இளைஞர்

இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 7,275 கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பை இந்திய வங்கிகள் சங்கம் (அய்பிபிஎஸ்) வெளியிட்டுள்ளது. இந்த வாய்ப்பினை இந்திய இளைஞர்கள் பயன்படுத்திக்கெள்ளவும்.

நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் கிளார்க், புரபேஷனரி ஆபிசர்ஸ், ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர்ஸ், கிராம வங்கிகளுக்கான உதவியாளர் மற்றும் அதிகாரி பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வினை இந்திய வங்கிகள் சங்கம் (அய்பிபிஎஸ்) 2011 முதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் வங்கி பணியில் சேருவதே தனது நோக்கமாகக் கொண்டு படித்து வரும் இளைஞர் களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக 2019 - 2020-ஆம் ஆண்டுக்கான 7,275 கிளார்க் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 792 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

வயது வரம்பு: 01.09.2018 தேதியின்படி 20 - 28 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் சலுகை கோருவோருக்கு அரசுவிதிகளின்படி வயது வரம்பில் சலுகைகள் வழங்கப்படும். தகுதி: ஏதாவதொரு துறையில் பிரிவில் இளங் கலை பட்டம் மற்றும் கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: அய்பிபிஎஸ் நடத்தும் ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைன் எழுத்துத் தேர்வு முதல்நிலை தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு கட்டங்களாக நடைபெறும். எழுத்துத் தேர்வின் பேது ஒவ்வொரு தவறான பதில்களுக்கும் 0.25 மதிப்பெண்கள் குறைக்கப்படும். முதல்நிலை தேர்வில் ஆங்கிலம் பிரிவில் 30 வினாக்களும், நியூமெரிக்கல் எபிலிடி மற்றும் ரீசனிங் எபிலிடியில் பிரிவில் தலா 35 வினாக்கள் என 100 வினாக்கள் இடம் பெற்றிருக்கும். இந்தத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டுமே முதன் மைத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.ibps.in   என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப் பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் எதிர்கால பயன்பாட்டிற்காக அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600, மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்ட ணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தலாம். முதல்நிலைத் தேர்வு நடைபெறும் இடம்: சென்னை, கோவை, சேலம், ஈரோடு, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், நாகர்கோவில்,  திருநெல்வேலி, விருது நகர், வேலூர், புதுச்சேரி.

முதல்நிலைத் தேர்வு நடைபெறும் தேதி: 08.12.2018 முதல் 16.12.2018 வரை நடைபெறும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.ibps.in/wp-content/uploads/Detailed_Advt_CRP_Clerks_8_1.pdf. என்ற வலைத்தள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். ஆன்லைனில் விண் ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.10.2018


அரசு மருத்துவப் பணி

நர்சுகள், மருத்துவப் பணியாளர்கள், மருந்தாளுநர்கள், பிசியோதெரபிஸ்ட், உதவி மருத்துவர்கள், சிறப்பு மருத்துவர்கள் போன்றோர் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூல மாகத் தேர்வுசெய்யப்படுகிறார்கள். அந்த வகை யில் தற்போது பொது மருத்துவப் பணியில் 1884 உதவி மருத்துவர்கள் போட்டித் தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ளனர். இந்தப் பணிக்கு எம்.பி.பி.எஸ். முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஓராண்டு காலம் உறைவிட மருத்துவராகப் பணியாற்றி இருக்க வேண்டும்.   மேலும் விவரங்களுக்கு: (ஷ்ஷ்ஷ்.னீக்ஷீதீ.ஸீ.ரீஷீஸ்.வீஸீ) இணைய தளத்தை பார்க்கவும்.

மத்திய அரசு நிறுவனமான தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம்  (Employees State Insurance Corporation-ESIC) சமூகப் பாதுகாப்பு அலுவலர் பதவியில் 539 காலியிடங்களை நேரடி நியமன முறையில் நிரப்ப இருக்கிறது. இந்தப் பணிக்குப் பட்டதாரிகள் விண்ணப் பிக்கலாம். வணிகவியல், சட்டம், நிர்வாகப் பட்டதாரி களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

கல்வித் தகுதியோடு அடிப்படை கம்ப்யூட்டர் அறிவு அவசியம். வயது 21 முதல் 27-க்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டும் ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் பணிநியமனம் நடைபெறும்.

எழுத்துத் தேர்வில் முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு, கணினித் தேர்வு என 3 தேர்வுகள் இடம்பெறும். முதல்நிலைத் தேர்வில் ஆங்கிலம், பகுத்தாராயும் திறன், அடிப்படைக் கணிதம் ஆகிய 3 பகுதிகளில் இருந்து 100 கேள்விகள் கேட்கப்படும். மொத்த மதிப்பெண் 100. இதற்கு ஒரு மணி நேரத்தில் விடையளிக்க வேண்டும். முதல்நிலைத் தேர்வில் வெற்றிபெறுவோர் 2ஆவது கட்டத் தேர்வான மெயின் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

மெயின் தேர்வில் பகுத்தாரா யும் திறன், பொருளாதாரம், நிதி, காப்பீடு, ஆங்கிலம், கணிதம் ஆகியவற்றில் இருந்து மொத்தம் 150 வினாக்கள் இடம்பெறும். மதிப்பெண் 200. தேர்வு நேரம் 2 மணி. இதில் வெற்றிபெறுவோ ருக்குக் கணினித் தேர்வு, ஆங்கி லத்தில் கடிதம், கட்டுரை எழுதும் தேர்வு நடத்தப் படும். 30 நிமிடம் கொண்ட கணினித் தேர்வுக்கு 50 மதிப்பெண். 30 நிமிடம் கொண்ட விரிவாக விடை யளிக்கும் தேர்வுக்கு 50 மதிப்பெண் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

தகுதியுடைய பட்டதாரிகள் இ.எஸ்.அய்.சி. இணையதளத்தைப் பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும். மெயின் தேர்வு மதிப்பெண் அடிப் படையில் தகுதியானோர் பணிக்குத் தேர்வுசெய்யப் படுவர். முதல்நிலைத் தேர்வு ஒரு தகுதித் தேர்வு மட்டுமே. இதில் எடுக்கும் மதிப்பெண் கணக்கில் கொள்ளப்படாது. ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, தேர்வுக் கட்டணம், தேர்வு மய்யம், தேர்வு முறை, சம்பளம் உள்ளிட்ட விவரங்களை இணைய தளத்தில் விளக்கமாகத் தெரிந்துகொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 5 அக்டோபர் 2018

இ.எஸ்.அய்.சி. இணையதளம்: www.esic.nic.in

அறிவியல் ஆராய்ச்சி பிரிவில் தனித்து விளங்கும் சி.எஸ்.அய்.ஆர்., (கவுன்சில் பார் சயிண் டிபிக் அண்ட் இண்டஸ்ட்ரியல் ரிசர்ச் நிறுவனம்) எச்.ஆர்., டெவலப்மென்ட் குரூப் அமைப்பின் மூல மாக நேஷனல் எலிஜிபிலிடி டெஸ்ட் எனப்படும் என்.இ.டி., (நெட்) தேர்வுகளை ஆண்டு தோறும் நடத்தி அதன்மூலம் இளையோர் ரிசர்ச் பெல்லோ மற்றும் லெக்சரர்சிப் காலியிடங்களை நிரப்பி வரு கிறது. இந்த அமைப்பின் சார்பாக இந்த ஆண்டிற்கான நெட் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பிரிவுகள்: கெமிக்கல் சயின்ஸ், எர்த், அட்மாஸ் பெரிக், ஓசன் அண்ட் பிளானடரி சயின்ஸ், லைப் சயின்ஸ், மேதமெடிக்கல் சயின்ஸ், பிசிக்கல் சயின்ஸ் ஆகிய பிரிவுகளில் நடத்தப்படும்.

வயது: இளையோர் ரிசர்ச் பெல்லோ பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள், 27 வயதுக்குள் இருக்க வேண்டும். லெக்சரர்சிப் பிரிவுக்கு உச்ச பட்ச வயது வரம்பு இல்லை.

கல்வித் தகுதி:  இளையோர் ரிசர்ச் பெல்லோவிற்கு தொடர்புடைய பிரிவில் பட்ட படிப்பும், லெக்சரர் சிப் பிரிவுக்கு தொடர்புடைய பிரிவில் முதுநிலை பட்டப் படிப்பும் தேவைப்படும். சில பிரிவுகளுக்கு பட்டப் படிப்பே போதுமானது.   தமிழகத்தில் சென் னையில் தேர்வு நடத்தப்படுகிறது.  ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண் டும்.  விண்ணப்பக் கட்டணம் ரூ. 100. தேர்வு நாள் : 2018 டிச., 16.  விபரங்களுக்கு : http://csirhrdg.res.in/notification_main_dec2018.pdf

சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு கல்வி உதவித்தொகை வழங்கிவருகிறது. சிறுபான்மையினருக்கான அமைச்சகத் தின் கீழ் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில் இசுலாமியர்கள், கிறித்தவர்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், பார்சிகள், சமணர்கள் உள்ளிட்ட ஆறு சிறுபான்மை சமூகத்தினருக்கு 2018-2019 ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை அறிவிப்பு வெளி யாகியுள்ளது. மெட்ரிக்குக்கு முந்தைய  (Pre-Matric),, மெட்ரிக்குக்குப் பிந்தைய  (Post-Matric),, தகுதி மற்றும் தேவையின் அடிப்படையில் (விமீக்ஷீவீ-நீனீ-விமீணீஸீ தீணீமீபீ) ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் இந்த உதவித்தொகை வழங்கப்படும்.

இந்த உதவித்தொகையைப் பெற மேலே குறிப்பிட்ட ஆறு பிரிவுகளில் ஒன்றைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். அதேபோல இந்தியாவில் உள்ள அரசு அல்லது தனியார் பள்ளியிலோ கல்லூரியிலோ   அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்திலோ படித்துக் கொண்டி ருக்க வேண்டும். ஓராண்டு அல்லது அதற்கும் கூடுதலான ஆண்டு காலப் படிப்பாக இருக்க வேண்டும். கடைசியாக எழுதிய பொதுத் தேர்வு அல்லது வகுப்புத் தேர்வில் குறைந்த பட்சம் 50 சதவீதம் மதிப் பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் www.scholarships.gov.in  இணையதளத்தின் மூலமாக விண் ணப்பிக்க வேண்டும். தேசிய உதவித்தொகை இணையதளத்தின் முகப்புப் பக்கத்திலேயே இது தொடர்பான கூடுதல் தகவல்களைப் பெறலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 30 செப் டம்பர் 2018

கூடுதல் விவரங்களுக்கு: www.minorityaffairs.gov.in

அய்தராபாத் பல்கலைக்கழக பிற்படுத்தப்பட்டோர் அமைப்பின் சார்பில், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசியல் சட்டப்படியான அதிகாரம் எனும் தலைப்பில் கருத்தரங்கம் 12.9.2018 அன்று மாலை பல்கலைக்கழக டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அரங்கத்தில் நடைபெற்றது. பேராசிரியர் பி.வெங்கடேசு தலைமை வகித்தார். அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் பொது நிர்வாகத்துறை தலைவர் பேராசிரியை பல்லவி கப்டே, அமைப்பின் தலைவர் சீனிவாச ராவ் ஆகியோர் கருத்துரை வழங்கினர். பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர். செயலாளர் டேனியன் நன்றியுரை நிகழ்த்தினார்.

Banner
Banner