எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வானில் தவழும் மேகங்களைக் கூர்ந்து கவனித்திருக்கிறீர்களா? மழைக்காலம், வறட்சிநிலை ஆகியவை எப்படிக் கணிக்கப்படுகின்றன என்று யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? பருவ நிலைக் கணிப்புகள், பருவநிலை மாறுதல்கள் பற்றி ஆர்வமிருந்தால் மெட்ராலஜி என்று சொல்லப்படும் வானிலையியலை ஒரு படிப்பாகவே தேர்வு செய்யலாம்.
வளிமண்டல அறிவியல்களின் கிளையாக வானிலையியல் திகழ்கிறது. பருவநிலை மற்றும் தட்பவெப்பத்தைக் கண்காணிப்பதும் பருவ நிலையில் மாறுதல்களை விளைவிக்கக் கூடிய அம்சங்களை ஆராய்வதும் வானிலையியல் ஆகும்.

ஒரு வானிலையிலாளர் கணிதம், இயற்பியல் நன்கு அறிந்தவராகத் திகழவேண்டும். பிரச்சினை களைத் தீர்ப்பதில் வல்லமை, முடிவெடுக்கும் திறன், தரவுகளை அலசும் திறன் (டேட்டா அனாலிசிஸ்), தொடர்புத் திறன் ஆகியவைக் கொண்டவராக இருக்க வேண்டும். இன்றைய வானிலையியலா ளர்கள் மேம்பட்ட தொழில்நுட்பத்தையும், கணிப் பொறி மென்பொருள்களையும் பயன்படுத்துவதால் கணிப்பொறித் திறனும் அவசியமாக உள்ளது.

என்ன செய்கிறார் வானிலையியலாளர்?

ஒரு வானிலையியலாளர் வெப்பத்தை அளக்க தெர்மாமீட்டரைப் பயன்படுத்துகிறார். காற்றின் வேகத்தைக் கணிக்க அனிமாமீட்டரையும் மழையின் அளவு மற்றும் வளிமண்டல அழுத் தத்தை அளக்க பாரோமீட்டரையும் பயன்படுத்து கிறார். காற்றின் ஈரப்பதத்தையும் அதன் தரத்தையும் அவர்கள் அளக்கிறார்கள். இன்று பருவநிலையைக் கணிக்க செயற்கைக்கோள்கள் முதல் டாப்ளர் ராடார்கள் வரை உயர் தொழில்நுட்பக் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.

செயற்கைக்கோள்கள் மேகங்களின் உருவாக்கத் தையும் உலகளவிலான வானிலை மாறுதல்களையும் கணிப்பதில் சிறப்பாகப் பணியாற்றுகின்றன. கண்டங்கள், கடல்கள், துருவப்பகுதிகள் ஆகிய வற்றைக் கவனித்து அவற்றால் விரிவான விவரங் களை அளிக்கமுடியும். சூறாவளி போன்ற பெரிய நிகழ்வுகளை முன்பே கணிப்பதில் செயற்கைக் கோள்கள் பெரிதும் உதவியாக இருக்கின்றன.

டாப்ளர் ராடார்களில் ஒலி அலைகளை ராடார் ஆன்டெனா மூலம் ஒலிபரப்பி அவற்றின் பிரதிபலிப்புகள் பதிவுசெய்யப்படுகின்றன. பனிப் படிமங்கள் அல்லது தூசித் துகள்களை அந்த ஒலி அலைகள் மோதும்போது அவற்றின் அலைவெண் மாறுகிறது. டாப்ளர் ராடார்கள் புயல்களைக் கணிக்க உதவுகின்றன.

கல்வித்தகுதி: பிளஸ் டூவில் கணிதம், அறிவியல் பாடப்பிரிவில் படித்துத் தேறியிருக்க வேண்டும். பி.எஸ்சி. இளங்கலைப் படிப்பில் கணிதம், அறிவியலை முதன்மைப் பாடமாக எடுத்துப் படித்திருக்க வேண்டும். டிப்ளமோ ப்ரோகிராம் இன் மீட்டியராலஜி படிக்க இளங்கலைக் கல்வி அடிப்படைத் தகுதியாக உள்ளது. இந்தியா முழுவதும் வானிலையியலுக்கான கல்வியில் வானிலையியல் அடிப்படைகள், பருவ நிலை அளவீடு மற்றும் அலசல், பருவநிலை கணிப்பு, வளிமண்டல இயற்பியல் மற்றும் வெப்ப இயக்கவியல் (தெர்மோடைனமிக்ஸ்), கடல்சார் வானிலையியல் ஆகியவை கற்றுக்கொடுக்கப்படு கின்றன. தரவுகள் திரட்டல், பகுப்பாய்வு மற்றும் கணினி மாடலிங் முதலிய திறன்களும் கற்றுக் கொடுக்கப்படுகின்றன.

