எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வல்லம், பிப்.26, தமிழக அரசின் தஞ்சை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் தஞ்சை மாவட்ட வேலை வாய்ப்பு  மற்றும் பயிற்சித்துறையுடன் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மும், இணைந்து பட்டபடிப்பு மாண வர்கள் மேற்படிப்பு படிப்பதற்கும் மற் றும் வேலைவாய்ப்பு பெறுவதற்குமான வழிகாட்டும் நிகழ்ச்சி வாழ்க்கை வழி காட்டும் நிகழ்ச்சி 25.02.2017 சனிக்கிழமை காலை 10 -மணி முதல் பகல் ஒரு- மணி வரை பெரியார் மணியம்மை பல்கலைக் கழக - உள்விளையாட்டு அரங்கில் நடை பெற்றது.

மாணவர்களுக்கான வழிகாட்டும் இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாக பெரியார் மணியம்மை பல்கலைக்கழக துணை வேந்தர் கர்னல் பேராசிரியர் நல்.இராமச் சந்திரன்  நாம் முன்னேறுவதற்கு மொழி ஒரு தடை அல்ல. ஆகவே, நம் முன்னேற்றம் நம்முடைய கையில்தான் உள்ளது என, பல தகவல்களை சிறப்பாக வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில்  தஞ்சை மாவட்ட (பயிற்சி) உதவி ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த்  தலைமையுரை ஆற்றும் போது அரசு தேர்வுகள் பற்றிய பல தகவல் களையும் அதில் வெற்றி பெற பல்வேறு வழி முறைகளை எடுத் துக் கூறினார்.   அவர் தமது உரையில் ஹிறிஷிசி தேர்வுகள் பற்றிய பல தகவல் களையும், பல்வேறு வழிமுறைகளையும் கூறினார்.

தஞ்சை மாவட்ட இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் கோ.குழந்தைவேல், வேலை வாய்ப்பு அலுவலகத் தின் பல்வேறு பயன்கள் குறித்த தக வல்களை வழங்கினார். அவற்றில் 25 ஆண்டிற்கு முன்னாள் வேலைவாய்ப்பில் பதிவு பெற்றிருந்தால்தான் அவர்களுக்கு மூப்பு அடிப்படையில் அரசு அலுவல கங்களில் வேலை வாய்ப்பு பெற முடியும். ஆனால் இன்று மாணவர்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு பெற்றி ருந்தாலும் அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப் பது அரிது. இன்றைய கால கட்டத்தில் தேர்வு முறையின் மூலம் தான் மாணவர்கள் வேலைவாய்ப்பினை பெறுகிறார்கள்.

இதற்கான தேர்வுகள் தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசால் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு அதில் தர வரிசையின் அடிப்படையில் வெற்றிப் பெற்றவர்களுக்கு தான் வேலை வாய்ப்பு கிட்டுகிறது என்று கூறினார். மேலும் வேலைவாய்ப்பு அலுவலகத்தால் பட்டப் படிப்பு முடித்த மாணவர்களுக்கு வழங் கப்படும் உதவித் தொகை மாணவர்கள் அரசு தேர்வுக்கு விண்ணப்பிக்கதான் என்று கூறினார். அரசு மற்றும் மத்திய அரசு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பயிற்சிகளும் இலவசமாக வழங்கப் படுகிறது என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து பல்வேறு பயிற்சிகள் குறித்த தகவல்களை பல துறை வல்லுநர்கள் வழங்கினார்கள். அதில் உயர்கல்வி குறித்து பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின்  மேலாண்மை துறையின் துறை தலைவர் முனைவர் பா.மகேந்திரமோகன் வழங் கினார்.

அதனைத் தொடர்ந்து ஊடக துறை பயிற்றுநர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார்  வழங்கினார். போட்டித் தேர்வு குறித்த தகவல்களை பேரா இரா.சு.முருகன், (உதவிப் பேராசிரியர் தமிழ் பல்கலைக் கழகம்) அவர்கள் வழங்கினார். சுயவேலை வாய்ப்பு குறித்த தகவல்களை தஞ்சை மாவட்ட தொழில் மய்யத்தின் பொது மேலாளர்  ஜி.ரவீந்திரன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று பயன்பெற்றனர். தஞ்சை மாவட்ட மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் நலத்துறை அலுவலக உதவி கணக்கு அலுவலர் கோ.முத்துக்குமரன் நன்றி கூறினார்.