எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வங்கியில் தொழில்நுட்ப
அதிகாரி ஆகலாம்

பொதுத்துறை வங்கியான கனரா வங்கியில் தொழில்நுட்ப அதிகாரி  பணியிடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் அனைத்தும் கணினி தொழில்நுட்பம், நிதிச் சேவை, தகவல் மேலாண்மை தொடர்பானவை ஆகும்.

பணி விவரம்:  சர்ட்டிஃபைடு எத்திகல் ஹேக்கர்ஸ் அண்டு பினிட் ரேஷன் டெஸ்டர், சைபர் ஃபாரன்சிக் அனலிஸ்ட், மேலாளர் (கணக்கு தணிக்கை, நிதி, தகவல் ஆய்வாளர், பொருளாதாரம்), தகவல் தொழில் நுட்பப் பாதுகாப்பு நிர்வாகி, வணிக ஆய்வாளர், தகவல் தொகுப்பு நிபுணர், ஈ.டி.எல். நிபுணர்கள், டேட்டா மைனிங் நிபுணர், மேலாளர் (பாதுகாப்பு) எனப் பல்வேறு விதமான பணிகளில் 88 காலியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி: பொதுவாக, தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட பணிகளுக்கு அடிப்படை கல்வித் தகுதி பி.இ., பி.டெக். ஆகும். அதோடு குறிப்பிட்ட தொழில்நுட்பப் பிரிவில் பயிற்சி மற்றும் அனுபவம் அவசியம். நிதிச் சேவை தொடர்பான பணிகளுக்கு எம்.பி.ஏ. பட்டம் வேண்டும். மேலாளர் (பொருளாதாரம்) பணிக்கு எம்.ஏ. பொருளாதாரப் பட்டதாரிகள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். அனைத்துப் பணிகளுக்கும் அடிப்படை கணினி அறிவு அவசியம்.

வயது வரம்பு: வயது வரம்பு பணியின் தன்மைக்கு ஏற்ப 30, 35, 40 என வெவ்வேறு உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும் மத்திய அரசின் இடஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு முறை: பாதுகாப்பு மேலாளர் பணி நீங்கலாக மற்றப் பணிகளுக்கு எழுத்துத் தேர்வு, குழு விவாதம், நேர்காணல் அடிப்படையில் பணி நியமனம் மேற்கொள்ளப்படும். எழுத்துத் தேர்வில் சம்பந்தப்பட்ட தொழில்நுட்பப் பிரிவில் இருந்து 50 வினாக்கள், பொது ஆங்கிலத்தில் 50 வினாக்கள், வங்கித் துறை தொடர்பாக 50 வினாக்கள் என மொத்தம் 150 வினாக்கள் அப்ஜெக்டிவ் முறையில் இடம்பெறும்.
# மொத்த மதிப்பெண் 200.

# 2 மணி நேரத்தில் விடையளிக்க வேண்டும். # தவறான பதில்களுக்கு மதிப்பெண் குறைக்கப்படும்.

# ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள் : ஏப்ரல் 5
எழுத்துத்தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும். தமிழகத்தில் சென்னை, கோவை உள்பட நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் ஆன்லைன் வழியில் எழுத்துத் தேர்வு நடைபெறும். மேற்கண்ட பணிகளுக்கு கனரா வங்கியின் இணையதளத்தின் மூலம்

(www.canarabank.com)விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப முறை, தேர்வு முறை, சம்பளம் உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தில் விளக்கமாக அறிந்துகொள்ளலாம்.

இந்திய விமான ஆணையத்தில் பணிகள்

மத்திய அரசின் முன்னணி பொதுத்துறை நிறு வனங்களில் ஒன்றான இந்திய விமான ஆணையம்  இளநிலை உதவியாளர் (தீயணைப்பு பணி) பதவியில் 147 காலியிடங்களை நேரடி நியமன முறையில் நிரப்ப இருக்கிறது.

கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு முடித்துவிட்டு பாலி டெக்னிக்கில் மெக்கானிக்கல் அல்லது ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங் படித்தவர்கள். அல்லது பிளஸ் 2 முடித்தவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

கல்வித் தகுதியுடன் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டியதும் அவசியம். பிளஸ் 2-வில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பு, என்.சி.சி. பி சான்றிதழ், ஏவியேஷன் மற்றும் தீயணைப்புப் பணியில் அனுபவம் போன்றவை விரும்பத்தக்க தகுதியாக கொள்ளப்படும்.

தேர்வு முறை

முதலில் எழுத்துத் தேர்வு (தமிழகத்தில் திருச்சி மையம்) நடத்தப்படும். அதில் வெற்றி பெறுவோருக்கு அடுத்த கட்டமாக ஓட்டுநர் தேர்வு நடைபெறும். அதன்பிறகு உடற்திறன் தேர்வு, மருத்துவத் தேர்வு ஆகியவை நடத்தப்படும். எழுத்துத் தேர்வுக்கான விண் ணப்ப படிவங்களை இந்திய விமான ஆணை யத்தின் இணையதளத்தில் (www.airportsindia.org.in) இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை தேவையான ஆவணங்கள், தேர்வுக்கட்டணத் துடன் மார்ச் மாதம் 31ஆம் தேதிக்குள் சென் னையில் உள்ள இந்திய விமான ஆணையத்தின் தென்மண்டல அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். கூடுதல் விவரங்களை இந்திய விமான ஆணையத்தின் இணையதளத்தில் விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

வயது வரம்பு:

பொதுப்பிரிவினருக்கு - 30 வயது

ஓ.பி.சி. பிரிவினருக்கு 33 வயது

எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு - 35 வயதாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

உடற்தகுதி: விண்ணப்பதாரர் நல்ல உடல்நலமும், கண் பார்வையும் உடையவராக இருக்க வேண்டும். குறைந்தபட்ச உயரம் 167 செ.மீ. அவசியம். மார்பளவு குறைந்தபட்சம் 81 செ.மீ. விரிவடையும் நிலையில் 84 செ.மீ. இருக்க வேண்டும்.

பி.எஸ்.என்.எல்.-இல் பொறியாளர் ஆகலாம்

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். (பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்) நிறுவனத்தில் இளநிலை தொலைத்தொடர்பு அலுவலர் பதவியில் 2,510 காலியிடங்கள் கேட் நுழைவுத்தேர்வு-2017  மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

தேவையான தகுதி:  விண்ணப்பதாரர்கள் பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட கேட் நுழைவுத் தேர்வை எழுதியிருக்க வேண்டும். டெலிகாம், எலெக்ட்ரானிக்ஸ், ரேடியோ, கம்ப்யூட்டர், எலெக்ட்ரிகல், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, இன்ஸ்ட்ருமென்டேஷன் ஆகிய பாடப் பிரிவுகளில் பி.இ. அல்லது பி.டெக். பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது எம்.எஸ்சி. (எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ்) பட்டதாரியாக இருக்க வேண்டும்.

வயது வரம்பு: பொதுப் பிரிவினருக்கு 30 ஆக நிரணயிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இடஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

பணிநியமன விதிகள்:  உரிய தகுதியுடைய பொறியியல் பட்டதாரிகள் www.externalexam.bsnl.co.in என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி கேட் நுழைவுத்தேர்வு பதிவு எண் மூலம் ஏப்ரல் 6ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

ரூர்க்கி அய்.அய்.டி. நிறுவனம் பிப்ரவரி மாதம் நடத்திய நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில்தான் பணி நியமனம் நடைபெறும்.

இதற்காக பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனியாக இன்னொரு எழுத்துத் தேர்வையோ நேர்முகத் தேர்வை யோ நடத்தாது. மேலும், விவரங்கள் அறிய மேற்குறிப்பிட்ட இணைய தளத்தைப் பார்க்கலாம்.

டிஎன்பிஎல் நிறுவனத்தில்
மேலாளர், அதிகாரி பணிகள்  

தமிழக அரசு நிறுவனமான தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் பேப்பர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் திருச்சி கிளைக்கு நிரப்பப்பட உள்ள மேலாளர் மற்றும் அதிகாரி பணியிடங்களுக்கு பொறியியல் துறை பட்டம் பெற்றவர் களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி:   Deputy Manager (IT) / Assistant Manager (IT) / Officer (IT) - 02

தகுதி: பொறியியல் துறையில் முதல் வகுப்பில் பட்டம், எம்சிஏ முடித்து பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 01.03.2017 தேதியின்படி 28 - கணக் கிடப்படும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.03.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://www.tnpl.com/Careers/it%20advt-3. என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.

முழுவீச்சில் சத்துணவு ஊழியர்கள் பணி நியமனம்

சத்துணவு ஊழியர்கள் பணி நியமனம் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது என சமூகநலத்துறை வட் டாரங்கள் தெரிவித்தன.

இது குறித்து சமூகநலத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் ஆகிய மூன்று பணியிடங்கள் காலியாக இருந்து வந்தன. இதற்கென, சமூகநலத்துறை ஆணையரகம் மாவட்ட ஆட்சியர் தலைமையில், நியமனக் குழு அமைத்து இட ஒதுக்கீட்டு முறையில் ஆதரவற்ற பெண்கள் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டு வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் மூலம் விளம்பரம் வெளியிடப்பட்டு, மேலும் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், சமையலர் பணியில் இருப்போர் சத்துணவு அமைப்பாளராகவும், உதவியாளரிலிருந்து சமையலர் பணிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதுபோல், பணியிட மாற்றம் கோரிய பணியாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

பணி நியமனம் விரைந்து மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, மீதமுள்ள அனைத்து சத்துணவு காலிப்பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.