எழுத்துரு அளவு Larger Font Smaller Fontஉலகத் தரம் வாய்ந்த பல வகையான கார்களை நம் ஊர் சாலைகளில் பார்க்கலாம். ஆனால், அய்தராபாத்தில் சுதாகர் உருவாக்கி இருக்கும் சுதா கார் அருங்காட்சி யகத்துக்குப் போனால் இதுவரை நீங்கள் கற்பனை செய்து கூடப் பார்த்திராத கார்களைப் பார்க்கலாம். அய்தரா பாத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் மிக முக்கியமான அம்சமாக விளங்குகிறது சுதா கார் அருங்காட்சியகம்.   சிவப்பு நிறத்தில் நடுவில் தங்க நிறக் கோடுகள் மினுங்க மிகப்பெரிய கிரிக்கெட் பந்து. ஒரு பொத்தானை அழுத்த, கதவு ஒன்று திறந்தது. உள்ளே இருந்த இருக்கையில் அமர்ந்துகொண்டு, இது கிரிக்கெட் பந்து கார்! என்று சொல்லி, சிறிது தூரம் ஓட்டிக் காட்டினார் சுதாகர். சிவப்பு நிறத்தில் மெகா சைஸ் கிரிக்கெட் பந்து ஒன்று உருண்டுபோவதுபோல மிகவும் வித்தியாசமாக இருந்தது. அதன் அருகில் ஒரு பிரம்மாண்டமான ஷூ. அதையும் ஓட்டிக் காட்டினார்.

பக்கத்தில் மினி தண்ணீர் தொட்டி சைசுக்கு ஒரு கப் அண்டு சாசர், ராட்சதக் கத்தரிக்காய், பிரம்மாண்ட ஹெல்மெட், ஆள் உயரக் கிளிக்கூண்டு இவையும் கார்கள்தான்! என்றார் சுதாகர். இன்னும் தினுசுதினுசான கம்ப்யூட்டர் கார், சூட்கேஸ் கார், செல்போன் கார், பிரஷர் குக்கர் கார், கால்பந்து கார், குழந்தைகள் பயன்படுத்தும் ரப்பர் மாதிரியே ஒரு கார், பென்சில் சீவும் ஷார்ப்னர் மாதிரி ஒரு கார் என்று விதம்விதமான கார்களை உருவாக்கி இருக்கிறார் சுதாகர். பார்வையாளர்களும் காரணம்தான்!

விதம் விதமாக கார்களை உருவாக்கி அசத்தும் சுதாகர் ஒரு பொறியாளர் என்று நினைத்தால், அது தவறு. அவர் படித்தது பி.காம். பள்ளி நாட்களிலேயே துளிர்த்த ஆர்வம் இது. அப்போ, எனக்கு ஒரு சைக்கிள் வாங்கிக் கொடுத்தார்கள். கொஞ்ச நாளில் சைக்கிள் சலிப்புத் தட்டியது. அதனால் சைக்கிளில் இருந்த ஹாண்டில்பாரை எடுத்துவிட்டு, கார்களில் பயன்படுத்தும் ஸ்டியரிங்கைப் பொருத்தினேன். என்னுடைய புது மாடல் சைக்கிளை ஓட்டிக்கொண்டு, பள்ளிக்கூடத்துக்குப் போனபோது, என் சைக்கிளை வேடிக்கை பார்க்க அநேக மாணவர்கள் கூடிவிட்டார்கள். வழியில் எல்லோரும் என் சைக்கிளை அதிசயமாகப் பார்ப்பார்கள் என்கிறார். பள்ளி மாணவராக சைக்கிளில் வித்தியாசத்தைப் புகுத்திய சுதாகர், கல்லூரியில் படிக்கும்போது, மோட்டார் பைக்கில் சில புதுமையான மாற்றங்களைச் செய்தார்.

