எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இன்றைய இளைஞர்கள் எதைப் படித்தால் ஜெயிக்கலாம் என்று திட்டமிட்டுத்தான் படிப்பைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால், படிப்பு முடிந்ததும் வேலைக்கான நேர் காணலில் பலர் சறுக்குகிறார்கள். என்னைவிட குறைவான மதிப்பெண்தான் பெற்றிருக்கிறான். ஆனால், அவனுக்கு வளாகத் தேர்விலேயே இடம் கிடைத்துவிட்டதே? என்னிடம் என்ன குறை? ஏன் எனக்கு அந்த வேலை கிடைக்க வில்லை? - இப்படிப்பட்ட கேள்விகள் வேலை தேடும் பலருக்கும் இருக்கும்.

இன்று வேலைவாய்ப்புக்குப் பல்முனைப் போட்டி நிலவுகிறது. படிப்பை முடித்ததுமே வேலை தேடும் புதியவர்கள், கடந்த ஆண்டு படிப்பை முடித்துவிட்டு இன்றுவரை வேலை கிடைக்காமல் தேடும் ஒரு குழுவினர், வேலையை இழந்துவிட்டுப் புதிய வேலை தேடும் சிலர், வி.ஆர்.எஸ். கொடுத்துவிட்டு வேலை தேடுகிறவர்கள் எனப் பலதரப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களும் வேலை தேடுகிறார்கள். இவர்களுக்கு மத்தியில் உங்களுக்கு வேலை கிடைக்க வேண்டுமா?

நேர்த்தி அவசியம்

வேறு எதையும்விட தேர்வுக்கு முன்னர் உங்களைத் தயார் செய்துகொள்வது முக்கியம்.

உங்கள் ரெஸ்யூமைப் புதுப்பித்து, புது அச்சு எடுத்து, தேதி போட்டு, மறக்காமல் கையொப்பம் இட்டு, சீராக அடுக்கி ஒரு கோப்பில் வைத்துக்கொள்ளுங்கள். தேர்வு நடத்துகிறவர்களுக்குக் கொடுக்க வேண்டிய ஒரு தொகுப்பைத் தனியாக வைத்துக் கொள்ளுங்கள். எக்காரணம் கொண்டும் ஜெராக்ஸ் காப்பியை எடுத்துச் செல்ல வேண்டாம். நூறாவது முறை தேடியும் வேலை கிடைக்காதவர் என்ற தவறான அபிப் பிராயத்தை அது ஏற்படுத்தலாம்.

எட்டாக மடித்து பேண்ட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு வந்து ரெஸ்யூமைக் கொடுப்பது, வேறு நிறுவனத்தின் பெயர் எழுதிய, தேதியை மாற்றாத பழைய ரெஸ்யூ மைச் சமர்ப்பிப்பது, இவையெல்லாம் தவறான அணுகுமுறை.

மறக்காமல் உங்கள் மின்னஞ்சல் முகவரி யைக் குறிப்பிடுங்கள். 007, ஸ்வீட்டி, பேபி, ராக் ஸ்டார், ட்ரீம் பாய் என்று விளையாட்டுத் தனமான மின்னஞ்சல்களைக் கொடுக்க வேண்டாம். அது உங்கள் மீதான மதிப்பைக் குறைத்துவிடும்.
நிரந்தரமான கைபேசி எண்ணைக் கொடுங்கள். சில நேரம் சில மாதங்களுக்குப் பின்னர் நீங்கள் அழைக்கப்படும் வாய்ப்பு உருவாகலாம். அப்போது உங்கள் பழைய எண் மாறியிருந்தால் வாய்ப்பை இழக் கக்கூடும்.

எந்த நிறுவனத்துக்கு தேர்வுக்குப் போகி றீர்களோ அந்நிறுவனம் பற்றிய முழுமையான தகவல்களை அறிந்துகொள்ளுங்கள். இப் போது பெரும்பாலான நிறுவனங்கள் தனியாக இணையதளம் வைத்திருப்பதால் தகவல் களைத் திரட்டுவது எளிது.

இயல்பாக இருங்கள்

நிறுவனத்துக்குள் அடி எடுத்துவைப்பது முதல் தேர்வு முடியும்வரை பல இடங்களில் கண்காணிக்கப்படுகிறீர்கள் என்பதை மறக்க வேண்டாம். நகம் கடிப்பது,  தலை முடியில் சதா கை வைத்தபடி இருப்பது, கைபேசியைச் சதா பார்த்துக்கொண்டே இருப்பது, கோணல் மானலாக அமர்வது, இருக்கையை மாற்றிக் கொண்டே இருப்பது போன்றவை நீங்கள் பதற்றமாக இருப்பதைக் காட்டிக் கொடுத்து விடும்.

அக்கம் பக்கம் அதிகம் பேசுவது, மிக ரகசியமாக பேசுவதாய் நினைத்துக்கொண்டு முகத்தில் நவரசம் காட்டுவது, தொடர்ந்து குறுஞ்செய்திகள் அனுப்பியபடி இருப்பது, மிக இறுக்கமான முகத்தோடு இருப்பது போன் றவை அனைத்துமே கண்காணிக்கப்படும்.

அலுவலகத்துக்குள் நுழைந்தது முதல் ஒரு சிறிய புன்னகையோடு நிமிர்ந்து மிகச் சரியாக அமர்ந்து, சூழலை உள்வாங்கிக்கொள்ளுங்கள். தேவைப்பட்டால் மட்டுமே மிக மெதுவாக, முக பாவம் மாறாமல் மென்மையாக அடுத்த வரிடம் பேசுங்கள்.

ஆடைகளில் கவனம் தேவை

ஆள் பாதி ஆடை பாதி என்பதால் உடைகளில் கவனம் தேவை. ஆண்கள் தங்கள் நிறத்துக்கும் உருவத்துக்கும் பொருத்த மான ஒரு ஃபார்மல் உடுப்பை மிகச் சுத்தமாக அணிய வேண்டும். காலணிகளைப் பளிச் சென்று சுத்தம்செய்து, துவைக்கப்பட்ட காலுறை அணிந்து செல்லுங்கள்.

ஒரு முறை மிகத் தகுதியான நபர் ஒருவ ரின் ரெஸ்யூம் எங்கள் கையில் கொடுக் கப்பட்டது. வந்தவரை எங்கள் முன் அமரச் சொன்னோம். சில நொடிகளில் அந்தக் குளிர்சாத அறையில் துர்நாற்றம் வீசியது. என்னுடன் இருந்த சக தேர்வு அதிகாரி அந்த நபரிடம், நீங்கள் போகலாம், நாங்கள் மின்னஞ்சல் அனுப்புகிறோம் என்று கூறி அனுப்பி விட்டார். காலுறைகளில் சேரும் வியர்வை, துர்நாற்றத்தை ஏற்படுத்தும். மிகக் கவனமாக இருங்கள். உங்கள் மீதும் வியர்வை வாடை இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

கைகுலுக்கும்போதோ நீங்கள் உங்கள் ஃபை லைக் கொடுக்கும்போதோ உங்கள் கைகள் சுத்தமாய் இருக்க வேண்டியது மிக முக்கியம்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner