இளைஞர்


தமிழக அரசின் ஆவின் நிறுவனத்தின் சென்னை கிளையில் 32 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வயது: 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: ஜூனியர் எக்சிக்யூடிவ் டைப்பிங் பதவிக்கு பட்டப் படிப்புடன் ஆங்கிலம் மற்றும் தமிழ் டைப்பிங்கில் ஹையர் கிரேடில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மில்க் ரெகார்டர் பதவிக்கு: கோ-ஆப்பரேடிவ் படிப்பு முடித்திருக்க வேண்டும். கட்டணம் ரூ. 250. தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு வாயிலாக தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்க: பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான படிவத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். Joint Managing Director,  The Tamilnadu Cooperative Milk Producers’ Federation Limited,  29 & 30, Ambattur Industrial Estate, Aavin Dairy Road, Chennai-600 098  

கடைசி நாள் : 2018 ஜன., 10. விபரங்களுக்கு :www.aavinmilk.com/hrjmd2612171.html

காப்பீட்டு நிறுவனத்தில் மருத்துவர் காலியிடங்கள்

நியூ இந்தியா இன்ஸ்யூரன்சு நிறுவனம் பொதுத்துறை நிறுவனமாகும். இங்கு 26 மருத்துவர்களுக்கு அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.

வயது : 1.1.2018 அடிப்படையில் விண்ணப்ப தாரர்கள் 21 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : எம்.பி.பி.எஸ்., எம்.டி., அல்லது எம்.எஸ்., முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஹோமியோபதி, யுனானி, சித்தா, ஆயுர்வேதா முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது.

விண்ணப்பக் கட்டணம் ரூ. 200. தேர்ச்சி முறை : நேர்காணல் வாயிலாக தேர்ச்சி இருக்கும்.
கடைசி நாள் : 2018 ஜன., 17.

விபரங்களுக்கு : www.newindia.co.in/portal

ராணுவத்தில் பல்வேறு பிரிவுகளில் காலிப் பணியிடங்கள்

இந்திய ராணுவத்தில் பல்வேறு பிரிவுகளில் 291 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளி யிடப்பட்டுள்ளது.

காலியிட விபரம் : லோயர் டிவிசன் கிளார்க்கில் 10, பயர்மேனில் 8, மெட்டீரியல் அசிஸ்டென்டில் 6, டிரேட்ஸ்மேன் மேட்டில் 266, எம்.டி.எஸ்.,சில் 1ம் காலியிடங்கள் உள்ளன.

வயது : 18 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும். முழுமையான தகவல்களை இணையதளத்தில் பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளைச் சேர்த்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.  Ministry Of Defence 27 Field Ammunition Depot, PIN - 909427, C/O 56 APO

கடைசி நாள் : 2018 ஜன., 16.

விபரங்களுக்கு : https://indianarmy.nic.in/ex.aspx

உரத்தொழிற்சாலையில்
காலிப் பணியிடங்கள்

பெர்டிலைசர்ஸ் அண்டு திருவாங்கூர் கெமிக்கல்ஸ் லிமிடெட் என்பது சுருக்கமாக ‘பாக்ட்’ என அழைக்கப்படு கிறது. இங்கு அப்ரென்டிஸ்   148 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

வயது : டிப்ளமோ பிரிவுக்கு அதிகபட்சம் 23ம், டிரேடு பிரிவுக்கு அதிகபட்சம் 25 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: டிப்ளமோ பிரிவுக்கு தொடர்புடைய இன்ஜினியரிங் பிரிவில் மூன்று வருட டிப்ளமோ படிப்பும், டிரேடு பிரிவுக்கு அய்.டி.அய்., படிப்பும் தேவைப்படும். விபரங்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும். நேர்காணல் மூலமாக தேர்ச்சி இருக்கும்.

கடைசி நாள்: 8.1.2018 முதல் 13.1.2018.

விபரங்களுக்கு :

பொறியியல் பட்டதாரி... விவசாயி... ஏற்றுமதியாளர்!

விவசாயம் செய்தால் வாழ்க்கை நடத்த முடியுமா என்று பலர் யோசித்துக் கொண்டிருக்கையில், விவசாயத்தையே தொழிலாக மாற்றி, கிராமத்தில் 100 பேருக்கு வேலை வழங்கி வருகிறார் கடலூரைச் சேர்ந்த முதுநிலை பொறியியல் பட்டதாரி ப.சக்திவேல்.

திருவண்ணாமலையில் தனியார் பொறியியல் கல்லூரியில் இளநிலை, முதுநிலை பொறியியல் படிப்புகளை முடித்தவர் சக்திவேல். படித்து முடித்ததும் வேறு வேலைக்குப் போகாமல், குறிஞ்சிப்பாடியில் தனது தந்தை நடத்தி வந்த நர்சரி பண்ணையைக் கவனிக்கத் தொடங்கினார். வழக்கமாக பூச்செடிகள், காய்கறிச் செடிகளை விற்று வந்த நர்சரி பண்ணை, சக்திவேலின் முயற்சியால், விவசாயிகளுக்கு பணப் பயன் அளிக்கும் சவுக்கு மரக்கன்றுகள் விற்பனை செய்யும் நர்சரியாக மாறியது.

“சவுக்கு மரத்திலிருந்து காகிதம் தயாரிக்கப்படுவதால் தமிழக அரசின் காகித நிறுவனம், தனியார் காகித நிறு வனங்களுக்கு மரத்தின் தேவை இருந்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக டிஎன்பிஎல் நிறுவனத்துக்கு ஆண்டுக்கு 5 லட்சம் மெட்ரிக் டன் மரம் தேவைப்படுகிறது. அதன் தேவையில் பெரும்பகுதி வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. நமது ஊரிலேயே இதை வளர்த்தால் நமது விவசாயிகளுக்கு லாபம்தானே? என்று தோன்றியது. அதனால் விவசாயிகளிடம் சவுக்கு மர வளர்ப்பையும், அதன் வீரிய ரக வளர்ப்பையும் பற்றிப் பேசத் தொடங்கினேன்.

மேலும் குறைவான தண்ணீரே இந்த சவுக்கு வளர்க்கப் போதுமானது. சவுக்குக்கு பராமரிப்பும் அதிக அளவில் தேவையில்லை’’ என்கிறார் சக்திவேல்.

