இளைஞர்

 

உயரம் தாண்டுதலில் சாதனை படைத்த மாரியப்பனைப் போல், முயன்றால் நம்மாலும் சாதிக்க முடியும். இந்த நம்பிக்கையை பயிற்சிகளின் மூலமும் வேலைவாய்ப்புகளின் மூலமும் ஏற்படுத்திவருகிறது  யூத்4ஜாப்ஸ்  தன்னார்வ அமைப்பு. கை, கால் செயல்படுவதில் குறைபாடு, காது கேட்காத, வாய் பேசமுடியாத குறைபாட்டுடன் இருந்த 11 ஆயிரம் பேருக்குப் பலவிதமான திறன் பயிற்சிகளை அளித்திருக்கிறது இந்த அமைப்பு. இதில் 60 சதவீதத்துக்கும் அதிகமானோர் பணியில் இருக்கின்றனர் என்கிறார் இதன் நிறுவனர் மீரா ஷெனாய்.

சமூகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு வாழ்வாதாரத் தைக் கொடுப்பதற்காகக் கடந்த அய்ந்தாண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது இந்த அமைப்பு. இந்தியாவில் 11 மாநிலங் களில் 20 மய்யங்களில் இது செயல்படுகிறது.

சில அமைப்புகளில் கல்விக்கு மட்டுமே முக்கியத்துவம் தருவார்கள். சாஃப்ட் ஸ்கில் பயிற்சி மட்டுமே தருவார்கள். இவர்களிலிருந்து எங்களின் அமைப்பு முற்றிலும் மாறுபட்டது. பெரும்பாலும் நாங்களே மாற்றுத் திறனாளிகளைத் தேடிப் போவோம். அவர்களின் குடும்பத்தோடு ஒருநாள் தங்கி யிருந்து, அவர்களைப் பற்றித் தெரிந்துகொள்வோம். நாங்கள் 60 நாட்களுக்கு என்னென்ன பயிற்சிகளை அளிக்கிறோம் என்று சொல்வோம். அவர்களின் முழு ஒப்புதலோடு இந்த மய்யத்திற்கு அழைத்து வருவோம். பயிற்சி நடக்கும் நாட்களில் அவர் களுக்கு உணவு, இருப்பிடம் அனைத்தையும் இலவசமாகவே அளிக்கிறோம்.

உடல் குறைபாட்டோடு பிறந்ததால் தங்களால் எதுவுமே செய்ய முடியாது என்று சமூகம் அவர்கள் மீது திணித்த அவநம்பிக்கையை, பயத்தைப் பலதரப்பட்ட எங்களின் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளின் மூலம் போக்குகிறோம். கடைசி 15 நாட்களில் இரண்டு விதமான நேர்காணலுக்கு அவர்களைத் தயார்படுத்துவோம். இந்தப் பயிற்சி தன்னம்பிக்கையோடு நேர்காணலைச் சந்திக்க உதவும். வேலை கிடைத்தாலும் ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளுக்கு அவர்களைக் கண் காணிப்போம். குறைந்தபட்சம் 8 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை அவர்களின் தகுதிக்கு ஏற்ப மாதச் சம்பளம் பெறும் பணியில் இருக்கின்றனர் என்கிறார் யூத்4ஜாப்ஸின் தமிழ்நாடு, புதுச்சேரிக்கான உதவித் திட்ட மேலாளர் ஜெய்சபரி பாலாஜி.

2 மாதப் பயிற்சிக்குப் பின்னர் அவரவருக்குப் பொருத்த மான வேலைவாய்ப்பு நிறுவனங்களில் நேர்காணலுக்குத் தயார்படுத்துகிறது இந்த அமைப்பு. வேலை கிடைத்த பின்பும் அவர்களுடைய முன்னேற்றத்துக்குத் தேவையான செயல் திறன் கலந்தாய்வையும் அளிக்கிறது. தற்போதைய நிலவரப் படி ஹைதராபாத், சென்னை, பெங்களூருவில் வேலை வாய்ப்புப் பெற்றுத்தரப்படுகிறது. அதிக வளர்ச்சியும் அதிக மனிதவள ஆற்றலும் தேவைப்படும் துறைகளான ஹாஸ் பிடாலிட்டி, ரீடெயில், பேங்கிங், ஃபைனான்ஸ், பி.பீ.ஓ., அய்.டி., டிராவல் அண்ட் டூரிஸம் ஹெல்த் ஆகியவற்றிலும் தொழிற் சாலைகளிலும் வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது. உள் ளூரிலும் அதே மாவட்டத்திலும் வேலைவாய்ப்பைப் பெற்றுத் தரவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அவ்வமைப்பினர் தெரிவிக்கின்றனர்.

தொடக்கப் புள்ளி:

இந்த அமைப்பைத் தொடங்கிவைத்து அதன் மூளையாகச் செயல்படுபவர் மீரா ஷெனாய். இந்தியாவிலேயே முன்மாதிரியாக, ஆந்திர மாநிலத்தின் கிராமப்புற மற்றும் பழங்குடி மக்களின் வேலைவாய்ப்பை உறுதிசெய்யும் திட்டத்தை 2004இல் தொடங்கி அதன் நிர்வாக இயக்குநராகவும் செயல்பட்டவர் இவர். தெற்காசியாவுக்கான உலக வங்கியின் ஆலோசகராகவும் இருந்தவர். மீரா ஷெனாய்

இவர் இந்த அமைப்பைத் தொடங்கியதற்கான காரணம் ஓர் ஆய்வு என்கிறார். இந்தியாவின் மக்கள்தொகையில் 2 கோடிக்கும் அதிகமானோருக்கு உடல்ரீதியான குறைபாடு இருப்பதாக அய்ந்தாண்டுகளுக்கு முன்பு தெரியவந்தது. உடலளவிலும் மனதளவிலும் தன்னம்பிக்கை இழந்து இருப்பவர்களுக்குத் தகுந்த பயிற்சியையும் ஒரு வாய்ப்பையும் வழங்கினால் அவர்களாலும் பொருளாதாரரீதியாக முன்னேற முடியும் என இந்த அமைப்பைத் தொடங்கினோம்.

1. உடல் குறைபாட்டோடு இருப்பவர்களும் நிச்சயம் சாதிக்க முடியும் என்பதைப் புரியவைப்பது.

2. அவர்களுக்கு இருக்கும் தாழ்வு மனப்பான்மையைப் போக்கி நம்பிக்கை அளிப்பது.

3. சாதாரணமாக இருப்பவர்களின் பணித்திறனுக்கு மாற்றுத் திறனாளிகளின் திறன் எந்த விதத்திலும் குறைந்ததல்ல என்பதை வேலை கொடுக்கும் நிறுவனங்களுக்குப் புரிய வைப்பது. இந்த மூன்று விதமான சவாலை நாங்கள் எதிர்கொள் கிறோம் என்றார் மீரா ஷெனாய்.
தொடர்புக்கு: 99499 95202, மற்றும் 98499 00801.

கூடுதல் விவரங்களுக்கு: www.youth4jobs.org


தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (தமிழ்நாடு மின்சார வாரியம்) விரைவில் 325 உதவி பொறியாளர்களை நேரடித் தேர்வு மூலம் தேர்வுசெய்ய உள்ளது. இதில் 300 காலியிடங்கள் எலெக்ட்ரிகல் இன்ஜினியரிங் பிரிவுக்கும், 25 இடங்கள் சிவில் இன்ஜினியரிங் பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மின்சார வாரியத்தில் எழுத்துத் தேர்வு மூலம் நேரடி நியமன முறையில் உதவி பொறியாளர்கள் தேர்வுசெய்யப்பட்டுப் பணியமர்த்தப்படுகிறார் கள். அந்த வகையில், 325 உதவிப் பொறியா ளர்களை நேரடி தேர்வு மூலம் நியமிக்க மின்சார வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான எழுத்துத் தேர்வை நடத்த அண்ணா பல்கலைக் கழகத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. எழுத்துத் தேர்வு அடிப்படையில் பணிநியமனம் நடைபெறும். நேர்முகத் தேர்வு எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

தேவையான தகுதி

உதவிப் பொறியாளர் (எலெக்ட்ரிகல்) பணிக்கு எலெக்ட்ரிகல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிகல் இன்ஸ்ட்ருமென்டேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி உள்ளிட்டவையில் ஏதேனும் ஒரு பிரிவில் பி.இ. அல்லது பி.டெக். பட்டம் பெற்றிருக்க வேண்டும். உதவி பொறியாளர் சிவில் பிரிவுக்கு பி.இ. சிவில் பொறியியலில் பட்டம் அவசியம்.

ஏ.எம்.அய்.இ. தேர்ச்சி பெற்றவர்களும் உதவிப் பொறியாளர் பணிக்கு விண்ணப்பிக்க லாம். வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு மட்டும் 30 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பி.சி., எம்.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. ஆகிய இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது. உதவிப் பொறியாளர் தேர்வுக்கான அறிவிப்பு வெகு விரைவில் வெளியிடப்பட உள்ளது. மின்சார வாரியத்தின் இணையதளத்திலும் (www.tangedco.gov.in)
அறிவிப்பு வெளியாகும். நேரடியாக உதவிப் பொறியா ளராகப் பணியில் சேருவோர் உதவி செயற் பொறியாளர், செயற்பொறியாளர், கண்காணிப்புப் பொறியாளர், தலைமைப் பொறியாளர் எனப் படிப்படியாகப் பதவி உயர்வு பெறலாம்.

இப்போதெல்லாம் கட்டுப்படியாகும் செலவிலேயே உள்ளங்கையில் அடங்கும் கைப்பேசிகள் சந்தையில் கிடைத்து விடு கின்றன. அந்தக் கைப்பேசிகளில் பலவகை யான செயலிகளை நிறுவிக்கொண்டால் மட்டுமே கைப்பேசிகளை பயனுள்ள வகையில் பயன்படுத்த முடியும். பள்ளி, கல்லூரி மாணவர்கள், போட்டித் தேர்வு களுக்குத் தயாராவோர் தங்களது அன் றாடப் பாடம், தேர்வு, திட்டமிடல், உடல்-மனநலப் பராமரிப்பு போன்றவற்றுக்கு உதவியாக உள்ள செயலிகள் சிலவற்றை பார்ப்போம்.

ஸ்மார்ட் ஃபோன், டேப்லட், மடிக் கணினி ஆகியவற்றில் நிறுவிக்கொள்வதற்கான பல செயலிகள் கிடைக்கின்றன. எவை நமக்குத் தேவையானவை என்பதைக் கண்டறிந்து அவற்றை நிறுவிக்கொள்வது சவாலான செயல்தான். ஆண்ட்ராய்டு, ஆப்பிள், பிளாக்பெரி, விண்டோஸ் எனச் செயலிகள் அடிப்படையில் ஸ்மார்ட் ஃபோன்கள் வேறுபட்டாலும், இங்கே பெருவாரி பயன்பாட்டில் உள்ள ஆண்ட்ராய்டு செயலிகளே தரப்பட்டுள்ளன. அவற்றை ஒட்டியே இதர பயனர்கள் தங்களுக்கான செயலிகளையும் அடையாளம் காணலாம்.

திட்டமிட்ட தயாரிப்புகளுக்கு

பாடம் தொடர்பான குறிப்புதவி, தேடல், பிரதியெடுத்தல் ஆகியவற்றுடன் அன்றாடச் செயல்களைத் திட்டமிட்டு மேற்கொள்வதற்கும் நினைவூட்டுவதற்கும் உதவும் செயலிகள் மாணவர்களுக்கு அடிப்படையானவை. பெரும்பாலானோர் அறிந்திருக்கும் இந்தச் செயலிகளின் பட்டியலில் EverNote, Google Keep, Pocket, AnyDo, MyGenda போன்றவை முக்கியமானவை.

