எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழக அரசின் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் நிரப்பப்பட உள்ள பில் கிளார்க், உதவியாளர், பதிவேடு கிளார்க், துப்புரவாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 48

பணியிடம்: நீலகிரி

பணி - காலியிடங்கள் விவரம்:

பணி:   பில் கிளார்க் - 27

தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,400 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800

பணி: பேக்கர், வாட்ச்மேன், உதவியாளர்  - 16

தகுதி: 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,300

பணி:   பதிவேடு கிளார்க் - 02

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,400

பணி:  துப்புரவாளர் - 03

தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,300

வயதுவரம்பு: மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் 18 - 32க்குள் இருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:   Tamil Nadu Civil Supplies Corporation, Regional Office, No.110, Goodshed road, Udhagamandalam, Nilgirisபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.06.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய ://ஸீவீறீரீவீக்ஷீவீs.ஸீவீநீ.வீஸீ/வீனீணீரீமீs/tஸீநீsநீ.ஜீபீயீ என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியப் பணியிடங்கள்

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் பொதுமக்களுக்குக் குறைந்த விலையில் வீட்டுவசதித் திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது.

தமிழகம் முழுவதும் புதிய வீட்டுவசதித் திட்டங்கள் உருவாக்கப்பட்டு உயர் வகுப்பினர், நடுத்தர வகுப்பினர், குறைந்த வருவாய்ப் பிரிவினர் என 3 பிரிவுகளில் மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு சுயநிதித் திட்டத்தின் குடிமைப்பணித் தேர்வில் பெண்கள் ஹாட்ரிக் சாதனை அடிப்படையில் வீடுகள் கட்டிக்கொடுக்கப் படுகின்றன.

உதவிப் பொறியாளர், சர்வேயர், இளநிலை வரைவு அதிகாரி, தொழில்நுட்ப உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் ஆகிய பதவி களை நேரடி நியமன முறையில் நிரப்புவதற்குத் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இதற்கு அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் எழுத்துத் தேர்வு மூலமாகத் தகுதியான நபர்கள் பணிக்குத் தேர்வுசெய்யப்படுவார்கள்.

தேவையான தகுதி

உதவிப் பொறியாளர் பணிக்கு பி.இ. (சிவில் இன்ஜினீயரிங்) பட்டம் பெற்றிருக்க வேண்டும். இளநிலை உதவியாளர் பணிக்கு எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றவர்களும், தட்டச்சர் பணிக்கு எஸ்.எஸ்.சி. கல்வித் தகுதியுடன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு தொழில்நுட்பக் கல்வித் தகுதி அவசியம். சர்வேயர், இளநிலை வரைவு அதிகாரி, தொழில்நுட்ப உதவியாளர் ஆகிய பணி களுக்கு அதற்குரிய தொழில்நுட்பக் கல்வித் தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

வயது வரம்பைப் பொறுத்தவரை, குறைந்தபட்சம் 18 அதிகபட்சம் 30 என நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இது பொதுப்பிரிவினருக்கானது ஆகும். இட ஒதுக்கீட்டுப் பிரிவினர்களுக்கு (எஸ்.சி., எஸ்.டி., பி.சி., எம்.பி.சி.) வயது வரம்பு 35. மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் வீட்டுவசதி வாரியத்தின் இணையதளத்தை (www.tnhb.tn.gov.in) பயன் படுத்தி ஜூன் 30ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விரிவான கல்வித் தகுதி மற்றும் தொழில்நுட்பக் கல்வித் தகுதிகள், தேர்வுமுறை, பாடத்திட்டம், தேர்வு தேதி, தேர்வு மையம் உள்ளிட்ட விவரங்களை வீட்டுவசதி வாரியத்தின் இணையதளத்தில் தெரிந்துகொள்ள லாம்.

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும்

பகிர்மான கழகத்தில் காலிப் பணியிடங்கள்

சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு சிஏ  மற்றும்  சிஎம்ஏ இன்டர் தேர்ச்சி பெற்றவர் களிட மிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி:    Assistant Accounts Officer (AAO)

காலியிடங்கள்: 18

தகுதி:  மற்றும்   தேர்ச்சி பெற்றவர்கள் விண் ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி கணக் கிடப்படும்.

சம்பளம்: மாதம் ரூ.15,700 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400

தேர்வு செய்யப்படும் முறைச எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. மற்ற பிரிவினருக்கு ரூ.250
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.06.2017

கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 29.06.2017

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 09.07.2017

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய  http://www.tangedco.gov.in/index1.php?tempno=   லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றங்களில் காலிப் பணியிடங்கள்  

திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றங்களில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவ ர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: நகல் பரிசோதகர் - 02

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400

பணி: முதுநிலை கட்டளை நிறைவேற்றம் - 08

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400

பணி: கணிப்பொறி இயக்குநர் - 05

தகுதி: கணிப்பொறி அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் அல்லது ஏதாவதொரு துறை பட்டத்துடன் கணிப்பொறி துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் தட்டச்சில் ஆங்கிலம் மற்றும் தமிழில் முதுகலை முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800

பணி: ஒளிப்பட நகல் எடுப்பவர் - 02

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.4,800- 10,000 + தர ஊதியம் ரூ.1,600

பணி: அலுவலக உதவியாளர் - 49

தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,300

பணி: மசால்சி - 13

தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10000 + தர ஊதியம் ரூ.1,300

பணி: அலுவலக காவலர் - 04

தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,300

பணி: துப்பரவு பணியாளர் - 02

தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,300 வயதுவரம்பு: மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும்

01.06.2017 தேதியின்படி கணக்கிடப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங் களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: மாவட்ட நீதிபதி, திருவமண்ணமாலை மாவட்ட நீதிமன்றம், திருவண்ணாமலை - 606 604

அனைத்து தகவல் பரிமாற்றம் மற்றும் தேர்வு நேர்காணலுக்கான அழைப்பு  www.ecourts.gov.in/tn/tiruvannamalai
என்ற இணைய தளத்தில் மட்டுமே வெளியிடப்படும்.  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.06.2017


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner