இளைஞர்

தைவானில் நானோ தமிழன்

எங்கு திரும்பினாலும் பசுமையான மலைத் தொடர் களால் மனதைக் கொள்ளை அடிக்கும் தைவான் தேசம் அதன் ஹைடெக் தொழில்நுட்பத்தாலும் பிரமிக்க வைக்கிறது. அதிலும், அதன் தலைநகரமான தைப்பே செல்லமாக எலக்ட்ரானிக் சிட்டி என்றே அழைக்கப் படுகிறது. அந்த அளவுக்கு நம் கையிலும் மடியிலும் தவழும் அதிநவீனத் தொழில்நுட்பக் கருவிகளில் பெரும்பாலானவை அங்குதான் தயாரிக்கப்படுகின்றன.

தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தையும் தீர்மானிப் பவர்களில் பலர் அங்கு இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் வசந்தன் திருநாவுக்கரசு. தைவான் மண்ணில் மணக்கும் தமிழ்ப் பெயர்! திருவள்ளூர் மாவட்டம் சிறுவானூரைச் சேர்ந்தவர் வசந்தன். சென்னையில் இளநிலை பொறியியல் பட்டம், முதுநிலை நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பட்டம் பெற்ற இவர் இப்போது தைப்பேயில் நானோ எலெக்ட்ரானிக்ஸில் முனைவர் பட்ட ஆராய்ச்சியாளர்.

எல்லாமே ஸ்மார்ட்

உலகைப் புரட்டிப்போட்ட தொழில்நுட்பங்களில் முக்கியமானவை கணினியும் மொபைலும். இப்போது அவற்றையும் தாண்டிப்போகும் காலம் வந்துவிட்டது. இன்டர்னெட் ஆஃப் திங்க்ஸ் என்பதுதான் அது. இன்னும் சில ஆண்டுகளில் நாம் பயன்படுத்தும் அத்தனைப் பொருள்களும் ஸ்மார்ட் டெக்னாலஜியால் இணைக்கப் படும். மொபைல் என்பது ஒரு பட்டன் அளவுக்குச் சுருங்கிவிடும். அவ்வளவு ஏன் கருவியே இல்லாமல் சென்ஸார் மூலமாக அத்தனையும் இயக்கலாம்.

உதாரணத்துக்கு நம் வீட்டில் உள்ளன அத்தனை பொருள்களையும் ஸ்மார்ட் சென்ஸார், ஸ்மார்ட் ஃபோன் மூலமாக இணைத்துவிடலாம். அதேபோல வெர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பமும் அதிவேகமாக வளர்கிறது. இதன் மூலம் எங்கேயோ இருக்கும் நபரோடு உரையாடும் போது அவர் நம் அருகிலேயே இருப்பதுபோன்ற பிம்பத்தைக்கூட உருவாக்கலாம். இவை அனைத்தையும் நானோ தொழில்நுட்பம் மூலமாகக் கொண்டுவருவதற்கான ஆராய்ச்சிகள் இப்போது நடந்துகொண்டிருக்கின்றன என்கிறார் வசந்தன்.

அடுத்த தலைமுறை தொழில்நுட்பம்

எலெக்ட்ரானிக்ஸில் மட்டுமல்ல இயற்பியல், வேதி யியல், உயிரியல் உள்ளிட்ட துறைகளையும் ஆட்சி செய்யப்போவது நானோ தொழில்நுட்பம்தான். அதிவேக மாகவும், அதிநுட்பமாகவும் செயல்படும் நானோ தொழில் நுட்பத்தைச் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காத வகையிலும் உருவாக்க வேண்டும் என்கிற பார்வையும் கொண்டிருக்கிறார் இவர்.

நாம் உபயோகிக்கும் எலக்ட்ரானிக் கருவிகளின் உயிர்நாடி டிரான்ஸிஸ்டர் எனப்படும் நுண்ணிய பொருள். அதை நானோ மின்னணு மூலமாக ஆராய்ந்து அடுத்த தலைமுறைக்கான தொழில்நுட்பத்தை உருவாக்க முயன்றுவருகிறார்.

20 ஆண்டுகளுக்கு முன்னால் அமெரிக்காவில் ஒரு ஆராய்ச்சி மாணவர் கண்டு பிடித்ததுதான் 14 நானோமீட்டர் இண்டெக்ரேட்டட் ஸர்க்யூட்ஸ் நானோ டெக்னாலஜி . இன்றைக்கு அதிநவீனத் தொழில்நுட்ப வளர்ச்சி அதுதான். இதற்கு மேலே கொண்டு செல்ல 3 நானோமீட்டர் அளவிலான டெக்னாலஜியை உருவாக்க நான் ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறேன் என்கிறார்.

காத்திருக்கிறது தைவான்!

2011-ல் சென்னையில் எம்.எஸ். நானோ டெக்னாலஜி படிக்கும்போது திருவண்ணாமலையில் நடைபெற்ற ஒரு சர்வதேசக் கல்வி மாநாட்டில் அவர் தன் ஆராய்ச்சித் தாளை வாசித்தார். அப்போது தைவான் சார்பில் பங்கேற்ற ஒரு பேராசிரியர் வசந்தின் திறமையை அடையாளம் கண்டு தைவானிலேயே முனைவர் பட்ட ஆராய்ச்சி செய்ய அழைத்தார். அதை அடுத்து மும்பை அய்.அய்.டி-ல் ஆறு மாதம் தேசிய அளவிலான ஆராய்ச்சி இன்ட்ர்ன்ஷிப் செய்ய வசந்தத் தேர்ந்தெடுக்கப்பட்டது அவருக்கு ஏற்றம் தந்தது.

அடுத்தபடியாக தைவானின் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒன்றான அகடமியா சினிகா  நடத்திய இன்ட்ர்ன்ஷிப் தேர்வில் 20 நாடுகளிலிருந்து பங் கேற்றவர்களில் இந்தியாவிலிருந்து இருவர் தேர்வா னார்கள். அவர்களில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்த வசந்தன். இதன்மூலம் இந்திய மதிப்பில் மாதந்தோறும் 68 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகையுடன் நானோ தொழில்நுட்பத்தில் பிஎச்.டி. செய்யும் மிகப் பெரிய வாய்ப்பு வசந்தனுக்கு கிடைத்தது.

உலகக் கல்வி அரங்கில் அங்கீகரிக்கப்பட்ட ஆய் விதழ்களில் வசந்தின் மூன்று கட்டுரைகள் இதுவரை பிரசுரிக்கப்பட்டுள்ளன. கல்வியில் மட்டுமல்லாமல் தைவான் தமிழ்ச் சங்கத்தின் முக்கிய உறுப்பினர், தைவான் வெளிநாட்டு மாணவர்கள் சங்கத் தலைவர் எனப் பொது விஷயங்களிலும் அசத்துகிறார் வசந்த். முனைவர் பட்டம் முடித்துவிட்டுத் தமிழகத்துக்கே திரும்பி வந்து சுயமாகத் தொழில் தொடங்குவதே தன் லட்சியம் என்கிறார்.

இந்திய இளைஞர்களுக்குத் தைவானில் சம்பளத்துடன் கூடிய கல்வி காத்திருக்கிறது.  ‘Taiwan Thamizh Sangam’, ‘Indians in Taiwan’
என்கிற ஃபேஸ்புக் பக்கங்களில் பதிவிடுங்கள். தைவானில் உங்களுக்குத் தேவையான வழிகாட்டுதலை அளிக்க நான் காத்திருக் கிறேன். சரிஇன்னும் சில மணித் துளிகளில் நான் ரன் செய்த நானோ புரோகிராமுக்கான டீபக்கிங் ரிசல்ட் வந்திடும். அதைப் பார்த்துவிட்டு அடுத்தகட்ட ஆராய்ச் சிக்குத் தயாராகணும் எனச் சுறுசுறுப்பாகப் புறப்பட்டார் நானோ தமிழன்.

கரூர் வைஸ்யா வங்கியில்
கிளார்க் தேர்வு:
பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

கரூர் வைஸ்யா வங்கியில் காலியாக உள்ள எழுத்தர் மற்றும் பல்வேறு பணிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதி யானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: கிளார்க்குகள்.

கல்வித்தகுதி: 60% அல்லது அதற்கு மேலான மதிப்பெண்கள் தேர்ச்சியுடன் ஏதேனும் ஒரு பட்டம். 3ம் ஆண்டு படித்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆனால் அவர்கள் எந்த அரியர்ஸ் இல்லாமல் 60% மதிப்பெண் தேர்ச்சியுடன் 5வது செமஸ்டர் வரை பாஸ் செய்திருக்க வேண்டும். அஞ்சல்வழியில் பட்டம் பெற்றவர்கள் அல்லது திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க இயலாது.

வயது: 1.1.2017 அன்று குறைந்தபட்சம் 19 வயதிலிருந்து 26க்குள். முதுநிலை பட்டதாரிகள் 28க்குள் இருக்க வேண்டும். (அதாவது முதுநிலை பட்டதாரி விண்ணப்பதாரர்கள் 2.1.1989க்கு முன்னரோ, பட்டதாரி விண்ணப்பதாரர்கள் 2.1.1991க்கு முன்னரோ, 1.1.1998க்கு பின்னரோ பிறந்திருக்கக் கூடாது).

விண்ணப்ப கட்டணம்: ரூ.500. அனைத்து விண்ணப்பதாரர்களும் கட்டணத்தை செலுத்த வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு எந்த சலுகையும் கிடையாது. கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும். வேறு எந்த வகையிலும் கட்டணத்தை செலுத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

Reasoning, English Language, Quantitative Aptitude, General Awareness (With special reference To Banking), Computer Knowledge
ஆகிய பிரிவுகளில் மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும். தவறான விடைகளுக்கு 0.25 மதிப்பெண்கள் கழிக்கப்படும்.

ஆன்லைன் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, விழுப்புரம் ஆகிய இடங்களில் ஆன்லைன் எழுத்துத்தேர்வு நடைபெறும். தேர்ந்தெடுக்கப்படுவர்கள் 6 மாதங்கள் தகுதிகாண் பருவத்திற்கு பின்னர் ஆண்டுக்கு ரூ.3.50 லட்சம் சம்பளத்தில் கிளார்க்குகளாக பணியில் அமர்த்தப்படுவர்.

விண்ணப்பதாரர்கள் www.kvb.co.in  என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.11.2016.

சிவில் விமான போக்குவரத்து துறையில் வேலைவாய்ப்பு

அடுத்த பத்து ஆண்டுகளில் 60 லட்சம் இந்திய இளைஞர்களுக்கு ஒரு குறிப்பிட்ட துறை மட்டுமே வேலை தரத் தயாராகிக்கொண்டிருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? சிவில் ஏவியேஷன் எனப்படும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறைதான் அது.

ராணுவச் செயல்பாட்டுக்காக அல்லாமல் பொதுமக்கள் பயணிக்கவும், சரக்குகளை விமான மூலமாகக் கொண்டு செல்லவும் இயங்குவதுதன் சிவில் விமானப் போக்கு வரத்துத் துறை.

இதில் ஸ்கில் இந்தியா திட்டத்தின் கீழ் நேரடியாக 10 லட்சம் பேருக்கும் அதனோடு தொடர்புடைய துறைகளில் 50 லட்சம் பேருக்கும் வேலை காத்திருக்கிறது.

இது அடுத்த பத்து ஆண்டுகளில் சாத்தியமாகும் என சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜெயந்த் சின்ஹா சமீபத்தில் கூறியுள்ளார். இந்திய இளைஞர்களின் பொருளாதார நிலைமையை அடுத்த கட்டத்துக்கு உயர்த்த இந்த வேலைவாய்ப்பு பெரிதும் கைகொடுக்கும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார். மேலும் இத்துறை விரிவ டையும் என்பதால் வளர்ச்சிப் பாதையில் முக்கியம் இடம் வகிப்பதாகத் தெரிவித்திருக்கிறார். இந்தியாவில் மட்டுமல் லாமல் உலகெங்கிலும் இந்தத் துறையில் வேலை வாய்ப்பு காத்திருக்கிறது என்கிறார்.

வேலைக்கு ஏற்றத் தகுதி?

இதைக் கேட்கும்போதே பறந்து செல்வது போன்ற உற்சாகம் எழுகிறதல்லவா! ஆனால், முதலில் இத் துறைக்குத் தேவையான திறன் மிக்க மனித ஆற்றலை  உருவாக்குவதற்கான திட்டமும் செயல்வடிவமும் நம்மிடம் இருக்கிறதா? எந்த நாட்டிலும் வேலை கிடைக்க வேண்டுமென்றால் அதற்குரிய உலகத் தரம் வாய்ந்த பயிற்சியும் திறனும் அத்தியாவசியம்.

இதைச் சரியாக உணர்ந்து அக்டோபர் இறுதியில் புது டில்லியில் நடைபெற்ற பயிலகம் ஒன்றில் சிறப்பு உரை ஆற்றிய ஜெயந்த சின்ஹா அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற திறன் வளர்ச்சி மற்றும் தொழில் முனைவோர் துறையின் அமைச்சர் ராஜிவ் பிரதாப் ரூடியுடன் விரிவாகக் கலந்துரையாடினார்.

தேசியத் திறன் தகுதி கட்டமைப்பின் கீழ் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் திறன் வளர்ப் பதற்கான விழிப்புணர்வுப் பயிலரங்கமாக அது நடை பெற்றது. அதில் விவாதிக்கப்பட்ட பல விஷயங்களில் முக்கியமானது, இன்றைய இளைஞர்களை வேலைக்குத் தகுதியானவர்களாக மாற்ற 1,500 விதமான புதிய பாடத் திட்டங்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும், எனச் சொல்லப்பட்டது. இந்தியா முழுவதும் ஏற்றுக்கொள்ளும் படியான தரமான, நிலைத்தன்மை உடைய பாடங்களைத் தேசியத் திறன் தகுதிக் கட்டமைப்பில் கொண்டுவரு வதற்காகப் பெரும் முயற்சிகள் எடுக்கப்படுவதாகவும் விவாதிக்கப்பட்டது.

வேலை செய்து கொண்டே யூபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்றேன்

அய்.டி. துறையில் வேலை செய்து கொண்டே யூ.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்றுள்ளார் ஆர்.சதீஷ் குமார். இவருக்கு 2010 ஆம் ஆண்டு பேட்ச்சில் அய்.பி.டி.ஏ.எஃப்.எஸ். எனும் இந்தியத் தபால் மற்றும் தொலைத் தொடர்பு கணக்கு மற்றும் நிதி பணி IP&TAFS-
Indian Postal and Telecom Accounts and Finance Service) கிடைத்துள்ளது. இவர் தற்போது கர்நாடக வட்டத்தின் தொலைத்தொடர்பு கணக்கு கட்டுப்பாட்டாளர் பிரிவின் பெங்களூரு அலுவலக இணை தொலைதொடர்பு கணக்கு கட்டுப்பாட்டாளராகப் (Joint Controller of Communication Accounts பணியாற்றுகிறார். இதற்கு முன் கர்நாடக வட்ட அஞ்சல் துறையின் உதவி தலைமை கணக்காளராகப் பணியாற்றினார்.

சிறுவயதிலேயே தந்தை காலமானதால் தாயால் சிரமப்பட்டு வளர்க்கப்பட்டார் சதீஷ் குமார். சேலத் தைச் சேர்ந்த இவர் கோயம்புத்தூர் தொழில்நுட்பக் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் படித்தார். அப்போது வளாகத் தேர்வில் அய்.டி. பெரு நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அங்கு ஆறு ஆண்டு வேலை செய்தபடியே யூ.பி.எஸ்.சி. தேர்வு எழுதினார்.

2006ஆம் ஆண்டும் அடுத்த ஆண்டும் முயன்றபோது முதல்நிலையில்கூட வெல்ல முடியவில்லை. பிறகு ஒரு ஆண்டு இடைவெளி விட்டு எடுத்த மூன்றாவது முயற்சியில் அய்.பி.டி.ஏ.எஃப்.எஸ். கிடைத்தது.

இனியும் அம்மா குடும்பப் பாரத்தைச் சுமக்கக் கூடாது என்பது மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. அதனால், அய்.டி. வேலை கிடைத்ததும் சேர்ந்துவிட்டேன்.

அதில் அமெரிக்கா செல்லும் வாய்ப்பு கிடைத்தபோது என்னு டைய உழைப்பு தாய்நாட்டுக்கு கிடைக்க வேண்டும் எனத் தோன்றியது. யூ.பி.எஸ்.சி. எழுத முடிவெடுத்தேன்.

வரலாறு பிடித்த பாடம் என்பதால் அதையும், பணியின் தேவைக்காகப் பொது நிர்வாகமும் விருப்பப் பாடமாக எடுத்தேன். ஆனால்,  வழிகாட்ட வேண்டியும் யாரையும் அணுக வில்லை. நேர்முகத் தேர்வுக்கு மட்டும் ஒரு அறக்கட்டளை நடத்திய பயிற்சி நிலையத்தில் இரு மாதிரித் தேர்வுகளில் கலந்து கொண்டேன். வார இறுதியில் கிடைத்த இரண்டு நாள் விடுமுறை மற்றும் அன்றாடம் இரவு இரண்டு மணி நேரம் படித்தேன்.

பள்ளி மற்றும் கல்லூரியில் வினா - விடை போட்டியில் கலந்து கொண்டதால் அன்றாட செய்திகள் மீதும் அதிகக் கவனம் இருந்தது. ஒவ்வொரு புத்தகக் கண்காட்சிக்கும் தவறாமல் சென்று, பொது அறிவு நூல்களையும் படித்தது பயன் அளித்தது என்கிறார் சதீஷ் குமார்.

பல பணிகள் உள்ளன

வழக்கமாகப் பலரும் செய்வதைப் போல சதீஷும் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.எஃப்.எஸ்., அய்.ஆர்.எஸ். தவிர யூ.பி.எஸ்.சி.யில் மற்றவற்றின் விவரம் அறிந்து குறிப்பிடவில்லை. இந்தப் பிரச்சினையைத் தவிர்க்க கடந்த இரண்டு ஆண்டுகளாக மத்திய அரசு பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் இணையதளத்தில் 24 பணி களின் விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

எனவே, இனி குடிமைப்பணி தேர்வு எழுதுபவர்கள் அதைப் படித்து அறிந்த பின்னர் தனது விருப்பங்களை விண்ணப்பத்தில் குறிப்பிடலாம்.

சதீஷுக்கு தனது  தரிவரிசைபடி கிடைத்த அய்.பி.டி.ஏ. எஃப்.எஸ்-இல் இணைந்த பின்னரே அது பற்றிய விவரம் தெரிந்தது.

வெற்றியின் ரகசியம்

பள்ளி நாட்கள் முதல்  பல ஆங்கில பத்திரிகைகளையும் படித்த பலன் ஆங்கிலத்தில் எழுதும் திறனை தனக்கு அளித்தது என்கிறார் சதீஷ்.  கல்லூரிக் காலத்தில் உலக வரலாறு குறிப்பாக உலகப் போர்கள் தொடர்பான வர லாற்று நூல்களை ஆர்வமாக படித்தது பின்பு கைகொடுத்தது.  அய்.டி. நிறுவனப் பணியின் போது பல வாடிக்கை யாளர்களிடம் பேசிய அனுபவம் இருந்ததால் தயக்கம் இல்லாமல் நேர்முகத் தேர்வை எதிர்கொண்டார்.

எப்போதுமே மேலோட்டமாகவோ மனப்பாடம் செய்தோ படிப்பது அவருக்குப் பிடிக்காது. ஒரு பாடத்தை ஒரு நாள் படித்தாலும் அதனோடு சம்பந்தப்பட்ட அத்தனை விஷயங்களையும் தேடிப் படித்தது எழுத்து மற்றும் நேர்முகத்தேர்வில் அதிகம் உதவியது என்கிறார் சதீஷ்.

கடலோரக் காவல் படையில் வேலை

ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளைத் தொடர்ந்து இந்திய பாதுகாப்புத்துறையின் 4ஆவது தூணாக திகழ்கிறது. நாட்டின் கடலோரப் பகுதிகளைப் பாதுகாப்பதுடன், கடல் மார்க்கமாக நடக்கக் கூடிய போதைப்பொருள் கடத்தல்களைத் தடுப்பது, கடலில் தத்தளிக்கும் கப்பல்கள் மற்றும் மீனவர்களை மீட்பது போன்ற பணிகளில் கடலோரக் காவல்படையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

தேவையான தகுதி

இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த இந்தியக் கடலோரக் காவல் படையில், நாவிக் என்ற பணிக்கு ஆள்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்தப் பணிக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

தேசிய அளவில் சாதனை படைத்த விளையாட்டு வீரர்களாக இருந்தால் 55 சதவீத மதிப்பெண் போதுமானது. வயது 18 முதல் 22-க்குள் இருக்க வேண்டும். மத்திய அரசின் இடஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, ஓ.பி.சி. வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

தகுதியானோர் 10ஆம் வகுப்பு மதிப்பெண், எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் திறன், மருத்துவ தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப் படுவார்கள். உரிய கல்வித் தகுதியும் வயது வரம்புத் தகுதியும் கொண்டவர்கள் நவம்பர் 20ஆம் தேதிக்குள் ஆன்லைனில் (www.joinindiancoastguard.gov.in) விண்ணப்பிக்க வேண்டும். எழுத்துத்தேர்வு, உடற்திறன் தேர்வு, சம்பளம் மற்றும் சலுகைகள் தொடர்பான விவரங்களைக் கடலோர காவல்படையின் இணையதளத்தில் விரிவாக தெரிந்துகொள்ளலாம்.


பட்டதாரிகளுக்கு ரிசர்வ் வங்கியில்  உதவியாளர் பணியிடங்கள்

இந்திய ரிசர்வ்  வங்கியில் 2016 -ஆம் ஆண்டிற்கான 610 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 610

பணி: பணி இடம்: இந்தியா முழுவதும்

தகுதி: 50 சதவீகித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
காலியிடங்கள் விவரம்:

1. அகமதாபாத் - 30,  2. பெங்களூரு - 35, 3. போபால் - 40, 4. புவனேஸ்வர் - 20, 5. சண்டிகர் - 38, 6. சென்னை - 25, 7. கவுகாத்தி - 27 8. அய்தராபாத் - 31, 9. ஜெய்ப்பூர் - 20, 10. ஜம்மு - 10,  11. கான்பூர் மற்றும் லக்னோ - 52, 12. கொல்கத்தா - 35,  13. மும்பை - 150, 14. நாக்பூர் - 20, 15. புதுடில்லி - 25, 16. பாட்னா - 22, 17. திருவனந்தபுரம் & கொச்சி - 30, சம்பளம்: மாதம் ரூ.13,150 - 34,990 வயதுவரம்பு: 08.11.2016 தேதியின்படி 20 - 28க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: முதன்மை, முதல்நிலை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப் படுவார்கள். விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவின ருக்கு ரூ.450. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.50. ஆன்லைனில் விண்ணப்ப, கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 28.11.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய :http://indiajobvacancy.com என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளவும்.

Banner
Banner