எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுக்கோட்டை மன்னர் அரசு கலை அறிவியல் கல்லூரியில்  எளிய குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்று இந்தக் கல்லூரியில் படிக்கின்றனர். இதில் கன்னியாகுமரியைச் சேர்ந்த பி.ராஜ ரெத்தினம்,  உதவிப் பேராசிரியராக 19 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகிறார். அதோடு அங்குள்ள தேசிய மாணவர் படைக்கான அலுவலராகவும் பொறுப்பு வகிக்கிறார்.

இப்பிரிவு மாணவர்களுக்குத் தேவையான பயிற்சிகளை அளித்துப் புதுடில்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அணி வகுப்பில் இக்கல்லூரி மாணவர்களை முதன்முதலாகக் கலந்துகொள்ளச் செய்தார். இவரிடம் பயிற்சி பெற்ற

1000-த்துக்கும் மேற்பட்ட என்.சி.சி. மாணவர்கள் இந்திய ராணுவம், எல்லைப் பாதுகாப்புப் படை, மத்தியப் பாதுகாப்புப் படை, தமிழகக் காவல் துறை உட்படப் பல்வேறு துறைகளில் பணிபுரிகின்றனர்.இத்தகைய பணிகளைப் பாராட்டி இக்கல்லூரிக்குத் தரைப்படை பிரிவையும் விமானப் படை பிரிவையும் தமிழக அரசு ஏற்படுத்தி உள்ளது.

மாற்றத்துக்குத் தேவையான விழிப்புணர்வு

இது குறித்துத் தேசிய மாணவர் படை அலுவலர் பி. ராஜரெத்தினத்திடம் பேசுகையில், கன்னியாகுமரி மாவட் டத்தில் கீழ்குளம் பகுதியில் பிளஸ் டூ வரையில் தமிழ் வழிக் கல்வியில் படித்தேன். அதன் பிறகு ஆர்வ மிகுதியால் இந்தியில் பி.எச்டி.வரை படித்துக் கல்லூரியில் இந்தி உதவிப் பேராசிரியர் ஆனேன்.

ஒரு நாள் கல்லூரியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் என்.சி.சி. பிரிவில் காலியாக உள்ள அலுவலர் பணியைக் கவனிக்க யாருமில்லையா என ஆதங்கத்துடன் அன்றைய கல்லூரி முதல்வர் கேட்டார். எல்லோரும் அமைதிகாத்தபோது நான் பொறுப்பை முழுமனதுடன் ஏற்றுக்கொண்டேன் என்கிறார்.

உடல் தகுதியை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பிரிவுக்கு 100 மாணவர்கள் தேர்வுசெய்யப்படுகிறார்கள். அவர் களுக்கு வாரம் ஒரு நாள் கல்லூரியில் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதைப் பின்பற்றித் தினமும் காலை, மாலை என இருவேளையும் மாணவர்கள் பயிற்சி எடுத்துக்கொள்வர்.

உடல், மனதை வலிமையோடு வைத்துக்கொள்வது, தடகளம், துப்பாக்கிச் சுடுதல், தனி, குழுவாகத் திறன்களை வெளிப்படுத்துவது, தலைமைப் பண்பை வெளிக்கொணருதல், ஊழலின்றி நேர்மையாகச் செயல்படுதல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. சமூக மாற்றத்துக்குத் தேவையான அனைத்து விதமான விழிப்புணர்வு பணிகளிலும் மாணவர்கள் கலந்துகொள்ளவும் ஊக்குவிக்கிறார்.

ராணுவ வீரருக்குத் தேவையான அத்துணை பயிற்சிகளும் இங்கு அளிக்கப்படுவதால் பாதுகாப்புத் துறையில் இப்பிரிவு மாணவர்கள் எளிதில் தேர்ச்சி அடைந்துவிடுகிறார்கள். அதன்படி என்.சி.சி. மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் ராணுவம், விமானப்படை, கடற்படை, எல்லை, மத்தியப் பாது காப்புப் படையில் பணிபுரிகின்றனர். ஏராளமானோர் தமிழகக் காவல் துறையில் பல்வேறு நிலைகளில் பணிபுரிகின்றனர். மேலும், டி.என்.பி.எஸ்.சி. உள்ளிட்ட போட்டித் தேர்வுக்கும் அவர்களைத் தயார்படுத்துவதால் எளிதில் வேலையைத் தேடிக்கொள்கின்றனர்.
என்.சி.சி. சான்றுடன் நேர்முகத் தேர்வுக்குச் செல்லும் மாணவர்களுக்கு 3 மதிப்பெண் கூடுதலாகக் கிடைத்து விடுவதால் வேலைவாய்ப்பு எளிதில் கிடைத்துவிடுகிறது. என்.சி.சி.யில் சி பிரிவு சான்றிதழ் இருந்தால் யூ.பி.எஸ்.சி. தேர்வில் எழுத்துத் தேர்வு எழுதாமலேயே நேரடியாக நேர்முகத் தேர்வுக்குச் செல்லலாம்.

இதன் மூலம் இக்கல்லூரியைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட என்.சி.சி. மாணவர்கள் அரசு வேலையில் பணிபுரி கின்றனர். இவர்கள் அனைவரும் சகிப்புத்தன்மை, நேர்மை, பொறுமை, எளிதில் முடிவெடுக்கும் திறமை போன்ற ஆளுமைத் திறன் படைத்தவர்களாக அந்தந்தத் துறைகளில் மிளிர்கிறார்கள்.

இங்கே படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் எளிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். இருந்தாலும் குடும்ப வறுமையை உடைத்தெறிந்து சாதிக்க வேண்டுமென்ற உந்துதலை இந்தப் பயிற்சிகள் அளிக்கின்றன.

தமிழகத்துக்குத் தேசிய அளவிலான விருதுகளையும் இந்தப் பயிற்சி பெற்றுத் தந்திருக்கிறது என்கிறார் ராஜ ரெத்தினம்.

பட்டதாரிகளுக்கு கடற்படையில் பணியிடங்கள்

இந்தியக் கடற்படையில் நிர்வாகம் மற்றும் தொழில் நுட்பப் பிரிவுகளில் குறுகிய காலப் பணி மற்றும் நிரந்தரப் பணியிடங்கள் உள்ளன. அவற்றில் பொறியியல் பட்ட தாரிகள் நேரடியாக அதிகாரிகளாகப் பணியமர்த்தப்பட உள்ளனர்.

தேவையான தகுதி: இதற்கு எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனி கேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினீயரிங், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, இன்ஸ்ட்ருமென்டேஷன், இண்டஸ்ட்ரியல் புரடக்சன் உள்ளிட்ட பொறியியல் தொழில்நுட்பப் படிப்புகளில் முதல் வகுப்பில் பி.இ. அல்லது பி.டெக். பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருப்பவர்களும் விண் ணப்பிக்கலாம். வயது வரம்பைப் பொறுத்துவரை, விண்ணப் பதாரர்கள் 2.7.1993-க்கும் 1.1.1999-க்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்.

ஆண்கள், பொதுப் பிரிவு மற்றும் தொழில்நுட்பப் பிரிவு இரண்டுக்கும் விண்ணப்பிக்கலாம். பெண்கள் தொழில் நுட்பப் பிரிவின் நேவல் ஆர்க்கிடெக்சர் பிரிவுக்கு மட்டுமே விண்ணப்பிக்கலாம். ஆண், பெண் இருபாலருக்குமே திருமணம் ஆகியிருக்கக் கூடாது.

தகுதியுடைய நபர்கள், பணித் தேர்வு வாரியத்தின்  சிறப்பு நேர்முகத் தேர்வு மூலமாகத் தேர்வுசெய்யப்படுவர். இதில், உளவியல் தேர்வு, நுண்ணறிவுத் திறன் தேர்வு, குழு விவாதம் உள்ளிட்டவை இடம்பெறும்.

கடற்படை அதிகாரி பணிக்குத் தேர்வு செய்யப்படு வோருக்குக் கேரள மாநிலம் எழிமலாவில் உள்ள இந்திய நேவல் அகாடமியில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்கள், கடற்படையில் நேரடியாக சப்-லெப்டினென்ட் ஆகப் பணியமர்த்தப்படுவர். அதன் பிறகு லெப்டினென்ட், லெப்டினென்ட் கமாண்டர், கமாண்டர் எனப் படிப்படியாகப் பதவி உயர்வு பெறலாம். தகுதியுள்ள பொறியியல் பட்டதாரிகள் www.joinindian navy.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் தகவல்களை இணையதளத்தில் விளக்கமாகத் தெரிந்துகொள்ளலாம்.

ஆர்வத்துடன் முயன்றால் தணிக்கையாளராகலாம்

செலவு செய்வது, நுகர்வதைத் தாண்டி பணம் இயங்கும் விதம் குறித்து அறியவும் அதை நிர்வகிக்கவும் ஆசைப் பட்டிருக்கிறீர்களா? உங்க ளுக்குள் ஒரு ஆடிட்டர் ஒளிந்திருக் கலாம். ஒரு நாட்டின் வரவு செலவு முதல் ஒரு நிறுவனத்தின் நிதி அறிக்கை வரை ஆடிட்டர்கள் எனப் படும் கணக்குத் தணிக்கையாளர்களின் பங்கு உள்ளது. இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் ஆடிட்டர் களுக்கான வாய்ப்புகள் வளர்ந்துகொண்டேதான் இருக் கிறது. ஜி.எஸ்.டி. போன்ற புதிய நடைமுறைகள் அறிமுக மாகும்போது அதிகம் பலன் பெறுவதும் வாய்ப்புகள் பெறுவதும் அவர்கள்தான். அதிலும், சி.ஏ. படித்தவர் மட்டும்தான் ஆடிட்டர் ஆக முடியும் என்பதில்லை.

தகுதி திறன் படிப்புகள்

ஆடிட்டராகப் பணியாற்றுவதற்கு எல்லாரும் சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட் படித்துத் தேறியிருக்க வேண்டிய அவசியமில்லை. பி.காம். படித்திருப்பதுதான் அடிப்படைக் கல்வித் தகுதி. சில நிறுவனங்களில் அக்கவுண்டிங்கில் முதுகலைப் படிப்பைத் தகுதியாகக் கேட்கின்றனர். நிதித் துறைப் படிப்பைச் சிறப்புப் படிப்பாக எடுத்து எம்.பி.ஏ. முடித்தவர்களும் ஆடிட்டர்களாகப் பணியாற்றுகிறார்கள். சில பல்கலைக்கழகங்களில் ஆடிட்டிங் தொடர்பாகச் சிறப்புப் பயிற்சித் திட்டங்களும் உள்ளன. கணிப்பொறி அறிவு அவசியமானது. டேலி போன்ற அக்கவுண்டிங் மென்பொருட்களைத் தெரிந்துவைத்திருப்பது அவசியம். அய்.சி.டபிள்யு.ஏ., சி.ஏ., கம்பெனி செக்ரட்டரிஷிப் போன்ற உயர் படிப்புகள் அடுத்த நிலையிலுள்ளன.

பெருகும் வாய்ப்புகள்

நவீன இந்தியாவைப் பொறுத்தவரை முதலீடுகளும் புதிய தொழில்முயற்சிகளும் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. ஜி.எஸ்.டி. போன்ற புதிய நடைமுறைகளும் சேர்ந்து கணக்காளர்கள், ஆடிட்டர்களின் தேவையை அதிகரித்துள்ளன. அரசுத் துறைகளில் ஆடிட்டர்களுக்கான தேவை குறைவதேயில்லை. இன்டர்னெல் ஆடிட்டர்ஸ், எக்ஸ்டர்னல் ஆடிட்டர்ஸ், பாரன்சிக் ஆடிட்டர்ஸ் எனப் பல பொறுப்புகளை அவர்கள் வகிக்கலாம். உற்பத்தி நிறுவனங்கள், காப்பீட்டுத் துறை, வங்கி, நிதி நிறுவனங்கள், தொண்டு அமைப்புகளில் ஆடிட்டர்கள் அத்தியாவசியத் தேவையாக உள்ளனர். உயர் வருவாய்க்காக மட்டுமின்றி கணிதம், எண்களின் மீது தீராத காதல் கொண்டவர்களாக இருந்தால் இந்த வேலையில் ஓய்வே கிடையாது.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner