எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பொறியியல் பட்டயப்படிப்புக்கு  அரசு நிறுவனத்தில் அதிகாரி வேலை

நிறுவனம்:     இண்டியா கவர்மென்ட் மின்ட்
(அய்தராபாத் கிளை)

வேலை:     சூப்பர்வைசர் மற்றும் ஜூனியர்
ஆஃபீஸ் அசிஸ்டென்ட் வேலை

காலியிடங்கள்: 60.

இதில் சூப்பர்வைசர் வேலையில் 9, ஜூனியர் ஆஃபிஸ் அசிஸ்டென்ட் வேலையில் 51 காலியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: எஞ்சினியரிங் டிப்ளமோ, டிகிரி வயது வரம்பு: 18-30

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 1.5.17

மேலதிக தகவல்களுக்கு:
http://www.spmcil.com/Interface/Home.aspx

பிளஸ்2 முடித்தவர்களுக்கு சி.ஆர்.பி.எஃப்-ல் வேலை!

நிறுவனம்: சென்ட்ரல் ரிசர்வ் போலீஸ் ஃபோர்ஸ்

வேலை: அசிஸ்டென்ட் சப் இன்ஸ்பெக்டர் பதவியிலான ஸ்டெனோகிராபர் வேலை

காலியிடங்கள்: 219. இதில் பொதுப்பிரிவினர் 75, ஓ.பி.சி 80, எஸ்.சி 42 மற்றும் எஸ்.டி 22 காலியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: +2 வயது வரம்பு: 18-25

உடற்தகுதி: ஆண்களுக்கு 165 செ.மீ உயரமும், பெண்களுக்கு 155 செ.மீ உயரமும் தேவை. ஆண்களின் மார்பளவு 77 - 82 அங்குலம் இருக்கவேண்டும்.

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 25.4.17

மேலும் தகவல்களுக்கு:www.crpf.gov.in

மெருகேற்றும் விளையாட்டு விடுதிகள்

பி.வி.சிந்துவின் பாட்மிண்டன் தரவரிசைப் பட்டியல் முன்னேற்றமும், தொடர் வெற்றியும் உற்சாகமூட்டுகின்றன. அவரைப் போன்றே விளையாட்டில் ஆர்வமுள்ள தம் வீட்டுப் பிள்ளைகளும் ஜொலிக்க வேண்டுமென்பது பல பெற்றோரின் கனவாக இத்தருணத்தில் எழுந்து மறையும். ஆர்வமுள்ள பள்ளி மாணவ மாணவியருக்குப் படிப்போடு கூடிய விளையாட்டுப் பயிற்சி, ஊட்ட உணவு, உபகர ணங்கள் எனச் சகல வசதிகளுடன் உதவ அரசாங்கம் காத்திருக்கிறது. ஆனால் போதிய விழிப்புணர்வு இன்மையால், தமிழகத்தில் பரவலாக இயங்கும் விளையாட்டு விடுதிகள் குறித்த தெளிவு இல்லை.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்கு எனப் பல்வேறு வசதிகள், பயிற்சிகள் அடங்கிய விளையாட்டு விடுதிகள் செயல்படுகின்றன. தமிழகத்தில் 28 விளையாட்டு விடுதிகள், 2 சிறப்பு விளையாட்டு விடுதிகள், 5 முதன்மை நிலை விளையாட்டு விடுதிகள் உள்ளன.

விளையாட்டில் ஆர்வமுள்ள, அடிப்படை உடல் திறனுள்ள மாணவ மாணவியருக்கு அவர்களின் கல்வி சூழலுக்குப் பங்கமின்றித் தரமான பயிற்சிகள் இங்கு அளிக்கப்படுகின்றன. விளையாட்டு நட்சத்திரங்களை உருவாக்க ஒவ்வொரு மாணவருக்கும் தனித்துவமான கவனிப்பு, தேசியச் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு என அனைத்தும் அரசு செலவில் இங்கு அளிக்கப்படுகிறது. வசதி படைத்தவர்களுக்கு ஸ்போர்ட்ஸ் கிளப்புகளில் கிடைக்கும் வசதிகளுக்கு நிகரான வாய்ப்பும் பயிற்சியும் இங்கு அரசுப் பள்ளியில் படிக்கும் பொருளாதார வசதியற்ற, கிராமப்புற மாணவ மாணவியருக்கு வழங்கப்படுகிறது.

விளையாட்டு விடுதிகள்

தொடக்கத்தில் அந்தந்தப் பகுதியில் பிரபலமாக இருக்கும் விளையாட்டுகளில் ஒரு சிலவற்றை ஊக்கு விக்கும் பொருட்டு, மாவட்டத் தலைநகர்களில் இந்த விளையாட்டு விடுதிகள் தொடங்கப்பட்டன. கடந்த சில ஆண்டுகளில் இவை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நிறுவப்பட்டுள்ளன. விளையாட்டு மேம்பாடு மற்றும் இளைஞர் நலத் துறையின் கீழ் செயல்படும் இவற்றில், பள்ளி மாணவ, மாணவியருக்கு எனத் தனித்தனி விளையாட்டு விடுதிகள் உண்டு.

மாணவிகளுக்கானவை ஈரோடு, திருவண்ணாமலை, திண்டுக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தருமபுரி, சென்னை, நாமக்கல் ஆகிய இடங்களில் செயல்படுகின்றன.

பிரத்தியேக வசதிகள், பயிற்சிகள்

தனித்துவ விளையாட்டுப் பயிற்சிகளோடு, ஒட்டு மொத்த உடல் திறன் மேம்பாட்டுக்கான பயிற்சிகளும் இங்குக் கிடைக்கும். உணவுக்காக மட்டுமே பள்ளி மாணவர் ஒருவருக்குத் தினசரி ரூ.250 ஒதுக்கப்படுகிறது. இந்த வசதிகள் அனைத்தையும் விளையாட்டு விடுதியில் தங்கியபடி அருகிலுள்ள பள்ளியில் சேர்ந்து பயின்றவாறு பெறலாம். காலை, மாலை ஓய்வு நேரத்திலும், விடுமுறை தினத்திலுமாகப் பள்ளிப் படிப்புக்கு இடையூறு இன்றி விளையாட்டு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. மாநில, தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவும் அதற்கெனச் சிறப்பு பயிற்சிகள், போக்குவரத்து, உணவு மற்றும் வழிகாட்டுதல்களையும் செலவின்றிப் பெறலாம்.

விளையாட்டு விடுதி மாணவர்களுக்குத் தினந்தோறும் 2.30 மணி நேரம் துறை சார்ந்த விளையாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. விடுமுறை தினங்களிலும் இவை தொடரும். 4 மாதங்களுக்கு ஒருமுறை விளையாட்டுத் திறன்கள் ஆய்வு செய்யப்படும். வருடாந்திரம் நடை பெறும் உடற்திறன் தேர்வில் போதிய வளர்ச்சி இல்லை என்றால் அவருடைய வாய்ப்பு, திறமையுள்ள மற்றொரு மாணவருக்குச் சென்றுவிடும். வாய்ப்பைத் தவறவிடாத பயன்படுத்திக்கொள்ளும் மாணவ மாணவியருக்குப் பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது. விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் விரும்பிய உயர் கல்வியும் வேலைவாய்ப்பும் உறுதி என்கிறார் திருச்சி அரசு உதவி பெறும் பள்ளியொன்றில் உடற்கல்வி இயக்குநரான முனைவர் பி.சுவாமிநாதன்.

எப்படிச் சேர்வது?

பொதுத்தேர்வுக்கான 10 மற்றும் பிளஸ் 2 தவிர்த்து ஏனைய வகுப்புகளில் படிக்கும் பள்ளி மாணவ மாணவிகளை இங்குச் சேர்க்கலாம். மாவட்ட மற்றும் மாநில அளவில் என இரண்டு கட்டங்களாகத் தேர்வு நடைபெறும். முதற்கட்ட உடல் தகுதித் தேர்வு மாவட்ட அளவில் நடைபெறும்.

# உயரமான மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

# தேர்வானவர்கள் மாநில அளவிலான தேர்வை எதிர்கொள்வார்கள்.

# இறுதியில் கலந்தாய்வின் வாயிலாக, விளையாட்டு விடுதி சேர்க்கை உறுதி செய்யப்படும்.

# சேர்க்கை விண்ணப்பத்தினை மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் பெற்றுக்கொள்ளலாம்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் :: http://www.sdat.tn.gov.in/
இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இத்தளத்தில் தமிழகத்தில் உள்ள விளையாட்டு விடுதிகள், அங்குப் பயிற்சியளிக்கப்படும் விளையாட்டுகள், தொடர்பு எண்கள் உட்படப் பல்வேறு அவசியத் தகவல்களையும் பெறலாம்.

நழுவ விடக் கூடாத வாய்ப்பு

அஞ்சல் வாயிலாகவோ அல்லது நேரிலோ மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத்தில் விண்ணப் பங்களைச் சமர்ப்பிக்கலாம். மாவட்ட அளவிலான தேர்வு மே 2 முதல் 4 வரையிலான நாட்களில் நடைபெறும். முடிவில் கலந்தாய்வுக்குத் தகுதி பெறுவோரின் பட்டியல் விளையாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும். மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவல கத்திலும் பார்வைக்கு வைக்கப்படும்.

பட்டதாரிகளுக்கு பரோடா வங்கியில் அதிகாரி பணி!

நிறுவனம்: பேங்க் ஆஃப் பரோடா வேலை:

ப்ரோபேஷனரி ஆஃபிசர்

காலியிடங்கள்: 400. இதில் பொதுப்பிரிவினர் 202, ஓ.பி.சி 108, எஸ்.சி 60 மற்றும் எஸ்.டி 30

காலியிடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: டிகிரி

வயது வரம்பு: 20-28

தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 1.5.17

மேலதிக தகவல்கள்:

http://www.bankofbaroda.co.in/