எழுத்துரு அளவு Larger Font Smaller Font


மத்திய அரசின் பொதுத்துறை வங்கியான யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் கடன் வழங்கும் அதிகாரி பதவியில் 200 காலியிடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன. ஏதேனும் ஒரு பாடத்தில் இளங்கலைப் பட்டப் படிப்பு முடித்தவர்கள் இப்பதவிக்கு விண் ணப்பிக்கலாம்.

தேவையான தகுதி

குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் எனில் குறைந்த பட்சம் 55 சதவீத மதிப்பெண் அவசியம். சி.ஏ., அய்.சி.டபிள்யூ.ஏ., சி.எஃப்.ஏ.  உள்ளிட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அரசு அல்லது தனியார் வங்கியில் கடன் பிரிவில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கட்டாயம் வேண்டும்.

வயது வரம்பைப் பொறுத்தவரையில் குறைந்தபட்சம் 23 அதிகபட்சம் 32 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இருப்பினும், எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டு களும் ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வுமுறை

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவர். ஆன்லைன் வழியிலான எழுத்துத் தேர்வில் ரீசனிங், அடிப்படைக் கணிதம், வங்கிப் பணி, ஆங்கிலம் ஆகிய 4 பகுதிகளில் இருந்து தலா 50 கேள்விகள் வீதம் மொத்தம் 200 வினாக்கள் அப்ஜெக்டிவ் முறையில் இடம்பெறும்.

எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் ஒரு காலியிடத்துக்கு 3 பேர் என்ற விகிதாச்சார அடிப்படையில் நேர்காணலுக்கு அனுமதிக்கப் படுவர்.

இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் என்றால் ஒரு காலியிடத்துக்கு 5 பேர்.

நேர்காணலில் குறைந்தபட்சம் 25 மதிப்பெண் எடுக்க வேண்டும். இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் எனில் 22.5. நேர்காணலில் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் எடுக்காதவர்கள், எழுத்துத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தாலும் அவர்கள் பணிக்குத் தேர்வுசெய்யப்பட மாட்டார்கள். உரிய வயதுத் தகுதியும் பணி அனுபவமும் உடைய பட்டதாரிகள் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் இணையதளத்தைப் (ஷ்ஷ்ஷ்.uஸீவீஷீஸீதீணீஸீளீஷீயீவீஸீபீவீணீ.நீஷீ.வீஸீ) பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை, தேர்வுக்கட்டணம், சம்பளம், பதவி உயர்வு வாய்ப்புகள் உள்ளிட்ட இதர விவரங்களை வங்கியின் இணையதளத்தில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 21

எழுத்துத் தேர்வு தினம்: நவம்பர் 25

எழுத்துத் தேர்வு மதிப்பெண்: 200

நேர்காணல் மதிப்பெண்: 50

யூடியூப் மூலம் போட்டித் தேர்வுக்கு தயாராகலாம்

பாடல்கள், நகைச்சுவை காட்சிகளைப் பார்த்து ரசிப் பதற்கு மட்டுமல்ல, பாடங்களைப் படிப்பதற்கும்கூட யூடியூப் சிறந்த ஊடகம்தான். போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் இந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மனிதவள மேம்பாட்டு துறையும் அதன்கீழ் இயங்கி வரும் யு.ஜி.சி. உள்ளிட்ட அமைப்புகளும் கல்வித்துறை சார்ந்த பல்லாயிரக்கணக்கான காணொலிகளை உருவாக்கி இணையதளத்தில் தொடர்ந்து பதிவேற்றிவருகின்றன. இந்தக் காணொலிகள் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளவை.

பல துறைகள், பல்லாயிரக் காணொலிகள்

யு.ஜி.சி.யால் தொடங்கப்பட்ட கல்வித் தகவல்களுக்கான கூட்டமைப்பு (சி.இ.சி.) பேராசிரியர்களைக்கொண்டு ஒவ் வொரு பாடப்பிரிவுக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட காணொலிகளை உருவாக்கி வெளியிட்டுள்ளது. கலை, அறிவியல், தத்துவம், மேலாண்மை, வணிகவியல், தகவல் தொடர்பு, சுற்றுலா, விளம்பரம், இசை என ஏறக்குறைய எல்லாத் துறைகளுக்கும் காணொலிக் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்தக் காணொலிகள் குறிப்பிட்ட பாடப்பிரிவில் பேராசிரியராகப் பணியாற்றுவோரின் விரிவுரைகளாக அமைந்துள்ளன. 20 நிமிடங்கள் தொடங்கி 1 மணி நேரம்வரை கால அளவு கொண்டவை. பேராசிரியர்களின் விரிவுரைகள் யு.ஜி.சி. பாடத் திட்டத்தின்படி அமைந்தவை என்பதால் யு.ஜி.சி. நடத்தும் நெட் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் இந்தக் காணொலிகளையும் தங்களது படிப்பின் ஒரு பகுதியாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

யூ.பி.எஸ்.சி. நடத்தும் குடியுரிமைத் தேர்வுகளுக்கும் இந்தக் காணொலிகள் பயனுள்ளதாக இருக்கும். வரலாறு, புவியியல், அரசியலமைப்பும் சட்டங்கள், சுற்றுச்சூழல் அறிவியல் ஆகிய துறைகளைச் சேர்ந்த காணொலிகள் யூ.பி.எஸ்.சி. முதனிலைத் தேர்வுக்கும் முதன்மைத் தேர் வுக்கும் பயனுள்ளவை. முதன்மைத் தேர்வில் அரசியல் அறிவியல், சமூகவியல், பொருளாதாரம், பொது மேலாண்மை ஆகிய பாடங்களை விருப்பப் பாடங்களாகத் தேர்வு செய்துள்ளவர்களுக்கும் இந்தக் காணொலிகள் நல்லதொரு வாய்ப்பு.   என்ற யூடியூப் சேனலில் இந்தக் காணொலிகளைக் காணலாம்.

போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் தங்களது தயாரிப்பில் புத்தக வாசிப்போடு காணொலிகள் பார்ப்பதையும் இணைத்துக்கொள்ளலாம்.


ஸ்மார்ட் ஃபோன் மூலம் தேர்வுகள்

செல்ஃபோனுக்குத் தடை என்பது பரவலாகப் பல்வேறு கல்லூரி வளாகங்களிலும் அமலில் இருப்பது. கல்லூரி மாணவர்களுக்கு ஸ்மார்ட் ஃபோன் கவனச் சிதறலாகும் என்பதே கல்லூரி நிர்வாகம் இதற்குத் தரும் விளக்கம். பெற்றோர்களும் இந்தக் கட்டுப்பாட்டுக்கு உடன்படுகின்றனர். இந்த நிலையில்தான் புதிதாக வந்திருக்கும் சில செயலிகள் ஸ்மார்ட் போன்களைக் கல்லூரி வளாகத்துக்குள் குறிப்பாகத் தேர்வறைக்கே கொண்டுசெல்கின்றன. ஸ்மார்ட் ஃபோன் ஆப்ஸ் அடிப்படையிலான தேர்வுகள் நாட்டின் பெருநகரக் கல்லூரிகளில் பிரபலமடைந்துவருகின்றன.

செயலியின் வழியே...

செயலி வழிப் பாடச் செயல்கள் என்பது பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஏற்கெனவே பரிச்சயமானவை. பாடக் குறிப்புகள், திருப்புதல்கள், தேர்வுக்கான தயாரிப்புகள், பாடம் சார்ந்த மற்ற உதவிகள் என ஏராளமான செயலிகள் சந்தைகளில் இலவசமாகவும் குறைவான கட்டணத்திலும் கிடைக்கின்றன.

இதன் அடுத்த கட்டமாக அறிமுகமாகி இருப்பதே தேர்வுக்கான செயலிகள். மும்பை வித்யாவிகாரைச் சேர்ந்த கே.ஜே.சோமையா கல்லூரி குழுமம் சோதனை முயற்சியாக ஒரு செமஸ்டருக்கான தேர்வுகள் பலவற்றையும்  என்ற செயலி மூலம் நடத்தியுள்ளது.

கல்லூரியின் முன்னாள் மாணவரான அமித்ஷா உருவாக்கிய இந்தச் செயலி மூலம் 3,000 மாணவர்கள் தேர்வுகளை எழுதி உள்ளனர். பேனா மற்றும் பேப்பர் இன்றி நடந்த இந்தத் தேர்வு மாணவர்- ஆசிரியர் என இரு தரப்பினருக்கும் திருப்தியைத் தந்திருக்கிறது.

முறைகேட்டுக்கு வழி இல்லை!

தேர்வறைக்குள் ஸ்மார்ட் ஃபோனுடன் மாணவ மாணவியர் அனுமதிக்கப் படுகின்றனர். இணைய இணைப்புக்கு மாறாக வைஃபை வாயிலாக ஆசிரியர் அல்லது தேர்வறைக் கண்காணிப்பாளர் வசமிருக்கும் பிரத்யேகக் கருவி மூலம், மாணவர்களின் மொபைல்கள் இணைப்பு பெறுகின்றன.

மொபைல்களில் பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்கும் செயலி வழி யாக வினாத்தாள் விநியோகம் நடைபெறுகிறது. இணைய இணைப்பு இல்லாததால் ஸ்மார்ட் ஃபோனில் விடைகளைத் தேட முடியாது. வேறு ஏதேனும் முறைகேடுகளை செல்போனில் மேற்கொண்டாலும் அது உடனுக்குடன் தேர்வு கண்காணிப்பாளரை எச்சரிக்கை செய்யும். வினாத்தாளில் வினாக்களின் வரிசை என்பது தாறுமாறாக மாறியி ருக்கும் என்பதால், மாணவர்கள் ஒருவருக்கொருவர் காப்பியடிப்பது இங்கே கடினம்.

தேர்வு முடிந்த சூட்டில் செயலி வாயிலாகவே முடிவுகளை அறிந்துகொள்வதும் எளிது. மாணவர்கள் பதிலளித்த விதம், கடினக் கேள்விகள், அதிகம் தவறு இழைத்தவை உள்ளிட்ட பல்வேறு தகவல்களை ஆசிரியர் அறிந்துகொள்ளவும் இந்தச் செயலியில் வகை செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கடின மற்றும் குழப்பமான பகுதிகளை ஆசிரியர் வகுப்பறையில் மீண்டும் கற்பிக்கவும், அதன் வழியே மாணவரின் கல்வித் திறனை மேம்படுத்தவும் வாய்ப்பாகிறது.




.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner