எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இந்திய விமான ஆணையத்தில் இளநிலை உதவியாளர் பணி

இந்திய விமான ஆணையத்தில் தீயணைப்பு பிரிவில் 2017ஆம் ஆண்டிற்கான 147 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.

நிறுவனம்:  ஏர்போர்ட்  அதாரிட்டி ஆப் இந்தியா  மொத்த காலியிடங்கள்: 147

பணியிடம்: தமிழ்நாடு, புதுச்சேரி. ஆந்திரா, தெலங்கனா, கர்நாடகா, கேரளா, லட்சசீவுகள்

பணி: இளநிலை உதவியாளர் (தீயணைப்பு துறை)

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 3 வருட டிப்பளமோ அல்லது +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: பொது பிரிவினருக்கு 18 - 30க்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினருக்கு - 33க்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 35க்குள்ளும் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.12,500 - 28,500

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, ஓட்டுநர் தேர்வு, மருத்துவ பரிசோதனை மற்றும் பொறுமைக்கான தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு மய்யம்: திருச்சி, அய்தராபாத், மங்களூரு, திருவனந்தபுரம், அகத்தி  தேர்வுக்கட்டணம்: ரூ.100.

விண்ணப்பிக்கும் முறை: www.airportsindia.in என்ற இணைய தளத்தில் கெடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப மாதிரியை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:  Regional Executive Director, Airports Authority of India, Southern Region, Chennai – 600027.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.03.2017

முழுமையான விவரங்கள் அறிய www.airportsindia.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

ஸ்டேட் வங்கியில் 2313 அதிகாரி பணியிடங்கள்

இந்தியாவில் உள்ள பொதுத் துறை வங்கிகளில் மிக அதிகமான கிளைகளுடன் தனது சேவையை சிறப்பாகச் செய்துவரும் பொதுத்துறை வங்கி இந்திய ஸ்டேட் வங்கி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வங்கியின் துணை வங்கிகளாக ஸ்டேட் பாங்க்  ஆஃப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் பைகானர், ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத், ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் பாட்டியாலா போன்ற அய்ந்து துணை வங்கிகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன.


பெதுத்துறை வங்கிகளுக்கான பணியிடங்கள் அய்.பி.பி.எஸ். எனப்படும் பொது எழுத்துத் தேர்வின் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. ஆனால், ஸ்டேட் வங்கி மற்றும் அதன் துணை வங்கிகளுக்கு தனியே எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வை நடத்தி தேர்வு செய்து குறிப்பிடத்தக்கது.

தற்போது பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 2,313 புரபேஷனரி ஆபீஸர் பணியிடங்களை நிரப்பு வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பட்டதாரி இளைஞர்கள் பயன்படுத்திக் கொண்டு பயனடைய வேண்டிய நேரமிது.

மொத்த காலியிடங்கள்: 2,313

பணி: புரபேஷனரி ஆபீசர்

கல்வித்தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக் கழகத்தில் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுபவர்கள் 1.7.2017ஆம் தேதிக்கு முன்பு தேர்ச்சி  பெற்றதற்கான சான்றிதழ்களைக் காண்பிக்க வேண்டும்.

வயது வரம்பு: 01.04.2017 தேதியின்படி 21 - 30க்குள் இருக்க வேண்டும். அதாவது, 2.4.1987 - 1.4.1996க்குள் பிறந்திருக்க வேண்டும். அரசின் விதிமுறைப்படி எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகை வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. எஸ்.சி., எஸ்.டி. மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.100. விண்ணப்பக் கட்டணத்தை கிரெடிட், டெபிட் மற்றும் நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம்.

தேர்வு மய்யங்கள்: தமிழகத்தில் சென்னை, கோய முத்தூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, மதுரை, நாகர் கோவில், நாமக்கல், பெரம்பலூர், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, தூத்துக்குடி, வேலூர்.

தேர்வுசெய்யடும் முறை: தேர்வானது இரு பிரிவுகளாக இருக்கும். அதாவது பிரிலிமினெரி தேர்வு மற்றும் மெயின் தேர்வு என இரு கட்டங்களாக நடத்தப் படும். இந்த தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படும். முதல் கட்ட தேர்வான பிரிலிமினெரி தேர்வில் ஆங்கிலம், கணிதம், ரீசனிங் ஆகிய 3 பகுதிகளிலிருந்து 100 கேள்விகள் கேட்கப்படும். இதில் தேர்ச்சி பெற்ற வர்கள்தான் அடுத்த கட்ட தேர்வான மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். இரண்டாம் கட்ட மெயின் தேர்வில் அப்ஜக்டிவ் வடிவிலான கேள்விகளும், கூடுதலாக விரிவாக விடையளிக்கும் வகையிலான வினாக்களும் இருக்கும். இதில் தர்க்கம், கணினி அறிவியல், டேட்டா அனாலிசிஸ், பொருளாதாரம், வங்கி நிர்வாகம், ஆங்கிலம் ஆகிய 4 பகுதிகளிலிருந்து 155 கேள்விகள் கேட்கப்படும்.

இரண்டு கட்ட தேர்விலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு குழு கலந்தாய்வு, நேர்முகத் தேர்வு நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெற்றுபவர்கள் பணிக்கான உத்தரவு வழங்கப் படும். ஆங்கில மொழித்திறனோடும், கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அறிவோடும், சரியான வழிகாட்டுதலை கடைப்பிடித்தலும் முறையாக பயிற்சி மேற்கொண்டு முயற்சிப்பவர்களுக்கே வேலை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

சம்பளம்: பணியில் சேருவோருக்கு ஆரம்ப நிலையில் மாதம் ரூ.27,620 வழங்கப்படும் மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படுகிறது.

அடுத்தடுத்துப் பதவி உயர்வுக்கான வாய்ப்புகளும் அதிகம். இளம் வயதி லேயே பணியில் சேருவோர் பின்னாளில் உயர் பதவிக்குச் செல்லலாம்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் ::http://statebankofindia.com அல்லது www.sbi.co.in என்ற இணையதளங்களின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன்பு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தையும் கையெழுத்தையும் ஸ்கேன் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். முறையாக விவரங் களை பூர்த்தி செய்து முடித்த பின்னர் விண்ணப்பத்தைச் சேமித்த பின்னர் தரப்படும் ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர், பாஸ்வேர்டு ஆகியவற்றைக் எதிர்கால பயன்பாட்டிற்காக குறித்துவைத்துக் கொள்வது நல்லது. விண்ணப்பித்த பின்னர், விண்ணப்பத்தையும் பணம் செலுத்தியதற்கான ஆன்லைன் ரசீதையும் பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.03.2017.

தேசிய பாதுகாப்பு அகாடமியில் எம்டிஎஸ், கிளார்க் பணியிடங்கள்

பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய பாதுகாப்பு அகாடமியில் நிரப்பப்பட உள்ள மல்டி டாஸ்க் சர்வீல் மற்றும் கிளார்க் போன்ற பணியிடங்களுக்கு இந்திய இளைஞர்களிடமிருந்து வரும் 25 ஆம் தேதிக்கு முன்னரே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: மல்டிடாஸ்க் சர்வீஸ், கிளர்க்

மெத்த காலியிடங்கள்: 66

கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18-25க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் திறனறி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப் படுவார்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 25.02.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய : http://www.davp.nic.in  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

சென்னை பெட்ரோலியம் கார்பரேஷனில் பணியிடங்கள்

மத்திய அரசு நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் 2017ஆம் ஆண் டிற்கான 97 இளநிலை பெறியாளர் உதவியாளர் மற்றும் இளநிலை டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து பிப்.27க்கு முன்பாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 94

பணியிடம்: சென்னை

தகுதி: பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.11,900 - 32,000

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் உடல் திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவி னருக்கு ரூ.300. விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 27.02.2017  மேலும் முழுமையான விவரங்கள் அறிய :https://www.cpcl.co.in/ பார்த்து தெரிந்துகொள்ளவும்.