எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பேராசிரியருக்கு தமிழ்ச் செம்மல் விருது

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழ் துறைத் தலைவர் அரங்க பாரிக்கு தமிழக அரசு செவ்வாய்க்கிழமை தமிழ்ச்செம்மல் விருது வழங்கி சிறப்பித்துள்ளது.

இவர் இலக்கியம், இலக்கணம், கவிதை, கட்டுரை என தமிழின் அனைத்துத் தளங்களிலும், குறிப்பாக பாரதிதாசன் படைப்புகள் குறித்து ஆழ்ந்து ஆய்வு செய்தவர். எழுத்தாற்றலும், பேச்சாற்றலும் மிக்கவர். பாவேந்தரின் பாவிருந்து, திருக்குறளில் திருப்புமுனை, மலைதந்த முத்து, கண்ணீர் கண்ணீர், காதல் நேரம் உள்ளிட்ட 11 நூல்களை எழுதியுள்ளார்.

இவரது இரண்டு நூல்கள் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் பாடநூலாக உள்ளன. 80 நூல்களின் தொகுப்பாசிரியர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கடந்த 5-6-2015 அன்று ஒரே நாளில் ஒரே மேடையில் 351 தமிழறிஞர்களின் வாழ்க்கை வரலாற்று நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டும், 12-9-2016 அன்று 430 கவிஞர்கள்-பாடலாசிரியர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பதிப்பித்து வெளியிட்டும் உலக சாதனை நிகழ்த்தியவர்.

இதுவரை, 20 தேசிய பன்னாட்டுக் கருத்தரங்குகளை நடத்தியதோடு, 90 ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். விரிவுரையாளர், இணைப் பேராசிரியர், பேராசிரியர் என பல்வேறு பணிநிலைகளில் 18 ஆண்டுகள் கற்பித்தல் பணியிலும், ஆய்வுப் பணியிலும் ஈடுபட்டுள்ளார்.

இவரது வழிகாட்டுதலில் 15 பேர் முனைவர் பட்டமும், 67 பேர் இளமுனைவர் பட்டமும் பெற்றுள்ளனர்.

2016-ஆம் ஆண்டு பாவேந்தர் பாரதிதாசன் 125-ஆவது பிறந்தநாள் நிறைவை முன்னிட்டு 125 தமிழறிஞர்களிடமிருந்து கட்டுரைகளைப் பெற்று, ‘பாவேந்தர் 125’ என்ற ஆய்வுக் கோவையைப் பதிப்பித்து வெளியிட்டவர். மேலும், இதே ஆண்டில் வ.சுப.மாணிக்கனார் நூற்றாண்டு விழாவையும், பேராசிரியர் க.வெள்ளைவாரணனார் நூற்றாண்டு விழாவையும் நடத்தி கருத்தரங்க ஆய்வுக்கோவைகளை வெளியிட்டவர்.

மலேசியா, சிங்கப்பூர், அபுதாபி ஆகிய நாடுகளில் நடைபெற்ற கருத்தரங்குகளில் பங்கேற்றுள்ளார். நல்லாசிரியர் விருது, கருத்தரங்கச் செம்மல் விருது, சிறந்த தமிழறிஞர் விருது எனப் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

மேலும், குடியரசுத் தலைவரின் இளம் அறிஞர் விருதையும் ஒரு லட்சம் ரூபாய் பண முடிப்பையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


வாசிப்பின் சிறகுகள்

வெறும் காகிதங்களும், அச்சிடப்பட்ட எழுத்து களும் நிறைந்து மட்டுமல்ல புத்தகங்கள். ஒருவர் தான் என்னவாக விரும்புகிறாரோ அவ்வாறாகவே அவரை மாற்றும் வல்லமை படைத்தவை அவை.

உலக யுத்தங்களால் ஏற்பட்ட வலிகளையும், வேதனைகளையும் உணர்த்தும் சக்தி அவற்றுக்கு உண்டு. அதேபோல அழகிய நகரங்களையும் புத்த கத்தின் வரிகளின் மூலம் ஒருவரால் ரசிக்க முடியும். இத்தகைய புத்தகங்களின் மதிப்பை உயர்த்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23ஆம் தேதி உலகப் புத்தகம் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நாளின் முக்கியத்துவத்தையொட்டி இந்திய மாணவர் சங்கமும் (எஸ்.எஃப்.அய்) அய்.அய்.டி. மாணவர்களும் ஒன்றிணைத்து “சிறகுகள் விரிப் போம்” என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடத்தினர். நடிகை ரோகிணி நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார். உலகப் புத்தக தினத்தன்று சைதாப்பேட்டை சூர்யா நகரில் உள்ள ஏழை மாணவர்களுக்கு இலவசமாகப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.

இதற்காகப் பல்வேறு தரப்பினரிடமிருந்து கடந்த ஒரு மாதமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்த கங்களைச் சேகரித்துள்ளனர்.

ஒவ்வொரு மாணவருக்கும் அவர்களுக்கு தேவைப்படும் பாடப் புத்தகம், அகராதி, சிறுகதை தொகுப்பும், தலைவர்கள் குறித்த வரலாற்றுப் புத்தகம், அறிவியல் புத்தகம் ஆகிய புத்தகங்களின் தொகுப்பு வழங்கப்பட்டது.

பாடப் புத்தகங்களைத் தாண்டி...

மாணவர்கள் அமைப்பு என்றால் போராட்டம் மட்டும் செய்வார்கள் என்ற நினைப்புதான் மக்கள் மத்தியில் உள்ளது. ஆனால் எங்கள் சங்கம் சார்பில் பல ஆண்டுகளாகவே மாணவர்களுக்குப் புத்த கங்கள் கொடுப்பது, நடப்பு விஷயங்கள் குறித்து விவாதிக்க வாசகர் வட்டம் நடத்துவது என தொடர்ச்சியாக பல ஆக்கபூர்வமான நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறோம். பாடப் புத்தகங்களைத் தாண்டி மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. அதற்காகக் கிட்டத்தட்ட ஆயிரம் புத்தகங்களை பல்வேறு தரப்பினரிடமிருந்து பெற்றுள்ளோம்.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஏற்ற மாதிரி புத்தகங்களைப் பிரித்து வழங்குகிறோம் என்றார் இந்திய மாணவர் சங்க தென் சென்னை மாவட்டச் செயலாளர் நிருபன்.

அய்.அய்.டி.க்கு அருகில் உள்ள சூர்யா நகரில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களில் சிலர் தங்களுக்குத் தேவையான பாடப் புத்தகங்களை வாங்க முடியாத பொருளாதாரச் சூழலில் உள்ளனர். அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என யோசித்தபோதுதான் மற்றவர்களிடம் இருந்து புத்தகங்களைப் பெற்று அவர்களுக்குக் கொடுக் கலாம் என முடிவெடுத்தோம்.

இந்த முயற்சியில் நானும் என் நண்பர்களும் மாணவர் சங்கத்துடன் இணைந்து வெற்றிகரமாக நடத்தி இருக்கிறோம். இந்தப் பகுதியில் ஒரு சிறிய நூலகமும் விரைவில் அமைக்கத் திட்டமிட்டுள் ளோம் என்கிறார் அய்.அய்.டி.யில் முனை வர் பட்ட மாணவரான உம்மன். பாடப் புத்தகங்களைத் தாண்டிப் பல விதமானப் புத்தகங்களைப் படிப்பதன் மூலம் இளைஞர்களின் உலகம் விரிவடையும். தங்களுடைய இலக்கைக் கண்டடைந்து அடுத்த கட்டத்துக்கு செல்லவும் பார்வையை விசாலப் படுத்தும்.  அத்தகைய வாசிப்பை வசப்படுத்த வேண் டும் என்ற நோக்கத்துடன் மாணவர்களுக்காக மாண வர்களே எடுத்த இந்த முயற்சி கல்வியாளர்கள் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது.


விண்ணப்பித்து விட்டீர்களா?
அஞ்சல் துறையில் வேலை

நிறுவனம்: கர்நாடகா போஸ்டல் சர்க்கிள் கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு வேலை: கிராமின் டாக் சேவாக்ஸ், காலியிடங்கள்: 1048, கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு ஈடான படிப்பு வயது வரம்பு: 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசித் தேதி: 8-.5-.2017 மேலும் விவரங்களுக்கு www.appost.in/gdsonline/reference.aspx

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலில் கிளார்க் வேலை

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் நிரப்பப்பட உள்ள லேயர் டிவிஷன் கிளார்க் பணியிடங்களுக்கான சிறப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி:   காலியிடங்கள்: 02

சம்பளம்: மாதம் ரூ.5200-20200 + தர ஊதியம் ரூ.1900.

தகுதி: +2 தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தகுதிகளுடன் நிமிடத்திற்கு ஆங்கிலத்தில் 35 வார்த்தைகளும், ஹிந்தியில் 30 வார்த்தைகளும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 23.03.2017 தேதியின் படி 27க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய  அஞ்சல் முகவரி:  The Section Officer (R-II), 2nd floor, Zakir Husain Khand, NCERT, Sri Aurobindo Marg, New Delhi-110016.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.ncert.nic.in/announcements/oth_announcements/pdf_files/pwd_vacancy_12_4_17.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.

பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் 1500 உதவி லைன்மேன் வேலை

பஞ்சாப் அரசு பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிஎஸ்பிசிஎல்) நிறுவனத்தில் காலியாக உள்ள 1500 உதவி லைன்மேன்
பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் பணி அனுபவமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி:  மெத்த காலியிடங்கள்: 1500

வயதுவரம்பு: 39க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.6400 - 20200 + தர ஊதியம் ரூ.3400

தகுதி: 10 வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தகுதியுடன் லைன்மேன் பணியில் 2 ஆண்டு அப்பரண்டீஸ் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.05.2017

மேலும் விண்ணப்பிக்கும் முறை, கட்டணம், வயதுவரம்பு சலுகை பேன்ற முழுமையான விரிவான விளக்கங்கள் அறிய : https://cra289.pspcl.in/adv.pdf
என்ற அதிகாரப்பூர்வ லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner