இளைஞர்

தமிழக காவிரி டெல்டா விவசாயிகளுக்கு, செல்வகுமாரின் காந்தக்குரல்  மிகப் பழக்க மானதாகவே தற்போது மாறிவிட்டது. அந்த அளவுக்கு வானிலையைக் கணித்து விவ சாயிகளை வழிநடத்திவருகிறார் மன்னார்குடி யைச் சேர்ந்த ஆசிரியரான ந.செல்வகுமார். நிமிடத்துக்கு நிமிடம் வானிலைத் தகவல்களை  இணையத்தின் உதவியோடு ஆராய்ந்து மக்களுக்குக் கூறிவரும் இவரது சேவையைப் பாராட்டாதவர்களே இல்லை.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்துள்ள தகட்டூரைச் சேர்ந்தவர். சிறு வயதிலேயே வானிலைத் தகவல்களை உற்றுநோக்குவதில் ஆர்வம் கொண்டவர்.

தி இந்து ஆங்கில நாளிதழில் வருகிற வானி லைப் படங்களைப் பார்த்து  கணித்துள்ள படி மழை பெய்துள்ளதா என ஆராயத் தொடங் கியதுதான் இவரது வானிலை ஆர்வத்துக்கு முதல் படி.

அந்தத் தகவல்களை ஒரு தாளில் எழுதி தகட்டூரில் தந்தை நடத்திவந்த உணவகத்தில் ஒட்டி வைப்பதை வழக்கமாகக் கொண்டி ருந்தார். அதைப் பார்த்துச் செல்லும் விவ சாயிகள் எழுப்பும் சந்தேகங்களுக்கு விடை தேடும் முயற்சியே இன்று வானிலை ஆர்வலராகவும், அதைக் கணிப்பவராகவும் மாற்றியுள்ளது.

ஆசிரியர் பயிற்சி முடித்த பின்னர், அரசு வேலை கிடைக்கும்வரை 1994ஆம் ஆண்டு வாக்கில் ஆந்திராவில் உள்ள காக்கிநாடாவில் இறால் குஞ்சுகள் பொரிப்பகம் நிர்வகிக்கும் பணியில் இருந்தார். இறால் குஞ்சுகள் பொரிப் பகத்துக்குத் தேவையான நல்ல தண்ணீரைச் சேகரிக்கக் கடலோரத்தில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் இடத்தைத் தேர்வு செய்வது இவரது முக்கியப் பணியாக இருந்தது. இதற்காக காக்கிநாடா துறைமுகத்தில் உள்ள கடல்சார் ஆராய்ச்சியாளர்களிடம் பழகியது அவரது வானிலை அறிவை  வளர்த்துக் கொள்ள வழி அமைத்துக் கொடுத்தது.

புயல் கணிப்பு

அந்த ஆண்டு சூப்பர் புயல் குறித்த எச்சரிகையை வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவிக்கும் முன்பே, தான் பணியாற்றிய பகுதியில் உள்ள தேநீர்க் கடைகளில் நண் பரின் உதவியுடன் இந்தியிலும் ஆங்கிலத் திலும் தமிழிலும் எழுதி வைத்து அசத்தினார். அவரது கணிப்பு உண்மையானது. காக்கி நாடாவை சூப்பர் புயல் தாக்கியது. 75-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்தனர்.

இதன்பின்னர் அவருக்கு அரசுத் தொடக்கப்பள்ளியில் 2000ஆம் ஆண்டில் ஆசிரியர் வேலை கிடைத்தது. வலங்கைமான், ஆலங்குடி, பூவனூர் என அரசுத் தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றிய இவர், தற்போது செருமங்கத்தில் பணியாற்றிவருகிறார். மன் னார்குடி அருகே மேலவாசலில்  வசித்து வருகிறார்.

ஆசிரியர் பணிக்கு இடையேயும் வானி லைத் தகவல்களைக் கணித்து வருகிற இவர், 2008ஆம் ஆண்டின் நிஷா புயல், கடலூரைத் தாக்கிய தானே புயல், சென்னை யைத் தாக்கிய வர்தா புயல், கடந்த ஆண்டு கன் னியாகுமரியைத் தாக்கிய ஒக்கிப் புயல் ஆகியவற்றை முன்கூட்டியே கணித்து இந்திய வானிலை ஆராய்ச்சி மய்யம் அறிவிக்கும் முன்பே தீவிரத்தை அறிவித்து மக்களின் பாராட்டைப் பெற்றார். அதேபோல அண்மையில் நிகழ்ந்த கேரளாவின் பேரழி வையும் முன்கூட்டியே கணித்தார்.

கஜாவுக்கு அப்புறம் என்ன?

கடந்த வாரம் டெல்டா மாவட்டங்களைப் பதம் பார்த்த கஜா புயலையும் தொடர்ந்து கணித்துவந்தார். கஜாவுக்குப் பின்னர் 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி தமிழகத்துக்கு  26ஆம் தேதிவரை மழையைக் கொடுக்கும் என்றும்,  அதன் பிறகு 29, 30, டிசம்பர் 1ஆம் தேதி அன்று வங்கக்கடலில் அதிதீவிர அல்லது சூப்பர் புயல் தமிழகத்தை நெருங்கும் எனவும் கணித்து அறிவித் துள்ளார். அது மட்டுமல்ல, வரும் ஜனவரி மாதம் வரை மழை வருவதற்கான வாய்ப்பு களையும் கணித்து வைத்துள்ளார்.

இந்திய வானிலை ஆராய்ச்சி மய்யம் மாவட்ட வாரியாக வானிலையைக் கணித்து சொல்லும்போது, இவர் டெல்டா பகுதியில் உள்ள நகரங்கள், கிராமங்களின் பெயரைக் குறிப்பிட்டு மழை பெய்யும், பெய்யாது என்று கணித்து வருகிறார். இவரை அறிந்த பலர் தங்களது குடும்ப நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகளுக்கான தேதியை முடிவு செய்யும் முன்பு  வானிலை ஒத்துழைக்குமா என கேட்ட பின்னரே தேதியைக் குறிக்கின்றனர்.

நான்கு வேளை கணிப்பு

டெல்டா பகுதிகளில் வானிலையைப் பற்றி விவசாயிகள் விவாதிக்கும்போது அங்கே செல்வகுமாரின் வானிலை அறிவிப்பைப் பற்றியும் விவாதிப்பது வழக்கமாகிவிட்டது. தமிழகத்தின் சில அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள், வேளாண்துறை அதிகாரிகளும் இவரது வானிலை தகவலுக்கு முக்கியத்துவம் கொடுத்துவருகிறார்கள்.

தற்போது தினசரி 4 வேளை வானி லையைக் கணித்து வருகிறார். இந்திய வானிலை ஆராய்ச்சி மய்யத்தின் அறிவிப்புதான் அதிகாரப்பூர்வம் என்றாலும், இந்திய வானிலை ஆய்வு மய்யம், உலக வானிலை ஆராய்ச்சி மய்யங்கள் வெளியிடுகிற ஒளிப்படங்களை வைத்துக் காற்றின் திசையைக் கணக்கிட்டு கிராம, நகர வாரியாக  வானிலையைக் கணித்து வருகிறார்.

செயலி உருவாக்கம்

ஆரம்ப காலகட்டத்தில்  வானிலைத் தகவல்களை விவசாயிகள் கூடும் தேநீர் கடைகள், பொது இடங்களில் எழுதி ஒட்டி வைத்த செல்வகுமார், இன்று செல்பேசி குறுந்தகவல் மூலம் தமிழகம் முழுவதும் ஆயிரக் கணக்கானோருக்கு அனுப்பி வரு கிறார். இதற்காகவே 20 சிம்கார்டுகளைப் பயன்படுத்தியுள்ளார்.

வாட்ஸ்அப் வசதி வந்த பிறகு  பல குழுக் கள் மூலம் தகவல்கள் பகிரப்பட்டு விடு கின்றன. தற்போது வாட்ஸ்அப் மூலம் தகவல் களைப் பகிர்வதில் கட்டுப்பாடுகள் வந்து விட்டதால்,  ‘நம்ம உழவன்’ என்ற பெயரில் தனியாகச் செயலி ஒன்றை உரு வாக்கி, தினசரி  நான்கு வேளை வானிலையைக் கணித்து வரைபடத்துடன் இவர் வெளியிட்டு வருகிறார்.

வங்கிகளின் வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 270 பாதுகாவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. பதவி:  செக்யூரிட்டி கார்டு

காலியிடங்கள்: 270 (சென்னை 19)

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சில் பெற்றிருக்க வேண்டும்.  முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 1.11.2018 தேதியின்படி கணக்கிடப்படும். தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் உடற்திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை ஆன்லைனில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.rbi.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.11.2018

மனிதர்கள் பயன்படுத்தும் பொருள்களில் ஏற்படும்  மாற்றங்களுக்கேற்ப அவர்கள் கொட்டும் குப்பையிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன.  ஒவ்வொரு வீட்டிலும்  கடந்த பத்தாண்டுகளாகப் பயன்படுத்திய பழைய  பழுதடைந்த, பயன்படுத்தப்படாத செல்போன்கள், கம்ப்யூட்டர், சிடி, பிரிண்டர்ஸ்,  கால்குலேட்டர், பேட்டரிகள்,  டிவி,   மருத்துவக் கருவிகள், வாஷிங் மெஷின், குளிர்சாதனப் பெட்டிகள் போன்ற  எலக்ட்ரானிக் குப் பைகள் நிறைந்திருக்கின்றன.  இவற்றை பழைய பொருள்களை வாங்குபவரிடம் கொடுத்து விடுவார்கள். அவர் இந்தப் பொருள்களில் உள்ள செம்பு, வெள்ளி, பிளாட்டினம் போன்ற உலோகங்களை மட்டும்  எடுத்துக் கொண்டு,  அப்படியே அவற்றைக்  குப்பையில் போட்டுவிடுவார்.

இந்தப் பொருள்களில் உள்ள லித்தியம், மெர்க்குரி,  கோபால்ட்,  செலினியம் போன்ற நச்சுத்தன்மை உள்ள பொருள்கள் அப்படியே  மண்ணிலும் நீரிலும் கலந்து பலவிதமான சுற்றுச்சூழல் பிரச்னைகளை ஏற்படுத்துகின்றன.  பயன்படுத்தப்படாத எலக்ட்ரானிக் பொருள்கள் குறித்து  மக்களுக்கு விழிப் புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தார்கள்  மும்பை புறநகர்ப் பகுதியான  கோரிகானில் உள்ள விப்கியார் உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் கிரேடு படிக்கும் சூர்யா பாலசுப்ரமணியனும், 9 ஆம் கிரேடு படிக்கும் த்ரிஷா பட்டாசார்யாவும்.

பள்ளியின் ஊக்குவிப்பு காரணமாக இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள்,   பல்வேறு போட்டிகளில் பங்கேற்பார்கள். அந்த அடிப்படையில் சூர்யா பாலசுப்பிர மணியனும், த்ரிஷாவும்  பேன் இண்டியா போட்டியில்  கலந்து கொண்டார்கள். பேன் இண்டியா போட்டிகளில் வேறு பல  போட்டிகள் இருந்தாலும், பயன்படாத எலக்ட்ரானிக் பொருள்களைச் சேகரிப்பதை இவர்கள் எடுத்துக் கொண்டார்கள். நான்காவது பரிசையும் வென்றார்கள். பலவிதமான போட்டிகள் இருந்தாலும்,  யார் கவனத்திலும் அதிகம் படாத -ஆனால் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தும்   பயன்படுத்தப்படாத எலக்ட்ரானிக் பொருள்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகத்தான்  அவற்றைச் சேகரிக்கும் போட்டியை நாங்கள் தேர்ந்தெடுத்தோம்.

இதற்காக நாங்கள் செய்த முதல்  வேலை, எங்களுடைய பள்ளியில் படிக்கும் மாணவர்களிடம் அவர்கள் வீட்டில் பயன் படுத்தப்படாமல் கிடக்கும் எலக்ட்ரானிக் பொருள்களைக் கொண்டு வரச் சொன்னதுதான்.  அப்போது பள்ளி மாணவர்களிடம்  இந்தப் பொருள்களினால் ஏற்படும் ஆபத்துகளைப் பற்றிச் சொன்னோம்.  மாணவர்கள் எங்கள் கோரிக்கையை ஏற்று அவர்கள் வீட்டில் இருந்து கொண்டு வந்தார்கள்.  நிறைய பழைய செல்போன்களும் சிடிகளும் வந்து குவிந்தன.    அதற்குப் பிறகு பள்ளியருகே, எங்களுடைய வீட்டருகே உள்ள பல அபார்ட்மென்ட்களில் வாழ்பவர்களிடம் கேட்டோம்.

அவர்களிடமும் பயன்படுத்தப்படாத எலக்ட்ரானிக் பொருள் களினால் ஏற்படும் ஆபத்துகளைப் பற்றி விளக்கிச் சொன்னோம்  இப்போது எங் களுக்கு நிறைய பொருள்கள் கிடைத்தன.  பயன்படுத்தப்படாத வாஷிங் மெஷின்கள், லேப்டாப்கள், சார்ஜர்கள்,  செல்போன்கள் என  380 கிலோ எடையுள்ள பொருள்கள் கிடைத்தன. அவற்றை எல்லாம் ஒரு லாப நோக்கமற்ற தன்னார்வ அமைப்பிடம் கொடுத் தோம்.  அவர்கள் அவற்றை முறையாக கழிவுநீக்கம் செய்யும் நிறுவனங்களிடம் விற்றுவிட்டார்கள். அதிலிருந்து கிடைத்த பணத்தை  படிக்க வசதியில்லாத 17 ஆயி ரம் ஏழை மாணவர்களின் கல்விக்குப் பயன் படுத்துகிறோம்.

நாங்கள் போட்டிக்காக  இந்தப் பணியில் ஈடுபட்டோம். ஆனால் போட்டி முடிந்து விட்டாலும், நாங்கள் இந்த பணியில் இருந்து விலகிவிடவில்லை. தொடர்ந்து பயன்படாத எலக்ட்ரானிக் பொருள்களைச் சேகரித்து முறையாகக் கழிவுநீக்கம் செய்வதற்குத் தந்து வருகிறோம் என்றார்.

இருசக்கர வாகனங்களில் சாலைகளில் பறந்து செல்பவர்களைப் பார்த்து, அய் யோ... நம்மால் இப்படி பைக்கில் செல்ல முடியவில்லையே என ஏங்கும் கை இல்லாதவர்களின் கவலையைப் போக்கி யுள்ளனர் பொறியியல் மாணவர்கள்.

திருநெல்வேலி மாவட்டம் ஆய்க்குடி ஜெ.பீ. பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்கள்தான் கைகள் இல்லாத மாற்றுத்திறனாளிகளின் கவலையைப் போக்கும் வகையில் புதிய வாகனத்தைக் கண்டுபிடித்துள்ளனர். பொதுவாக கால்கள் இல்லாதவர்கள் அல்லது கால்களின் செயல்பாடு இல்லாத மாற்றுத்திறனாளிகள் பைக்குகளை ஓட்டிச் செல்வதைப் பார்த்திருப்போம். ஆனால்,  இரு கைகளும் இல்லாத அல்லது கைகளின் செயல்பாடு இல்லாத மாற்றுத்திறனாளிகள் பைக்குகளை ஓட்டிச் செல்வதை நாம் பார்த்திருக்க மாட்டோம். ஆய்க்குடி ஜெ.பீ. பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு தோன்றிய இந்த சிந்தனைதான், கைகள் இல்லாத, கைகள் செயல்படாத மாற்றுத் திறனாளிகளும் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் புதிய வாகனத்தை உருவாக்க முடிந்துள்ளது.

கைகள் இல்லாதவர்களின் ஏக்கத்தைப் போக்கியுள்ள கல்லூரியின் மெக் கானிக்கல் துறை மாணவர்கள் வேதநாயகம், கிவியோன், ஜிபின் பி ஜார்ஜ், அருண்ராஜ், வில்சன் ஆகியோர் நம்மிடம் கூறியதாவது:

பொதுவாகவே சாதாரண மக்களுக்கான புராஜெக்டுகளை விட இது போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கான புதிய வடிவமைப்புகளை உருவாக்க வேண்டும் என்பதுதான் எங்கள் லட்சிய மாக இருந்தது. அதற்காக பல விஷயங்களைத் தேர்வு செய்தோம். அவற்றில் சில ஏற்கெனவே உருவாக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அப்போது தான் கால்கள் இல்லாதவர்களுக்கு வாகனம் ஓட்டுவதற்கான வசதி இருக்கும் நிலையில், கைகள் இல்லாதவர்களுக்கு அத்தகைய வாய்ப்பு இல்லாதது தெரிய வந்தது.

பல இடங்களில் கைகள் இல்லாதவர்கள் மற்றவர்களின் துணையுடன்தான் செல்ல வேண்டிய நிலை இருப்பதையும் தெரிந்து கொண்டோம். இதைத் தொடர்ந்து எங்கள் கல் லூரியின் மூத்த மாணவர்கள் ஷெரின் ஷாம், சுப்பிரமணி, ஆஸ்டின் கோல்ட்வின் ஆகி யோரின் உதவியுடன்  அவர்கள் ஏற்கெனவே உருவாக்கியிருந்த வாகனத்தில் பல மாற்றங்களைப் புகுத்தி கைகள் இல்லாத மாற்றுத்திறனாளிகள் ஓட்டக் கூடிய வாகனத்தை உருவாக்கினோம்.

இந்த வாகனத்தை இரு கால்களையும் பயன் படுத்தி இயக்க முடியும். கால்களைப் பயன்படுத்தி 7 வகையான இயக்க நிலைகளைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரு கால்களையும் பயன்படுத்தி வாகனத்தின் ஸ்டியரிங்கை இயக்க முடியும். வலது காலைப் பயன்படுத்தி ஆக்சிலேட்டரை இயக்க முடிவதுடன், ஒலி எழுப்பவும் முடியும். இடது காலைப் பயன்படுத்தி பிரேக், இண்டிகேட்டர் மற்றும் சீட் பெல்ட்டினை சரி செய்யவும் முடியும். அண்ணா பல்கலைக்கழகத்தின், திருநெல் வேலி மண்டல வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநரகம், தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை ஆகியவை சார்பில் நடைபெற்ற விழாவில் நூற்றுக்கணக்கான பொறியியல் கல்லூரிகளுக்கு மத்தியில் எங்களின் புதிய உருவாக்கம் முதலிடத் திற்கு தேர்வு பெற்றது. எங்களை, அப்போதைய திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் பாராட்டினார்.

இந்த வெற்றி யானது எங்களுக்கு புதிய உத்வேகத்தை அளித் துள்ளது. ஜெ.பீ. பொறியியல் கல்லூரியின் நிர்வாகி அருள்சகோதரி பிரதீபா, முதல்வர் முனைவர் ராஜ்குமார் மற்றும் துறைத்தலைவர் சாமி உள் ளிட்டோர் புதிய கண்டுபிடிப்புக்களை உருவாக்க எங்களுக்கு ஒத்துழைப்பு அளித்தனர் என்றனர் பெருமையுடன். பொறியியல் படித்து விட்டு வேலை கிடைக்காத வர்கள் மத்தியில் முயற்சியும், ஒத்துழைப்பும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை இந்த இளைஞர்களின் உருவாக்கம் உணர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழக வனத்துறையில் வன அலுவலர் பதவிக்கான 300 காலிப் பணியிடங்களையும் வனப் பாதுகாவலர் பதவிக்கான 726 காலிப் பணியிடங்களையும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனப் பாதுகாவலர் பதவிக்கான 152 காலிப்பணியிடங்களையும் நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.

வயது: 01.07.2018 அன்று, எஸ்.சி. எஸ்.சி. அருந்ததியர், எஸ்.டி., பி.சி, எம்.பி.சி., சீர்மர பினர், பி.சி. முஸ்லிம் ஆகிய பிரிவினருக்கும் கைம்பெண்களுக்கும் குறைந்தபட்ச வயது 21. உச்சபட்ச வயது வரம்பு 35. பிற பிரிவினருக்குக் குறைந்தபட்ச வயது 21. உச்சபட்ச வயது 30. வனப் பாதுகாவலர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனப்பாதுகாவல் ஆகிய பணிகளுக்கு முன்னாள் ராணுவத்தினருக்கான குறைந்த பட்ச வயது 21, அதிகபட்ச வயது 30.

கல்வி: வன அலுவலர் பதவிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் அறிவியல் பாடத்திலோ பொறியியல் படிப் பிலோ பட்டம் பெற்றிருக்க வேண்டும். வனப் பாதுகாவலர் பதவிக்குப் பன்னிரண்டாம் வகுப்பில் அறிவியல் பிரிவில் தேர்ச்சி பெற்றி ருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய பதவிக்கு ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: வன அலுவலர் பதவிக்கு ரூ.250, பிற பதவிகளுக்கு ரூ.150. கட்டணத்தை ஆன்லைனிலோ இந்தியன் வங்கி சலான் மூலமாகவோ கட்டலாம்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு, நேர்காணல் போன்றவற்றின் மூலம் உரிய விண்ணப் பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஆன்லைன் தேர்வு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: உரிய தகுதி கொண்ட விண்ணப்பதாரர்கள் www.forests.tn.gov.in என்னும் இணையதளத்தில் நவம்பர் 5 வரை விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வுக்கான நாள் பின்னர் அறி விக்கப்படும்.

கூடுதல் விவரங்களுக்கு: www.forests.tn.gov.in

விண்ணப்பிக்க கடைசிநாள்: 05.11.2018 மாலை 5:00 மணி  வங்கிக் கட்டணம் செலுத்த கடைசிநாள்: 07.11.2018 மதியம் 2 மணி

Banner
Banner