எழுத்துரு அளவு Larger Font Smaller Font


வளர்ச்சி என்ற பெயரில் இயற்கையை அழிக்கத் தொடங்கியதன் விளைவாக இன்று மனிதச் சமூகம் சுனாமி, புவி வெப்பமடைதல், ஓசோன் படலத்தில் ஓட்டை எனப் பல பிரச் சினைகளில் சிக்கித் தவிக்கிறது.
இந்நிலையில், திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை, தாராபுரம் சாலையில் உள்ள ஆர்.கே.ஆர். கிரிக்ஸ் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் க. திருவருள்செல்வன், வாகனங்கள் வெளியேற்றும் புகையால் காற்று மாசடை வதைக் குறைக்க மிகக் குறைந்த செலவிலான எளிய தீர்வை கண்டறிந்துள்ளார்.

அவரது புதிய கண்டுபிடிப்பு, அக்டோபர் 11,12,13ஆம் தேதி கரூரில் நடந்த அறிவியல் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டு, போட்டியில் முதல் பரிசும் பெற்றது.

அடுத்த கட்டமாக, தென்னிந்திய அளவிலான போட்டியில் பங்கேற்கவும் திருவருள்செல்வன் தேர்வு செய்யப்பட்டி ருக்கிறார். இவர் ஏற் கெனவே நீர் மேலாண் மைக்கு உதவும் வகையில் குறுஞ்செயலி ஒன்றை உருவாக்கி உள்ளார்.

தொழிற்சாலைகள், வாகனங்களில் இருந்து வெளியேற்றப்படும் புகையினால் கடுமை யான சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதைத் தவிர்க்க ஒரு மாத உழைப்பில் இரு சக்கர வாகனத்தில் பொருத்தப்படும் புதிய புகைப்போக்கியை உருவாக்கி உள்ளேன்.

சோற்றுக் கற்றாழையை மூலப்பொருளாகக் கொண்டு, நவீன அறிவியல் கண்டுபிடிப்பு களின் உதவியுடன் சிலிண்டரை வடிவமைத் துள்ளேன்.

இதன் மூலம் ஒரு முனையில் புகையை உள்வாங்கும் இக்கருவி அதில் உள்ள மாசினைக் குறைத்து வெளியே அனுப்பும். இவ்வாறாக 50 சதவீதம்வரை மாசுவைக் குறைக்கிறது. இதே தொழில் நுட்பத்தை மேம் படுத்தினால் 90 சதம்வரை மாசுவைக் குறைக்கலாம்.

தற்போது கண்டுபிடிக்கப்பட்ட கருவிக்கு ரூ.1800வரை செலவானது. இதை டி.வி.எஸ். 50 மோட்டார் சைக்கிளில் பொருத்திப் பரி சோதனை செய்து காண்பித்துள்ளேன். அதிக சி.சி. திறனுடைய மோட்டார் சைக்கிள்களிலும் இதைப் பொருத்தலாம். ஆனால், அதற்குச் சற்றுக் கூடுதல் செலவாகும் என்கிறார் திரு வருள்செல்வன்.

நவீன உலகத்தின் சவாலாக விளங்கும் மாசு குறைபாட்டுக்கு, இம்மாணவர் கண்டு பிடித்திருக்கும் கருவி பேருதவியாக இருக்கும் என்றே வல்லுநர்கள் கருதுகின்றனர்.

நீதிமன்றத்தில் பல்வேறு காலிப் பணியிடங்கள்   

சேலம்  மாவட்ட நீதிமன்றத்தில் பல்வேறு பிரிவுகளில் 23 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிட விபரம் : கம்ப்யூட்டர் ஆப்பரேட்டரில் 6ம், சீனியர் பெய்லியில் 2ம், ஜூனியர் பெய்லியில் 5ம், ஜெராக்ஸ் மெசின் ஆபரேட்டரில் 7ம், பதிவு எழுத்தரில் 3ம் சேர்த்து மொத்தம் 23 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

வயது : விண்ணப்பதாரர்கள் 18 - 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் பதவிக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேசன்ஸ் பிரிவு ஒன்றில் பட்டப் படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக முடித்திருக்க வேண்டும். பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம்., படிப்புடன் கம்ப்யூட்டர் அப்ளி கேசனில் டிப்ளமோ தகுதி உள்ளவர்களும் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். சீனியர் பெய்லி மற்றும் ஜூனியர் பெய்லி இரண்டு பதவிகளுக்கும் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஜெராக்ஸ் மெசின் ஆப்பரேட்டர் பதவிக்கு பத்தாம் வகுப்பில் தேர்ச்சியுடன் குறைந்த பட்சம் இரண்டு வருட காலம் ஜெராக்ஸ் மெசினை பயன்படுத்தியதற்கான அனுபவம் சான்றி தழுடன் தேவைப்படும். பதிவு எழுத்தர் பதவிக்கு பத்தாம் வகுப்பில் தேர்ச்சி தேவைப்படும்.

விண்ணப்பிக்க : பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பப் படிவத்தை முழுமையாக நிரப்பி, பாஸ்போர்ட் புகைப்படம் ஒட்டி, செல்ப் அட்டெஸ்ட் செய்த சான்றிதழ் நகல்களுடன் பதிவுத் தபாலில் மட்டுமே பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். முழுமையான தகவல்களை இணையதளத்திலிருந்து அறிந்து அதன் பின்னர் மட்டுமே விண்ணப்பிக்கவும்.  The Principal District Judge, Principal District Court, Namakkal 637 003..
கடைசி நாள் : 2017 நவ., 20.

விபரங்களுக்கு : http://ecourts.gov.in/india/tamil-nadu/namakkal/recruitment

மாணவர்கள் இணைந்து தொடங்கிய

“உதவிடத்தான் பிறந்தோம்” - வாட்ஸ்அப்

வீணற்றவைகளைப் பகிர்ந்துகொள்வதற்கு மட்டுமே சமூக வலைத்தளங்களைப் பலர் பயன் படுத்தும்போது, மருத்துவ உதவி, அப்பா இல்லாத குழந்தைகளின் கல்விக் கட்டண உதவி, தன்னார்வ அமைப்புகளுக்குத் தேவைப்படும் மளிகைப் பொருட்களை வாங்கித் தருவது, பழங்குடி மக்களின் குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்விஅளிக்க முயல்வது ஆகியவற்றுக்கு வாட்ஸ் அப், ஃபேஸ்புக் போன்ற வற்றைப் பயன்படுத்தி வருகின்றனர் தாம்பரத்தைச் சேர்ந்த சில கல்லூரி மாணவர்கள்.

கடந்த ஆண்டு 20 முதல் 30 மாணவர்கள் இணைந்து தொடங்கிய - உதவிடத்தான் பிறந்தோம் என்னும் வாட்ஸ்அப் குழுவில் தற்போது 300 பேர் இணைந்துள்ளார்கள். தந்தையை இழந்த

குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்றுக்கொள்வது, இன் னும் அவர்களுக்குத் தேவைப்படும் மற்ற உதவி களை அளிப்பதே இக்குழுவினரின் பிரதான நோக்கம்.

பளிச்சிடும் பள்ளிச் சுவர்கள்

சுற்றுப்புறச் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வைப் பள்ளி மாணவர்களுக்கு ஏற்படுத்திவரும் இக் குழுவினர் தாம்பரம், தியாகராய நகர், பெருங் களத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த அரசுப் பள்ளிகளின் சுவர்களுக்கும் வெள்ளையடிக் கிறார்கள்.

தொடக்கப் பள்ளிகளுக்கு ஆத்திசூடி எழுதுவது, நடுநிலைப் பள்ளிகளுக்குக் கல்வி தொடர்பான ஓவியங்களைத் தீட்டுவது இவர்களுடைய வார இறுதித் திட்டம். அதோடு பள்ளியை ஒட்டி அமைந்திருக்கும் பேருந்து நிறுத்தத்தில் ஒட்டப் பட்டிருக்கும் தேவையற்ற விளம்பர போஸ்டர்களை அப்புறப்படுத்தி, பேருந்து நிறுத்தத்தையும் சுத்தப் படுத்துகின்றனர்.

விளிம்பு நிலை மக்களுக்கான மருத்துவ முகாம் களை ஒருங்கிணைப்பது, கொடையாளர்களிட மிருந்து குருதி பெற்றுத் தருவது போன்ற பணிகளையும் செய்துவருகின்றனர்.

உதவி தேவைப்படுபவர்கள் இந்த குரூப்பில் பதிவிடுவார்கள். அவர்களின் கோரிக்கை என்ன, உண்மையிலேயே அவர்களுடைய நிலை என்ன என்பதை அவர்களின் வீட்டுக்குச் சென்று பரிசோ தித்தும், பள்ளி, கல்லூரிகளிலிருந்து குறிப்பிட்ட மாணவருக்கான கல்விக் கட்டணத்தை உறுதி செய்யும் சான்றிதழைப் பெற்றும் அவர்களுக்கான உதவியைச் செய்கிறோம். இப்படி இந்த ஆண்டு மட்டும் பொறியியல் மற்றும் கலைப் படிப்புகள் படிக்கும் மாணவர்களுக்கும் பிளஸ் 1 படிக்கும் ஒரு மாணவிக்கும் கல்விக் கட்டணத்தை உதவியாக வழங்கியிருக்கிறோம்.

கல்பாக்கம் பகுதியில் வாழும் இருளர், பழங்குடியின மக்களின் குழந்தைகளுக்குத் தொடக்கக் கல்வி வழங்கும் சேவையைத் தொடங்கும் முயற்சியில் இருக்கியிருக்கிறோம் என்கிறார் உதவிடத்தான் பிறந்தோம் குழுவில் ஒருவரான விஜய்.