எழுத்துரு அளவு Larger Font Smaller Font


கோவாவில் உள்ள கப்பல் கட்டும் தளம் 1957இல் நிறுவப்பட்டது. அய்.எஸ்.ஓ., தரச் சான்று பெற்ற இந்த கப்பல்தளம் கோவாவின் வாஸ்கோடகாமாவில் உள்ளது. இந்த கப்பல் தளத்தில் அப்ரென்டிஸ் டிரெய்னிங் பிரிவில் காலியாக உள்ள 34 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பிரிவுகள் : கிராஜூவேட் இன்ஜினியரிங்/டெக்னீசியன் அப் ரெண்டிசில் 20, ஆபிஸ் செக்ரட்டரிஷிப்/ஸ்டெனோகிராபியில் 5, அக்கவுண்டன்சி/ஆடிட்டிங்/டேக்சேஷனில் 5, பர்சேஸ் அண்டு ஸ்டோர் கீப்பிங்கில் 4ம் காலியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி : கிராஜூவேட் இன்ஜினியரிங்/டெக்னீசியன் அப்ரென்டிஸ் பதவிக்கு பி.இ., அல்லது பி.டெக்., படிப்பை சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், பேப்ரிகேஷன், இன்டஸ்ட்ரியல், மெக்கானிக்கல், ஷிப் பில்டிங், டெலிகம்யூனிகேஷன், பாலிமர் இன்ஜினியரிங் ஆகிய ஏதாவது ஒன்றில் முடித்திருக்க வேண்டும். டெக்னீசியன் அப்ரென்டிஸ் பதவிக்கு இதே படிப்புகளில் ஒன்றில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். இதர பதவிகளுக்கு பிளஸ்  படிப்பை வொகேஷனல் படிப்பாக முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வு வாயிலாக இருக்கும்.

விண்ணப்பிக்க : பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப் பத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். General Manager (HR&ADMN),Goa Shipyard Limited, Vasco-DA-Gama, Goa-403802

விபரங்களுக்கு ::http://epaper.navhindtimes.in/NewsDetail.aspx?storyid= 5312&date=2017-1011&pageid=1

விண்வெளி ஆராய்ச்சி மய்யத்தில் பணியிடங்கள்

விக்ரம் சாராபாய் ஸ்பேஸ் சென்டர் கேரள மா நிலம் திருவனந்த புரத்தில் உள்ளது. விண்வெளி ஆராய்ச்சியில் பிரசித்தி பெற்ற இந்த மய்யத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பிரிவுகள் : ரேடியோகிராபர் - ஏ, டெக்னீசியன் பி- எலக்ட்ரோ மெக்கானிக்கில் 11, டெக்னீசியன் பி - பிட்டரில் 5, டெக்னீசியன் பி - கெமிக்கல் ஆபரேட்டரில் 3, டெக்னீசியன் பி-கெமிக்கல் ஆப்பரேட்டரில் 2, டெக்னீசியன் பி- எலக்ட்ரீசியனில் 1ம், டெக்னீசியன் பி - டர்னரில் 1ம் காலியிடங்கள் உள்ளன.

வயது : ரேடியோகிராபர் பதவிக்கு அதிகபட்சம் 38 வயதும், இதர பதவிகளுக்கு அதிகபட்சம் 35 வயதும் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : மேற்கண்ட பதவிகளுக்கு பத்தாம் வகுப்பு படிப்புடன் அய்.டி.அய்., படிப்பை உரிய பிரிவில் முடித்திருக்க வேண்டும். முழுமையான விபரங்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.

விபரங்களுக்கு: www2.vssc.gov.in:8080/RMT302/advt302.htm

பாதையில்லா ஊரில் படிப்பு

ஆலமரத்தின் நிழல், வீட்டுத் திண்ணை, முற்றம் இப்படிப் பார்க்கும் இடங்களில் எல்லாம் குழந்தைகள் படிக்கிறார்கள். தாளவாடி, பர்கூர் மலைப் பகுதிகளில் வாழும் பழங்குடியினக் குழந்தைகளும் மலைவாழ் மக்களின் குழந்தைகளும்தான் அவர்கள். பேருந்தைக் கண்ணால் காணவே இந்தக் குழந்தைகள் 60 கி.மீ. பயணிக்க வேண்டும். ரயிலைப் பார்ப்பதற்காகவே நகரப் பகுதிக்கு ஒரு சுற்றுலா சென்றுவந்திருக்கின்றனர் இந்தக் குழந்தைகள். இவர்களுக்காக முறைசாரா கல்வியைச் சுடர் அறக்கட்டளையின் மூலம் வழங்குவதில் கடந்த பத்தாண்டுகளாக ஈடுபட்டுவருக்கிறார் சத்திய மங்கலத்தைச் சேர்ந்த எஸ்.சி. நடராஜ்.

2009இல் மத்திய அரசின் தொழிலாளர் அமைச்சகத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்டது தேசியக் குழந்தைத் தொழிலாளர் திட்டம். இத்திட்டத்தின் கீழ் சுடர் அமைப்பின் மூலமாகத் தாளவாடி மலைப் பகுதிகளில் 5 குழந்தைத் தொழிலாளர் சிறப்புப் பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டன.

6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைத் தொழிலாளர்களைக் கண்டறிதல், பள்ளிக்கான கட்டிடத்தை ஏற்பாடு செய்தல், மதிய உணவு சமைப்பதற்கான சமையல் பாத்திரங்கள் வாங்குதல் உள் ளிட்டவற்றை ஏற்பாடுசெய்து இப்பள்ளியை நிர்வாகித்து, குழந்தைகளைப் பயிற்றுவித்து, இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு அவர்களை முறைசார் பள்ளிகளில் சேர்த்தல் ஆகியவற்றை இத்திட்டத்தின் கீழ் செய்வதே அரசால் அனுமதிக்கப்பட்ட தொண்டு நிறுவனத்தின் பணி.

மத்திய அரசு இந்தச் சிறப்புப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.6000-த்தை மதிப் பூதியமாக வழங்குகிறது. மதிய உணவு, பள்ளிப் பாடநூல், சீருடைகளைப் பிற மாணவர்களைப் போல் இவர்களுக்கும் வழங்குகிறது. கல்வி ஊக்கத்தொகையாக மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.150-அய் மத்திய அரசு வழங்குகிறது. மற்றபடி தனிப் பயிற்சியாளர்களை ஏற்பாடுசெய்வதற்கும் நிர்வாகச் செலவுகளுக்கும் கொடை யாளர்கள் தரும் நன்கொடைதான் உதவுகிறது தொடக்கத்தில் சுய உதவிக் குழு, பெண்களுக்கான கல்விப் பயிற்சிகள் போன்றவற்றைத்தான் செய்துகொண்டிருந்தோம். ஒரு வனச் சரக அதிகாரிதான் மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்கும்

பழங்குடியினக் குழந்தை களுக்கும் கல்வி வசதியே இல்லாத நிலையையும் குழந் தைத் தொழிலாளிகளாகப் பல குழந்தைகள் விவசாயக் கூலிகளாக இருப்பதையும் தெரிவித்தார். அதன் பிறகுதான் குழந்தைகளுக்கு முறைசாராக் கல்வியை அரசின் உதவியோடு வழங்கத் தொடங்கினோம்.

கல்வி, மருத்துவம், சாலைப் போக்குவரத்து மற்றும் அடிப்படை வசதிகள் எட்டாத கடைக்கோடி மலைக்கிராமங்களான தாளவாடி, கடம்பூர் மற்றும் பர்கூர் பகுதிகளில் வாழும் பழங்குடி மக்களின் மேம்பாட்டிற்காக எங்களின் கல்விப் பணியைத் தொடங்கினோம் என்கிறார் சுடர் அமைப்பின் நிறுவனர் நடராஜ்.

பள்ளிக்குச் செல்லும் வயதில் கரும்புவெட்டுதல், செங்கல் தயாரித்தல், ஆலைத் தொழில்களில் ஈடுபடுதல் ஆகியவற்றைச் செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றனர் இப்பகுதியைச் சேர்ந்த குழந்தைகள். அவர்களை மீட்டு மத்திய அரசின் உதவியுடன் கல்வி வழங்கிட மலைக் கிராமங்களில் 9 குழந்தைத் தொழிலாளர் பள்ளிகளை நடத்திவருகிறது சுடர் அமைப்பு. இந்த முறையில் ஏறக்குறைய 300 குழந்தைகள் படிக்கின்றனர்.

தற்போது பழங்குடியினச் சமூகத்திலிருந்து இரண்டு குழந்தைகள் மட்டுமே கல்லூரிக்குச் சென்று படித்துவருகின்றனர். இவர் கள் பணி மேற்கொண்ட 30 இடங்களில் 10 இடங்களைத் தேர்ந்தெடுத்து அங்கு தொடக்கப்பள்ளிகளை அரசு ஆரம்பித் திருக்கிறது.

கடந்த பத்தாண்டுகளில் கிட்டத்தட்ட 800 குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு அவர்களுக்குக் கல்வி வழங்கப் பட்டதையே எங்களின் சாதனையாகப் பார்க்கிறோம். இவர்களில் 500 குழந்தைகள்வரை முறைசார் பள்ளிக்குச் சென்றிருக்கின்றனர். 300 குழந்தைகள்வரை தற்போது வெவ்வேறு படிப்புகளில் படித்துவருகின்றனர்.

முறை சாராக் கல்வி என்பதால் ஆரிகாமி, விளையாட்டு, ஓவியம், கதைசொல்லல், பாட்டு எனப் பல கலைகளின் வழியாகத்தான் பாடத்திட்டத்தில் இருக்கும் பாடங்களை மெதுவாகச் சொல்லிக்கொடுத்து, அவர்களை எட்டாம் வகுப்பு தேர்வு எழுதும் அளவுக்குக் கொண்டுவர வேண்டும். இதுதான் மிகப் பெரிய சவால் என்கிறார் நடராஜ். குழந்தைகளின் வயது நிலைக்கேற்ப ஆண்டுக்கு ஒருமுறை இங்கு தேர்வு நடத்தப்படுகிறது. அதிகபட்சம் 8ஆவது வகுப்புத் தேர்வை எழுதும் அளவுக்குத் தயாராகும் மாணவர்களை முறைசார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். கொடையாளர்களைக் கொண்டுதான் 3 லட்சம் செலவில் சில இடங்களில் கட்டடங்கள் கட்டியிருக்கிறோம்.

ஆண்டுதோறும் ஜூன் 12 அன்று 10, 12ஆம் வகுப்பு படிக்கும் பழங்குடியின மாணவர்களுக்கும் மலைவாழ் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் கல்வி ஊக்கத் தொகையாக ஆயிரம் ரூபாய் அளிக்கிறோம். கல்லூரி மாணவர்களுக்கு அய்ந்தாயிரம் அளிக்கிறோம் என்கிறார் நடராஜ்.

ஆவின் நிறுவனத்தில்
பணியிடங்கள்

தமிழகத்தின் பால் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ஆவின் நிறுவனம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. தஞ்சாவூரில் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் தற்சமயம் காலியாக உள்ள பல்வேறு இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.

காலியிட விபரம் : மேலாளர் - இன்ஜி னியரிங்கில் 1, டெபுடி மேனேஜர் - டெய்ரியிங்கில் 2, பிரைவேட் செக்ரட்டரி - 1, கிரேடு 2 எக்ஸ்டென்சன் ஆபிசரில் 2, ஆபிஸ் எக்சிக்யூடிவில் 2, ஆபிஸ் ஜூனியர் எக்சிக்யூடிவில் 1, எலக்ட்ரிக்கல் டெக்னீசியனில் 1, பாய்லர் டெக்னீசியனில் 1, ரெப்ரிஜிரேஷன் டெக்னீசியனில் 1ம் காலி யிடங்கள் உள்ளன.

தேவைகள்: மேலாளர் - இன்ஜினியரிங் பிரிவுக்கு பி.இ., அல்லது பி.டெக்.,கில் எலக்ட்ரிக்கல்,எலக்ட்ரானிக்ஸ், எலக்ட் ரிக்கல் அண்டு இன்ஸ்ட்ரூமென்டேஷன், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன், ஆட்டோமொபைல், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் முடித்திருக்க வேண்டும். டெபுடி மேனேஜர் - டெய்ரியிங் பதவிக்கு டெய்ரி சயின்ஸ், டெய்ரியிங் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் பி.டெக்., முடித்திருக்க வேண்டும். பிரைவேட் செக்ரட்டரி பதவிக்கு பட்டப் படிப்புடன் டைப்பிங் தேவைப்படும்.

எக்ஸ்டென்சன் ஆபிசர் பதவிக்கு பட்டப் படிப்புடன் கோ-ஆப் பயிற்சி தேவைப்படும். இதே தகுதியே ஜூனியர் ஆபிஸ் எக்சிக்யூடிவ் பதவிக்கும் தேவை. எலக்ட்ரிக்கல் டெக்னீசியன் பதவிக்கு அய்.டி.அய்., படிப்பு தேவை. பாய்லர் டெக்னீசியன் பதவிக்கு பாய்லர் அட்டென்டண்ட் சான்றிதழ் படிப்பு தேவை. ரெப்ரிஜிரேஷன் டெக்னீசியனுக்கு அய்.டி.அய்., தேவை.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250/-அய்க் கட்டணமாக செலுத்த வேண்டும்.

விபரங்களுக்கு : www.aavinthanjavur.com/downloads/employment-notification.pdf

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner