இளைஞர்

பட்டதாரிகளுக்கு ராணுவத்தில் அதிகாரி பணியிடங்கள்

நிறுவனம்: இந்திய ராணுவம் (என்.சி.சி. ஸ்பெஷல் என்ட்ரி)

வேலை: பொது அதிகாரிகள், வார்ட்ஸ் ஆஃப் பேட்டல் அதிகாரிகள் எனும் இரு பிரிவுகளில் மணமாகாத ஆண்களும் பெண்களும் தகுதியானவர்கள்.

காலியிடங்கள்: மொத்தம் 54. பொது அதிகாரிகள்(ஆண்) என்பதில் 45, வார்ட்ஸ் ஆஃப் பேட்டிலில் 5, பொது அதிகாரிகளாக (பெண்) 3, வார்ட்ஸ் ஆஃப் பேட்டிலில் 1 எனக் காலியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பட்டப்படிப்பு

வயது வரம்பு: 19-25

தேர்வுமுறை: நேர்முகம்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 15.2.2017 மேலதிக தகவல்களுக்கு:www.joinindianarmy.nic.in

விவசாயப் படிப்புக்கு  வங்கியில் வேலை

நிறுவனம்: இண்டஸ்ட்ரியல் டெவலப்மென்ட் பேங்க் ஆஃப் இந்தியா

வேலை: ஸ்பெஷலைஸ்ட் ஆஃபிசர் எனும் சிறப்பு அதிகாரிகள் காலியிடங்கள் மொத்தம் 111.
இதில் டெபுடி ஜெனரல் மேனேஜர் 13, அசிஸ்டென்ட் ஜெனரல் மேனேஜர் 17, மேனேஜர் 81 காலியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: விவசாயம் (அ) கால்நடை தொடர்பான படிப்பில் முதல்தர டிகிரி (அ) முதுகலைப் படிப்பில் முதல்தரத் தேர்ச்சி. வயது வரம்பு:  20-45 சில பிரிவினருக்கு வயதுத் தளர்வு உண்டு

தேர்வு முறை: குழு விவாதம், எழுத்துத் தேர்வு, நேர்காணல் விண்ணப்பிக்க கடைசித் தேதி: 20.2.2017
மேலதிக தகவல்களுக்கு:www.idbi.com

கெயில் நிறுவனத்தில் அதிகாரி ஆகலாம்

இயற்கை எரிவாயுவை முறைப்படுத்தி பரவலாக வழங்கும் கெயில் இந்தியா நிறுவனம் 73 எக்சிகியூடிவ் டிரெயினி பணியிடங்களை பி.இ., பி.டெக். பட்டதாரி களைக் கொண்டு, பல்வேறு பிரிவுகளில் விரைவில் நிரப்புகிறது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 20.1.2017 தேதியன்று 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இப்பணியில் சேருவோருக்கு
ரூ. 24,900 முதல் 50,500 வரை ஊதியம் வழங்கப்படும்.

பணி விவரங்கள்:

துறை: கெமிக்கல், காலியிடம்: 23 கல்வித் தகுதி: பி.இ., பி.டெக். - கெமிக்கல், பெட்ரேகெமிக்கல், பெட்ரோ கெமிக்கல் டெக்னாலஜி.

துறை: மெக்கானிக்கல், காலியிடம்: 15 கல்வித் தகுதி: பி.இ., பி.டெக். - மெக்கானிக்கல், புரொடக்சன், புரொடக் சன் மற்றும் இன்டஸ்ட்ரியல், மேனுஃபாக்சரிங், மெக்கா னிக்கல் மற்றும் ஆட்டோ மொபைல்.

துறை: எலக்ட்ரிக்கல், காலியிடம்: 15. கல்வித் தகுதி: பி.இ., பி.டெக். - எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ்.

துறை: இன்ஸ்ட்ருமென்டேஷன், காலியிடம்: 10 கல்வித் தகுதி: பி.இ., பி.டெக். - இன்ஸ்ட்ரு மென்டேஷன், இன்ஸ்ட்ருமென்டேஷன் மற்றும் கன்ட்ரேல், எலக்ட் ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ரு மென் டேஷன், எலக்ட்ரிக் கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட் ரிகல் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன்.

துறை: சிவில், காலியிடம்: 5 கல்வித் தகுதி: பி.இ., பி.டெக். சிவில்

துறை: பிசினஸ் இன்ஃபர்மேஷன் சிஸ்டம், காலியிடம்: 5 கல்வித் தகுதி: பி.இ., பி.டெக். - கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி அல்லது எம்.சி.ஏ.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: இந்த ஆண்டு நடைபெறவுள்ள கேட்-2017 தேர்வில் பெறும் மதிப்பெண், நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்கள். ஆன்லைனில் விண்ணப் பிக்கக் கடைசி நாள்: பிப்ரவரி 17

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:www.gailonline.com கேள்விகளை அனுப்ப: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it .

மேலும் விவரங்களுக்கு: https://careers.gail.co.in/sap/bc/webdynpro/sap/ywerec_005_home_page/#

அய்டிஅய் முடித்தவர்களுக்கு டெக்னீஷியன் வேலை

நிறுவனம்: மத்திய அரசின் அணுமின்சார பாதுகாப்பு நிறுவனமான பாரதிய நபிக்யா வித்யூத் நிகாம் லிமிடெட் (தமிழகக் கிளை)
வேலை: டெக்னீஷியன்

காலியிடங்கள்: 70.

இதில் டெக்னீஷியன் பி பிரிவில் 66, டெக்னீஷியன் சி (பாய்லர் அட்டன்டென்ட்) பிரிவில் 4 காலியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: 10ஆம் வகுப்பில் அறிவியல், கணிதப் பாடங்களில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற் றிருக்க வேண்டும்.
மேலும் அய்.டி.அய். சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு: 25

தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 16.2.2017

நிலக்கரி நிறுவனத்தில் 1,319 காலியிடங்கள்

மத்திய பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான கோல்(நிலக்கரி) இந்தியா லிமிடெட் நிறுவனம் 1975ல் துவங் கப்பட்டது. 41 ஆண்டுகளாக மிகச் சிறப்பான முறையில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் தற்போது தனக்குத் தேவைப்படும் 1,319 மேனேஜ்மென்ட் பயிற்சியாளர்களுக் கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இனி இதன் விபரம்: மொத்த மேனேஜ்மென்ட் டிரைனி காலியிடங்கள்: 1,319 பிரிவு வாரியான காலியிடங்கள்: மைனிங் - 191,  எலக்ட்ரிகல் - 198, மெக்கானிக்கல் - 196, சிவில் - 100, மெட்டீரியல் மேனேஜ்மென்ட் - 44, ஜியாலஜி - 76, நிதி, அக்கவுண்ட்ஸ் - 257, பர்சனல் மற்றும் எச். ஆர். - 134

மீதமுள்ள பணியிடங்கள் இண்டஸ்ட்ரியல் இன்ஜி னியரிங், என்விரான்மென்ட், சிஸ்டம் மற்றும் அய்.டி., லீகல் போன்ற பிரிவுகளில் உள்ளன.

தகுதிகள்: பொதுவாக இந்தப் பணியிடங்களுக்கு பி.இ., பி.டெக்., பி. எஸ்சி.,அல்லது டிப்ளமோ தகுதியை மேலே குறிப்பிட்டுள்ள பிரிவுகளில் ஒன்றில் பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணிக்கு என்ன தகுதி என்பதை இங்கே தரப்பட்டுள்ள கோல் இந்தியா நிறுவன இணைய தளத்தில் கண்டிப்பாக பார்த்துக் கொள்ளவும். பொதுவாக இந்தப் பணியிடங்களுக்கு 30 வயதுக்குள் இருக்க வேண்டும். ஓ.பி.சி., பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் எஸ்.சி.,எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு தரப்படும். வயதானது டிசம்பர் 1 , 2016 அய் அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் தான் இதற்கு விண்ணப்பிக்க முடியும். கோல் இந்தியா நிறுவனத்தின் இணைய தளத்தில் ரெக்ரூட்மென்ட் லிங்கிற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். அப்ளை என்னும் லிங்கில் கிளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கட்டணம் ரூ.1000 பொதுப் பிரிவினரும் ஓ.பி.சி., பிரிவினருக்கும் இந்தக் கட்டணம் பொருந்தும். பிறருக்கு கட்டணம் கிடையாது ஆன்லைனில் விண்ணப் பிக்கக் கடைசி நாள்: பிப்ரவரி 24. போட்டித் தேர்வு நாள்: மார்ச் 26, 2017

இணைய தள முகவரி: : https://www.coalindia.in/Portals/13/PDF/Detailed_Advertisement_04012017.pdf


சி.அய்.எஸ்.எஃப் பாதுகாப்பு படையில் ஸ்டெனோ காலிப் பணியிடங்கள்

சென்ட்ரல் இன்டஸ்ட்ரியல் செக்யூரிட்டி போர்ஸ் என்பது இந்தியாவிலுள்ள பொதுத் துறை நிறுவனங்களின் பாதுகாப்புக்காக நிறுவப்பட்ட ஒரு காவல் படை. பெரும் பாலும் இது சி.அய்.எஸ்.எப்., என அறியப் படுகிறது.

இந்தப் படையில் தற்சமயம் ஸ்டெனோ பிரிவில் காலியாக உள்ள 79 உதவி ஆய்வாளர் (ஸ்டெனோ) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வயது: 28.02.2017 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 18 முதல் 25 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : பிளஸ் 2க்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் சிறப்புத் தகுதியாக ஸ்டெனோகிராபி முடித் திருக்க வேண்டும். 10 நிமிடங்களில் வழங் கப்படும் டிக்டேஷனை நிமிடத்திற்கு 80 வார்த்தைகளை எடுத்துக் கொள்பவராக வும், இதன் பின் கம்ப்யூட்டர் வாயிலாக ஆங்கிலமாக இருந்தால் 50 நிமிடங்களிலும், இந்தியாக இருந்தால் 65 நிமிடங்களிலும் டிரான்ஸ்கிரிப்ட் செய்யும் திறமை உள்ள வராகவும் இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்ச்சி செய்யப்படுவர்.

மேலும் விண்ணப்பக்கட்டணம் மற்றும் விவரங்களுக்கு  http://www.cisf.gov.in/RRs/asi

கடைசி நாள்: பிப். 27

ஆஸ்திரேலியாவில் வேலையும் செய்யலாம்... பாடமும் படிக்கலாம்!

இந்தியாவில் பல்வேறு பாடத்திட்டங்களில் சிறந்த கல்வியை வழங்கும் பல்கலைக்கழகங்கள் இருந்தாலும், இதை விடவும் மேம்பட்ட தொழில்நுட்பம், பாடத் திட்டங்கள், ஆராய்ச்சிப் படிப்புகளை வழங்கும் பல்கலைக் கழகங்கள் வெளிநாடுகளில் உள்ளன என்பதை மறுப்பதற் கில்லை. அதன் காரணமாகவே பெரும்பாலான மாண வர்கள் வெளிநாடுகளில் சென்று படிக்க ஆசைப்படு கிறார்கள்.

வெளிநாடு சென்று படிக்க விரும்பும் மாணவர்களுக்கு வழிகாட்டும் விதமாக நாம் இதுவரை அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், அயர்லாந்து, போலந்து போன்ற நாடுகளில் உள்ள ஆய்வுப் படிப்புகள், ஆராய்ச்சி படிப்புகள், தொழில்நுட்பப் படிப்புகளை வழங்கும் பல்கலைக்கழகங்கள் பற்றி யெல்லாம் பார்த்துவந்தோம். இதன் தொடர்ச்சியாக அடுத்து ஆஸ்திரேலியாவைப் பற்றி இனி பார்ப்போம்.

ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை உயர்கல்வி பயில்வதற்கான சிறந்த இடம். காரணம், பல நாடுகளில் அந்தந்த நாடுகளில் உள்ள தாய்மொழியே அதிகமாக பயன்படுத்தப்படும். ஆனால், இங்கு ஆங்கில மொழி பெரிய அளவில் பயன்பாட்டில் இருக்கிறது. ஆஸ்திரே லியாவைத் தேர்வு செய்து சென்று படிக்க மாணவர்களுக்கு ஆறு முக்கியமான அம்சங்களைச் சொல்லலாம்.

அதில் முதலாவதாகச் சொல்வதென்றால், பெரும் பாலான நாடுகளில் சிறந்த பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. ஆனால், உள்கட்டமைப்பு உள்ளிட்ட எல்லா விதத்திலும்  சிறந்த முழுமையாக வளர்ச்சி அடையவில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகங்கள் பாடத்திட்டங்கள் முதல் உள்கட்டமைப்பு வரை வளர்ச்சியடைந்துள்ளன. சர்வதேச அளவில் ,  பல்கலைக்கழகங்களுக்கு அடுத்ததாக ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் உள்ளன.

இரண்டாவது சிறப்பம்சம் என்னவென்றால், இங்கு வழங்கப்படும் கல்வி உலகத்தரம் வாய்ந்ததாக உள்ளது. பாடத்திட்டங்கள் முதல் ஆராய்ச்சிகள் வரை ஒவ்வொரு விஷயத்தையும் நவீனப்படுத்திக்கொண்டே இருப்பார்கள். உதாரணமாக,  அய்ந்து ஆண்டுகளுக்குப் பிறகு மருத் துவப் படிப்பில் ஒரு மாற்றம் வருமென்றால் அதற்கான அனைத் துச் செயல்பாடுகளிலும் முன்பாகவே விடு வார்கள். மூன்றாவதாக, இங்கு தங்கி படிப்பதற்கு ஆகும் செலவு குறைவு. மேலும், பல்வேறு உதவித் தொகைகள் வழங்கப் படுகின்றன. மாணவர்கள் பகுதிநேர வேலை பார்க்கவும் அனுமதிக்கப்படுகிறார்கள்.

நான்காவதாக உள்ள சிறப்பம்சம், இங்கு இல்லாத பாடத்திட்டங்களே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். உதாரணமாக, பெயின்டிங், ஆங்கிலமொழி இலக்கணம், மருத்துவம், எஞ்சினியரிங் என  எதை விரும்பினாலும் அதற்கான பாடத்திட்டங்கள் இங்கு வழங்கப்படுகின்றன. அய்ந்தாவது சிறப்பம்சம், தொழில் நுட்பம்.

ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் தொழில்நுட்பம் சார்ந்த கல்வியில் தலைசிறந்து விளங்குகின்றன. உதாரண மாகச் சொல்வதென்றால், யுனிவர்சிட்டி ஆஃப் சிட்னியில் லேசர் டெக்னாலஜி ஒன்று உள்ளது. இதன் மூலம் நம் தலைமுடி அளவில் மெல்லியதாக உள்ள எந்தப் பொரு ளாக இருந்தாலும் அதில் துளையிடவேண்டும் என்றாலும் முடியும். இதையெல்லாம் இங்கிருந்தால் நம் மாணவர்கள் தெரிந்துகொள்ளவும் முடியாது பயன்படுத்திக்கொள்ளவும் முடியாது. சர்வதேச நாடுகளில் இருந்து ஆஸ்திரே லியாவுக்கு வரும் மாணவர்கள் மேம்பட்ட தொழில் நுட்பங்களைக் கற்றுக்கொள்ள முடியும்.

ஆறாவது சிறப்பம்சம் பார்ட் டைம் ஜாப் என்று சொல்லப்படும் பகுதிநேர வேலை செய்து சம்பாதிக்க முடியும். மாணவர்கள் ஒரு வாரத்துக்கு குறைந்தது 20 மணிநேரம் பகுதிநேரமாக ஏதாவது ஒரு நிறுவனத்தில் வேலை செய்யலாம். விடுமுறை நாட்களில் என்றால் 40 மணி நேரம் வேலை செய்யலாம். அதிலும் குறிப்பாகக் கல்வி சார்ந்த வேலையாக இருந்தால் அதை ஊக்குவிக்கும் விதமாக அவர்களின் கல்வித்திட்டம் உள்ளது. ஆஸ்திரேலியா 23 மில்லியன்தான் மக்கள்தொகையை வைத்துக்கொண்டுள்ளது.

ஆனால், உயர்கல்வியில் மூன்றாவது சிறந்த நாடாக உள்ளது. ஆஸ்திரேலியாவில் 1100 கல்வி மையங்களில் 22,000 பாடத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன. உலக அளவில் சிறந்தவையாக உள்ள 100-ல் 8 பல்கலைக் கழகங்கள் ஆஸ்திரேலியாவில் உள்ளன. உலக அளவில் பல்கலைக்கழகத் தரப் பட்டியல்படி 9ஆவது இடத்தில் உள்ளது. ஜெர்மனி, நியூஸிலாந்து, ஜப்பான்தான் தொழில் நுட்ப ரீதியாக முன்னிலையில் இருந்தாலும் பல்கலைக் கழகத் தரத்தில் ஆஸ்திரேலியா 9ஆவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இங்கு ஒரு வருடத்துக்கு 200 மில்லியன் டாலர் கல்வி உதவித்தொகைக்காக செலவிடுகிறார்கள். அதேபோல் சர்வதேச அளவில் 50 சிறந்த பாடத்திட்டங்களில் 30 இங்கு வழங்கப்படும் பாடத்திட்டங்களாகும். இங்குப் படித்து விட்டு சென்ற மாணவர்கள் உலகம் முழுவதுமாக 25 மில்லியன் மாணவர்கள் உள்ளனர். அதேபோல் இங்கு படித்துவிட்டு ஆய்வு செய்து நோபல் பரிசு பெற்றவர்கள் 15 பேர்.

இதையெல்லாம் விட ஆஸ்திரேலியாவுக்கு மகுடம் சூட்டுவது, உலகம் முழுவதும் இவர்களின் கண்டுபிடிப்புகள் தவிர்க்கமுடியாதவையாக உள்ளன. அவற்றில் குறிப்பிடத் தக்கவை பென்சிலின், அல்ட்ரா சவுண்டு, வைஃபை, விமானத்தில் பயன்படும் பிளாக் பாக்ஸ், செர்விக்கிள் கேன்சர் வேக்சின் போன்றவையாகும். உலகம் முழு வதிலும் ஒரு பில்லியன் மக்கள் தினந்தோறும் ஆஸ்தி ரேலியாவின் கண்டுபிடிப்புகளில் உருவானவற்றைப் பயன்படுத்துகிறார்கள்.

சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம்
பெண்கள் விண்ணப்பிக்கலாம்

கடலூர் மாவட்டத்தில் பள்ளி சத்துணவு மய்யங்களில் காலியாக வுள்ள 997 சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் சமையல் உதவியாளர் காலிப் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் பூர்த்தி செய்யப்பட இருப்பதாக மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

இப்பணிக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கடலூர் மாவட்டத்தில் எம்ஜிஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளி சத்துணவு மய்யங்களில் 400 சத்துணவு அமைப் பாளர் மற்றும் 597 சமையல் உதவியாளர் காலிப் பணியிடங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் பூர்த்திசெய்திட பிப்.1-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணியிடங்கள் அனைத்துக்கும் விண்ணப்பிப்பதற்கு பெண்கள் மட்டுமே தகுதியுடையவர்கள் ஆவர். சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் நகராட்சிகளில் இனச் சுழற்சி விவரம் மற்றும் காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சத்துணவு அமைப்பாளர் பணிக்கு பொதுப் பிரிவு மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கான வயது வரம்பு 40-க்கு மிகாமலும், கல்வித் தகுதி 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

பழங்குடியினருக்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி போதுமானது.