அரசுத்துறையில் வேலை

தி இந்தியன் மெட்ராலஜிக்கல் டிபார்ட்மெண்ட், க்ரூப் இரண்டு நிலைத் தேர்வுகள் யூ.பி.எஸ்.சி. மூலம் நடத்தப்படுகின்றன. இவற்றுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதிகள்,

# பி.டெக்., கணினி அறிவியலில் பொறியியல், அல்லது கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்

# பி.டெக். அல்லது எம்.எஸ்சி. எலக்ட்ரானிக்ஸ்

# எம்.எஸ்சி. இயற்பியல், கணிதம், அப்ளைட் ஃபிசிக்ஸ் அல்லது அப்ளைட் மேத்ஸ் (ஆஸ்ட்ரானமி அல்லது ஆஸ்ட்ரோபிசிக்ஸ் பாடம் சேர்ந்திருக்க வேண்டும்)

# மாஸ்டர்ஸ் இன் மெட்டராலஜி, அட்மாஸ்ஃ பியரிக் சயன்சஸ் அல்லது ஜியோ ஃபிசிக்ஸ்.
இத்தேர்வில் மேற்கண்ட தகுதிகளுடன் வெற்றி பெறுபவர்கள் வானிலையியலில் ஒரு ஆண்டு சிறப்புப் பயிற்சி பெறுவார்கள். அறிவியல் பட்ட தாரிகள் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலமாக இந்தியன் மெட்ராலஜி துறைக்கு வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

பி.ஏ., பி.எஸ்சி. பட்டதாரிகளுக்கு ஏராளமான வாய்ப்புகள்

சாஃப்ட்வேர் தயாரிப்பு எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவு முக்கியமானது அதன் தரத்தை உறுதிசெய்யும் சாஃப்ட்வேர் டெஸ்டிங் பணி. இந்தியாவில் ஆண்டுக்கு ஏறத்தாழ 30 ஆயிரம் சாஃப்ட்வேர் டெஸ்டிங் நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள். சர்வதேச மென்பொருள் தர சோதனை வாரியமான  மிஸீtமீக்ஷீஸீணீtவீஷீஸீணீறீ ஷிஷீயீtஷ்ணீக்ஷீமீ ஜிமீstவீஸீரீ னிuணீறீவீtஹ் ஙிஷீணீக்ஷீபீ மிஷிஜினிஙி, சாஃப்ட்வேர் டெஸ்டிங் சான்றித ழுக்கான தேர்வு நடத்துகிறது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் தகவல் தொழில்நுட்ப நிறுவனங் களில் சாஃப்ட்வேர் டெஸ்டிங் நிபுணராக ஆகலாம்.

பட்டம் ஒன்றே போதுமே!

தகவல் தொழில்நுட்பத் துறையில் சாப்ட் வேர் வேலை என்றதுமே அதில் பொறியியல் பட்டதாரிகளுக்குத்தான் வாய்ப்புகள் இருக் கும் என நினைக்கத் தோன்றும். ஆனால், பொறியியல் பட்டதாரிகள் உருவாக்கும் மென் பொருளைப் பரிசோதிக்கும் சாஃப்ட்வேர் டெஸ்டிங்  துறையில் கலை, அறிவியல் பட்ட தாரிகளுக்கு வேலை வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.

தொழில்நுட்பத்திறன் அடிப்படையில் மேல்நிலை பதவிகளுக்குச் செல்லவும் அதற்கேற்ற ஊதியம் பெறவும் இத்துறையில் வாய்ப்பு உண்டு. இதில் பயிற்சி பெறுவதற்கு அதிகச் செலவும் கிடையாது. ரூ.20 ஆயிரத் தில் பயிற்சி முடித்துவிடலாம். அய்.எஸ்.டி. கியூ.பி , ஆன்லைனில் நடத்தும் சான்றிதழ் தேர்வில் தேர்ச்சி பெற்று எளிதாகப் பணியில் சேர்ந்துவிடலாம்.

இத்துறை தொடர்பான பயிற்சி, வேலை வாய்ப்புகள் குறித்துச் சென்னை தியாகராய நகரில் இயங்கி வரும் அமிட்டிசாஃப்ட் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் தலைவரும், தலைமைச் செயல் அதிகாரியுமான கே.ஆர்.ஜெயகுமார், சாஃப்ட்வேர் டெஸ்டிங் துறையில் ஆண்டுக்குச் சுமார் 30 ஆயிரம் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். ஐ.டி. நிறுவனங்களில் அய்ந்தில் ஒரு பகுதியினர் சாஃப்ட்வேர் டெஸ்டிங் பணியாளர்களாக இருப்பார்கள்.

இதில் நிபுணராக ஒரு மாதப் பயிற்சி போதுமானது. இண்டர்நேஷனல் சாஃப்ட்வேர் டெஸ்டிங் குவாலிட்டி போர்டு நடத்தும் சான்றிதழ் தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதும். ஆன்லைனில் நடத்தப்படும் இத்தேர்வில் எப்போது வேண்டுமானாலும் கலந்துகொள்ள லாம். இந்தத் தேர்வுக்கு முழுநேரப் பயிற்சி என்றால் 4 வாரங்களும், பகுதி நேரப் பயிற்சி எனில் 6 வாரங்களும் அளிக்கிறோம். சாஃப்ட்வேர் டெஸ்டிங் தொடர்பான அடிப்படை விஷயங்கள், அதற்கான கணினி டூல்களை கையாளும் முறை, சாஃப்ட்வேரில் உருவாகக்கூடிய குறைபாடுகளை முன்கூட்டியே ஊகித்து அவற்றுக்குத் தீர்வு காண்பது போன்றவை பயிற்சியில் அடங்கும்.

பயிற்சியை முடித்தவர்கள் ஆன்லைனில் நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சி பெற்றால் அவர் களுக்குத் தேர்ச்சி சான்றிதழ் வழங்குவார்கள். தேர்வில் குறைந்தபட்சம் 70 சதவீத மதிப்பெண் பெற வேண்டும். தேர்வுக் கட்டணமும் அதிகம் கிடையாது. ரூ.4,500 மட்டுமே. இந்தத் தேர்ச்சி சான்றிதழ் மூலம் சாஃப்ட்வேர் நிறுவனங்களில் சாஃப்ட்வேர் டெஸ்டிங் துறையில் வேலைக்குச் சேரலாம் என்கிறார்.

தொடர் பயிற்சியும் சோதனையும்

அமெரிக்காவின் தற்போதைய புதிய கொள்கையால் இந்தியாவில் தகவல் தொழில் நுட்பத் துறைக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதன் பாதிப்பு இத்துறையிலும் இருக்காதா என்று கேட்டால், சாஃப்ட்வேர் தர மேம் பாட்டுக்கு அய்.டி. நிறுவனங்கள் அதிக முக்கி யத்துவம் கொடுக்கும் சூழல் உருவாகும்போது, சாஃப்ட்வேர் டெஸ்டிங் துறைக்கு வேலை வாய்ப்புகள் மேலும் பெருகுமே ஒழியக் குறையாது என்கிறார் ஜெயகுமார்.

பி.பி.ஓ., கால்சென்டர் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் பகல்-இரவு பார்க்காமல் வேலை பார்க்க வேண்டிய சூழல் இருப்பதால், தற்போது அங்கு பணியாற்றும் ஊழியர்கள் பலர் சாஃப்ட்வேர் டெஸ்டிங் துறை நோக்கி வந்துகொண்டி ருக்கிறார்கள் என்கிறார் அவர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகச் சாஃப்ட்வேர் டெஸ்டிங் துறையில் பயிற்சி அளித்து வருகிறது இவருடைய நிறுவனம்.

இதுவரை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்து முன்னணி நிறுவனங்களில் பணிவாய்ப்பும் பெற்றுக்கொடுத்துள்ளது. பயிற்சி பெறு வோருக்கு இந்த நிறுவனமே சிறப்பு தேர்வு நடத்தி டிப்ளமா இன் சாஃப்ட்வேர் டெஸ்டிங் என்ற பட்டத்தையும் வழங்குகிறது.

வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கும் சாஃப்ட்வேர் டெஸ்டிங் துறை குறித்து இளை ஞர்கள் மத்தியில் போதுமான விழிப்புணர்வு இல்லை என்று ஆதங்கப்படும் ஜெயகுமார், அடிப்படைக் கணித அறிவும், அறிவியல் பின்புலமும், கணினி அறிவும் கொண்ட கலை அறிவியல் பட்டதாரிகள் எளிதில் வேலை வாய்ப்பு பெறலாம் என உறுதியாகக் கூறுகிறார். இத்துறையைப் பொறுத்தவரை பணியில் சேர்ந்த பிறகும், இண்டர்நேஷனல் சாஃப்ட்வேர் டெஸ்டிங் குவாலிட்டி போர்டு நடத்தும் அட்வான்ஸ்டு, டெஸ்டிங் மேனேஜ்மென்ட் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுத் தொழில்நுட்பத் தகுதியை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு தொடர்ந்து நம்மைத் தகவமைத்துக்கொண்டால் உள் நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன.

பதவியோடு சம்பள உயர்வு

# டெஸ்ட் இன்ஜினியர், சீனியர் டெஸ்ட் இன்ஜினியர், டெஸ்ட் அனலிஸ்ட், டெஸ்ட் லீட், டெஸ்ட் மானேஜர் என அடுத்தடுத்துப் பெரிய பொறுப்புகளுக்குச் செல்லலாம்.

# டெஸ்ட் லீட் பதவிக்கு ரூ.50 ஆயிரத் துக்கு மேல் சம்பளம் கிடைக்கும்.

# திறமை இருப்பின் தலைமைச் செயல் அதிகாரியாகவும் வரலாம்.
தகுதியும் வாய்ப்பும்

# பி.ஏ., பி.எஸ்சி. பட்டதாரிகளும் சாஃப்ட்வேர் டெஸ்டிங் நிபுணர் ஆகலாம்.

# அடிப்படைக் கணித அறிவும், கணினி அறிவும் போதுமானது.

# சாஃப்ட்வேர் இன்ஜினியர்களுக்கு நிகரான வேலைவாய்ப்பு, ஊதியம், பதவி உயர்வு உண்டு.

# ஆரம்ப நிலையில் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை சம்பளம்.


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner