இளைஞர்

புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க பெரியவர்களால் மட்டுமல்ல, இளையோ ராலும், சிறுவர்களாலும் முடியும் என்பதற்கு எத்தனையோ முன்னுதாரணங்கள் உள்ளன.

இளையோரின் உத்திகளை அவ்வப்போது தூண்டி, அவர்களின் பயனுள்ள யோசனை களைப்   பயன்பாட்டுக்குக் கொண்டுவர, சர்வதேச நாடுகள் பல முன்னெடுப்புகளில் ஈடுபட்டுள்ளன.

இதற்காக, அரசு மற்றும் தனியார் ஆய்வு நிறுவனங்கள், உயர் கல்வி நிறுவனங்கள் பல திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வரு கின்றன.

அவற்றில் ஒன்றுதான், நம் நாட்டின் மேற்கு வங்க மாநிலம், காரக்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் இளம் விஞ்ஞானிகள் திட்டம்.

இந்த நிறுவனத்தின் மாணவ அமைப்பாகச் செயல்பட்டு வரும் இந்தப் பிரிவு இளம் விஞ்ஞானிகளை உரு வாக்கவும், ஊக்கு விக்கவும் கடந்த ஆண்டு (2017) முதல் இந்தத் திட்டத்தின் கீழ் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டியை நடத்தி வருகிறது.

இந்தப் போட்டியில் நாடு முழுக்க உள்ள அனைத்துப் பள்ளிகளைச் சேர்ந்த 8, 9, 10 ஆம் வகுப்பு மாணவர்கள் 2 அல்லது 3 பேர் கொண்ட ஒரு குழுவாகப் பங்கேற் கலாம்.

போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் தூய சக்தி, சுகாதாரம் மற்றும் தூய்மை, வள மேலாண்மை, வன்பொருள் மாதிரி அமைப்பு, தயாரிப்பு வடிவமைப்பு, பேரழிவு மேலாண்மை ஆகிய பிரச்சினைகளில் புதிய தீர்வுகளைக் கண்டறிந்து அவற்றை திட்ட அறிக்கையாக போட்டி அமைப்பிடம் சமர்ப்பிக்க வேண்டும். 4 சுற்றுகளைக் கொண்ட இந்தப் போட்டியில் 3ஆவது சுற்றுக்கு (அரையிறுதி) தேர்ந்தெடுக்கப்படும் பள்ளி மாணவர்கள் வளாகத்துக்கு அழைக்கப் பட்டு, தங்கள் கண்டுபிடிப்பு குறித்த செயல் விளக்கம் அளிக்கக் கோரப்படுவர். இதில், தேர்வாகும் மாணவர்கள் இறுதிச் சுற்றில் பங்கேற்பர். அவர்களில் இருந்து முதல் 3 இடங்களைப் பெற்ற பள்ளிகளை நடுவர் குழு தேர்ந் தெடுக்கும்.

இளம் விஞ்ஞானிகள் திட்டத்தின் நிகழாண்டு போட்டியில், இந்தியா மற்றும் சிங்கப்பூரில் இருந்து 2000 பள்ளிகள் பங்கேற்றன. இதில், திருச்சி செல்லம்மாள் வித்யாலயா,   உள்ளிட்ட 24 பள்ளிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றன.

இந்தப் பள்ளி மாணவர்கள் தங்களது கண்டுபிடிப்புகளுடன் - வளாகத்துக்கு வந்து நடுவர்கள் முன்னிலையில் செயல் விளக்கம் அளித்தனர்.

இதிலிருந்து மிகச் சிறந்த 6 பள்ளிகள் இறுதிச்சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டன. இறுதிச்சுற்று கடந்த அக்டோபர் மாதம் 27, 28 ஆம் தேதிகளில் நடைபெற்றது.

இதில், சட்டீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் உள்ள காங்கேர் வேலி அகாதெமி பள்ளி மாணவர்கள் பரிநீதி புரா, மன்வீர்சிங் ஆகியோர் கண்டுபிடித்த குறைந்த செலவில், வீட்டிலேயே தயாரிக்கப்படும் மூலிகை சுவாச வடிகட்டி முதலிடத்தை வென்றது.

அதே போல, ஆந்திர மாநிலம், குண்டூரைச் சேர்ந்த கிராஸ்வோர்ட் பள்ளி மாணவர்கள் ஹேமசிறீவாணி, விஸ்ணுதேஜா, சுடன்ஷூ ஆகியோர் உருவாக்கிய சாலைக் குழிகளை உடனடியாக சரிசெய்யும் மின்னணு கருவி   இரண்டாமிடத்தை வென்றது.

மேலும், ஜார்கண்ட் மாநிலம், ஜாம்சேத் பூரைச் சேர்ந்த தாராபூர் பள்ளி மாணவர்கள் அதிதி சாஹே, சுடிபா பட்டாச்சார்ஜி ஆகியோர் கண்டுபிடித்த சூரிய மற்றும் மீயொலி உணரி களை வைத்து கழிவுகளைக் கையாளும் ஸ்மார்ட் கழிவு மேலாண்மை கருவி மூன் றாவது இடத்தைப் பிடித்தது.

இவற்றோடு   பள்ளியின்    செயல்திட்டங்கள் மாணவர்களின் உயர்சிந்தனைகளின் வெளிப் பாடாக அமைந்திருந்தன. செயல்திட்டங்களின் உண்மைத் தன்மை, சமூக தாக்கம், வழங்கல் தரம், ஒட்டுமொத்த திட்ட உத்தி ஆகியவை மதிப்பீடு செய்யப்பட்டு சிறந்த கண்டு பிடிப்புகள் தேர்வுசெய்யப்பட்டன.

இந்தத் திட்டத்தில் நிகழாண்டு 35 சதவீத மாணவிகள் பங்கேற்றது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்தப் போட்டி இவ்வளவு முக்கியத்துவம் பெற, இதன் மதிப்பீடுகள் அனைத்தும் சர்வதேச அளவில் அமைந்ததும் முக்கிய காரணம்.

வேலை வாய்ப்புகளை அறிந்து கொள்வதற்காக மத்திய அரசு நேசனல் கேரீர் சர்வீஸ் என்ற இணையதளத்தைத் தொடங்கி அதனைப் பயன் பாட்டில் வைத்துள்ளது.

வேலை தேடுவோரையும், வேலை தருபவர் களையும் ஒருங்கிணைத்து வேலை வாய்ப்புகள் எங்குள்ளன என்பதைத் தெரியப்படுத்தும் வகையில் மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை சார்பாக இந்த இணைய தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்ல,  அந்த இணையதளத்தில் வேலை வாய்ப்பு முகாம்கள் நடைபெறும் தேதி, இடம் ஆகியவை குறித்த தகவல்களும் அவ்வப் போது பதிவு செய்யப்படுகின்றன.

வேலை வாய்ப்புக்கான “மாடல் கேரீர்” மய்யங்கள் நாடு முழுவதும் 107 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.  அவை குறித்த தகவல் களும் அந்த இணைய தளத்தில் உள்ளன.  தமிழ் நாட்டில் சென்னை, வேலூர் கோவை ஆகிய இடங்களில் “மாடல் கேரீர்” மய்யங்கள் இயங்கு கின்றனர்.

அந்த “மாடல் கேரீர்” மய்யங்கள் மூலம் வேலை தேடு பவர்கள் தங்களுக்குத் தேவையான ஆலோசனைகளைப் பெறலாம்.   மேலும் திறன் மேம்பாட்டு  பயிற்சி வழங்குபவர்கள் குறித்த தகவல்களும் இந்த இணையதளத்தில் உள்ளன.

மேலும் விவரங்களுக்கு :https://www.ncs.gov.in/Pages/default.aspx

தேசிய அளவில் பள்ளி ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் போட்டியான சென்டா (சிஇஎன்டிஏ டிபிஓ), இந்த ஆண்டும் நடைபெறவுள்ளது.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறந்த ஆசிரியர் விருதுகள், பிரகாசமான சர்வதேசப் பயிற்சி வாய்ப்பு களுடன் இது விரிவுபடுத்தப்பட்டுள்ளது. தி இந்து ஆங்கில இதழ் வழங்கும் சிஇஎன்டிஏ டீச்சிங் புரொபசனல்ஸ் ஒலிம்பியாட் நான்காவது தேர்வு இந்த முறை தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி, சேலம் உட்பட இந்தி யாவில் 41 நகரங்களிலும் அய்க்கிய அரபு எமிரேட்ஸ் குடியரசிலும் நடைபெறவுள்ளன.

தமிழ்நாட்டைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர்கள் 21 பாட வழிகளிலிருந்து தங்கள் பாடத்தைத் தேர்வு செய்யலாம். தொடக்கப் பாடவழியில் மொழி, கணிதம், இவிஎஸ் ஆகியவை இருக்கும். தமிழ், ஆங்கிலம், இந்தி, கன்னடம், மராத்தி, தெலுங்கு மொழிகளிலும் தேர்வை எழுதலாம். எஞ்சிய செகண்டரி, சீனியர் செகண்டரி ஆகியவற்றை ஆங்கிலத்திலேயே எழுத வேண்டும்.

சிஇஎன்டிஏ டிபிஓ தேர்வு நெகட்டிவ் மதிப்பெண் இல்லாமல் இரண்டு மணி நேரம் நடத்தப்படும். பயிற்சியை அடிப்படையாகக் கொண்ட தேர்வு இது. சிறந்த ஆசிரியர்களுக்கு அங்கீகாரம் அளிக்கவும் பரிசளிக்கவும் கொண்டாடுவதற்கும் சிஇஎன்டி ஏவுடன் முதன்மைப் புரவலராக ரிலையன்ஸ் அறக்கட்டளையும் சேர்ந்துள்ளது. இந்த ஒருங் கிணைப்பின் ஓர் அங்கமாக இத்தேர்வில் வெற்றி பெறுபவர்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரி யர்கள் பணமுடிப்பு மற்றும் பட்டயத்தைச் சேர்த்துப் பெறுவார்கள்.

ரிலையன்ஸ் அறக்கட்டளை ஆசிரியர் விரு துகள், தேசிய அளவில் சிறந்த அய்வருக்கு வழங்கப்படும். ஒவ்வொருவரும் ஒரு லட்சம் ரூபாய் பெறுவார்கள். பிராந்திய அளவில் சிறந்த ஆசிரி யர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் பரிசளிக்கப்படும். நகர அளவில் சிறந்த ஆசிரியர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். தரமதிப்பீட்டில் சிறந்த 900 ஆசிரியர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் பரிசு தரப்படும். பி.எட் மாணவர்களுக்குச் சிறப்புப் பரிசுகள் உண்டு.

ஆசிரியர் பணிக்கு ஆசைப்படுபவர்கள் உட்பட, பள்ளி ஆசிரியர்கள், முதல்வர்கள், பி.எட்., டி.எட். மாணவர்கள், கல்விப் பணியில் இருப்பவர்கள், பெற்றோர்கள்கூட இந்தத் தேர்வில் பங்கேற்கலாம்.

தேர்வுக்கு நவம்பர் 26ஆம் தேதிவரை விண் ணப்பிக்கலாம். தேர்வு டிசம்பர் 8 அன்று நடை பெறும். விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி:www.centa.org.

இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாவலர் பதவிக்கான 270 காலிப் பணியிடங்களை நிரப்பு வதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. முன்னாள் ராணுவத்தினர் இதற்கு விண் ணப்பிக்கலாம். ஆன்லைன் தேர்வு, உடற்தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படு வார்கள். டிசம்பர் 2018 அல்லது ஜனவரி 2019இல் ஆன்லைன் தேர்வு நடத்தப்படும்.

வயது: 01.11.2018 அன்று பொதுவாக 25 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும். ஓ.பி.சி. பிரிவினர் 28 வயதுக்குள்ளும், எஸ்.சி./எஸ்.டி. பிரிவினர் 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். ராணுவ சேவையைப் பொறுத்து உச்சபட்ச வயது 45-க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் படித்து பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.50.

விண்ணப்பிக்க: உரிய தகுதியுடைய விண்ணப்ப தாரர்: https://ibpsonline.ibps.in/rbirsgoct18/  என்னும் இணையதளத்தில் நவம்பர் 30-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க இறுதி நாள்: 30.11.2018

தமிழக காவிரி டெல்டா விவசாயிகளுக்கு, செல்வகுமாரின் காந்தக்குரல்  மிகப் பழக்க மானதாகவே தற்போது மாறிவிட்டது. அந்த அளவுக்கு வானிலையைக் கணித்து விவ சாயிகளை வழிநடத்திவருகிறார் மன்னார்குடி யைச் சேர்ந்த ஆசிரியரான ந.செல்வகுமார். நிமிடத்துக்கு நிமிடம் வானிலைத் தகவல்களை  இணையத்தின் உதவியோடு ஆராய்ந்து மக்களுக்குக் கூறிவரும் இவரது சேவையைப் பாராட்டாதவர்களே இல்லை.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்துள்ள தகட்டூரைச் சேர்ந்தவர். சிறு வயதிலேயே வானிலைத் தகவல்களை உற்றுநோக்குவதில் ஆர்வம் கொண்டவர்.

தி இந்து ஆங்கில நாளிதழில் வருகிற வானி லைப் படங்களைப் பார்த்து  கணித்துள்ள படி மழை பெய்துள்ளதா என ஆராயத் தொடங் கியதுதான் இவரது வானிலை ஆர்வத்துக்கு முதல் படி.

அந்தத் தகவல்களை ஒரு தாளில் எழுதி தகட்டூரில் தந்தை நடத்திவந்த உணவகத்தில் ஒட்டி வைப்பதை வழக்கமாகக் கொண்டி ருந்தார். அதைப் பார்த்துச் செல்லும் விவ சாயிகள் எழுப்பும் சந்தேகங்களுக்கு விடை தேடும் முயற்சியே இன்று வானிலை ஆர்வலராகவும், அதைக் கணிப்பவராகவும் மாற்றியுள்ளது.

ஆசிரியர் பயிற்சி முடித்த பின்னர், அரசு வேலை கிடைக்கும்வரை 1994ஆம் ஆண்டு வாக்கில் ஆந்திராவில் உள்ள காக்கிநாடாவில் இறால் குஞ்சுகள் பொரிப்பகம் நிர்வகிக்கும் பணியில் இருந்தார். இறால் குஞ்சுகள் பொரிப் பகத்துக்குத் தேவையான நல்ல தண்ணீரைச் சேகரிக்கக் கடலோரத்தில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் இடத்தைத் தேர்வு செய்வது இவரது முக்கியப் பணியாக இருந்தது. இதற்காக காக்கிநாடா துறைமுகத்தில் உள்ள கடல்சார் ஆராய்ச்சியாளர்களிடம் பழகியது அவரது வானிலை அறிவை  வளர்த்துக் கொள்ள வழி அமைத்துக் கொடுத்தது.

புயல் கணிப்பு

அந்த ஆண்டு சூப்பர் புயல் குறித்த எச்சரிகையை வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவிக்கும் முன்பே, தான் பணியாற்றிய பகுதியில் உள்ள தேநீர்க் கடைகளில் நண் பரின் உதவியுடன் இந்தியிலும் ஆங்கிலத் திலும் தமிழிலும் எழுதி வைத்து அசத்தினார். அவரது கணிப்பு உண்மையானது. காக்கி நாடாவை சூப்பர் புயல் தாக்கியது. 75-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்தனர்.

இதன்பின்னர் அவருக்கு அரசுத் தொடக்கப்பள்ளியில் 2000ஆம் ஆண்டில் ஆசிரியர் வேலை கிடைத்தது. வலங்கைமான், ஆலங்குடி, பூவனூர் என அரசுத் தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றிய இவர், தற்போது செருமங்கத்தில் பணியாற்றிவருகிறார். மன் னார்குடி அருகே மேலவாசலில்  வசித்து வருகிறார்.

ஆசிரியர் பணிக்கு இடையேயும் வானி லைத் தகவல்களைக் கணித்து வருகிற இவர், 2008ஆம் ஆண்டின் நிஷா புயல், கடலூரைத் தாக்கிய தானே புயல், சென்னை யைத் தாக்கிய வர்தா புயல், கடந்த ஆண்டு கன் னியாகுமரியைத் தாக்கிய ஒக்கிப் புயல் ஆகியவற்றை முன்கூட்டியே கணித்து இந்திய வானிலை ஆராய்ச்சி மய்யம் அறிவிக்கும் முன்பே தீவிரத்தை அறிவித்து மக்களின் பாராட்டைப் பெற்றார். அதேபோல அண்மையில் நிகழ்ந்த கேரளாவின் பேரழி வையும் முன்கூட்டியே கணித்தார்.

கஜாவுக்கு அப்புறம் என்ன?

கடந்த வாரம் டெல்டா மாவட்டங்களைப் பதம் பார்த்த கஜா புயலையும் தொடர்ந்து கணித்துவந்தார். கஜாவுக்குப் பின்னர் 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி தமிழகத்துக்கு  26ஆம் தேதிவரை மழையைக் கொடுக்கும் என்றும்,  அதன் பிறகு 29, 30, டிசம்பர் 1ஆம் தேதி அன்று வங்கக்கடலில் அதிதீவிர அல்லது சூப்பர் புயல் தமிழகத்தை நெருங்கும் எனவும் கணித்து அறிவித் துள்ளார். அது மட்டுமல்ல, வரும் ஜனவரி மாதம் வரை மழை வருவதற்கான வாய்ப்பு களையும் கணித்து வைத்துள்ளார்.

இந்திய வானிலை ஆராய்ச்சி மய்யம் மாவட்ட வாரியாக வானிலையைக் கணித்து சொல்லும்போது, இவர் டெல்டா பகுதியில் உள்ள நகரங்கள், கிராமங்களின் பெயரைக் குறிப்பிட்டு மழை பெய்யும், பெய்யாது என்று கணித்து வருகிறார். இவரை அறிந்த பலர் தங்களது குடும்ப நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகளுக்கான தேதியை முடிவு செய்யும் முன்பு  வானிலை ஒத்துழைக்குமா என கேட்ட பின்னரே தேதியைக் குறிக்கின்றனர்.

நான்கு வேளை கணிப்பு

டெல்டா பகுதிகளில் வானிலையைப் பற்றி விவசாயிகள் விவாதிக்கும்போது அங்கே செல்வகுமாரின் வானிலை அறிவிப்பைப் பற்றியும் விவாதிப்பது வழக்கமாகிவிட்டது. தமிழகத்தின் சில அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள், வேளாண்துறை அதிகாரிகளும் இவரது வானிலை தகவலுக்கு முக்கியத்துவம் கொடுத்துவருகிறார்கள்.

தற்போது தினசரி 4 வேளை வானி லையைக் கணித்து வருகிறார். இந்திய வானிலை ஆராய்ச்சி மய்யத்தின் அறிவிப்புதான் அதிகாரப்பூர்வம் என்றாலும், இந்திய வானிலை ஆய்வு மய்யம், உலக வானிலை ஆராய்ச்சி மய்யங்கள் வெளியிடுகிற ஒளிப்படங்களை வைத்துக் காற்றின் திசையைக் கணக்கிட்டு கிராம, நகர வாரியாக  வானிலையைக் கணித்து வருகிறார்.

செயலி உருவாக்கம்

ஆரம்ப காலகட்டத்தில்  வானிலைத் தகவல்களை விவசாயிகள் கூடும் தேநீர் கடைகள், பொது இடங்களில் எழுதி ஒட்டி வைத்த செல்வகுமார், இன்று செல்பேசி குறுந்தகவல் மூலம் தமிழகம் முழுவதும் ஆயிரக் கணக்கானோருக்கு அனுப்பி வரு கிறார். இதற்காகவே 20 சிம்கார்டுகளைப் பயன்படுத்தியுள்ளார்.

வாட்ஸ்அப் வசதி வந்த பிறகு  பல குழுக் கள் மூலம் தகவல்கள் பகிரப்பட்டு விடு கின்றன. தற்போது வாட்ஸ்அப் மூலம் தகவல் களைப் பகிர்வதில் கட்டுப்பாடுகள் வந்து விட்டதால்,  ‘நம்ம உழவன்’ என்ற பெயரில் தனியாகச் செயலி ஒன்றை உரு வாக்கி, தினசரி  நான்கு வேளை வானிலையைக் கணித்து வரைபடத்துடன் இவர் வெளியிட்டு வருகிறார்.

Banner
Banner