எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, செயற்கைக் கோள்களையும் அவற்றை விண்ணில் செலுத்துவதற்கான ராக் கெட்டுகளையும் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுவருகிறது. மத்திய அரசின் விண்வெளித் துறையின் கீழ் இயங்கும் இஸ்ரோவில் தொழில்நுட்ப வல்லுநர்கள், பொறியாளர்கள், தொழில்நுட்பம் அல்லாத நிர்வாகப் பிரிவு பணியாளர்கள் எனப் பல்வேறு பிரிவுகளில் ஏராளமானோர் பணியாற்றிவருகிறார்கள்.

அகமதாபாத், பெங்களூரு, டில்லி, சிறீஹரிகோட்டா, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் இஸ்ரோ மய்யங்கள் அமைந்துள்ளன. இவற்றில் நிர்வாகப் பிரிவில் உதவியாளர் பதவியில் 272 காலியிடங்களை நேரடியாக நிரப்புவதற்கு இஸ்ரோ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எழுத்துத் தேர்வு மூலம் தகுதியான நபர்கள் இப்பணிக்குத் தேர்வுசெய்யப்பட உள்ளனர்.

தேவையான தகுதி:  உதவியாளர் பணிக்கு இளங்கலைப் பட்ட தாரிகள் விண்ணப்பிக்கலாம். முதல் வகுப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டியது அவசியம். அதோடு அடிப்படைக் கணினி அறிவும் தேவை. வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 26 ஆக நிர்ணயிக் கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், உடல் ஊனமுற்றோருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

என்ன கேட்பார்கள்? எழுத்துத் தேர்வில் ஆப்ஜெக்டிவ்

முறையிலான வினாக்களும் விரிவாக விடையளிக்கக்கூடிய கேள்வி களும் இடம்பெறும். எழுத்துத் தேர்வில் தேர்ச்சிப் பெறுவோருக்குக் கணினித் திறன் தேர்வு  நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெற்றாலே போதும். எழுத்துத் தேர்வு, இட ஒதுக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் பணிநியமனம் நடைபெறும்.

உரியக் கல்வித் தகுதியும் வயது வரம்புத் தகுதியும் உடைய பட்டதாரிகள் இஸ்ரோ இணையதளத்தில் (www.isro.gov.in) கூடுதல் விவரங்களை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். இஸ்ரோவில் பணியாற்ற விரும்பும் கலை அறிவியல் பட்டதாரிகளுக்கு இது ஓர் அரிய வாய்ப்பாகும்.