எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சீருடைப் பணியாளர் காலியிடங்கள்

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் காவல்துறையில் 2-ம் நிலைக் காவலர், சிறைத் துறையில் 2-ம் நிலை சிறைக் காவலர், தீயணைப்புத் துறையில் தீயணைப்பவர் ஆகிய பதவிகளில் 15,711 காலியிடங்களை நேரடி நியமன முறையில் நிரப்ப இருக்கிறது. சீருடைப் பணியில் ஒரேநேரத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் நிரப்புவது இதுவே முதல் முறை.

மதிப்பெண் அடிப்படையில் ஒதுக்கீடு

காவல்துறையில் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் 4,589ம், ஆயுதப்படையில் 4,627-ம், சிறைத் துறையில் 976ம், தீயணைப்புத் துறையில் 1,512ஆம் காலியிடங்களும் இடம்பெற்றுள்ளன. மொத்தக் காலிப்பணியிடங்களில் 10 சதவீதம் விளையாட்டு வீரர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுக்குப் பிடித்தமான பதவிகளை வரிசைப்படி விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். முன்னுரிமை மற்றும் மதிப்பெண் தகுதி அடிப்படையில் பணிகள் ஒதுக்கீடு செய்யப்படும்.

தேவையான தகுதி: குறைந்தபட்சக் கல்வித் தகுதி 10ஆம் வகுப்பு தேர்ச்சி ஆகும். வயது 18 முதல் 24-க்குள் இருக்க வேண்டும். பி.சி., எம்.பி.சி. பிரிவினருக்கு 2 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு. ஆதரவற்ற விதவைகளுக்கு வயது வரம்பு 35 ஆகும். உடற்கூறு தகுதியைப் பொறுத்தவரையில் உயரம் குறைந்தபட்சம் 170 செ.மீ. இருக்க வேண்டும். ஆதி திராவிடர், பழங்குடியினர் எனில் 167 செ.மீ. போதுமானது. அனைத்து வகுப்பினருக்கும் மார்பளவு 81 செ.மீ. விரிவடையும் நிலையில் 86 செ.மீ. இருக்க வேண்டும். பெண்களுக்குக் குறைந்தபட்ச உயரம் 159 செ.மீ. ஆகும் எழுத்துத்தேர்வு, உடற்திறன் தேர்வு அடிப்படையில் தேர்வு அமைந்திருக்கும்.
தேர்வு முறை: முதலில் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். இதற்கு 80 மதிப்பெண். எழுத்துத் தேர்வில் பொது அறிவு, உளவியல் பாடங் களில் இருந்து அப்ஜெக்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும். எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் ஒரு காலியிடத்துக்கு 50 பேர் என்ற விகிதாச்சார அடிப்படையில் அடுத்த கட்ட தேர்வுகளான உடற்கூறு அளத்தல், உடற்தகுதித் தேர்வு, உடல்திறன் தேர்வு ஆகியவற்றுக்கு அழைக்கப்படுவர்.

உடல் திறன் போட்டிகளில் ஆண்களுக்குக் கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல் அல்லது உயரம் தாண்டுதல், 100 மீட்டர் அல்லது 400 மீட்டர் ஓட்டம் இடம்பெறும். பெண்களுக்கு நீளம் தாண்டுதல், கிரிக்கெட் பந்து எறிதல் அல்லது குண்டு எறிதல், 100 மீட்டர் அல்லது 200 மீட்டர் ஓட்டம் ஆகிய போட்டிகள் நடத்தப்படும். எழுத்துத் தேர்வுக்கு 80 மதிப்பெண், உடற்திறன் தேர்வுக்கு 15 மதிப்பெண். என்.சி.சி., என்.எஸ்.எஸ். ஈடுபாடு, விளையாட்டு ஆகியவற்றுக்கு 5 சிறப்பு மதிப்பெண் என மொத்த மதிப்பெண் 100. விண்ணப்பப் படிவங்கள் தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட தபால் நிலையங்களில் கிடைக்கும். . விண்ணப்பத்தின் விலை ரூ.30. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பிப்ரவரி 22-க்குள் சென்னையில் உள்ள தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்துக்கு அனுப்ப வேண்டும். எழுத்துத் தேர்வு மே 21-அன்று நடைபெறும்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நீங்களும் வங்கி அதிகாரி ஆகலாம்

ஸ்டேட் வங்கி அதிகாரி பணியில் 2,736 காலியிடங் களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டம் பெற்றிருந்தால் போதும். தற்போது இறுதி ஆண்டு படிப்பவர்களும்கூட விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பைப் பொறுத்தவரையில் 21 முதல் 30-க் குள் இருக்க வேண்டும். எனினும், மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி எஸ்.சி., எஸ்.டி. வகுப்பி னருக்கு 5 ஆண்டுகளும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவின ரான ஓ.பி.சி. வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது.

விதிகளும் முறைகளும்

எழுத்துத் தேர்வு, குழு விவாதம், நேர்காணல் ஆகிய வற்றின் அடிப்படையில் பணிக்குத் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். எழுத்துத் தேர்வானது முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு என இரண்டு தேர்வுகளை உள்ளடக்கியது இரு தேர்வுகளுமே ஆன்லைன் வழியில் நடத்தப்படும்.

முதல்நிலைத் தேர்வில் ஆங்கிலம், கணிதம், ரீசனிங் ஆகிய 3 பகுதிகளிலிருந்து 100 வினாக்கள் கேட்கப்படும். மெயின் தேர்வில் அப்ஜக்டிவ் வடிவிலான கேள்விகளும், கூடுதலாக விரிவாக விடையளிக்கும் வகையிலான வினாக்களும் இருக்கும். இதில் தர்க்கம், கணினி அறிவியல், டேட்டா அனாலிசிஸ், பொருளாதாரம், வங்கி நிர்வாகம், ஆங்கிலம் ஆகிய 4 பகுதிகளிலிருந்து 200 கேள்விகளும், ஆங்கிலத்தில் விரிவாக பதிலளிக்கும் வினாக்களும் இடம்பெறும்.

தேர்வு நாட்கள்

முதல்நிலைத் தேர்வு ஏப்ரல் 29, 30, மே 6, 7 ஆகிய தேதிகளில் பல்வேறு கட்டங்களாக நடத்தப்படும். இதன் முடிவுகள் மே 17-ல் வெளியிடப்படும்.

அடுத்த கட்டத் தேர்வான மெயின் தேர்வு ஜூன் 4ஆம் தேதி நடைபெறும். இந்தத் தேர்வின் முடிவுகள் ஜூன் 19இல் வெளியாகும். முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு இரண்டுக்குமான ஹால் டிக்கெட்டை விண்ணப்ப தாரர்கள் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். முதல்நிலைத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டை ஏப்ரல் 15 முதல் ஆன் லைனில் பதிவிறக்கம் செய்யலாம். குழு விவாதம், நேர் முகத் தேர்வு ஜூலை 10 முதல் தொடர்ந்து நடைபெறும்.

இலவசப் பயிற்சி

அதிகாரிப் பணிக்கு விண்ணப்பிக்கவிரும்பும் பட்டதாரிகள் மார்ச் 6ஆம் தேதிக்குள் பாரத ஸ்டேட் வங்கியின் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர், சிறுபான்மை யினருக்கு தேர்வுக்கு இலவசப் பயிற்சி அளிக்கப்படும்.

இது குறித்து ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போதே குறிப்பிட வேண்டும்.  ஸ்டேட் வங்கியில் நேரடி அதி காரியாகப் பணியில் சேருவோருக்கு ஆரம்ப நிலையில் மாதம் ரூ.1 லட்சத்துக்கு மேல் சம்பளம் வழங்கப்படுகிறது. அடுத்தடுத்துப் பதவி உயர்வுக்கான வாய்ப்புகளும் அதிகம். இளம் வயதிலேயே பணியில் சேருவோர் பின்னாளில் உயர் பதவிக்குச் செல்லலாம்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

உச்சநீதிமன்றத்தில் சட்ட கிளார்க் மற்றும்
ஆய்வு உதவியாளர் பணியிடங்கள்

உச்சநீதிமன்றத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 2017-ஆம் ஆண்டிற்கான சட்ட கிளார்க் மற்றும் ஆய்வு உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சம்பளம்: மாதம் ரூ.30,000

வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: சட்டத்துறையில் பட்டம், கணினி குறித்த அறிவு மற்றும் ஆய்வு குறித்த பணிகளில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200,  ஆன் லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.02.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறியwww.sci.nic.in இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு ராணுவத்தில் அலுவலகப் பணி

புனே காடக்வாஸ்லாவில் செயல்பட்டு வரும் இந்திய ராணுவ அகாடமியில்  நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு முடித்த இந்திய இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 66

பணி: லோயர் டிவிஷன் கிளார்க்

பணி: பெயிண்டர்

பணி: சமையலர்

பணி: தீயணைப்பு வீரர்

பணி: டெக்னிக்கல் அட்டன்டென்ட்

பணி: மல்டி டாஸ்கிங் ஸ்டாப்

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதி யானவர்கள். மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ndaclvreet.gov.in

என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner