இளைஞர்

திட்டம் சார்ந்த உயிரியல் கல்வி 2019

எந்தப் பாடப் பிரிவில் வேண்டுமானாலும் இளநிலை அறிவியல் பட்டப்படிப்பை மேற்கொண்டு வரும் மாணவர்களுக்கு பெங்களூருவில் உள்ள மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சிக்கான ஜவகர் லால் நேரு மையம் (JNCASR) ஊக்கத் தொகையுடன் பயிலரங்கம் நடத்தவிருக்கிறது. தொடர்ந்து மூன்றாண்டுகள் கோடைகாலத்தில் 6-8 வாரங்கள்வரை நடைபெறவிருக்கும் இந்த பயிலரங்கத்தில் பங்கேற்கும் மாணவர்களுக்கு உயிரியலில் பட்டயம் வழங்கப்படும்.

தகுதி:பி.எஸ்சி., 1ஆம் ஆண்டு

பரிசும் தொகையும்: மாதத்திற்கு ரூ.10,000/-

தபால் வழியாக விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 08 மார்ச் 2019.

விவரங்களுக்கு: http://www.b4s.in/vetrikodi/POB1

திட்டம் சார்ந்த வேதியியல் கல்வி 2019

இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகியப் பாடங்களுடன்கூடிய இளநிலை அறிவியல் பட்டப்படிப்பை படித்துக்கொண்டிருக்கும் மாணவர் களுக்கு பெங்களூருவில் உள்ள மேம்பட்ட அறி வியல் ஆராய்ச்சிக்கான ஜவகர்லால் நேரு மய்யம்(JNCASR) ஊக்கத்தொகையுடன் POCE 2019 என்ற பயிலரங்கத்தை நடத்தவிருக்கிறது. இந்த மாணவர்கள் தொடர்ந்து மூன்றாண்டுகள் கோடை காலத்தில் 6-8 வாரங்கள்வரை நடைபெறவிருக்கும் இந்த பயிலரங்கத்தில் பங்குபெறலாம்.

தகுதி: பி.எஸ்சி., 1ஆம் ஆண்டு

பரிசும் தொகையும்: மாதத்திற்கு ரூ.10,000/-

தபால் வழியாக விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 08 மார்ச் 2019.

விவரங்களுக்கு: http://www.b4s.in/vetrikodi/POC1

தேசத்தின் மிகப் பெரிய பொதுத் துறை நிறுவனம் ரயில்வேதுறை. இதில் பிளஸ் 2 படிப்பை அடிப்படைக் கல்வித் தகுதியாகக் கொண்ட இளநிலை எழுத்தர் மற்றும் தட்டச்சர், கணக்கு எழுத்தர் மற்றும் தட்டச்சர், இளநிலை நேரக் காப்பாளர், ரயில் எழுத்தர், வணிகவியல் மற்றும் பயணச்சீட்டு எழுத்தர் ஆகிய பதவிகளில் 10,628 காலிப்பணியிடங் களும், பட்டப் படிப்பைக் கல்வித் தகுதியாகக் கொண்ட போக்குவரத்து உதவியாளர், சரக்குக் காப்பாளர், முதுநிலை வணிகவியல் மற்றும் பயணச்சீட்டு எழுத்தர், முதுநிலை எழுத்தர் மற்றும் தட்டச்சர், இளநிலைக் கணக்கு உதவியாளர் மற்றும் தட்டச்சர், முதுநிலை நேரக்காப்பாளர், வணிகவியல் உதவியாளர், நிலைய மேலாளர் ஆகிய பதவிகளில் 24,649 காலிப்பணியிடங்களும் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

பிளஸ் 2 கல்வித் தகுதி உடைய  பதவி களுக்கான வயது வரம்பு  18 முதல் 30 வரை. பட்டப் படிப்பைக் கல்வித் தகுதியாகக் கொண்ட பதவிகளுக்கு வயது வரம்பு 18 முதல் 33 வரை.

மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு விதிமுறை களின்படி,  எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5  ஆண்டுகள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பி னருக்கு (ஓ.பி.சி.) 3 ஆண்டுகள், மாற்றுத்திற னாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தேர்வு முறை

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவர். கூடுத லாக தட்டச்சர் பணிக்குத் தட்டச்சுதேர்வும், நிலைய மேலாளர், போக்குவரத்து உதவி யாளர் பதவிகளுக்குக் கணினியில் திறனறிவுத் தேர்வும்(Aptitude Test) நடத்தப்படும். எந்தப் பதவிக்கும் நேர்முகத் தேர்வு கிடையாது. எழுத்துத் தேர்வில் முதல்நிலைத் தேர்வு, 2ஆவது நிலைத் தேர்வு என இரு தேர்வுகள் இருக்கும். இரு தேர்வுகளுமே கணினி வழியில் நடத்தப்படும்.

முதல்நிலைத் தேர்வில் பொது அறிவு, அடிப்படைக் கணிதம், ரீசனிங் ஆகிய பகுதிகளில் இருந்து மொத்தம் 100 கேள்விகள் இடம்பெறும். மதிப்பெண் 100. தேர்வு நேரம் 90 நிமிடங்கள். தவறான பதில்களுக்கு மதிப்பெண் கழிக்கப்படும்.  2-வது தேர்வில் மேற்குறிப்பிட்ட அதே 3 பாடங்களில் இருந்து 120 கேள்விகள் கேட்கப்படும். மொத்த மதிப்பெண் 120. தேர்வு நேரம் 90 நிமிடம்.

தகுதியுள்ள நபர்கள் www.rrbchennai.gov.in என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக்கு ஆன் லைனில் விண்ணப்பிக்கும் முறை, இருதேர்வு களுக்கான பாடத்திட்டம்  உள்ளிட்ட இதர  விவரங்களை இணையதளத்தில் விளக்கமாக அறிந்துகொள்ளலாம்.

 

 

இந்திய வனத்துறை அதிகாரி பணிக்கான தேர்வு - 2019க்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

தேர்வின் பெயர்: Indian Forest Service Examination - 2019 காலியிடங்கள்: 90

வயதுவரம்பு: 01.08.2019 தேதியின்படி 21 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் சலுகை கோருபவருக்கு மத்திய அரசின் விதிமுறைகளின்படி வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.

தகுதி: Animal Husbandry & Veterinary Science, Botany, Chemistry, Geology, Mathematics, Physics, Statistics and Zoology,  Agriculture, Forestry
போன்ற ஏதாவதொன்றை முதன்மைப் பாடமாகக் கொண்டு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அதாவது முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப் படுவர். இதில் வெற்றி பெற்றவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

முதல்நிலைத் தேர்வு மய்யம்: சென்னை, கோவை, மதுரை, வேலூர்

முதன்மைத் தேர்வு சென்னையில் வைத்து நடத்தப்படும். உத்தேசமாக டிசம்பர் 2019இல் நடத்தப்படலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். பெண் கள், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: www.upsconline.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://upsc.gov.in/sites/default/files/Final_Notice_IFoS_2019-NN.pdf  என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.03.2019

தமிழ்நாடு காகித ஆலையில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Office (Lab)

சம்பளம்: மாதம் ரூ.19,200 - 24,000

வயதுவரம்பு: 01.02.2019 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Assistant Manager (Lab)

சம்பளம்: மாதம் ரூ.23,400 - 29,300

வயதுவரம்பு 29 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Deputy Manager(Lab)

சம்பளம்: மாதம் ரூ.28,200 - 35,300

வயதுவரம்பு: 34 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: வேதியியல் துறையில் எம்.எஸ்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பொறியியல் துறையில் Pulp and paper Technology பிரிவில் முதல் வகுப்பில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது paper Technology பிரிவில் முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி அனுபவம்: அதிகாரி பணிக்கு 8 ஆண்டு களும், உதவி மேலாளர் பணிக்கு 10 ஆண்டுகளும் மற்றும் துணை மேலாளர் பணிக்கு 14 ஆண்டுகளும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpl.com என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப் பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Chief General Manager-HR, TNPL, Kagithapuram-639 136, Karur District, Tamilnadu.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 02.03.2019

சென்னை சிறுவழக்குகள் நீதிமன்றத்தில் காலியிடம் மற்றும் உத்தேசமான காலியிடங் களான 74 சுருக்கெழுத்தர், தட்டச்சர், இள நிலை உதவியாளர், அமினா, அலுவலக உதவியாளர், காவலர் போன்ற பணியிடங் களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர் களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற் கப்படுக்கின்றன.

மொத்த காலியிடங்கள்: 74

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: சுருக்கெழுத்தர்

காலியிடங்கள்: 07

சம்பளம்: மாதம் ரூ.20,600 - 65,500

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை அல்லது தமிழ் மற்றும் இளநிலை மற்றும் முதுநிலை அல்லது முதுநிலை மற்றும் இளநிலை தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண் ணப்பிக்க தகுதியானவர்கள்.

பணி: தட்டச்சர்

காலியிடங்கள்: 09

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சில் ஆங்கிலம் மற்றும் தமிழில் இளங்கலை மற்றும் முதுகலை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000

பணி: இளநிலை உதவியாளர்

காலியிடங்கள்: 06

சம்பளம்:  19,500 - 62,000

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி பெற் றிருக்க வேண்டும்.

பணி: முதுநிலை அமினா

காலியிடங்கள்: 04

சம்பளம்: மாதம் ரூ.19.500 - 62,000

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: இளநிலை அமினா

காலியிடங்கள்: 06

சம்பளம்: மாதம் ரூ.19.000 - 60,300

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: பிராசஸ் எழுத்தர்

காலியிடங்கள்: 03

சம்பளம்: மாதம் ரூ.16,600 - 52,400

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: அலுவலக உதவியாளர்

காலியிடங்கள்: 03

சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி

பணி: காவலர்

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000

தகுதி: தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 30, 32,35 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.districts.ecourts.gov.in/chennai என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் சான்றிதழ்களின் நகல்களிலும் சுயசான் றொப்பம் செய்து இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். நேர்முகத் தேர்விற்கு வரும்போது அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள் மற்றும் ஆளறிச்சான்றிதழுடன் கலந்து கொள்ள வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

தலைமை நீதிபதி, சிறுவழக்குகள் நீதி மன்றம், உயர்நீதின்ற வளாகம், சென்னை -104

அனைத்து தகவல் பரிமாற்றங்களும் (தேர்வு, நேர்காணலுக்கான அழைப்பு விண் ணப்பம் ஏற்கப்பட்டது அல்லது மறுக்கப்பட் டது) போன்ற அனைத்து விவரங்களும்www.districts.ecourts.gov.in/chennai என்ற இணை யதளத்தில் வெளியிடப்படும். எனவே, விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட இணையதள வலைதளத்தை தொடர்ந்து கவனித்து தகவல்களை அறிந்துகொள்ளவும்.

மேலும் முழுமையான விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள் பெற https://districts.ecourts.gov.in/sites/default/files/Paper%20publication%202019%20final.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்து கொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்றுசேர கடை தேதி: 08.03.2019

Banner
Banner