள்விகள் இடம்பெறும். முதல் தாளில் தேர்ச்சி பெறுவோர் அடுத்த கட்டத் தேர்வான இரண்டாம் தாள் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

இரண்டாம் தாள், விரிவாக விடை அளிக்கும்வகையில் இருக்கும். உரிய கல்வித் தகுதியும் வயதும் உடையவர்கள் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தைப் (ஷ்ஷ்ஷ்.ssநீ.ஸீவீநீ.வீஸீ)பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன்வழியில் தாள் 1 தேர்வு பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. 2ஆம் தாள் தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப் படும். 

எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம் பணியாளர் தேர்வாணையத்தின் இணையத ளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

 


யு.பி.எஸ்.சி., யின் 414 பணியிடங்களுக்கான தேர்வு

யு.பி.எஸ்.சி., எனப்படும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன், மத்திய அமைச்சகப் பணி களுக்கான பொது எழுத்துத் தேர்வுகளை நடத்தி அதன் மூலம் நிரப்பி வருகிறது. இந்த அமைப்பின் சார்பாக ‘கம்பைண்டு டிபன்ஸ் சர்வீஸ் தேர்வு -  (சி.டி.எஸ்.,) 2018’அய் நடத்துவதற்கான அறி விப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வு மூலம் 414 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

காலியிடங்கள் டேராடூனிலுள்ள இந்தியன் மிலிடரி அகாடமியில் 100ம், எழிமலாவிலுள்ள இந்தியன் நேவல் அகாடமியில் 45ம், அய்தராபாத்திலுள்ள ஏர்போர்ஸ் அகாடமியில் 32ம், சென்னையிலுள்ள ஆபிசர்ஸ் டிரெய்னிங் அகாடமியில் (ஆண்) 225ம், சென்னையிலுள்ள ஆபிசர்ஸ் டிரெய்னிங் அகாடமியில் (பெண்) 12ம் என மொத்தம் 414 காலியிடங்கள் உள் ளன.
வயது, தகுதி, விண்ணப்பிக்கும் பிரிவுக்கு தகுந்தபடி வயது மாறுபடுகிறது. சரியான தகவல்களைப் பெற இணையதளத்தைப் பார்க்கவும். கல்வித் தகுதி அய்.எம்.ஏ., மற்றும் ஓ.டி.ஏ.,வுக்கு ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பு தேவைப்படும். நேவல் அகாடமிக்கு இன்ஜினியரிங்கில் பட்டப் படிப்பு தேவைப்படும். ஏர்போர்ஸ் அகாடமிக்கு விண்ணப்பிக்க இயற்பியல், வேதியியல், கணிதத்துடன் கூடிய பட்டப்படிப்பு தேவைப் படும். முழுமையான தகவல்களை இணைய தளத்தில் அறியவும். ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் : 200 ரூபாய்.

தேர்ச்சி முறை பொது எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்ச்சி இருக்கும். கடைசி நாள் : 2017 டிச., 4. விபரங்களுக்கு: www.upsc.gov.in/sites/default/ files/Notification_CDSE_I_2018_Engl.pdf