இளைஞர்

பிளஸ் 2, தட்டச்சு முடித்தவர்களுக்கு
இந்திய அஞ்சல் துறையில் 5134 பணி

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 5134 பணியிடங்களை நிரப்புவதற்கு எஸ்எஸ்சி-ஆல் நடத்தப்படும் “Combined Higher Secondary Level Examination, 2016” «தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர் களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Postal Assistant, Sorting Assistant,  காலியிடங்கள்: 3,281

பணி: Data Entry Operator  காலியிடங்கள்: 506

பணி: Court Clerks காலியிடங்கள்: 26

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

வயதுவரம்பு: 01.01.2017 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.தகுதி: +2 தேர்ச்சியுடன் கணினியில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகளும், இந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகளும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, ஸ்கில்டு, தட்டச்சு தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு மய்யங்கள்: சென்னை, மதுரை, கோயமுத்தூர், திருச்சி, திருநெல்வேலி

ஆன்லைன் எழுத் துத் தேர்வு நடைபெறும் தேதி: 07.01.2017 - 05.02.2017

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் முறையில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.ssconline.nic.in 
என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.11.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ssconline.nic.in என்ற இணையதளத்தை அல்லது  Regional Director (SR), Staff Selection Commission, EVK Sampath Building, 2nd Floor, College Road, Chennai - 600006
என்ற விலாசத்தில் தொடர்புகெண்டு தெரிந்துகொள்ளலாம்.

அஞ்சல் வங்கியில் உதவி மேலாளர் ஆகலாம்

நீண்ட காலமாகத் தபால் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுவரும் இந்திய அஞ்சல் துறை முதன்முறையாக வங்கிச் சேவையில் காலடியெடுத்து வைக்கவிருக்கிறது. அது இந்திய அஞ்சல் வங்கி  (India Post Payments Bank Limited)  என்ற பெயரில் புதிய வங்கியைத் தொடங்கவுள்ளது.  ரிசர்வ் வங்கி யும் அதற்கு ஒப்புதல் அளித்துவிட்டது.

இதைத் தொடர்ந்து, பணியாளர் நியமனப் பணியில் இறங்கியுள்ளது இந்திய அஞ்சல் வங்கி. முதல் கட்டமாக உதவி மேலாளர்களைத் தேர்வுசெய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. மற்ற பொதுத்துறை வங்கி அதிகாரி பணிகளைப் போலவே எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப் படையில் இந்தப் பணியிடங்கள் நேரடியாக நிரப்பப்படவுள்ளன.

அடிப்படைத் தகுதி

இப்பணிக்குப் பட்டதாரிகள் விண்ணப் பிக்கலாம். வயது 20 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். இந்திய அஞ்சல் வங்கி மத்திய அரசு நிறுவனம் என்பதால் இடஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, எஸ்.சி., எஸ்.டி. வகுப் பினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவி னருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளி களுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

எழுத்துத் தேர்வில் முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு எனத் தேர்வுகள் இருக்கும். இரண்டு தேர்வுகளுமே ஆன்லைன் வழியில்தான் நடத்தப்படும்.

என்ன கேட்பார்கள்?

முதல்நிலைத் தேர்வில் ஆங்கிலம், ரீசனிங், கணிதம் ஆகிய 3 பகுதிகளிலிருந்து 100 கேள்விகள் கேட்கப்படும். ஒரு மணி நேரத்தில் விடையளிக்க வேண்டும். மதிப் பெண் 100. விண்ணப்பதாரர் ஒவ்வொரு பகுதியிலும் குறிப்பிட்ட சதவீதம் மதிப்பெண் பெற வேண்டியது அவசியம். 2ஆவது நிலை யான மெயின் தேர்வில் ரீசனிங், ஆங்கிலம், கணினி அறிவு, பொது அறிவு, கணிதம் ஆகிய 5 பகுதி களிலிருந்து மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். மதிப்பெண் 200.

முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு இரு தேர்வுகளிலுமே தவறான பதில்களுக்கு மைனஸ் மார்க் உண்டு. எனவே, விடை யளிக்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உறுதியாக விடை தெரியாத கேள்விகளை விட்டுவிடுவதே நல்லது.

மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் நேர் காணலுக்கு அழைக்கப்படுவார்கள். இதற்கு 100 மதிப்பெண். நேர்காணல் தேர் விலும் குறிப்பிட்ட சதவீத மதிப்பெண் பெற வேண் டும். இறுதியாக மெயின் தேர்வு மதிப்பெண், நேர்காணல் மதிப்பெண் (80:20 விகிதாச்சாரம்) அடிப்படையில் மெரிட் பட்டியல் தயாரிக்கப் பட்டுப் பணி நியமனம் நடைபெறும்.

உதவி மேலாளர் தேர்வுக்கு இந்திய அஞ்சல்துறையின் இணையதளத்தைப் பயன் படுத்தி அக்டோபர் 25ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பம், தேர்வுமுறை, தேர்வுக்கான பாடத்திட்டம், இடஒதுக்கீடு வாரியாகக் காலியிடங்கள் உள்ளிட்ட விவரங் களை இணையதளத்தில் விரிவாகத் தெரிந்து கொள்ளலாம். உதவி மேலாளர் பணிக்குச் சம்பளம் ரூ.65 ஆயிரத்துக்கு மேல் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொழிற்சாலைகள் பாதுகாப்புப் படையில் பணி

சிஅய்எஸ்எப் என அழைக்கப்படும் துணை ராணுவ அமைப்பான மத்திய தொழிற்சாலைகள் பாதுகாப்பு படையில் நிரப்பப்பட உள்ள 441 கான்ஸ்டபிள், டிரைவர் (பின்னடைவு) பணியி டங்களுக்கான அறிவிப்பு வெளிடப்பட்டுள்ளது.

இது எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான சிறப்பு அறிவிப்பாகும். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடியுரிமை பெற்ற எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வயது வரம்பு: 19.11.2016 தேதியின்படி 21 - 27க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் எல்எம்வி, எச்எம்வி, கியர் மோட்டார் சைக்கிள் லைசென்சு வைத்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடல்திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு தகுதி யானவர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, லட்சத்தீவு, புதுச்சேரி, தெலுங்கானா பகுதியை சேர்ந்த விண்ணப்பதாரர்கள்,DIG, CISF (South Zone). Rajaji Bhawan, ‘D’ Block, Besant Nagar, Chennai, Tamilnadu 600090
என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 19.11.2016

சென்னை ராணுவ குடியிருப்பில் பணி:
விண்ணப்பிக்க 24ஆம் தேதி கடைசி தேதி

சென்னையில் உள்ள ராணுவ குடியிருப்பில் நிரப்பப்பட உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகின்றன.

பணி:   Secondary Grade Teacher    காலியிடங்கள்: 16

தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆசிரியர் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.

பணி: Store Keeper  காலியிடங்கள்: 01

தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆங்கில தட்டச்சில் லேயர் கிரேடு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

பணி: Safaiwala காலியிடங்கள்: 24

பணி: Cleaner  காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000

தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு மற்றும் ஸ்கில்டு தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.cbstm.org.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:    Office of the Cantonment Board, St.Thomas Mount, Chennai - 600 016

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 24.10.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.cbstm.org.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

மருத்துவரும் அய்.ஏ.எஸ். ஆகலாம்!

மருத்துவ மாணவர்களும் அய்.ஏ.எஸ். ஆகலாம் என்கிறார் பி.ராஜா. 2015 ஆண்டு பேட்ச்சின் கர்நாடக மாநிலப் பிரிவைப் பெற்றவர், அதன் பயிற்சியில் தும்கூர் மாவட்ட உதவி ஆட்சியராகப் பணியாற்றிவருகிறார்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டத்தில் உள்ள முத்தாண்டி குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. மூன்றாம் வகுப்பு வரை கிராமத்தில் படித்தவர் 8 கி.மீ தொலைவிலுள்ள நெய்வேலியின் செயிண்ட்பால் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ வரை பயின்றார்.

கோயம் புத்தூர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். விரும்பிப் படித்தார். பெற்றோரின் ஊக்கத்தால் யூ.பி.எஸ்.சி. எழுத முடிவெடுத்தார். விரும்பிய அய்.ஏ.எஸ். கிடைக்கும்வரை தொடர்ந்து அய்ந்து முறை யூ.பி.எஸ்.சி. தேர்வுகளை எதிர் கொண்டார்.
ஆறாம் வகுப்பு படிக்கும்போது வெ.இறையன்பு எழுதிய நீங்களும் அய்.ஏ.எஸ். ஆகலாம் புத்தகத்தைப் படித்ததும் அய்.ஏ. எஸ். ஆர்வம் துளிர்த்தது.

அதிலும், துப்பாக்கிச் சூடு, குதிரை ஏற்றம் போன்ற பயிற்சிகள் பற்றிய வர்ணனைகள் மிகவும் ஈர்த்தன. ஆனால், மருத்துவராகும் கனவு என்னுள் ஆழமாக வளர்ந்து கொண் டிருந்தது. இதனால் எம்.பி.பி.எஸ். முடித்த பின்னர்த் தனியார் மருத்துவமனை ஒன்றில் வேலைபார்த்துக் கொண்டே யூ.பி.எஸ்.சி. எழுத ஆயத்த மானேன்.

பிறகு சென்னை சென்று ஒரு அய்.ஏ.எஸ். கோச்சிங் அகாடமியில் பொதுக்கல்வி பாடப் பிரிவுக்காக மட்டும் பயிற்சி பெற்றேன்.

விருப்பப்பாடங்களான உயிரியல், மருத்துவ அறிவியலை நானே படித்தேன். மருத்துவ அறிவியலில் அதிகமாகப் படிக்க வேண்டி இருந்ததால் இரண்டாவது முயற்சியில் அதற்குப் பதிலாகப் புவியியல் எடுத்தேன். இரண்டாம்நிலை எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் நேர்முகத் தேர்வில் நழுவ விட்டேன்.

மூன்றாவது முயற்சியில் அய்.பி.எஸ். கிடைத்தது. எனது நோக்கம் ஆட்சியர் ஆவது என்பதால் மீண்டும் இருமுறை எடுத்த கடுமையான முயற்சியில் எனது எண்ணம் நிறைவேறியது. அதே நேரத்தில் அய்ந்து முயற்சிகளிலும் நான் முதல்நிலை தேர்வில் ஒருமுறை கூடத் தவறவில்லை. இதற்கு எனது பள்ளியில் பாடம் நடத்தப்பட்ட முறை முக்கியக் காரணம் என்கிறார் ராஜா.

எதிர்காலத்தில் யூ.பி.எஸ்.சி. தேர்வு எழுத விரும்பும் பிள்ளைகளுக்குப் பள்ளிப் பருவத்திலிருந்தே ஆங்கிலம், தமிழ் நாளிதழ்களை வாசிக்கும் பழக்கத்தைப் பெற்றோர் ஏற்படுத்த வேண்டும் என்பது ராஜாவின் யோசனை. இதன் மூலம், புரிந்து படிக்கும் திறனையும் வளர்த்தெடுக்கலாம்.

இணையதளத்தில் கொட்டிக்கிடக்கும் தகவல்களையும் புத்தகங் களையும் பயன் படுத்தலாம் அதேபோல ராஜ்யசபா டிவி, லோக்சபா டிவி போன்ற சேனல்களில் வரும் நேர்காணல், விவாதங் களைப் பின்தொடர்வது மிகவும் உதவும் என வழிகாட்டுகிறார் ராஜா.

யூ.பி.எஸ்.சி.க்கான முயற்சிகளுக்கு இடையே ராஜாவுக்கு, 2009இல் கடலூர் மாவட்டம் புலியூரில் தமிழக அரசு ஆரம்பச் சுகாதார நிலையம் ஒன்றில் மருத்துவப் பணி கிடைத்தது. இதில் சேர்ந்து யூ.பி.எஸ்.சி.க்கான மூன்றாவது முயற்சியைத் தொடர்ந்தபோது 239ஆவது ரேங்கில் 2011ஆம் ஆண்டு பேட்ச்சில் கர்நாடகா மாநிலப் பிரிவின் அய்.பி.எஸ். கிடைத்தது.

இதன் பயிற்சியின் போது தாவன்கெரே, மைசூர் மாவட்டத்தின் நஞ்சன்கோடு ஏ.எஸ்.பி.யாகவும், கொப்பல் மாவட்டத்தின் எஸ்.பி.யாகவும் பணியாற்றினார். அப்போது, யூ.பி.எஸ்.சி. தேர்வின் இரு விருப்பப் பாடங்கள் ஒன்றாகக் குறைக்கப்பட்டது. இத்துடன் பொதுக் கல்வியிலும் பாடத் திட்டம் நான்காகக் குறைக்கப்பட்டது. இதனை அடிப்படையாக வைத்துத் தேர்வுக்குத் தயாரானவர் அய்ந்தாவது முயற்சியில் அய்.ஏ.எஸ். பெற்றார்.

நான் எப்படிப் படித்தேன்

யூ.பி.எஸ்.சி. எழுத விரும்புபவர்கள் அதற்கு முன்பாக அதன் பழைய முதல்நிலை வினாத்தாள்களுக்கான பதிலை எழுதிச் சுயபரிசோதனை செய்வது முக்கியம். இந்தக் கேள்விகளைப் பாடங்களுக்கு ஏற்றபடி தனியாகப் பிரித்து எழுதினால் எதில் பின்தங்கியிருக்கிறோம் என்பதைச் சரியாகத் தெரிந்துகொள்ள முடியும். இதைச் சோதித்துப் பார்க்கப் பயிற்சி நிலையங்கள் அவசியம் இல்லை. இதன் மூலமாக நமக்கு எதில் அதிகப்படியான பயிற்சி தேவை என்பதைக் கண்டுபிடித்து அதன் பிறகு பயிற்சி நிலையங்களை அணுகும்போது பலன் இருக்கும்.

குறிப்பாகக் கணிதம், அறிவியல் பாடங் களைச் சுயமாகப் படிப்பது கடினம். ஆகவே, கலை இலக்கியத் துறைகளில் பட்டம் பெற்றவர்கள் யூ.பி.எஸ்.சி. தேர்வில் கணிதம், அறிவியலை விருப்பப்பாடங்களாக எடுக் காமல் இருப்பது நல்லது. ஆனால், அறிவி யலில் பட்டம் பெற்றவர்கள் பொது நிர்வாகம், வரலாறு, புவியியல் ஆகிய பாடங்களை விருப்பப் பாடங்களாகத் தாராளமாக எடுக்கலாம்.

அடுத்து, ஒரே பாடத்தைத் தொடர்ந்து படிக்கும்போது சலிப்பு உண்டாகும், கவனச் சிதறல் ஏற்படும். இதனாலேயே ஒரு மணி நேரத்துக்கு மேல் அடுத்த பாடத்தை நான் படிக்க ஆரம்பித்துவிடுவேன். இந்த மாதிரிப் புதிய பாடங்களைப் படிக்கும்போது நம் முடைய புரிதல் திறன் புத்துணர்வு பெறும்.


அய்டிஅய் படிப்புக்கு கப்பல் கட்டுமான வேலை

மும்பையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான நேவல் டாக்யார்ட் எனும் இந்திய கப்பல் படையின் கப்பல் கட்டுமானத் துறையில் பல்வேறு துறைகளில் டிரெய்னி. இதில் 1 வருட, மற்றும் 2 வருட டிரெய்னி வேலைகளுக்காக அழைப்பு வெளியாகியுள்ளது. மெக்கானிக், ஃபிட்டர், மேசன், எலக்ட்ரீஷியன், பிளம்பர் போன்ற சுமார் 22  பிரிவுகளில் உள்ள மொத்த காலிப் பணியிடங்கள் 315.  இதற்கான கல்வித் தகுதி: 10ஆவது படிப்புடன் தொடர்புடைய வேலைகள் சம்பந்தமாக அய்.டி.அய் படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 1.4.96க்கும் 31.3.2003க்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் தேர்வு முறை: எழுத்து, மருத்துவ சோதனை மற்றும் நேர்முகம் விண்ணப்பிக்க கடைசித் தேதி: 14.10.16 விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகவல்களுக்கு: www.indiannavy.nic.in

Banner
Banner