மொபைல் கேமரா கொண்டு குறிப்புதவி நூல்களைப் பிரதி எடுப்பதோடு ஆவணப்படுத்தவும் ,

CamScanner, DocScanner ஆகியவை உதவும். இதே கேமரா உதவியுடன் கணிதச் சமன்பாடுகளைத் தீர்க்க  அவசியம். கேமரா மூலம் வகுப்பறை வெண்பலகையின் குறிப்புகளைப் படமெடுத்து அவற்றை , PDF, Word கோப்புகளாகச் சேமிக்க   உதவும். குரல் பதிவு மற்றும் பாடக் குறிப்புகளை ஒருசேரச் சேமிக்கவும், அவற்றை ஒத்திசைவுடன் பயன்படுத்தவும் கட்டணப் பதிப்பாக  செயலி உதவுகிறது. அன்றாடப் படிப்பு, வீட்டுப் பாடம், பருவத் தேர்வுகளுக்கான தயாரிப்பு ஆகியவற்றுக்கு  Timetable, My Class Schedule, My Homework
செயலிகள் உதவும்.

அதிகப்படியான பாடம் சார்ந்த செயல்பாடுகளை மொபைல் ஃபோனில் இலகுவாக்க  Native Clipboard 
முக்கியம். உங்களது கைப்பேசியை டேப்லட் மற்றும் இதர கணினிகளுடன் இணைத்துப் பயன்படுத்தவும், கோப்புகளைப் பரிமாறிக்கொள் ளவும்AirDroid உதவும். Dictionary.com பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு அவசியமானது. கணிதப் பாடத்தை எளிமையாகக் கற்றுக் கொள்ளவும், பிரத்யேக வீட்டுப் பாடங் களுக்கும்  MathWay  உதவும்.

திருப்புதலும் தேர்வு
ஆயத்தமும்

சிறிய பிரேக், காத்திருப்புகள் என எந்நேரத்தையும் பொன்னாக்கும் விதமாகப் படித்ததை விரைவாகத் திருப்பிப் பார்ப்பதற்கு, StudyBlue, GoConqr செயலிகள் உதவும். பாடக்குறிப்புகள், ஃபிளாஷ் கார்ட்ஸ், மன வரைபடம், ஸ்லைடுகள் ஆகியவற்றின் அடிப்படையிலான திருப்புதலை இவற்றில் பெறலாம்.  Tcy Exam Prep
என்ற தலைப்பின் கீழ் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்களுக்கான பாட உதவிகள் JEE, CAT, GATE, GREநிஸிணி  தேர்வுகளுக்கான தயாரிப்புகள் கிடைக் கின்றன.  செயலி சமூக வலைத்தள அடிப்படையில், பாடக் குறிப்புகள் மற்றும் விநாடி வினா பாணியில் தேர்வு தயாரிப்புக்கு உதவும். கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஆய்வுக்கான நூற்பட்டியலை இணைக்கும் பணியைப் புத்தகத்தின் பார்கோடு உதவியுடன் முடித்துத் தருகிறது

Easybib   செயலி. பிரெஞ்சு, ஜெர்மன் உட்பட 20-க்கும் மேற்பட்ட மொழிகளைக் கையாளவும், கற்றுக் கொள்ளவும்DuoLingo உதவும்.

பாதுகாப்புக்கான செயலிகள்

பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர் தங்கள் பாதுகாப்புக்காகவும், அவசரகால உதவியாகவும் பயன்படுத்திக்கொள்ள ஏராளமான செயலிகள் உள்ளன. அவற்றில் பிரதானமான  Circle of 66 போன்ற செயலிகளைத் தேர்வு செய்து பயன்படுத்தலாம். டெல்லி நிர்பயா சம்பவத்துக்குப் பிறகு இந்தியாவில் பெண்களுக்கு எனப் பிரத்யேகச் செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

அறிமுகமில்லாத புதிய இடங்களுக்குச் செல்லும்போதும், பாதுகாப்பில் அய்யம் எழும்போதும் பெற்றோர் அல்லது

நம்பகமானவர்களுடன் தொடர்பில் இருப்பது, காவல் துறையினர் உதவியைப் பெறுவது உள்ளிட்ட உதவிகளை  My Safety Pin, bsafe, React mobile, chilla, women safety, smart 24x7, Shake2Safety, Raksha
போன்ற செயலிகள் மூலம் பெறலாம். இந்தச் செயலிகளில் ஒவ்வொன்றாக நிறுவிப் பார்த்துத் தனக்கு உகந்ததை இறுதியாக முடிவுசெய்வது நல்லது.  நிஷீஷீரீறீமீ விணீஜீs  அவ்வப்போது அப்டேட் செய்துகொள்வது படிப்பு நிமித்தம் புது ஊரில் புழங்குபவர்களுக்கு அவசியமானது. வங்கிக் கணக்கை மொபைல் ஆப் வாயிலாக அணுகுவது அலைச்சலைத் தவிர்க்கும். கல்லூரி மாணவர்கள் தங்களது அன்றாடச் செலவுகளைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும்  ஜிஷீsலீறீ  உதவும்.

மிதந்து கொண்டும் எதிர்நீச்சல் போடலாம்

வேலைக்காக ஒருவரைத் தயார் படுத்து வதுதான் கல்வியின் உட்சபட்ச இலக்கா? இல்லை. வாழ்க்கையின் சவால் களை எதிர்கொள்ளவும் சக மனிதர்களின் வாழ்வை மேம்படுத்தவும் உந்தித்தள்ளுவதே கல்வி யின் உண்மை யான நோக்கம் என்கிறார் ரிஷிகேஷ்.

ராமேஸ்வரக் கடற்கரையில் காலார விளையாடும் போதெல்லாம் கடலோடிகளின் மரண ஓலம் இவருடைய காதுகளைத் துளைத்தது, மனதை உலுக்கியது. கடலில் மீன் பிடிக்கச்செல்லும் கடலோடிகள் அதில் மூழ்கிப்போகும் அவலத்தை மாற்ற முடியாதா எனச் சிந்திக்கத் தொடங் கினார். மீனவர்களுக்கான பாதுகாப்பு வளையங்களை வாங்கும் வசதி இல்லாதவர்களுக்கு மாற்று என்ன என ஆராய ஆரம்பித்தார்.

2014இல் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கபுரத்தில் உள்ள பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்துக்கொண் டிருந்தார் ரிஷிகேஷ். அவருடைய தேடலுக்குத் தோழர்கள் பிரவீன், நவீன்குமார், கார்த்தி, குகன் கைகொடுத்தனர். நீரில் மூழ்காமல் மிதக்க உதவும் கருவியைச் செலவில்லாமல் உருவாக்க அந்தச் சிறுவர்கள் திட்டமிட்டனர். பொருளாதாரரீதியாகப் பின்தங்கிய கிராமப்புறத்தைச் சேர்ந்த அவர்களுடைய கண்ணில் திரும்பிய பக்கமெல்லாம் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பிளாஸ்டிக் குப்பை தென்பட்டது. கடலில் மிதந்து சென்றுகொண்டிருந்த சில பிளாஸ்டிக் பாட்டில்களை ஒரு நாள் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தபோது சட்டென ரிஷிகேஷூக்கு ஒரு சிந்தனை உதித்தது.

மண்ணையும் நீர்நிலைகளையும் பாழாக்கும் பிளாஸ் டிக் பாட்டில்களை நண்பர்களோடு சேர்ந்து சேகரித்தார். 24 வெற்று பிளாஸ்டிக் பாட்டில்களை சேர்த்துக் கட்டித் தண்ணீரில் தூக்கி எறிந்தார். இயற்பியல் விதிப்படி கனமான பொருளையும் அவை மிதக்கவைத்தன. நீச்சல் தெரிந்த ரிஷிகேஷ் தன்னைச் சுற்றி இந்தப் பிளாஸ்டிக் பாட்டில் குவியலைக் கட்டிக்கொண்டு வீட்டருகில் உள்ள ஏரி ஒன்றில் குதித்துத் தன்னைத் தானே சோதனைக்கு உட்படுத்திக் கொண்டார். லாவகமாகத் தன்னால் மிதிக்க முடிந்தது அப்போது தெரியவந்தது. அடுத்து, நீச்சல் தெரியாத தன்னுடைய நண்பன் பிரவீனை வைத்தும் சோதித்தார்.

எதிர்பார்த்தபடியே பிளாஸ்டிக் பாட்டில்களின் உதவி யோடு பத்திரமாகக் கரையேறினார் பிரவீன். சிறுவர் களுக்குச் சவால் மிகுந்த போட்டிகள் நடத்தும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான டிசைன் ஃபார் சேஞ்ச்-ன் அய் கேன் வின் அவார்டு 2014-க்கு ரிஷிகேஷின் எளிமை யான கண்டுபிடிப்பை அனுப்பிவைத்தார் அவருடைய வழிகாட்டி முருகானந்தம். சமூக மாற்றத்துக்கு வித்திடும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் விதமாக நடத்தப்படும் இப்போட்டிக்கு ரிஷிகேஷின் கண்டுபிடிப்போடு சேர்த்து மொத்தம் 1,992 கண்டுபிடிப்புகள் வந்து குவிந்தன.

2014இல் அறிவிக்கப்பட்ட இப்போட்டியின் முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் துணிச்சலான சிந்தனை என்கிற விருதும் ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகையும் ரிஷிகேஷூக்கு வழங்கப்பட்டுள்ளது. விருதைத் தன் நண்பர்களோடு சேர்ந்து பெருமையாகப் பெற்றுக் கொண்டார் ரிஷிகேஷ். தற்போது பத்தாம் வகுப்புக்காக மும்முரமாகப் படித்துக்கொண்டிருக்கும் இவர் பள்ளி வாழ்க்கையின் முதல் சவால் மிகுந்த பொதுத்தேர்வை எதிர்கொள்வதற்கு முன்னதாகவே வாழ்க்கையின் சவாலை வென்றெடுத்துவிட்டார்!

வங்கிகளில் 14192  பணியிடங்கள்

தற்போது மீண்டும் வங்கி வேலைவாய்ப்பை எதிர்நோக்கி உள்ள ஆண்கள், பெண்கள் பயன்பெறும் வகையில், அரசுமயமாக்கப்பட்ட வங்கிகளில் 2017 - 2018 ஆம் ஆண்டிற்கான 14,192 குரூப் ‘ஏ’ அதிகாரி  மற்றும் குரூப் ‘பி’ அலுவலக உதவியாளர்

பணியிடங்களுக்கான பொது எழுத்துத் தேர்விற்கான அறிவிப்பை வங்கிகள் தேர்வு வாரியம் (அய்பிபிஎஸ்) வெளியிட்டுள்ளது.

இதற்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன. வங்கி பணியே தனது ஒரே நேக்கம் என திட்டமிட்டுள்ள இளைஞர்களுக்கு இதுவெரு சரியான சந்தர்ப்பம் எனலாம். மேலும் விபரங்களுக்கு: http://www.ibps.in/ காணவும்.

பி.காம்-க்கும் அப்பால்....

வர்த்தக நடவடிக்கைகளில் சரியாகவும் கவனமாகவும் ஈடுபடுவதற்கான கல்விதான் வணிகவியல். வர்த்தகம் சார்ந்த கடமைகளையும் பொறுப்புகளையும் வணிகவியல் கல்வி தருகிறது. உற்பத்தியாளர் தொடங்கி கடைக்கோடி வாடிக்கை யாளர்வரை பொருட்களைக் கொண்டுசேர்க்கும் சேவைகள் தரும் வணிக நடவடிக்கைகளை வணிகவியல் கல்வியாக அளிக்கிறது.

இந்தியாவில் வணிகவியல் கல்விக்கு மதிப்பும் வாய்ப்புகளும் அதிகரிக்கும் காலம் இது. பிளஸ் டூவில் காமர்ஸ் பாடம் எடுத்துத் தேறியவர்கள் அக்கவுண்டன்சி, பிஸ்னஸ் ஸ்டடீஸ், எகனாமிக்ஸ், கணிதம் ஆகிய பாடங்களில் அடிப்படையான அறிவைப் பெற்றிருப்பார்கள். பிளஸ் டூவுக்குப் பிறகு பி.காம். தவிரவும் வணிகவியலை அடிப் படையாகக் கொண்ட படிப்புகள் நிறைய உண்டு.

பெருநிறுவன
மேலாண்மை கல்வி

வியாபாரம் மற்றும் நிறுவன மேலாண்மைச் சூழலுக்கேற்ற திறன்களைப் பயிற்றுவிக்கும் மூன்றாண்டுப் படிப்பு பேச்சுலர் ஆஃப் பிஸ்னஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (பி.பி.ஏ.). இதைப் படித்தால் பெருநிறுவன மேலாண்மை (கார்ப்ரேட் மேனேஜ்மெண்ட்) தொடர்பான அடிப்படைகளையும் திறன்களையும் தெரிந்துகொள்ள முடியும். இந்தியா முழுவதும் பி.பி.ஏ. படிப்பு மேலாண்மைக் கல்வி, சந்தைப்படுத்தல், தொழில்முனைவு, நிதி மற்றும் அக்கவுண்டிங் ஆகியவற்றை முதன்மைப் பாடங் களாகக் கொண்டு கற்றுத்தரப்படுகிறது. எம்.பி.ஏ. படிப்பதற்கான சிறந்த அடிப்படைகளையும் பி.பி.ஏ. வில் கற்றுக்கொள்ளலாம். சேல்ஸ் எக்சிக்யூட்டிவ், ரிசர்ச் அசிஸ்டெண்ட், ஆஃபீஸ் எக்சிக்யூட்டிவ் போன்ற பணிகளுக்கு பி.பி.ஏ. அடிப்படைத் தகுதியாகக் கருதப்படுகிறது.

இளங்கலையோடு முதுகலை

பிளஸ் டூ முடித்தவுடன் அய்ந்தாண்டு ஒருங் கிணைந்த பி.பி.ஏ. பிளஸ் எம்.பி.ஏ. சேரலாம். அய்ந்தாண்டு படிப்பு நிறைவுக்குப் பின்னர் நிறைய வேலைவாய்ப்புகளும் உள்ளன. இந்தூர் இன்ஸ்டி டியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட்(அய்.அய்.எம்.) கல்வி நிலையத்தில் அய்ந்தாண்டு படிப்பு உள்ளது. ஆப்டிட்யூட் டெஸ்ட், எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வை அடிப்படையாகக் கொண்டு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அய்.அய்.எம்.இல் ஒருங் கிணைந்த படிப்பை முடித்த மாணவர்களைக் கல்லூரி வளாகப் பணி நியமனத்தின் (கேம்பஸ் பிளேஸ்மெண்ட்) அடிப்படையில் ஆண்டுக்கு ரூ. 15 லட்சம் சம்பளத்தில் தேர்ந்தெடுத்துள்ளனர்.

நிகரான படிப்பு: பி.பி.ஏ.வுக்கு சமமான மேலாண்மைப் படிப்பு பேச்சுலர் ஆஃப் பிஸ்னஸ் மேனேஜ்மெண்ட் (பி.பி.எம்.). வர்த்தக நிர்வாகத் துக்குப் பதில் வர்த்தக மேலாண்மையைச் சொல்லித் தருவது ஒன்றே வித்தியாசம். வெற்றி கரமான நிர்வாகிகள் மற்றும் வர்த்தகத் தலைவர் களாவதற்கான அடிப்படைகளை இப்படிப்பில் தெரிந்துகொள்ளலாம். நிறுவனங்கள், நிறுவன நடத்தைகள், மனிதவள மேலாண்மை, தொழில் துறை உறவுகள், வர்த்தக நிறுவனங்களின் சட் டங்கள் மற்றும் தொடர்பானவற்றை அறிந்து கொள்ளலாம். டிபார்ட்மெண்ட் மேனேஜர், ரீடெய்ல் ஸ்டோர் மேனேஜர், சேல்ஸ் ரெப்ர சென்டேடிவ், பைனான்சியல் அட்வைசர் முதலிய பொறுப்புகளை ஏற்கலாம்.

உணவகத்தை நிர்வகிக்கலாம்

தற்போது ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பு மாணவர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது. இந்தியாவில் வெகு வேகமாக வளர்ந்து வரும் துறை இது. அய்ந்து நட்சத்திர விடுதிகளும் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் பட்டப் படிப்புகளை நடத்துகின்றன. ஆனால், இந்தப் பட்டப் படிப்புகள் ஏ.அய்.சி.டி.இ./ யு.ஜி.சி. அங்கீகாரம் பெற்றவையா என்பதைத் தெரிந்துகொண்டு சேர்வது அவசியம். அத்துடன் நேஷனல் கவுன்சில் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் அண்ட் கேட்டரிங் டெக்னாலஜி அமைப்பும் (என்.சி.எச்.எம்.சி.டி.) ஓட்டல் மேலாண்மைக் கல்விக்கு அங்கீகாரம் தருகிறது.


மீன் வளம் பற்றி படிக்கலாம்

படிப்பு விஷயத்தில் இன்று உள்ள தேவை நான்கைந்து ஆண்டுகளுக்குப் பின் இருக்குமா இருக்காதா என்பதையெல்லாம் யோசிக்காமல் ஏதாவது ஒரு படிப்பில் சேர்ந்தால் அது பயன் தராது. ஆகவே பயன் தரும் வகையிலான படிப்புகளில் சேர்வது நல்லது. குறைந்த செலவில், வேலை வாய்ப்புக்கு உத்திரவாதமுள்ள பல பட்டப் படிப்புகள் உள்ளன.

அப்படியான படிப்புகளில் ஒன்று மீன் வளம் பட்டப் படிப்பு. மீன் வளம் பற்றிய படிப்பு என்றதும் இது என்ன படிப்பு என்று சிலர் யோசிக்கலாம். மனிதனுக்குப் பசி என்னும் உணர்வு இருக்கும் வரை, உணவு சார்ந்த தொழில் துறையின் தேவை நீடிக்கும். இந்தியாவின் மீன்வள ஏற்றுமதி வருமானம் ஆண்டுக்கு 34,000 கோடி ரூபாய். உலக அளவில் நாம் இரண்டாவது இடத்தில் இருக்கிறோம். இதில் இந்தியாவின் கடற்கரையின் நீளம் 8,129 கி.மீ., பரப்பளவு 20 லட்சம் சதுர கி.மீ. இது தவிர ஆறுகள், கால்வாய்களின் நீளம் இரண்டு லட்சம் கிலோ மீட்டர், நீர்த் தேக்கங்களின் பரப்பளவு முப்பது லட்சம் ஹெக்டர். இவை மீன் வளத்துக்கு உகந்த சூழலைத் தருகின்றன.

மேலும் இந்தியத் தட்பவெப்பம் இத்துறைக்கு மிகவும் ஏதுவானது. உப்பு நீர் மீன்வளர்ப்பு, நன்னீர் மீன்வளர்ப்பு, அலங்கார மீன்வளர்ப்பு ஆகியவை வேகமாகப் பெருகிவருகின்றன. அதே சமயம் உலகின் தேவையும் பெருகிவருவதால், ஏற்றுமதிக்கான தேவையும் அதிகமாக உள்ளது.

மீன் பிடிப்பது மட்டுமல்ல; குஞ்சு பொரிப்பகங்கள், மீன் வளர்ப்புப் பண்ணைகள், மீன் பதப்படுத்தும் நிறுவனங்கள் ஆகியவை நல்ல லாபம் தரக்கூடியவை. படித்து முடித்த பின் குறைந்த செலவில் சுயமாகவும் தொழில் செய்யலாம். 12 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், மூன்றே மாதங்களில் ஒரு ஹெக்டேர் நிலத்தில் இறால் வளர்ப்பின் மூலம் 24 லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம் என்கிறார்கள் துறைசார் நிபுணர்கள். தொழில் தொடங்கவில்லை என்றாலும் இங்கே இருக்கும் நிறுவனங்களில் வேலைக்கும் செல்லலாம். கனடா, ஆஸ்திரேலியா, டாஸ்மேனியா, அய்ரோப்பிய நாடுகள் ஆகியவற்றில் இந்தத் துறைக்கு நல்ல மதிப்பும் தேவையும் இருக்கின்றன.

சமீபத்தில் ஒரு இறால் பண்ணையைப் பார்க்க நேர்ந்தது. அது சுமார் 200 ஹெக்டர் பரப்பளவு கொண்ட இறால் வளர்ப்புப் பண்ணை. அதன் வடிவமைப்பிலும் செயல்முறையிலும் தொழில்நுட்பம் நல்ல முறையில் பயன்படுத்தப்பட்டிருந்தது. அதன் உரிமையாளர், அய்.அய்.டி.யில் படித்து, அமெரிக்காவில் வேலை பார்த்த ஒருவர். சுமார் முப்பது வருடங்களாக இந்தப் பண்ணையை நடத்திவருகிறார். அவர் அமெரிக்காவில் சம்பாதித்ததைவிட இங்கு அதிகமாகச் சம்பாதிப்பதாகக் கூறுகிறார். அந்தக் கிராமத்தினர் பலருக்கு வேலை வாய்ப்பும் அளித்து இருக்கிறார்.

ஆந்திரப்பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் இத்துறையில் வெகுவாக முன்னேறிவருகின்றன. மத்திய அரசும் மாநில அரசும் இத்துறையைப் பெரிதும் ஊக்குவிக்குகின்றன. சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள உப்பு நீர் மீன் வளர்ப்புக்கான மத்திய அரசு நிறுவனம் , நன்னீர் மீன் வளர்ப்புக்கான மத்திய அரசு நிறுவனம்  ஆகியவை இலவசப் பயிற்சியும் ஆலோசனையும் வழங்குகின்றன.

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் கல்லூரிகள் பொன் னேரியிலும் தூத்துக்குடியிலும் உள்ளன. இளங்கலைப் பொறியிலாளர் பட்டப்படிப்பு, மீன் வளம் இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு ஆகியவற்றை இங்கே படிக்கலாம்.


நபார்டு வங்கியில் உதவி மேலாளர் பணி வாய்ப்பு

நபார்டு வங்கி எனச் சுருக்கமாக அழைக்கப்படும் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சி சார்ந்த திட்டங்களுக்குப் பல்வேறு வகையான கடன்களை வழங்கிவருகிறது. இவ்வங்கியில் உதவி மேலாளர் (கிரேடு-ஏ) பதவியில் 91 காலியிடங்கள் போட்டித் தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. பொது, பொருளாதாரம், வேளாண்மை, வேளாண்மைப் பொறியியல், கால்நடை மருத்துவம், மீன்வளம், வனவியல், சமூகப் பணி, சுற்றுச்சூழல் பொறியியல், உணவு பதப்படுத்துதல் எனப் பல்வேறு பிரிவுகளில் இந்தக் காலியிடங்கள் இடம்பெற்றுள்ளன. பொதுப் பிரிவில் மட்டும் 46 காலியிடங்கள் இருக்கின்றன.

தேவையான தகுதி:  உதவி மேலாளர் (பொது) பணிக்கு விண் ணப்பிக்கக் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்ணுடன் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர், மாற்றுத் திறனாளிகள் எனில் 45 சதவீத மதிப்பெண் போதுமானது. பொதுப் பிரிவு தவிர்த்து இதர தொழில்நுட்பப் பிரிவுகளைப் (பொரு ளாதாரம், விவசாயம் போன்றவை) பொறுத்தவரையில், அந்தந்தப் பாடப்பிரிவில் இதே மதிப்பெண் தகுதியுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பைப் பொறுத்தமட்டில், 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். மத்திய அரசின் இடஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும் ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் உடல் ஊனமுற்றோருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தேர்வு முறை:  விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வில் முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு என இரண்டு தேர்வுகள் இருக்கும். இரண்டுமே ஆன்லைன் வழித் தேர்வுகள்தான்.

முதல்நிலைத் தேர்வு ஆகஸ்டு மாதம் நடைபெற உள்ளது. நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியும் வயதுத் தகுதியும் கொண்ட பட்டதாரிகள் நபார்டு வங்கியின் இணையதளத்தை (www.nabard.org)பயன்படுத்தி ஜூலை மாதம் 10ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.   உதவி மேலாளர் பணியில் சேருவோருக்கு ஆரம்ப நிலையில் ரூ.56 ஆயிரம் அளவுக்குச் சம்பளம் கிடைக்கும்.

படிப்போடு தனித்திறனும் கை கோர்த்தால் வெற்றி பெறலாம்

சமீப காலமாக அய்.டி. துறையில் பணி நீக்க நடவடிக் கைகள் நடைபெற்றுவருகின்றன. இதன் விளைவாக இளைஞர்கள் மத்தியில் எதிர்காலம் குறித்த பயம் படர்ந் துள்ளது. பள்ளிப் படிப்பு முடித்தவர்களுக்கு இளங் கலையில் எதைப் படிக்க, எதைத் தவிர்க்க என்ற அச்சம் எழுந்துள்ளது. இளங்கலை முடித்தவர்களுக்கோ அடுத்து மேற்படிப்புக்கு எதைத் தேர்ந்தெடுத்தால் வேலை கிடைக்கும் என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்த வரிசையில் மேலும் சில கேள்விகள் அடுக் கடுக்காக எழத் தொடங்கியுள்ளன. வரும் ஆண்டுகளில் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் படிப்புகள் எவை? குறிப்பிட்ட துறையில் படிப்பை முடித்ததும் மேற்படிப்பாக எதை மேற்கொள்வது? மாணவர்களின் படைப்பாற்றல், ஆர்வத்துக்குக் களம் அமைத்துத் தரும் துறைகள் எவை? இந்த அடிப்படையில் ஆராயும்போது, மாணவர்களின் பிரகாசமான எதிர்காலத்துக்கு உத்தரவாதம் அளிக்கும் துறைகளில் சில இதோ.

பொதுச் சுகாதாரம் காப்போம்

பள்ளியில் உயிரியல் படிப்பைத் தேர்ந்தெடுத்துப் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலானோரின் கனவு மருத்துவப் படிப்பாகத்தான் இருக்கிறது. ஆனால், மருத்துவப் படிப்பையும் தாண்டிப் பொது மக்களுக்குச் சேவை செய்யும் உயிரியல் சார்ந்த துறைகள் பல உள்ளன. அவற்றில் ஒன்று பொதுச் சுகாதாரத் துறை. நோய்த் தடுப்பு, வாழ்நாள் நீட்டிப்பு, ஆரோக்கியத்தைப் பேணுதல் இப்படிக் கூட்டு முயற்சியாகச் சமூகத்தை வளர்த்தெடுக்கும் பல ஆக்கப்பூர்வமான திட்டங்களை நடைமுறைப்படுத்தும் துறை இது.

இந்தப் படிப்பை நேரடியாக இளங்கலைப் பொதுச் சுகாதாரம் எனத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம். அல்லது, அடிப்படைப் பட்டப் படிப்புடன் பொதுச் சுகாதாரத்துக்கான முதுநிலைப் பட்டமான எம்.பி.ஹெச்.  படிக்கலாம். இதைப் படிப்பவர்களுக்கு பயோ செக்யூரிட்டி, பொதுச் சுகாதார ஆய்வு, கார்ப்பரேட் மருத்துவமனை, மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள், ஆய்வு  மய்யங்கள் ஆகியவற்றில் சிறப்பான வேலை வாய்ப்பு காத்திருக்கிறது. ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம், பிட்ஸ் பிலானி, சென்னை நோய்த்தொற்றியலுக்கான தேசிய நிறுவனம்  (http://www.nie.gov.in/) ஆகியவை இப்படிப்பை மேற்கொள்ள முதன்மையானவை. மருத்துவம், மருத்துவம் சார் அறிவியல் பட்டப் படிப்புகளை முடித்தவர்கள் இதனை மேற்கொள்ளலாம்.

வாங்க, விற்கப் படிக்கலாம்

வணிக உலகில் மிகப் பெரிய சாம்ராஜ்ஜியத்தைப் பிடித்திருப்பது ரியல் எஸ்டேட் துறை. சொத்துகளை எப்படி, வாங்குவது, விற்பது, நிர்வகிப்பது ஆகியவற்றை முறையாகச் சொல்லித்தரும் படிப்புதான் ரியல் எஸ்டேட் மேனேஜ்மெண்ட்.

பி.பி.ஏ., படிப்பின் தொடர்ச்சியாக எம்.பி.ஏ., பாடப் பிரிவாக ரியல் எஸ்டேட் படிப்பவர்களுக்குப் பிரகாசமான வேலைவாய்ப்பு காத்திருக்கிறது. டெல்லி, மும்பை, புனே, ஹைதராபாத், கோவா, இந்தூர் உள்ளிட்ட பெரு நகரங்களில் National Institute of Construction Management and Research (http://www.nicmar.ac.in/), உத்தரப் பிரதேசம் நொய்டாவில் உள்ள அமித்தி பல்கலைக்கழகத்தின் ரிக்ஸ் ஸ்கூல் ஆஃப் பில்ட் என்விரான்மெண்ட் துறை உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் இப்படிப்பை வழங்குகின்றன. இளநிலையில் கலை, அறிவியல், பொறியியல், மேலாண்மை என எதைப் படித்திருந்தாலும், முதுநிலையில் இப்படிப்பை மேற் கொள்ளலாம்.

ஊடகத்துக்கான படைப்பாற்றல்

படைப்பாற்றலும் ஆர்வமும் உள்ளவர்களுக்கான துறைகள் விஸ்காம், மாஸ்காம். சினிமா, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமன்றி ஊடகம், ஒளிப்படத் துறை, விளம்பரத்துறை, அனிமேஷன், கேமிங் என நாளுக்கு நாள் விஷுவல் கம்யூனிகேஷன் மற்றும் மாஸ் கம்யூனிகேஷன் துறைகள் விரிவடைந்து வருகின்றன. படிப்போடு தனித் திறமையும் சேர்ந்து கொண்டால், இதில் கை நிறையச் சம்பாதிக்கலாம்.

இந்தியாவில் விஸ்காம் படிப்புக்கான மிகச்சிறந்த கல்லூரிகள் தமிழகத்தில், குறிப்பாகச் சென்னையில் இருப்பது கூடுதல் அனுகூலம். சென்னை கிறிஸ்தவக் கல்லூரி, லயோலா கல்லூரி, பெங்களூரு ஜோசப் கல்லூரி போன்றவை விஸ்காம் படிக்க உகந்தவை. டெல்லி இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன், சென்னை கிறிஸ்தவக் கல்லூரி போன்றவை மாஸ்காம் படிக்க உகந்தவை. இவை தவிரப் பிரபல ஊடக நிறு வனங்கள் பலவும் பிரத்யேக ஊடகத்துறைப் படிப்புகளை வழங்குகின்றன.

நிதிச் சந்தை

பொருளாதாரம், வணிகம், வணிக மேலாண்மையில் பட்டப்படிப்பு முடித்த சூட்டில், செக்யூரிட்டிஸ் மார்க்கெட்ஸ் தொடர்பான ஒரு ஆண்டு முதுநிலைப் படிப்பை முடிப்பவர்களுக்கு வங்கி, காப்பீடு, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை, நிதி ஆலோசகர் துறைகளில் சிறப்பான ஊதியத்துடன் பணி வாய்ப்புகள் காத்திருக்கின்றன. இள நிலைப் படிப்புடன் வேலைவாய்ப்பை எதிர்பார்ப்பவர்கள் பி.காம்., ஃபினான்ஷியல் மார்க்கெட் படிக்கலாம். நேஷ னல் இன்ஸ்டிடியூட் ஆஃப் செக்யூரிட்டிஸ் மார்கெட்ஸ்(http://www.nism.ac.in/) , நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபினான்ஷியல் மேனேஜ்மெண்ட், (http://www.nifm.ac.in/Site/Index.aspx) மும்பை பல்கலைக் கழகம் உள் ளிட்டவை இப்படிப்புகளை மேற்கொள்ள முதன்மை யானவை.

டிஜிட்டல் பாதுகாப்பு

சைபர் செக்யூரிட்டி துறையின் அவசியத்தைத் தற்போதைய ரேன்சம் மால்வேர் பீதி ஒன்றே உரத்துச் சொல்லிவிடும். இந்தியாவில் 2020இல் அதிகம் எதிர் பார்ப்புள்ள வேலைவாய்ப்புத் துறையாக சைபர் செக் யூரிட்டி அண்டு டிஜிட்டல் ஃபோரன்சிக்ஸ் மாறும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அறிவியல், பொறியியல் பட்டப் படிப்பை முடிக்கும் மாணவர்கள் கூடுதலாக சைபர் செக்யூரிட்டி, சைபர் லா தொடர்பான பட்டயப் படிப்புகள் மற்றும் முதுநிலைப் படிப்புகளை மேற்கொள்ளலாம்.

ஆபீஸ் அலுவல்

மொபைல் ஆப் டெவலப்மெண்ட் துறைக்கான நேரடி பணிவாய்ப்பு நடப்பாண்டில் சூடு பிடித்திருக்கிறது. அதிக வாய்ப்புள்ள இத்துறைக்கு ஆர்வமும் திறனும் உள்ள வர்கள் தேவைப்படுவார்கள். அறிவியல், பொறியியல் பட்டப்படிப்புடன் இணையான பட்டம் அல்லது பட்டயப்படிப்பை மொபைல் அப்ளிகேஷன் துறையில் படிக்கலாம். நேரடியாக மட்டுமன்றிப் பல்வேறு பயிற்சி நிறுவனங்கள் ஆன்லைன் வாயிலாகவும் இவற்றை வழங்குவது சிறப்பு. இத்துடன், கிளவுட் டெக்னாலஜி அண்டு மொபைல் அப்ளிகேஷனில் பி.டெக்., போன்றவற்றையும் பயிலலாம்.


அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் விரிவுரையாளர் வேலை  
ஜூலை 7க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

தமிழக அரசு தொழில்நுட்பக் கல்லூரிகளில் (பாலிடெக்னிக்) நிரப்பப்பட உள்ள விரிவுரையாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் ஜூலை 7க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: விரிவுரையாளர், காலியிடங்கள்: 1,058

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: : www.trb.tn.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.07.2017

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 13.08.2017

மேலும் தகுதிகள், வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறியwww.trb.tn.nic.in
என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

மத்திய அரசு துறைகளில் 5134 கிளார்க் வேலை: 28க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

மத்திய அரசு துறைகளில் நிரப்பப்பட உள்ள சுருக்கெழுத்தாளர் மற்றும் கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பை மே 27 ஆம் தேதி அறிவித்தது. எஸ்எஸ்சி. இதற்கு தகுதியானவர்கள் வரும் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

நிறுவனம்:  Staff Selection Commission CHSL (SSC CHSL)

காலியிடங்கள்: 5,134, பணி: தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி

வயதுவரம்பு: 01.08.2017 தேதியின்படி 45க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தட்டச்சு, திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய

அஞ்சல் முகவரி: Regional Director (NR), Staff Selection Commission, Block No. 12, CGO Complex, Lodhi Road, New Delhi-10003
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.06.2017 எழுத்து

தேர்வு நடைபெறும் தேதி: 30.07.2017. மேலும் முழுமையான விவரங்கள் அறிய : https://drive.google.com file/d/0B2Pe6kQT8J9zSlZ
qa2FjTFFBS28/view  என்ற லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து
கொள்ளவும்.

Banner
Banner