கோவையிலுள்ள வன மரபியல் - மர வளர்ப்பு நிறுவனத்தின் சவுக்கு மர ஆராய்ச்சியாளர் நிக்கோடமஸின் கண்டுபிடிப்பான சிஎச்-1, சிஎச்-5 என்ற ரகத்தை

விவசாயிகளுக்கு பிரபலப் படுத்துவதில் தனது பணியைத் தொடங்கியிருக்கிறார் சக்திவேல்.

இந்த ரகத்தில் அப்படியென்ன இருக்கிறது என்கிற கேள்விக்கு அவரே பதிலளிக்கிறார்: “”பொதுவாக இந்தியாவில் நாட்டு ரகங்களான சவுக்குகள்தான் பயிரிடப் படுகின்றன. இவை 4 - 5 ஆண்டுகள் வளரக் கூடியது.

ஆனால், நிக்கோடமஸின் ஆராய்ச்சியின் பலனாக கண்டுபிடிக்கப்பட்ட சிஎச் வீரிய ரகங்கள் 24 மாதத்தில் முழு வளர்ச்சி பெறுவதோடு, 40 அடி உயரம் வளர்ந்து, 60 - 70 டன் வெட்டக்கூடியதாகும். இதனால், விவசாயிகள் கூடுதல் பணப் பலனைப் பெறுகிறார்கள்.

இதனை விவசாயிகளிடம் கொண்டு சேர்ப்பதற்காக பல்வேறு கிராமங்களில் எங்களின் நர்சரி மூலமாக பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறோம்” என்கிறார்.
சக்திவேல் படித்துவிட்டு வேறு ஏதாவது வேலைக்குப் போயிருந்தால் அவர் மட்டுமே வேலை பார்த்திருப்பார். இப்போது

அவருடைய நர்சரியில் நூறு பேர் வேலை செய்கிறார்கள்.

“தமிழகத்தில் சில பகுதிகளில் மட்டுமே இந்த நர்சரி தொழிலை மேற்கொள்ள முடியும். அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி, வேகாக்கொல்லை பகுதிகள் சிறப்பானவை.

அதில் குறிஞ்சிப்பாடியில் எனது குடும்பத்தினர் வசமிருந்த 5 ஏக்கர் நிலத்தில் தற்போது சிஎச்-1, சிஎச்-5 ரக சவுக்கு மரங்களைப் பதியம் போட்டு அதனை வளர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறேன்.

இந்தப் பணியில் உள்ளூரைச் சேர்ந்த 100 பேர் வேலை செய்கிறார்கள்’’ என்று மகிழ்ச்சியுடன் சொல்கிறார் சக்திவேல். சக்திவேல் நடத்தும் நர்சரியில் ஆண்டுக்கு ஒரு கோடி சவுக்கு கன்றுகளை விற்பனை செய்கிறார்கள். தமிழகத்தில் கன்று ரூ. 3-க்கும், வெளிமாநிலங்களில்

ரூ.4-க்கு வழங்குகிறார்கள்.

“ஏக்கருக்கு 3 ஆயிரம் கன்றுகள் நடவுச் செய்யலாம். ரூ. 20 லட்சம் முதலீட்டில் இந்தத் தொழிலைத் தொடங்கி 100 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

எனினும், தமிழக விவசாயிகளை விட ஆந்திர மாநில விவசாயிகள் இது குறித்து நன்கு தெரிந்து வைத்திருக் கிறார்கள்.

ஆந்திராவுக்கு நிறைய சவுக்கு மரக்கன்றுகளை ஏற்றுமதி செய்கிறோம். வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறோம். எனவே, விவசாயத்தில் ஆர்வமுள்ள இளைஞர்கள் இத்தொழிலில் தாராளமாக ஈடுபடலாம்.

சவுக்கு வளர்ப்புத் தொழில்நுட்பம் தொடர்பாக கோவையில் பயிற்சியளிக்கப் படுகிறது. பயிற்சியைப் பெற்று நவீன தொழில்நுட்பத்துடன் விவசாயம் மேற் கொள்ளலாம்‘ என்கிறார் சக்திவேல்.


சிவில் சர்வீஸ் தேர்வுகளிலும் குரூப் 1 தேர்வுகளிலும் மட்டுமே நடந்துவந்த முதனிலைத் தேர்வுகள் இப்போது குரூப் 2 தேர்வுகளுக்கும்கூட நடத்தப்படுகின்றன. நிர்வாகத் துறைப் பணிகளுக்கான தேர்வுகளைப் போலவே நீதிப் பணித் துறைகளுக்கான தேர்வுகளிலும் முதனிலைத் தேர்வுகள் நடத்தப்பட இருக்கின்றன.

மாவட்ட நீதிபதிகள், நீதித் துறை நடுவர்கள், அரசு உதவி வழக்குரைஞர் பணியிடங்களுக்கான தேர்வுகளில் முதனிலைத் தேர்வு, எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு என்ற முறை விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீதி பணித்துறைத் தேர்வுகள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையிலும், அத்தேர்வுகளுக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்கும் மய்யங்கள் முதனிலைத் தேர்வுகளை எதிர்கொள்வது எப்படி என்பதில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கின்றன.

நான்கு தாள்கள்

இதற்கு முன்பு அரசு உதவி வழக்கறிஞர் பணிகளுக்கு எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மட்டுமே நடத்தப்பட்டன. எழுத்துத் தேர்வில் நான்கு தாள்களை எழுத வேண்டியி ருந்தது. முதல் தாளில் குற்ற அறிக்கை உள்ளிட்ட ஆவணங் களை எழுதுதல், ஆவணங்களைத் தமிழில் இருந்து ஆங்கி லத்துக்கும் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கும் மொழி பெயர்த்தல் ஆகிய திறன்கள் சோதிக்கப்பட்டன.

இரண்டாம் தாளானது, இந்திய சாட்சியச் சட்டம் மற்றும் குற்றவியல், உரிமையியல் நீதிமன்ற நடவடிக்கைகள் பற்றியதாக அமைந்திருந்தது. மூன்றாம் தாள், இந்திய அரசியல் சட்டம் மற்றும் மனித உரிமைகள் சட்டத்தைப் பற்றியது. நான்காம் தாள், மத்திய-மாநில அரசுகள் இயற்றிய சிறப்புச் சட்டங்களைப் பற்றியதாக இருந்தது. நான்காம் தாளுக்காக மட்டுமே, ஏறக்குறைய 50 சட்டங்களைப் பற்றிய அறிமுகம் அவசியமாக இருந்தது. ஏறக்குறைய இதே முறையில் தான் நீதித் துறைப் பணிகளுக்கான தேர்வுத் தாள்களும் அமைந்திருந்தன.

கைகொடுக்குமா பழைய முறை?

இதற்கு முன் நடத்தப்பட்டுவந்த தேர்வுகள், பெரிதும் நீதிமன்ற நடைமுறைகளின் அடிப்படையிலேயே அமைந் திருந்தன. எனவே, வழக்குரைஞராகப் பணியாற்றிக் கொண்டே நீதித் துறைத் தேர்வுகளை எழுதுவது எளிதாக இருந்தது. இளம் வழக்குரைஞர்கள், மூத்த வழக்குரைஞர்களின் வழி காட்டுத லோடு, தேர்வுகளை எளிதில் அணுக முடிந்தது.

புதிய முறையில், முதனிலைத் தேர்வு சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கும் கொள்குறி (அப்ஜெக்டிவ்) முறையில் அமைந்திருக்கும். சட்டவியல், ஒப்பந்தச் சட்டம், தீங்கியல் சட்டம் என அடிப்படைச் சட்டக் கோட்பாடுகளை மய்யமாகக் கொண்டிருக்கும். இவை அனைத்துமே சட்டப் படிப்பின்போது பாடங்களாகப் படித்தவைதாம். என்றாலும், வழக்குரைஞராகப் பணியாற்றும் போது குறிப்பிட்ட சில சட்டங்களுக்கே முதன்மை கவனம் கொடுப்பதால், தேர்வுக்காகப் பழைய பாடங்களை மீண்டும் நினைவில் கொள்வது அவசியம். சட்டப் படிப்பில் படித்த பாடங்களை கொள்குறி (அப்ஜெக்டிவ்) முறையிலான தேர்வில் எதிர் கொள்வது எப்படி என்பதுதான் இப்போது உள்ள சவால். முதனிலைத் தேர்வில் எத்தனை கேள்விகள், எந்தப் பாடத் துக்கு முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறது, வினாக்கள் சட்டப்பிரிவுகளின் அடிப்படையில் அமைந்திருக்குமா, முக்கிய தீர்ப்புகளைப் பற்றியும் கேட்கப்படுமா? அடிப் படையான சட்டக் கோட்பாடுகள் கேள்விகளாக வருமா? இப்படி ஏகப்பட்ட கேள்விகளும் எதிர்பார்ப்புகளும் இருக் கின்றன. முதலாவதாக நடத்தப்படப்போகும் முதனிலைத் தேர்வுக்குப் பிறகுதான் இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் பதில் கிடைக்கும்.

ஆனால், அதற்கு முன்பே முதனிலைத் தேர்வு எந்த வகையில் அமைந்திருந்தாலும் அதை எதிர் கொள்வதற்கு வருங்கால நீதிபதிகள் தயாராகிவிட வேண்டும்.

நிலக்கரி நிறுவனத்தில்
காலிப் பணியிடங்கள்

நெய்வேலியில் உள்ள லிக்னைட் கார்ப்பரேசன் லிமிடெட் எரிசக்தி துறையில் புகழ் பெற்றது. பொதுத்துறை நிறுவனமான இது டெக்னீசியன் மற்றும் கிராஜூவேட் என்ற இரண்டு பிரிவுகளில் அப்ரென்டிஸ்சிப் பயிற்சிக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. காலியிடங்கள்: டெக்னீசியன் அப்ரென்டிஸ்சிப் பிரிவில் 250 காலியிடங்களும், கிராஜூவேட் அப்ரென்டிஸ்சிப் பிரிவில் 120 காலியிடங்களும் உள்ளன.

கல்வித் தகுதி: மூன்று வருட இன்ஜினியரிங் டிப்ளமோ அல்லது பட்டப் படிப்பை முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப் பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் : www.nlcindia.com/new_website/careers/GAT-TAT%20ADVERTISEMENT.pdf  

ரயில்வேயில் காலிப்பணியிடங்கள்


ரயில்வேயின் கிளை நிறுவனமான இர்கான், ரயில்வே தொடர்புடைய கட்டுமானப் பணிகளைச் செய்து வருகிறது. இதன் கிளைகள் வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும் உள்ளது.

இங்கு துணைப் பொறியாளர் / இளநிலைப் பொறியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிட விபரம் : ஏ.இ., - எலக்ட்ரிக்கலில் 15ம், ஜூனியர் இன்ஜினியர் - எலக்ட்ரிக்கலில் 20ம், எஸ்.அண்டு டி., சார்ந்த ஏ.இ.,யில் 5ம், ஜே.இ.,யில் 10ம், எஸ்.அண்டு டி., டிசைன் சார்ந்த ஜே.இ.,யில் 2ம் காலியிடங்கள் உள்ளன.

வயது : அனைத்து பதவிகளுக்கும் அதிகபட்ச வயது 30.

கல்வித் தகுதி : ஒவ்வொரு பிரிவுக்கும் கல்வித்தகுதி மாறுபடுகிறது. முழுமையான விபரங்களுக்கு இணைய தளத்தை பார்க்கவும்.

தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம் 1000 ரூபாய். கடைசி நாள் : 2018 ஜன., 5. விபரங்களுக்கு :  www.ircon.org

வங்கியில் உதவியாளர்
பணியிடங்கள்

தனியார் துறை வங்கி யான சவுத் இந்தியன் வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளன. இவ்வங்கியில் காலியாக உள்ள 468 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட் டுள்ளது.

காலியிட விபரம்: கேர ளாவில் 340ம், தமிழகத்தில் 68ம், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 35ம், டில்லியில் 25ம் என மொத்தம் 468 காலியிடங்கள் உள்ளன.

வயது : 2017 டிச., 31 அடிப்படையில் 26 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப் பிக்கலாம்.

கல்வித் தகுதி: குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்ணுடன் ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல் அடிப்படை யில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

கட்டணம் : 600 ரூபாய். கடைசி நாள்: 2017 டிச. 30.

விபரங்களுக்கு: www.southindianbank.com

அய்.டி.அய்., படித்தவர்களுக்கு பணியிடங்கள்

எலக்ட்ரானிக்ஸ் துறை சார்ந்த வடிவங்களை உருவாக்குதல், உற்பத்தி, மேம்படுத்துதல், மற்றும் வணிகப் படுத்துதல் தொடர்புடையதுதான் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேசன் ஆப் இந்தியா நிறுவனம்.

இது 1967இல் நிறுவப்பட்டது. இங்கு டிரேட்ஸ்மேன் பணிக்கு அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.

வயது : 2017 நவ., 30 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : பத்தாம் வகுப்புக்குப் பின், என்.சி.வி.டி., அங்கீகாரம் பெற்ற அய்.டி.அய்., படிப்பை தொடர்புடைய பிரிவில் முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு, டிரேடு டெஸ்ட், நேர்காணல் என்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை : விண் ணப்பங்களை ஆன்லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும். கட்டணம் ரூ. 500. கடைசி நாள் : 2018 ஜனவரி 5,

விபரங்களுக்கு :


தகவல் தொழில்நுட்ப யுகத்தில் அச்சு, காட்சி ஊடகம், சினிமா, தொலைக்காட்சி மற்றும் விளம்பர உலகம், சமூக ஊடகங்கள் என பலவிதமான ஊடகங்கள் சுவாரசியமான வேலைவாய்ப்புகளை அள்ளித்தரக் காத்திருக்கின்றன. இத்துறைகளுக்குள் நுழைவதற்கு உங்களைத் தயார்  படுத்தும் மாஸ் கம்யூனிகேசன் படிப்புகள், அவற்றை பயிற்றுவிக்கும் முன்னணி கல்வி நிறுவனங்கள், அவற்றுக் கான நுழைவுத் தேர்வுகள் ஆகியவற்றை அறிந்து கொள்வோம்.

பிளஸ் டூவுக்குப் பிறகு

பிளஸ் டூவில் எந்தப் பாடப் பிரிவில் படித்தவர்களும் மாஸ் கம்யூனிகேசன் படிப்பை மேற்கொள்ளலாம். இதில் பி.ஏ., பி.எஸ்சி. பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகள் உள்ளன. பிளஸ் டூ முடித்தவர்கள் நேரடியாக கலை அல்லது அறிவியல் பட்டப் படிப்பில் சேரலாம். இதற்கு பிளஸ் டூவில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி அடைந் தால் போதுமானது. பிற துறைகளில் இளநிலை பட்டம் முடித்தவர்களும் மாஸ் கம்யூனிகேசனில் முதுநிலை பட்டயப் படிப்பில் சேரலாம்.
வேலைவாய்ப்புக்கான துறைகள்

வளர்ந்து வரும் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், இணைய ஊடகங்கள் ஆகியவை துடிப்பான இளைஞர்களை வரவேற்க காத்திருக்கின்றன. தடையற்ற இணைய வசதியின் பெருக்கத்தால் கைப்பேசி இயங்குதளத்தைக் குறிவைத்தும், செயலிகளின் வாயிலாகவும் புதிய தலைமுறைக்கான ஊடகங்கள் தலைதூக்கிவருகின்றன. ஆர்வமும், மாறுபட்ட திறனும், படைப்பாற்றலும் கொண்ட துடிப்பான இளைஞர் களுக்கு இது மிகவும் பொருத்தமான துறை. மேலும் பண்பலை வானொலிகள், மக்கள் தொடர்பாளர்கள், சமூக ஊடகத் துறை பொறுப்பாளர்கள் என மாஸ் கம்யூனிகேசன் மாணவர்களுக்கான வாய்ப்புகள் பிரமாண்டமாக விரி வடைந்திருக்கின்றன.

எங்கே படிக்கலாம்?

மாஸ் கம்யூனிகேசனில் பெரும்பாலானோரின் தேர்வு பி.ஏ., இளங்கலை பட்டப் படிப்பாக உள்ளது. அதற்கு அடுத்தப்படியாக அடிப்படை அறிவியல் பாடங்களையும் உள்ளடக்கிய பி.எஸ்சி. பட்டப்படிப்பு உள்ளது. இவை தவிர்த்து டிசைனிங், நுண்கலை சார்ந்தும் பட்டம், பட்டய சான்றிதழ் படிப்புகள் உள்ளன. இப்படிப்பை மற்ற பட்டப் படிப்புகளை வழங்கும் கல்லூரிகளில் படிப்பதைவிட அதற்கான சிறப்புக் கல்லூரியில் சேர்ந்து பயில்வதே நல்லது.

இதழியல் துறையை இலக்காகக் கொண்டவர்களுக்கு பி.ஏ. ஜர்னலிசம் உகந்த படிப்பாகும். புனேவில் இயங்கும் எஸ்.சி.எம்.சி. கல்வி மய்யம் (https://www.scmc.edu.in/) மாஸ் கம்யூனிகேசன் இன் ஜர்னலிசம் இன் பிரிண்ட், எலக்ட்ரானிக் அண்ட் கம்யூனிகேசன் என்ற இளங்கலைப் பட்டப்படிப்பை வழங்குகிறது. சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் பி.ஏ. ஜர்னலிசம் அண்டு கம்யூனிகேசன் வழங்குகிறது. இவை தவிர்த்துப் பெருவாரியான பல்கலைக் கழகங்கள் பி.ஏ.ஜர்னலிசப் படிப்புகளை வழங்குகின்றன.

முக்கியமான நுழைவுத் தேர்வுகள்

எத்துறையில் இளநிலை பட்டப் படிப்பு முடித்தவர்களும் மாஸ் கம்யூனிகேசனில் பல்வேறு முதுநிலை பட்டம் மற்றும் பட்டயப் படிப்புகளைப் படிக்கலாம். முன்னணி கல்வி நிறுவனங்கள் இதற்கெனத் தனியாக நுழைவுத் தேர்வு மூலம் சேர்க்கை நடத்துகின்றன. 10 மத்தியப் பல்கலைக்கழகங்கள் இணைந்து நடத்தும் பொது நுழைவுத் தேர்வு இதற்கு முதன்மையான உதாரணம். இவற்றில் திருவாரூர் உள்ளிட்ட 8 மத்தியப் பல்கலைக்கழகங்களில் மாஸ் கம்யூனிகேசன் எம்.ஏ., முதுகலைப் படிப்புகளில் சேரலாம்.

ஏப்ரல் 2018 சேர்க்கைக்கு மார்ச் மாதம் ஆன்லைனில் (http://admissions.cutn.ac.in/)விண்ணப்பிக்கலாம். சென்னையைச் சேர்ந்த ஏசியன் இதழியல் கல்லூரி (http://asianmedia.in/) முதுநிலைப் பட்டயப் படிப்புக்கான ஆன்லைன் தேர்வை மே மாதம் நடத்துகிறது. இதேபோன்று மணிபால் பல்கலைக்கழகத்தின் MU-OET, XIC-OET, IPU CET உள்ளிட்ட பல நுழைவுத் தேர்வுகள் உள்ளன.

டில்லி பல்கலைக்கழகம் இதழியலில் அய்ந்தாண்டுகள் ஒருங்கிணைந்த பட்டப் படிப்பை நுழைவுத் தேர்வு வாயி லாகத் தேர்வு செய்கிறது.

பிளஸ் டூ தேர்ச்சியுடன் 50 சதவீத மதிப்பெண் பெற்றவர்களும், தேர்வு முடிவுக்குக் காத்திருப்போரும் இந்த நுழைவுத் தேர்வை எழுதலாம். இளநிலைப் படிப்புகளுக்கும் டில்லி பல்கலைக்கழகம், மணிபால் பல்கலைக்கழகம் போன்றவை நுழைவுத் தேர்வு வாயிலாகச் சேர்க்கை மேற்கொள்கின்றன.

கற்பிக்கும் செய்தி நிறுவனங்கள்

இந்தியாவில் பல்வேறு தொலைக்காட்சி செய்தி நிறுவனங்கள் பிரத்யேகக் கல்வி நிறுவனங்கள் வாயிலாகத் தொலைக்காட்சிக்கான இதழியல் முதுநிலைப் பட்டயப் படிப்புகளை வழங்குகின்றன.

இளம் வயதில் அறிவியல் ஆய்வு

ஆராய்ச்சி என்பது மிகப் பெரும் அறிஞர்கள் செய்ய வேண்டிய பணி. நம்மால் செய்ய முடியாது என்று நினைத்து அதிலிருந்து நாம் ஒதுங்கிவிடுகிறோம். இதனால் நமக்கும் ஆராய்ச்சிக்கும் இடையே பெரிய இடைவெளி உள்ளது. ஆராய்ச்சி என்ற வார்த்தையைக் கேட்கும்போதும் ஆராய்ச்சியாளரைப் பார்க்கும்போதும் நம்மிடையே வியப்பு ஏற்படுகிறது.

இந்நிலையில், ஆராய்ச்சி சாதாரண விசயம்தான். ஆர்வம் மட்டும் இருந்தால் யார் வேண்டுமானாலும் ஆராய்ச்சி செய்யலாம். அந்த ஆர்வத்தைச் சரியான திசையில் கொண்டு சென்றால் மாணவர்களை ஆராய்ச்சி யாளர்களாக உருவாக்கலாம் என்பதை நிரூபித்து வருகிறார் மதுரையைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் மலர்ச்செல்வி.

சிறுவயதில் இருந்தே பள்ளி மாணவர்களை இதற்காகத் தயார்படுத்திவருகிறார் அவர். இதன் மூலம் மாணவர்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மையை வளர்த்துவருகிறார் அவர்.

மதுரை மாவட்டம் திருநகரைச் சேர்ந்தவர் மலர்ச்செல்வி. வரலாற்று பாடத்தில் பட்டம் பெற்ற இவர் நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள முத்துப்பட்டி பல்கலைக்கழக நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். தன் பள்ளியில் படிக்கும் 8ஆம் வகுப்பு மாணவர் களுக்கும் ஆராய்ச்சி முறைகளைக் கற்றுக் கொடுக்கிறார். ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்குப் பள்ளி மாணவர்களைத் தயார்படுத்திவருகிறார்.

ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்குப் பள்ளி மாணவர்களைத் தயார் படுத்துகிறோம். ஆய்வு செய்வதற்காக மாணவர்களை நேரடியாகக் களத்துக்கு அழைத்துச் செல்கிறோம்.

சிறுவயதிலேயே கள ஆய்வில் ஈடுபடுவதால் அவர் களுக்கு எதிர்காலத்தில் ஆய்வு குறித்த பயம் இருக்காது. பள்ளிப் பருவத்தில் மேற்கொள்ளும் ஆய்வுகளால் அறிவியல் மீது ஆர்வம் ஏற்படும் மாணவர்கள் சிலர் பள்ளிப் படிப்பை முடித்த பின்பு கல்லூரியிலும் ஆய்வைத் தொடர்கின்றனர் என்கிறார் மலர்ச்செல்வி.

கப்பல் படையில் பயிற்சிப் பணி வாய்ப்பு

நமது நாட்டின் பாதுகாப்புப்படைகளில் இந்தியக் கப்பல்படைக்கு முக்கிய பங்கு உள்ளது. இங்கு அப்ரென்டிஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்
படுகின்றன.

காலியிட விபரம் : அப்ரென்டிஸ் பிரிவில் மொத்தம் 180 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இவற்றில் பிட்டரில் 15, மெசினிஸ்டில் 10, ஷீட் மெட்டல் ஒர்க்கரில் 15, வெல்டரில் 15, பிளம்பரில் 10, பில்டிங் கன்ஸ்ட்ரக்டரில் 10, மெசின் டூல் மெக்கானிக்கில் 5, ஏ.சி., அண்டு ரெப்ரிஜிரேசன் மெக்கானிக்கில் 5, மெக்கானிக் டீசலில் 15, பெயிண்டரில் 10, எலக்ட்ரீசியனில் 20ம், மேலும் சில பணிகளுக்கு 5 காலியிடங்கள் உள்ளன.

இவை அனைத்தும் ஓராண்டு அப்ரென்டிஸ் பயிற்சிக்கான காலி யிடங்களாகும். இரண்டு ஆண்டு  அப்ரென்டிஸ்

காலியிடங்களில் பிட்டர், பிளம்பர் ஆகியவற்றில் தலா 10, பிரஷரில் 10, கார்பென்டரில் 15ம் காலி யிடங்கள் உள்ளன.

வயது : 01.04.1997 முதல் 31.03.2004க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: தொடர்புடைய பிரிவில் அய்.டி.அய்., படிப்பை முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை : பத்தாம் வகுப்பு மற்றும் அய்.டி.அய்., மதிப்பெண்கள், எழுத்துத் தேர்வு மதிப்பெண்கள் மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

கடைசி நாள் : 2018 ஜன., 2. விபரங்களுக்கு : ..www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10702_256_1718b.pdf


இந்துஸ்தான் நியூஸ்பிரின்ட் லிமிடெட் என்பது காகிதத் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் நிறுவனம். இதன் கோட்டயம் கிளையில் டிரேடு அப்ரென்டிஸ் பிரிவில் 48 இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பிரிவுகள் : பிட்டரில் 15, எலக்ட்ரீசியனில் 10, ஏ.சி., அண்டு ரெப்ரிஜிரேஷன் மெக்கானிக்கல் 2, இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக்கல் 6, டர்னரில் 2, மோட்டார் மெக்கானிக் வெகிக்கிளில் 4, மெஷினிஸ்டில் 1, வெல்டரில் 5ம், பாசாவில் 3ம் காலியிடங்கள் உள்ளன.

வயது : 2017 நவ., 1 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 18 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : பத்தாம் வகுப்புக்கு பின், பிட்டர், டர்னர், மெக்கானிக், எலக்ட்ரீசியன், இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக், ஏ.சி., அண்டு ரெப்ரிஜிரேஷன் மெக்கானிக், மெஷினிஸ்ட், வெல்டர், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் அண்டு புரொகிராமிங் போன்ற ஏதாவது ஒன்றில் என்.சி.வி.டி., அங்கீகாரம் பெற்ற அய்.டி.அய்., படிப்பை முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு, நேர்காணல் வாயிலாக தேர்ச்சி இருக்கும்.
கடைசி நாள் : 2017 டிச., 18. விபரங்களுக்கு : : www.hnlonline.com/php/list_career.php?lid=18

விமான நிறுவனத்தில்  
உதவியாளர் பணியிடங்கள்

இந்தியாவில் உள்ள விமான நிலையங்களைப் பராமரிக்கும் பணியில் ஏர்போர்ட்ஸ் அதாரிடி ஆப் இந்தியா (ஏ.ஏ.அய்.,) ஈடுபட்டு வருகிறது. இதில் இளநிலை உதவியாளர் (பயர் சர்வீசஸ்) பிரிவில் காலியாக உள்ள 170 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வயது : 2017 டிச., 31 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 18 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : பத்தாம் வகுப்புக்கு நிகரான படிப்பை முடித்துவிட்டு 3 வருட இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பை மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், பயர் பிரிவில் குறைந்த பட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். தவிர பிளஸ் 2 படிப்பை, குறைந்த பட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

தேர்ச்சி முறை : ஆன்லைன் எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல், மருத்துவப் பரிசோதனை, உடல்தகுதி தேர்வு, ஓட்டுநர் தேர்வு போன்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப் பங்களை சமர்ப்பிக்க வேண்டும். கட்டணம்: 1,000 ரூபாய். கடைசி நாள்: 31.12.2017

விவரங்களுக்கு :www.aai.aero/en/careers/recruitment

சிஅய்எஸ்எப்  காவலர் தேர்வு பிளஸ் 2 கல்வி தகுதி போதும்

சிஅய்எஸ்எப் கான்ஸ்டபிள் தேர்வு பிளஸ் 2 கல்வி தகுதி போதும். மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படைக்கு 487 கான்ஸ்டபிள்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். தமிழ்நாட்டுக்கு 17 இடங்கள் ஒதுக்கப் பட்டுள்ளன.

பணி: Constable/Fire:

17 இடங்கள் (பொது-8, எஸ்சி-3, ஒபிசி-6). சம்பளம்:   ரூ.21,700-69,100. வயது வரம்பு: 18 முதல் 23க்குள். ஒபிசிக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி., எஸ்டிக்கு 5 ஆண்டுகளும், வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

கல்வித்தகுதி:   அறிவியல் பாடத்தில் பிளஸ் 2 தேர்ச்சி. உடற்தகுதி: பொது பிரிவினர்கள்: உயரம்- 170 செ.மீ., மார்பளவு: 80 செ.மீ., விரிவடைந்த நிலையில்- 85 செ.மீ., எஸ்டி பிரிவினர்: உயரம்- 162 செ.மீ, மார்பளவு- 77 செ.மீ., விரிவடைந்த நிலையில்- 82 செ.மீ., உடற்திறன் தேர்வு: 5 கி.மீ., தூரத்தை 24 நிமிடங்களுக்குள் ஓடி கடக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: ரூ.100/-. ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். எஸ்சி., எஸ்டி., முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது.

தகுதியானவர்கள் www.cisfrectt.in என்ற இணையதளம் மூலம் விவரங்களை தெரிந்து கொண்டு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:DIG, CISF (South Zone), HQrs, Chennai.

விண்ணப்ப கடைசி நாள்: 11.1.2018.

 

எய்ம்ஸ் மருத்துவமனையில்  
செவிலியர் பணியிடங்கள்

எய்ம்ஸ் மருத்துவமனையில் 927 ஸ்டாப் நர்ஸ் பணியிடங்கள்ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் 927 ஸ்டாப் நர்ஸ் மற்றும் நர்சிங் ஆபீசர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட் டுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

A. Senior Nursing Officer/Staff Nurse Grade I:

127 இடங்கள் (பொது-65, ஒபிசி-34, எஸ்சி-19, எஸ்டி-9). சம்பளம்: ரூ.9,300-34,800. வயது: 25.12.17 அன்று 21 முதல் 35க்குள். தகுதி: நர்சிங் பாடத்தில் 4 ஆண்டு பிஎஸ்சி பட்டம் பெற்று 3 வருட பணி அனுபவம்.

B. Nursing Officer/Staff Nurse Grade II:

800 இடங்கள். (பொது-404, ஒபிசி-216, எஸ்சி-120, எஸ்டி-60). சம்பளம்: ரூ.9,300-34,800.வயது: 25.12.17 அன்று 21 முதல் 30க்குள். தகுதி: நர்சிங் பாடத்தில் பிஎஸ்சி/ பிஎஸ்சி (ஹானர்ஸ்) அல்லது ஜெனரல் நர்சிங் மிட்வொய்பரி பாடத்தில் டிப்ளமோ தேர்ச்சியுடன் 2 ஆண்டு பணி அனுபவம்.

இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஆன்லைன் எழுத்துத்தேர்வு, தொழிற்திறன் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்: ரூ.1000/-. ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

எஸ்சி.,எஸ்டி., மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தகுதியானவர்கள் www.aiimsbhubaneswar.edu.in  என்ற இணையதளம் மூலம் கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.12.2017.

‘இஸ்ரோ’வில் பணி வாய்ப்பு

விண்வெளி ஆராய்ச்சியில் ‘இஸ்ரோ’ மய்யம், சர்வதேச புகழ் பெற்றது. இந்த நிறுவனத்தின் லிக்விட் புரொபல்ஷன் சென்டர் மய்யம் திருவனந்தபுரத்தில் உள்ளது. இங்கு பல்வேறு பிரிவுகளில் உள்ள காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிட விபரம் : டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பிரிவிலான மெக்கானிக்கல் 4, போட்டோகிராபியில் 1, எலக்ட்ரிக்கலில் 2, இந்தி டைப்பிஸ்டில் 1, டெக்னீசியன் பி பிரிவிலான பிட்டரில் 5, எலக்ட்ரானிக் மெக்கானிக்கல் 2, பயர்மேனில் 1, கேட்டரிங் அசிஸ்டென்டில் 1ம் காலியிடங்கள் உள்ளன.

வயது : டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தொடர்புடைய டிரேடு பிரிவில் டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். டெக்னீசியன் பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் அய்.டி.அய்., படிப்பு முடித்திருக்க வேண்டும். முழுமையான தகவல்களை இணையதளத்திலிருந்து அறியவும்.

தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு வாயிலாக தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
கடைசி நாள் : 2017 டிச., 18.

விவரங்களுக்கு www.lpsc.gov.in/noticeresult.html


மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகளுக்குத் தேவைப்படும் எழுத்தர் உள்ளிட்ட குரூப்-சி ஊழியர்களும் குரூப்-பி சார்நிலைப் பணியாளர்களும் எஸ்.எஸ்.சி. எனப்படும் பணியாளர் தேர்வாணையம் மூலமாகத் தேர்வுசெய்யப்படுகிறார்கள்.

அந்த வகையில், கீழ்நிலை எழுத்தர், இளநிலைச் செயலக உதவியாளர், அஞ்சல் உதவியாளர், அஞ்சல் பிரிப்பு உதவியாளர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பதவிகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த மேல்நிலைக் கல்வித் தேர்வுக்கான அறிவிப்பை எஸ்.எஸ்.சி. வெளியிட்டுள்ளது.

தேவையான தகுதி: பிளஸ் 2 முடித்தவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பதவிக்கு மட்டும் அறிவியல் பிரிவில் கணிதத்தை ஒரு பாடமாகப் படித்திருக்க வேண்டும். வயது 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும். மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, அதிகபட்ச வயது எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 32, ஓ.பி.சி. பிரிவினருக்கு 30, மாற்றுத் திறனாளிகள் 37.

தேர்வு முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு (தட்டச்சு, டேட்டா என்ட்ரி) அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வு கிடையாது.

எழுத்துத் தேர்வு முதல்நிலைத் தேர்வு, 2ஆவது நிலைத் தேர்வு என இருநிலைகளை உள்ளடக்கியது. முதல்நிலைத் தேர்வு ஆன்லைன் வழியில் நடத்தப்படும். இதில், பொது ஆங்கிலம், ரீசனிங், அடிப்படைக் கணிதம், பொது அறிவு ஆகிய 4 பகுதிகளில் இருந்து தலா 25 கேள்விகள் வீதம் 100 கேள்விகள் இடம்பெறும். மொத்தம் 200 மதிப்பெண்கள். ஒரு மணி நேரத்தில் விடை அளிக்க வேண் டும். தவறான பதில்களுக்கு மைனஸ் மதிப்பெண் உண்டு.

இரண்டாம் நிலைத் தேர்வு, விரிவாகப் பதில் எழுதும் வகையில் அமைந்திருக்கும். இதற்கு 100 மதிப் பெண்.
இதில் தேர்ச்சி பெற்றவர்கள் பதவிக்கு ஏற்ப திறன் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இத்தேர்வில் தேர்ச்சி பெற்றாலே போதும். டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பதவிக்குக் கணினித் தேர்வும் இதர பதவிகளுக்குத் தட்டச்சு லோயர் கிரேடு தரத்தில் தட்டச்சுத் தேர்வும் நடத்தப்படும்.

இறுதியாக முதல்நிலைத் தேர்வு மதிப்பெண், மெயின் தேர்வு மதிப்பெண், இட ஒதுக்கீடு அடிப்படையில் மெரிட் பட்டியல் தயாரிக்கப்பட்டு அதன் பேரில் பணிக்குத் தேர்வுசெய்யப்படுவார்கள்.

ஆன்லைன்வழி முதல்நிலைத் தேர்வு நடைபெறும். சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி ஆகியவை தேர்வு மய்யங்கள் ஆகும். உரிய கல்வித் தகுதியும் வயது வரம்புத் தகுதியும் கொண்டவர்கள் www.ssconline.nic.in என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கியத் தேதிகள்

முதல்நிலைத் தேர்வு: மார்ச் 4 - 26, 2018

இரண்டாம்நிலைத் தேர்வு: ஜூலை 8, 2018

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்:
டிசம்பர் 18, 2017

தோட்டக்கலை படித்தவர்களுக்கு
தமிழக அரசில் பணி  

தமிழக அரசில் காலிப்பணியிடங்களை நிரப்பும் பணியில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஹார்டிகல்சர் (தோட்டக்கலை) துறையில் காலியாக உள்ள 130 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிட விவரம் : தோட்டக்கலை துணை இயக்குநர் பதவியில் 100 இடங்களும், தோட்டக்கலை அதிகாரி பதவியில் 30 இடங்களும் நிரப்பப்பட உள்ளன. வயது : 2017 ஜூலை 1 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். இவர்கள் முதுநிலைப் பட்டப்படிப்பு அல்லது பிஎச்.டி., ஆராய்ச்சிப் படிப்பை முடித்தவர்களாக இருந்தால் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி : தோட்டக்கலை துணை இயக்குநர் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள், எம்.எஸ்சி., (ஹார்டிகல்சர்) முடித்திருக்க வேண்டும். தோட்டக்கலை அதிகாரி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் பி.எஸ்சி., (ஹார்டிகல்சர்) முடித்தவராக இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை : பொது எழுத்துத் தேர்வு மதிப்பெண்கள், சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

தேர்வு மய்யங்கள் : சென்னை, மதுரை மற்றும் கோவையில் தேர்வு நடத்தப்படும்.

விண்ணப்பிக்க :www.tnpscexams.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். பதிவுக்கட்டணம் 150 ரூபாய். விண்ணப்பக்கட்டணம் 200 ரூபாய். கடைசி நாள் : 2017 டிச., 27.

விவரங்களுக்கு : www.tnpsc.gov.in/notifications/ 2017_29_not_horticultural.pdf

ரயில்வேயில் 1,050 காலியிடங்கள்

தென்கிழக்கு மத்திய ரயில்வே என்பது இந்திய ரயில்வேயின் அங்கம். இந்த புதிய மண்டலத்தில் பிலாஸ்பூர் கோட்டம் 2003 முதல் செயல்பாட்டுக்கு வந்தது.

நாக்பூர், பிலாஸ்பூர், ராய்பூர் என்ற கோட்டங்களை உள்ளடக்கிய தென் கிழக்கு மத்திய ரயில்வேயில் அப்ரென்டிஸ் பிரிவில் காலியாக இருக்கும் 1,050 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிட விவரம் : தென் கிழக்கு மத்திய ரயில் வேயின் நாக்பூர் கோட்டத்தில் 298ம், மோடிபாக் ஒர்க் ஷாப்பில் 15ம், ராய்பூர் கோட்டத்தில் 255ம், ராய்பூர் வேகன் ஒர்க் ஷாப்பில் 50ம், பிலாஸ்பூர் கோட்டத்தில் 432ம் என மொத்தம் 1,050 காலியிடங்கள் உள்ளன.

பிரிவுகள்: பிட்டர், கார்பென்டர், வெல்டர், பாசா, எலக்ட்ரீசியன், செக்ரட்டேரியல் பிராக்டிஸ், பைப் பிட்டர், பெயின்டர், ஒயர்மேன், எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், பவர் மெக்கானிக், மெக்கானிக் மெசின் மெயின்டனென்ஸ், டீசல் மெக்கானிக், அப் ஹோல்ஸ்டரர், பியரர், டர்னர், ஹெல்த் சானிட்டரி இன்ஸ்பெக்டர், ஸ்டெனோகிராபர், மெசினிஸ்ட், மெக்கானிக் மோட்டர் வெகிக்கிள் என்ற பிரிவுகளில் அப்ரென்டிஸ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விரிவான தகவல்களை இணையதளத்தை பார்த்து அறியவும்.

வயது : விண்ணப்பதாரர்கள் 14 - 24 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : விண்ணப்பிக்கும் பிரிவினைப் பொறுத்து கல்வித் தகுதி மாறுபடுகிறது. பொதுவாக பத்தாம் வகுப்பில் தேர்ச்சியும், என்.சி.வி.டி., அங்கீ காரம் பெற்ற அய்.டி.அய்., படிப்பையும் முடித்திருப்பது தேவைப்படும். விண்ணப்பிக்கும் பிரிவுக்கு ஏற்றபடி சிறப்புத் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி நாள் : 2017 டிச., 27. விபரங்களுக்கு : : www.secr.indianrailways.gov.in/view_section.jsp?lang=0&id=0,4,382

கப்பல் கட்டும்
தளத்தில் வேலை

நமது நாட்டிலுள்ள கப்பல் கட்டும் தளங்களில் கொச்சி கப்பல் கட்டும் தளம் முக்கியமானது. இங்கு சேப்டி அசிஸ்டென்ட் பிரிவில் 25 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன.

வயது : 2017 டிச., 10 அடிப்படையில் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு, இண்டஸ்ட்ரியல் சேப்டி பிரிவில் டிப்ளமோ அல்லது சான்றிதழ் படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறு வனத்தின் மூலமாக முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை : பிராக்டிக்கல் தேர்வு வாயிலாக தேர்ச்சி இருக்கும்.

பணியனுபவம் : ஏதாவது ஒரு பொதுத்துறை அல்லது தனியார் நிறுவனத்தில் தொடர்புடைய பிரிவில் ஓராண்டு காலம் பணி அனுபவம் தேவைப்படும்.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். கட்டணம் 100 ரூபாய். கடைசி நாள் : 2017 டிச., 10.

விவரங்களுக்கு:www.cochinshipyard.com/ca

ஆசிய மாரத்தானை வென்ற கோபி தொனாகல்

சீனாவின் டொங்குவான் நகரில் நவம்பர் 26 அன்று 2017ஆம் ஆண்டுக்கான ஆசிய மாரத்தான் வாகையர் பட்டப் போட்டி நடைபெற்றது. இந்த ஆசிய மாரத்தான் போட்டியில் ஆடவர் பிரிவில் தங்கம் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை நிகழ்த்தியிருக்கிறார் கோபி தொனாகல். 2 மணி நேரம், 15 நிமிடங்கள், 48 நொடிகளில் இந்த மாரத்தான் ஓட்டத்தைக் கடந்து இந்தப் பதக்கத்தை வென்றிருக்கிறார் கோபி.
உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரே பெட்ரோவ் வெள்ளி பதக்கமும் மங்கோலியாவைச் சேர்ந்த பியாம்பலேவ் வெண்கல பதக்கத்தையும் இந்த மாரத்தான் போட்டியில் வென்றிருக்கின்றனர். இதற்கு முன், ஆசிய மாரத்தானில் இந்தியாவைச் சேர்ந்த ஆஷா அகர்வாலும் (1985) சுனிதாவும் (1992) மகளிர் பிரிவில் தங்கப் பதக்கம் வென் றிருக்கின்றனர்.


Banner
Banner