சமையல் உதவியாளர் பணிக்கு பொதுப் பிரிவு மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கான வயது உச்ச வரம்பு 21-40. கல்வித் தகுதி 8-ஆம் வகுப்பு தேர்ச்சி, தோல்வி போதுமானது. பழங்குடியினர் என்றால் எழுதப் படிக்க தெரிந்திருந்தால் போதுமானது. மேற்கண்ட இரு பணியிடத்துக்கும் விண்ணப்பிப்போரது இருப்பிடம் காலிப் பணியிடத்திலிருந்து 3 கி.மீ. சுற்றளவுக்குள் இருக்க வேண்டும்.

எனவே, தகுந்த சான்றுகளுடன் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகர்மன்ற அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும். தகுதியானவர்களுக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பாணை அனுப்பி வைக்கப்படும் என ஆட்சியர் அதில் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசில் 8300 பணியிடங்கள்:
விண்ணப்பிக்க 30ஆம் தேதி கடைசி

மத்திய அரசில் காலியாக இருக்கும் 8300 பல் செயல் உதவியாளர் பணியிடங்களுக்கு ஜன. 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆட்சியர் மு. கருணாகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தற்போது மத்திய அரசு அலுவலகங்களில் காலியாக இருக்கும் பல் செயல் உதவியாளர் பணிக்கு 8300 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். 18 முதல் 25 வயது நிரம்பிய 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி, மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது சலுகை அளிக்கப்படும். முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகளுக்கு வயது வரம்பில் சலுகை உண்டு.

இப்பணிக்கான எழுத்துத் தேர்வில் 2 தாள்கள் உண்டு. இப்பணிக்கு இணையதளம் மூலம் ஜன. 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது குறித்த விபரங்களை : http://ssconline.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

விண்ணப்பம் செய்தவர்களுக்கு திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்வில் வெற்றி பெற இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் மேற்குறிப்பிட்ட தேர்வுக்கு விண்ணப்பம் செய்ததற்கான அத்தாட்சி நகல், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, மார்பளவுள்ள 2  புகைப்படங்கள் ஆகியவற்றுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தை அலுவலக வேலை நாட்களில் தொடர்பு கொள்ளலாம்.


பழுது நீக்க பயிற்சி!

இந்தியாவில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மக்களும் இரு சக்கர வாகனங்கள் மட்டுமல்லாது, நான்கு சக்கர வாகனங்களையும் அதிக அளவுக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

உலக நாடுகளிலேயே மிகப்பெரிய துறையாக இருப்பது இந்திய ஆட்டோமொபைல் தயாரிப்பு துறையாகும்.   இத்தகைய சூழ்நிலையில் நாடு முழுவதும் வாகன பழுதுகளை நீக்கவும், சர்வீஸ் செய்து தரவும் போதுமான மெக்கானிக்குகள் இல்லை.  வாகனங்களின் விற்பனை செய்யும் நிறுவனங்களுடைய சர்வீஸ் மய்யத்திற்கு சென்றுதான் பழுதை நீக்க வேண்டியிருக்கிறது.

இத்தகைய சூழ்நிலையில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகன பழுதுநீக்கும் பயிற்சி முடித்தவர்களுக்கு தற்போது அதிக வாய்ப்புகள் காத்திருக்கின்றன.    ஆட்டோமொபைல் பயிற்சி வழங்கும் பல்வேறு நிறுவனங்கள் இந்தியாவில் இயங்கி வருகின்றன.  இப்பயிற்சி பெற விரும்புபவர்கள் அந்த நிறுவனங்களை அணுகி தகவல் பெறலாம். பயிற்சி வழங்கும் சில நிறுவனங்கள்:

Automotive Research Association of India - https:araiindia.com,  SGS INDIA - http:www.sgsgroup.in, Toyota india - http:www.toyotabharat.com / toyota-in-india / ttep

Banner
Banner