எழுத்துரு அளவு Larger Font Smaller Fontகார்டன் டிசைனிங் படித்தால் வீடுகள், தொழில் நிறுவனங்களின் தோட்டங்களை அமைக்க ஆலோசனை வழங்கும் சுயதொழில் செய்து வருவாய் ஈட்டலாம். கார்டன் டிசைனிங் என்பது வீடுகள், தொழில்நிறுவனங்களில் காலியாக உள்ள இடங்களில் புல்தரை வளர்ப்பது, பூச்செடிகள் நடுவது ஆகியவற்றை உள்ளடக்கியது.

கார்டன் டிசைனிங் கல்வி கற்றிருந்தால் புதிய வடிவத்தில், வீடு, தொழில் நிறுவனங்களின் சொந்தக்காரர்களின் ரசனை, மற்றும் தேவைக்கேற்ப தோட்டங்களை அமைத்துக் கொடுக்கலாம். பெரிய நிறுவனங்கள், பெரிய பங்களாக்களில் கார்டனை பராமரிக்கும் பணியாளர்களை நியமிக்கும் போது அது சம்பந்தமான கல்வியை கற்றவரைத் தான் பணியமர்த்துவார்கள்.

அதோடு மட்டுமல்லாமல் பொது மற்றும் தனியார் பூங்காக்களை பராமரிப்பவர்களும் கார்டன் டிசைனிங் படித்திருந்தால் அப்பணியை சரிவர செய்ய ஏதுவாக இருக்கும்.

கார்டன் டிசைனிங் குறித்த குறுகிய கால, நீண்ட கால பயிற்சிகள் நடத்தப்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு:    nstitute of Horticulture Technology -   www.iht.edu.in

The Agri Horticultural Society of India - www.agrihorticultureindia.com

LANDSCAPE ACADEMY - www.landscapeacademy.com