உங்கள் வீட்டில் இதற்கெல்லாம் ஆட்சேபிக்க வில்லையா? என்றால், இல்லை. அவர்கள் எனக்கு ஊக்கம் அளித்தார்கள். நாங்கள் பரம்பரையாக பிரிண்டிங் பிசினஸ்தான் செய்துவருகிறோம். எங்களுடைய அச்சகம் ஹைதராபாத்தின் முக்கிய அச்சகங்களில் ஒன்று. அதையும் நான் கவனித்துக் கொள்ளுகிறேன் என்கிறார்.

புது விதமான கார்களை உருவாக்கும் யோசனை எங்கிருந்து வந்தது எனக் கேட்டால், சொந்தமாக ஒரு பட்டறையும் ஒரு மெக்கானிக் ஷெட்டும் இருக்கின்றன. என் மனதில் உருவாகும் யோசனையை, முதலில் மாதிரி வடிவமாக உருவாக்கி முன்னோட்டம் பார்ப்பேன். அதன் பிறகு, பெரிய அளவில் உருவாக்குவேன். மேலும், இந்த மியூசியத்தின் பார்வையாளர்கள் புத்தகத்தைப் பாருங்கள். பலர், என் முயற்சி, உழைப்பு போன்றவற்றுக்குப் பாராட் டுகள் தெரிவித்திருந்தாலும், இன்னும் சிலர் புது யோசனை களைக் கொடுத்திருப்பார்கள். அதன் அடிப்படையிலும் நான் புதுமையான கார்களை உருவாக்குவது உண்டு என்கிறார்.

அருங்காட்சியகம்

இந்த அருங்காட்சியகத்தை நிறுவக் காரணமான சம்பவம் இன்னமும் சுவாரசியமாக இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்னால் அய்தராபாத்தின் ஹூசைன் சாகர் ஏரியை ஒட்டிய டேங்க் பண்ட் ரோட்டில் ஒரு அணிவகுப்பு நடத்த போக்குவரத்துத் துறையிடம் அனுமதி பெற்றார் சுதாகர். தன்னுடைய கார்கள், மோட்டார் பைக்குகள், சைக்கிள்களின் அணிவகுப்பை நடத்தினார். லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் அதை ரசிக்கத் தொடர்ந்து அய்ந்து ஆண்டுகள் இந்த வாகனங்கள் அணி வகுப்பை நடத்தினார். ஒவ்வொரு ஆண்டும், பார்வையா ளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போனது. தனது வாகனங்களுக்கு மக்கள் மத்தியில் கிடைத்த பாராட்டில் உற்சாகம் பெற்று இந்த அருங்காட்சியகத்தை நிறுவினார்.

அய்தராபாத்தில் பில்லியர்ட்ஸ் வாகையர் பட்டப் போட்டி நடந்தபோது, பில்லியர்ட்ஸ் ஆடும் மேஜை வடிவிலேயே ஒரு காரை உருவாக்கினேன். அந்தப் போட்டியில் கலந்து கொண்ட பல விளையாட்டு வீரர்களும் அந்த காரைப் பார்த்து அசந்துபோனார்கள். அவர்கள் அனை வரும் அந்த காரின் மேல் ஆட்டோகிராப் போட்டு என்னைக் கவுர வித்தார்கள் என்கிறார்.

நிர்வாக அதிகாரி ஆகலாம்!


மத்திய அரசின் பொதுத் துறைக் காப்பீட்டு நிறுவனமான ஓரியன்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நிர்வாக அதிகாரிப்  பணியிடங்கள் போட்டித் தேர்வு மூலம் நேரடியாக நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 300 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பொதுப் பணி, கணக்கு, சட்டம், பொறியியல், மருத்துவம் எனப் பல்வேறு பணிகள் அடங்கும்.

தேவையான தகுதி

பணிகளுக்கு ஏற்ப கல்வித் தகுதி மாறுபடும். பொதுப் பணிக்குப் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 55 சதவீத மதிப்பெண் போதுமானது. சட்டப் பணிக்கு பி.எல். பட்டதாரிகள், கணக்குப் பணிக்கு எம்.காம்., எம்.பி.ஏ. (நிதி) பட்டதாரிகள், பொறியியல் பணிக்கு பி.இ. ஆட்டோமொபைல் பொறியியல் பட்டதாரிகள், மருத்துவப் பணிக்கு எம்.பி.பி.எஸ். பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம்.

வயது குறைந்தபட்சம் 21, அதிகபட்சம் 30 ஆகவும் நிர்ண யிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு விதிமுறை களின் படி, வயது வரம்பில் எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு அய்ந்து ஆண்டுகளும் ஓ.பி.சி. வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப் படும்.

தகுதியானோர் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவார்கள். முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு என இரண்டு நிலைகளில் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். முதல்நிலைத் தேர்வில் ஆங்கிலம், ரீசனிங், அடிப்படைக் கணிதம் ஆகிய 3 பகுதிகளில் இருந்து கொள்குறி (அப்ஜெக்டிவ்) முறையில் 100 கேள்விகள் கேட்கப்படும். இதில் தேர்ச்சி பெறுவோர் மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். இத்தேர்வில் ரீசனிங், ஆங்கிலம், பொது அறிவு, அடிப்படைக் கணிதம் ஆகிய நான்கு பகுதி களில் இருந்து  கொள்குறி(அப்ஜெக்டிவ்) முறையில் 200 கேள்விகள் கேட்கப்படும். மெயின் தேர்வில் கூடுதலாக, ஆங்கிலத்தில் விரிவாகப் பதிலளிக்கும் வகையிலான தேர்வும் இடம்பெறும்.

நிர்வாக அதிகாரி பணிக்கு ஆரம்ப நிலையில், ரூ. 51 ஆயிரத்துக்கு மேல் சம்பளம் கிடைக்கும். தகுதியுள்ள பட்டதாரிகள் ஓரியன்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் இணைய தளத்தைப் (ஷ்ஷ்ஷ்.ஷீக்ஷீவீமீஸீtணீறீவீஸீsuக்ஷீணீஸீநீமீ.ஷீக்ஷீரீ.வீஸீ) பயன்படுத்தி செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை நிறுவனத்தின் இணைய தளத்தில் விளக்கமாக அறிந்துகொள்ளலாம்.

தேர்வு நாள்

முதல்நிலைத் தேர்வு : அக்டோபர் 22 (உத்தேசமாக)

மெயின் தேர்வு: நவம்பர் 18

ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீஸ் நிறுவனத்தில் வேலை   

ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீஸ் நிறுவனத்தில் உதவி மேற்பார்வையாளர் பணிக்கு விண்ணப்பிக்க வரும் 30 ஆம் தேதி கடைசி தேதி என்பதால் விண்ணப்பிக்காத பட்டதாரிகள் விண்ணப்பித்து பயனடையலாம்.

பணி:   காலியிடங்கள்: 85

தகுதி: ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் கணினி படிப்பில் ஓராண்டு டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 

கணினி தொடர்புடைய பணியில் குறைந்த பட்சம் ஓராண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு:  33 வயதுக்குள் இருக்க வேண்டும் (குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு).
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000/-  விண்ணப்பக் கட்டணத்தை       என்ற பெயரில் டி.டி. எடுத்து விண்ணப்பத்துடன் அனுப்பவேண்டும்  (முன்னாள் ராணுவத்தினர் & எஸ்சி., எஸ்டி  பிரிவினருக்குக் கட்டணம் இல்லை)

விண்ணப்பிக்கும் முறை:  http://www.airindia.com/careers.html என்ற இணையதளத்தில் உள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்தின்படி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைத் தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் கீழ்க்காணும் முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் திறனறி தேர்வுகளின் அடிப்படையில்  தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் விவரங்களுக்குhttp://www.airindia.com  இணைய தளத்தில் பாருங்கள்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 30.8.2017

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner