இளைஞர்

வேலைவாய்ப்புக்கு உதவும் இணையதளங்கள்

பத்தாம் வகுப்பு தேர்ச்சியை மட்டுமே கல்வித் தகுதியாகக் கொண்டவர்கள் உரிய வயதுத் தகுதியுடன், மத்திய மாநில அரசுகளின் போட்டித் தேர்வுகளில் பங்கேற்று அரசுப் பணி வாய்ப்புகளைப் பெறலாம். இளநிலை, முதுநிலைப் படிப்புகளை முடித்தவர்களும் இந்த போட்டித் தேர்வுகளில் பங்கேற்பார்கள். என்றபோதும், உரிய பயிற்சி இருந்தால் பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கும் பிரகாசமான வாய்ப்பு உண்டு.

# கிராம நிர்வாக அலுவலர் முதற்கொண்டு பல்வேறு பணியிடங்களை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (http://www.tnpsc.gov.in/) போட்டித் தேர்வுகள் வாயிலாகப் பெறலாம்.

# மத்திய அரசின் ரயில்வே பணிக்கு - - http://www.indianrailways.gov.in/index_new.htm

# ராணுவத்தில் சேர - https://www.indianarmy.nic.in/

# கப்பற்படையில் இணைய -https://www.indianarmy.nic.in/

# அஞ்சலகப் பணிகளுக்கு - :https://www.indiapost.gov.in/vas/Pages/IndiaPostHome.aspx

# மாநில, மத்திய காவலர் பணிகளுக்கு- :http://www.tnusrb.tn.gov.in/about_us.htm, http://www.crpf.nic.in/

பள்ளிப் பாட நூல்கள், நூலகங்கள், இணைய தள வசதிகள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களின் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பிலான இலவசப் பயிற்சிகள் ஆகியவற்றின் மூலமாக கிராமப்புறத்தினரும் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகலாம்.

பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்குக் காத்திருக்கும்
உயர் கல்வி மற்றும் தொழிற் பயிற்சி வாய்ப்புகள்

நாளுக்கு நாள் பல உயர் படிப்புகள் அறிமுக மாகிக் கொண்டே இருக்கின்றன. வேலை வாய்ப்புக்காகவும், பிடித்த துறையில் அறிவு விருத்திக்காகவும் அந்தப் படிப்புகளில் தனக் கானதைத் தேர்வு செய்துகொள்வது மாணவர் களின் கடமை. பிளஸ் 1 பள்ளிப்படிப்பா, தொழிற் கல்வியா, வேலைவாய்ப்புக்கான சிறப்பு பயிற்சி களா, போட்டித் தேர்வுகளுக்கான முயற்சியா என்பதை தேடிக் கண்டுபிடித்துத் தீர்மானிக்கலாம் வாங்க!

இதற்கு உதவும் வகையில் தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில், பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான வழிகாட்டிக் கையேடு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய மாணவர்களுக்கும் அவர்களுடைய பெற்றோர்களுக்கும் அவசியமானவற்றை இங்கே பார்ப்போம்.

மேல்நிலைப் பள்ளிக் கல்வி

பத்தாம் வகுப்பு முடித்தவர்களில் பெரும்பாலானவர்களின் விருப்பத் தேர்வாக இருப்பது, மேல்நிலைப் பள்ளிக் கல்வியான பிளஸ் 1. அதிலும் இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம், கணினி அறிவியல் ஆகிய பாடங்களை உள்ளடக்கிய முதல் 2 பாடப் பிரிவுகளுக்கே முன்னுரிமை அளிக்கிறார்கள். காரணம், பெரும்பாலான பெற்றோரின் கனவு, மருத்துவம் அல்லது பொறியியல் படிப்பாகவே இருந்துவருகிறது.

வணிகவியல், புள்ளியியல், பொருளாதாரம், கணக்கியல், வரலாறு, புவியியல், வணிகக் கணிதவியல், அறவியல் மற்றும் இந்தியப் பண்பாடு, அரசியல் அறிவியல் உள்ளிட்ட பாடங்களை உள்ளடக்கிய அடுத்த கட்ட பாடப் பிரிவுகள் போதிய கவனம் பெறுவதில்லை. ஆனால் கல்லூரி அளவில் இந்தப் பாடப் பிரிவுகள் மட்டுமில்லாமல் அக்கவுண்டன்ஸி, கம்பெனி செகரட்டரிஷிப், காஸ்ட் () அண்டு மேனேஜ்மெண்ட் அக்கவுண்டிங் ஆகியவற்றில் சேர இதுபோன்ற பிளஸ் 1 பாடப் பிரிவுகள் அடிப்படையாகும்.
நிகரான படிப்பு

இவை அல்லாமல் பிளஸ் 1 தொழிற்கல்விப் பாடப் பிரிவுகளும் உள்ளன. வொகேஷனல் பாடப் பிரிவுகள் எனப்படும் இவற்றில் ஜெனரல் மெஷினிஸ்ட், எலெக்ட்ரிகல் மெஷின்ஸ் அண்டு அப்ளையன்சஸ், சிவில், ஆட்டோ மெகானிக், நர்சிங், டெக்ஸ்டைல்ஸ், ஃபுட் மேனேஜ்மெண்ட் அண்ட் சைல்ட் கேர், அக்ரி, அக்கவுண்டிங் அண்ட் ஆடிட்டிங் உள்ளிட்ட பல்வேறு பிரிவிலான படிப்புகள் உள்ளன.

பிளஸ் 1 முதன்மை பாடப் பிரிவுகளில் சேரத் தகுதியான பத்தாம் வகுப்பு மதிப்பெண்களைப் பெறத் தவறியவர்களும், இந்த வொகேஷனல் பாடப் பிரிவுகளில் சேர்ந்து அவர்களுக்கு நிகராக பொறியியல், அக்ரி, இளங்கலை மற்றும் அறிவியல் கல்லூரிப் படிப்புகளில் அசத்தலாம்.

டிப்ளமோ மற்றும் அய்.டி.அய். படிப்புகள்

பிளஸ் 1 சேர்க்கைக்கு நிகராகப் பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களிடம் வரவேற்பு பெற்றிருப்பது, பாலிடெக்னிக் டிப்ளமோ படிப்புகள். பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள், 3 ஆண்டு தொழிற் படிப்பாக இந்த டிப்ளமோ கல்வியைத் தேர்ந்தெடுக்கலாம். தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தின் மாநில அளவிலான கலந்தாய்வின் மூலமாக இதில் சேரலாம்.

பொறியியல் கல்லூரிப் படிப்பு போன்றே கலந்தாய்வின் மூலம் பாலிடெக்னிக் சேர்க்கை நடைபெறுகிறது. அதனால், பத்தாம் வகுப்பில் சிறப்பான மதிப்பெண் பெற்றவர்கள் அரசு பாலிடெக்னிக்குகளில் சேர்ந்து அதிகச் செலவின்றி டிப்ளமோ படிப்பை முடிக்கலாம். பின்னர் பணிக்குச் செல்லவோ உயர் படிப்புகளை மேற்கொள்ளவோ செய்யலாம். பணித்திறனை அதிகரித்துக்கொள்ள விரும்புவோர் அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் அப்ரண்டிஸ் எனப்படும் தொழில் பழகுநர் பயிற்சிகளைப் பெறலாம்.

இவை அல்லாமல் டிப்ளமோ தகுதியுடன், நேரடி இரண்டாம் ஆண்டு பொறியியல் கல்லூரிச் சேர்க்கை மூலம் தங்களது பொறியியல் மேற்கல்விக் கனவை நனவாக்கிக் கொள்ளலாம். தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்வி நிலையங்கள் அமைவிடங்கள், அவற்றில் வழங்கப்படும் பாடப்பிரிவு விவரங்களை : http://www.tndte.gov.in/   என்ற தமிழகத்தின் தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் இணையதளத்தில் அறியலாம்.

அய்.டி.அய். பயிற்சிகள்

பத்தாம் வகுப்பு தேர்ச்சி நிலை எப்படியாயினும் பரவாயில்லை, வலுவான எதிர்காலத்துக்கு அடித்தளமிட அய்.டி.அய். தொழிற்பயிற்சி வாய்ப்பளிக்கிறது. வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் இந்த தொழிற் பயிற்சி நிலையங்களின் சேர்க்கை, மாவட்ட அளவிலான கலந்தாய்வாக நடைபெறுகிறது.

2 ஆண்டு அய்.டி.அய். முடித்தவர்கள் நேரடியாக 2ஆம் ஆண்டு பாலிடெக்னிக் படிப்பில் சேரலாம். அய்.டி.அய். பயிற்சியின் நிறைவாக உள்நாடு வெளிநாடு எனப் பரவலான தொழில்துறை பணி வாய்ப்பு களைப் பெறலாம். சம்பாதித்தவாறே பகுதி நேர உயர்கல்விகளைப் பெற்று தகுதியையும், ஊதிய வரம்பை உயர்த்திக்கொள்ளவும் முடியும். மேலதிக விபரங்களை http://skilltraining.tn.gov.in/DET/என்ற தளத்தில் அறிந்து கொள்ளலாம்.

அஞ்சல் துறையில்
கிராமின் டாக் சேவகர்கள் வேலை  

மத்திய அரசு நிறுவனமான அஞ்சல் துறையின் ஒடிசா அஞ்சல் வட்டத்தில் 2017 - 2018-ம் ஆண்டிற்கான 1072 கிராமின் டாக் சேவகர்கள் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிட மிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற் கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 1072

பணியிடம்: ஒடிசா

பணி:    Gramin Dak Sevaks (GDS)

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தகுதி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 18 - 40க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.25,000

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. மற்ற பிரிவினருக்கு கட்டண செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.04.2017

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 2017 மே, ஜூன் மாதங்களில் நடைபெறலாம்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய :http://indiajobvacancy.com/wp-content/uploads/2017/03/Odisha-16-1.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.


வங்கியில் தொழில்நுட்ப
அதிகாரி ஆகலாம்

பொதுத்துறை வங்கியான கனரா வங்கியில் தொழில்நுட்ப அதிகாரி  பணியிடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் அனைத்தும் கணினி தொழில்நுட்பம், நிதிச் சேவை, தகவல் மேலாண்மை தொடர்பானவை ஆகும்.

பணி விவரம்:  சர்ட்டிஃபைடு எத்திகல் ஹேக்கர்ஸ் அண்டு பினிட் ரேஷன் டெஸ்டர், சைபர் ஃபாரன்சிக் அனலிஸ்ட், மேலாளர் (கணக்கு தணிக்கை, நிதி, தகவல் ஆய்வாளர், பொருளாதாரம்), தகவல் தொழில் நுட்பப் பாதுகாப்பு நிர்வாகி, வணிக ஆய்வாளர், தகவல் தொகுப்பு நிபுணர், ஈ.டி.எல். நிபுணர்கள், டேட்டா மைனிங் நிபுணர், மேலாளர் (பாதுகாப்பு) எனப் பல்வேறு விதமான பணிகளில் 88 காலியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி: பொதுவாக, தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட பணிகளுக்கு அடிப்படை கல்வித் தகுதி பி.இ., பி.டெக். ஆகும். அதோடு குறிப்பிட்ட தொழில்நுட்பப் பிரிவில் பயிற்சி மற்றும் அனுபவம் அவசியம். நிதிச் சேவை தொடர்பான பணிகளுக்கு எம்.பி.ஏ. பட்டம் வேண்டும். மேலாளர் (பொருளாதாரம்) பணிக்கு எம்.ஏ. பொருளாதாரப் பட்டதாரிகள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். அனைத்துப் பணிகளுக்கும் அடிப்படை கணினி அறிவு அவசியம்.

வயது வரம்பு: வயது வரம்பு பணியின் தன்மைக்கு ஏற்ப 30, 35, 40 என வெவ்வேறு உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும் மத்திய அரசின் இடஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு முறை: பாதுகாப்பு மேலாளர் பணி நீங்கலாக மற்றப் பணிகளுக்கு எழுத்துத் தேர்வு, குழு விவாதம், நேர்காணல் அடிப்படையில் பணி நியமனம் மேற்கொள்ளப்படும். எழுத்துத் தேர்வில் சம்பந்தப்பட்ட தொழில்நுட்பப் பிரிவில் இருந்து 50 வினாக்கள், பொது ஆங்கிலத்தில் 50 வினாக்கள், வங்கித் துறை தொடர்பாக 50 வினாக்கள் என மொத்தம் 150 வினாக்கள் அப்ஜெக்டிவ் முறையில் இடம்பெறும்.
# மொத்த மதிப்பெண் 200.

# 2 மணி நேரத்தில் விடையளிக்க வேண்டும். # தவறான பதில்களுக்கு மதிப்பெண் குறைக்கப்படும்.

# ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள் : ஏப்ரல் 5
எழுத்துத்தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும். தமிழகத்தில் சென்னை, கோவை உள்பட நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் ஆன்லைன் வழியில் எழுத்துத் தேர்வு நடைபெறும். மேற்கண்ட பணிகளுக்கு கனரா வங்கியின் இணையதளத்தின் மூலம்

(www.canarabank.com)விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப முறை, தேர்வு முறை, சம்பளம் உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தில் விளக்கமாக அறிந்துகொள்ளலாம்.

இந்திய விமான ஆணையத்தில் பணிகள்

மத்திய அரசின் முன்னணி பொதுத்துறை நிறு வனங்களில் ஒன்றான இந்திய விமான ஆணையம்  இளநிலை உதவியாளர் (தீயணைப்பு பணி) பதவியில் 147 காலியிடங்களை நேரடி நியமன முறையில் நிரப்ப இருக்கிறது.

கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு முடித்துவிட்டு பாலி டெக்னிக்கில் மெக்கானிக்கல் அல்லது ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங் படித்தவர்கள். அல்லது பிளஸ் 2 முடித்தவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

கல்வித் தகுதியுடன் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டியதும் அவசியம். பிளஸ் 2-வில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பு, என்.சி.சி. பி சான்றிதழ், ஏவியேஷன் மற்றும் தீயணைப்புப் பணியில் அனுபவம் போன்றவை விரும்பத்தக்க தகுதியாக கொள்ளப்படும்.

தேர்வு முறை

முதலில் எழுத்துத் தேர்வு (தமிழகத்தில் திருச்சி மையம்) நடத்தப்படும். அதில் வெற்றி பெறுவோருக்கு அடுத்த கட்டமாக ஓட்டுநர் தேர்வு நடைபெறும். அதன்பிறகு உடற்திறன் தேர்வு, மருத்துவத் தேர்வு ஆகியவை நடத்தப்படும். எழுத்துத் தேர்வுக்கான விண் ணப்ப படிவங்களை இந்திய விமான ஆணை யத்தின் இணையதளத்தில் (www.airportsindia.org.in) இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை தேவையான ஆவணங்கள், தேர்வுக்கட்டணத் துடன் மார்ச் மாதம் 31ஆம் தேதிக்குள் சென் னையில் உள்ள இந்திய விமான ஆணையத்தின் தென்மண்டல அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். கூடுதல் விவரங்களை இந்திய விமான ஆணையத்தின் இணையதளத்தில் விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

வயது வரம்பு:

பொதுப்பிரிவினருக்கு - 30 வயது

ஓ.பி.சி. பிரிவினருக்கு 33 வயது

எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு - 35 வயதாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

உடற்தகுதி: விண்ணப்பதாரர் நல்ல உடல்நலமும், கண் பார்வையும் உடையவராக இருக்க வேண்டும். குறைந்தபட்ச உயரம் 167 செ.மீ. அவசியம். மார்பளவு குறைந்தபட்சம் 81 செ.மீ. விரிவடையும் நிலையில் 84 செ.மீ. இருக்க வேண்டும்.

பி.எஸ்.என்.எல்.-இல் பொறியாளர் ஆகலாம்

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். (பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்) நிறுவனத்தில் இளநிலை தொலைத்தொடர்பு அலுவலர் பதவியில் 2,510 காலியிடங்கள் கேட் நுழைவுத்தேர்வு-2017  மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

தேவையான தகுதி:  விண்ணப்பதாரர்கள் பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட கேட் நுழைவுத் தேர்வை எழுதியிருக்க வேண்டும். டெலிகாம், எலெக்ட்ரானிக்ஸ், ரேடியோ, கம்ப்யூட்டர், எலெக்ட்ரிகல், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, இன்ஸ்ட்ருமென்டேஷன் ஆகிய பாடப் பிரிவுகளில் பி.இ. அல்லது பி.டெக். பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது எம்.எஸ்சி. (எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ்) பட்டதாரியாக இருக்க வேண்டும்.

வயது வரம்பு: பொதுப் பிரிவினருக்கு 30 ஆக நிரணயிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இடஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

பணிநியமன விதிகள்:  உரிய தகுதியுடைய பொறியியல் பட்டதாரிகள் www.externalexam.bsnl.co.in என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி கேட் நுழைவுத்தேர்வு பதிவு எண் மூலம் ஏப்ரல் 6ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

ரூர்க்கி அய்.அய்.டி. நிறுவனம் பிப்ரவரி மாதம் நடத்திய நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில்தான் பணி நியமனம் நடைபெறும்.

இதற்காக பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனியாக இன்னொரு எழுத்துத் தேர்வையோ நேர்முகத் தேர்வை யோ நடத்தாது. மேலும், விவரங்கள் அறிய மேற்குறிப்பிட்ட இணைய தளத்தைப் பார்க்கலாம்.

டிஎன்பிஎல் நிறுவனத்தில்
மேலாளர், அதிகாரி பணிகள்  

தமிழக அரசு நிறுவனமான தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் பேப்பர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் திருச்சி கிளைக்கு நிரப்பப்பட உள்ள மேலாளர் மற்றும் அதிகாரி பணியிடங்களுக்கு பொறியியல் துறை பட்டம் பெற்றவர் களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி:   Deputy Manager (IT) / Assistant Manager (IT) / Officer (IT) - 02

தகுதி: பொறியியல் துறையில் முதல் வகுப்பில் பட்டம், எம்சிஏ முடித்து பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 01.03.2017 தேதியின்படி 28 - கணக் கிடப்படும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.03.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://www.tnpl.com/Careers/it%20advt-3. என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.

முழுவீச்சில் சத்துணவு ஊழியர்கள் பணி நியமனம்

சத்துணவு ஊழியர்கள் பணி நியமனம் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது என சமூகநலத்துறை வட் டாரங்கள் தெரிவித்தன.

இது குறித்து சமூகநலத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் ஆகிய மூன்று பணியிடங்கள் காலியாக இருந்து வந்தன. இதற்கென, சமூகநலத்துறை ஆணையரகம் மாவட்ட ஆட்சியர் தலைமையில், நியமனக் குழு அமைத்து இட ஒதுக்கீட்டு முறையில் ஆதரவற்ற பெண்கள் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டு வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் மூலம் விளம்பரம் வெளியிடப்பட்டு, மேலும் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், சமையலர் பணியில் இருப்போர் சத்துணவு அமைப்பாளராகவும், உதவியாளரிலிருந்து சமையலர் பணிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதுபோல், பணியிட மாற்றம் கோரிய பணியாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

பணி நியமனம் விரைந்து மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, மீதமுள்ள அனைத்து சத்துணவு காலிப்பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

விவசாய அதிகாரி ஆகலாம்

தமிழக அரசின் வேளாண் விரிவாக்க சார்நிலைப் பணியில் 333 உதவி வேளாண் அதிகாரி பணியிடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன.

இதற்கான அறிவிப்பை  டி.என்.பி.எஸ்.சி.

வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண் ணப்பிக்க விரும்புவோர் பிளஸ் 2 படித்து விட்டு வேளாண்மை படிப்பில் 2 ஆண்டு கால டிப்ளமா முடித்திருக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் உதவி வேளாண் அதிகாரி பணிக்கு தேர்வுசெய்யப்படுவார்கள். எழுத்துத்தேர்வில் அப்ஜெக்டிவ் முறையில் கேள்விகள் இடம் பெறும்.

தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசு பணியில் 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படுவதால் வேளாண் டிப்ளமா படிப்பை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத பணியிடங்கள் ஒதுக்கப் பட்டுள்ளன. உதவி வேளாண் அதிகாரி பணிக்கு அடிப்படைச் சம்பளம் ரூ.5200, தரஊதியம் ரூ.2800 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனவே, சம்பளம் தோராயமாக ரூ.20 ஆயிரம் கிடைக்கும். தற்போது அறிவிக்கப் பட்டுள்ள ஊதியக்குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்படும்போது சம்பளம் கணிசமாக உயரும். உதவி வேளாண் அதிகாரிகள், வேளாண் அதிகாரி, உதவி இயக்குநர், துணை இயக்குநர் என வேளாண் துறையில் படிப்படியாக பதவி உயர்வும் பெறலாம்.

முக்கியத் தேதிகள்

எழுத்துத்தேர்வு, ஜூலை 2 அன்று சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி ஆகிய 6 நகரங்களில் நடைபெற உள்ளது.
தகுதியுடைய நபர்கள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தை பயன்படுத்தி ஏப்ரல் மாதம் 7ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, தேர்வுக் கட்டணம், பாடத் திட்டம் உள்ளிட்ட விவரங்களை டி.என்.பி.எஸ்.சி .இணையதளத்தில் விளக்கமாக தெரிந்துகொள்ளலாம்.

தேர்வுத் தாள்கள்: 1. விவசாய பாடம், 2. பொது அறிவு

விவசாய பாடம்: 300 மதிப்பெண். இதில் கேட்கப்படும் 200 வினாக்கள் டிப்ளமா தரத்தில் இருக்கும்.

பொது அறிவு தாள்: 200 மதிப்பெண். இதில் இடம்பெறும் 100 கேள்விகளும் பிளஸ் 2 கல்வித் தரத்தில் அமைந்திருக்கும்.

நேர்முகத் தேர்வு: 70 மதிப்பெண்.

வயது வரம்பு: பொதுப்பிரிவினருக்கு 30 வயது.

எஸ்.சி., எஸ்.டி., பி.சி., எம்.பி.சி. உள்ளிட்ட இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பு ஏதும் கிடையாது.


நேற்று அரசு பள்ளி ஆசிரியர்; இன்று மாவட்ட கல்வி அதிகாரி

அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றிபெற்று நேரடியாக மாவட்டக் கல்வி அதிகாரி பணிக்குத் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார். அவர் ஒரு விவசாயி மகன் என்பது குறிப்பிடத்தக்கது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் ஆர்.அறிவழகன்தான் இந்தச் சாதனைக்குச் சொந்தக்காரர்.

சொந்த ஊர் பெண்ணாடம் அருகேயுள்ள பெ.பொன் னேரி என்னும் குக்கிராமம். தந்தை ரெகுபதி, விவசாயி. தாயார் மணிமேகலை, இல்லத்தரசி. அரசு உயர் அதி காரியாக வர வேண்டும் என்பது அறிவழகனின் லட்சியம். ஆனால் நீண்ட போராட்டத்துக்குப் பின்னரே அவரது லட்சியம் நிறைவேறியுள்ளது. அரசு பள்ளியில் இடைநிலை ஆசிரியர் பணி, அதன்பிறகு பட்டதாரி ஆசிரியராகப் பதவி உயர்வு, தற்போது நேரடியாக மாவட்டக் கல்வி அதிகாரி பணிக்குத் தேர்வு என அவரது அடுத்தடுத்த வெற்றிகளின் பின்னே பல்வேறு போராட்டங்களும், தோல்விகளும் மறைந்து கிடக்கின்றன.

கிராமத்து விவசாயின் மகனான அறிழவகன் பிளஸ் 2 முடித்த பின்பு இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்தார். அடுத்து, சென்னை பல்கலைக்கழகத்தில் அஞ்சல்வழியில் பி.ஏ. வரலாறு முடித்தார். அப்போது அவருக்குச் சட்டம் படிக்கும் ஆர்வம் உண்டாகவே அரசு சட்டக் கல்லூரியில் பி.எல். படித்தார். 2ஆம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும்போது 1995இல் ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வில் தேர்ச்சி பெற்றார். அவருக்கு அரசு பள்ளியில் இடைநிலை ஆசிரியர் பணி கிடைக்கிறது.

அந்தப் பணியில் இருந்துகொண்டே சென்னை பல்கலைக்கழகத்தில் அஞ்சல்வழியில் எம்.ஏ. வரலாறும், அதைத் தொடர்ந்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பி.எட். படிப்பையும், காரைக்குடி அழகப்பா பல் கலைக்கழகத்தில் அஞ்சல்வழி யில் எம்.ஃபில். ஒன்றன்பின் ஒன்றாக முடித்தார்.

ஆசிரியர் பணியில் இருந்த அவருக்கு அய்.ஏ.எஸ். அதி காரி ஆக வேண்டும் என்ற ஆசை 2001-ல் ஏற்பட்டது. சென்னையில் உள்ள தமிழக அரசு சிவில் சர்வீசஸ் தேர்வு பயிற்சி மய்யத்தில் சேர்ந்தார். தொடர்ந்து முயற்சிசெய்தும் வெற்றி கிடைக்கவில்லை. துணை ஆட்சியர் ஆகும் நோக்கில் 2008இல் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வுக்குத் தயாரானார். இதற்கிடையே, அந்த ஆண்டு அவருக்குப் பட்டதாரி ஆசிரியராக (வரலாறு) பதவி உயர்வு கிடைத்தது.

படித்தது ஒருபோதும் வீண்போகாது!

அரசு உயர் அதிகாரியாக வரவேண்டும் என்ற ஆசை நிறைவேறவில்லையே என்று கவலை ஒருபுறம் இருந் தாலும், இன்னொரு புறம் கையில் உள்ள ஆசிரியர் பணியைத் திறம்படச் செய்ய வேண்டும் என்று கருதி அதன்படி பணியைத் தொடர்ந்தார்.

இந்த நிலையில், 2014இல் 11 மாவட்டக் கல்வி அதிகாரிகளை நேரடியாகத் தேர்வுசெய்ய டி.என்.பி.எஸ்.சி. ஓர் அறிவிப்பை வெளியிட்டது. 600 மதிப்பெண்களுக்குக் கூடுதலாகப் பொது அறிவு பாடங்கள் சேர்க்கப்பட்டுப் புதிய மாற்றங்களோடு தேர்வு நடத்தப்பட்டது. ஏற்கெனவே அய்.ஏ.எஸ். தேர்வுக்கும், குரூப்-1 தேர்வுக்கும் தன்னை முழுவதுமாகத் தயார்படுத்தி யிருந்ததால், புதிய முறை டி.இ.ஓ. தேர்வைத் தன்னம்பிக் கையோடு எதிர்கொண்டார். முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத் தேர்வு என அத்தனை தேர்வுகளிலும் வெற்றி. டி.இ.ஓ. தேர்வு முடிவு அண்மையில் வெளியிடப் பட்டது. பணிக்குத் தேர்வுசெய்யப்பட்ட ஒன்பது பேரில் அறிவழகனும் ஒருவர். தகுதி பட்டியலில் அவருக்கு 3-வது இடம் கிடைத்துள்ளது.

பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி வரும் அவர், மாவட்டக் கல்வி அதிகாரியாகப் பயிற்சி பெறும் நாளை ஆவலோடு எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்.

தனது தேர்வு தயாரிப்பு அனுபவங்கள் குறித்து அறிவழகன், எனது வெற்றிக்குப் பெரிதும் கைகொடுத்தது யூ.பி.எஸ்.சி. தேர்வு, டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வெழுதிய அனுபவம் தான். புதிய டி.இ.ஓ. தேர்வில் புதிதாக 2 பொது அறிவுதாள்கள் சேர்க்கப்பட்டது எனக்குப் பெரிதும் உதவிகரமாக இருந் தது. நீண்ட காலமாக அய்.ஏ.எஸ். தேர்வுக்கும், குரூப்-1 தேர்வுக்கும் படித்து வந்ததால் அந்த அனுபவம் டி.இ.ஓ. தேர்வில் பொது அறிவு தாளில் நல்ல மதிப்பெண் எடுக்க உதவியது. படித்தது ஒருபோதும் வீண்போகாது என்று சொல்வார்கள். அதுபோல எனது பழைய உழைப்பு டி.இ.ஓ. தேர்வுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

டி.இ.ஓ. புதிய தேர்வுமுறையில் பொது அறிவு தாள்கள் சேர்த்திருப்பது வரவேற்கத்தக்கது. காரணம் பொது அறிவு தாளில் அனைத்துப் பாடங்களும் இடம்பெறுவதால் மாவட்டக் கல்வி அதிகாரியாகத் தேர்வுசெய்யப்படுபவர்கள் சிறப்பாகப் பணியாற்ற முடியும் என்றார்

மாற்றம் விரும்புபவர்களுக்கு ஒரு படிப்பு!

கல்வி, சமூகத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். அந்தச் சமூக மாற்றங்களை எப்படிக் கொண்டு வருவது என்பதையே ஒரு படிப்பாகப் படித்தால் எப்படியிருக்கும்?

நம்மில் பலரும் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தத் தொடர்ந்து பல பணிகளை மேற்கொண்டு வந்திருப்போம். அதில் பல பிரச்சினைகளைச் சந்தித்திருப்போம். அப்போதெல்லாம், இந்தப் பிரச்சினைகளை எப்படி அணுகுவது என்பது பற்றி யாராவது சொல்லித் தந்தால் நன்றாக இருக்குமே என்று ஏங்கியிருப்போம் அல்லவா? வந்துவிட்டது, ஆட்சியியல் மாற்றத்தை வழிவகுத்தல் படிப்பு .

சர்வதேச அளவில் புகழ்மிக்க கல்வி நிலையங்களில் ஒன்று மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்சஸ் நிறுவனம். அதனுடன் சேர்ந்து நாட்டில் பல ஆண்டுகளாக, சமூக மாற்றத்துக்கான பல பணிகளை மேற்கொண்டு வரும் பாமரர் ஆட்சியியல் கூடம் எனப்படும் பேர்ஃபூட் அகாடமி ஆஃப் கவர்னென்ஸ் அமைப்பும் இணைந்து இந்த ஓர் ஆண்டு முதுநிலை பட்டய படிப்பை நடத்துகின்றன.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இரண்டு முக்கியமான மாற்றங்களைச் சந்தித்தது. ஒன்று, மக்கள் தங்களின் எல்லா தேவைகளுக்கும் அரசை மட்டுமே சார்ந்திருக்க வேண்டியதானது. இரண்டு, அனைத்து அதிகாரங்களும் ஒரே மய்யத்தில், அதாவது அரசிடம் மட்டுமே குவிக்கப்பட்டது. இன்று நாடு சந்திக்கும் பல பிரச் சினைகளுக்கும் இவைதான் காரணம். அந்தப் பிரச்சினைகளை எப்படி அணுகுவது என்பதைக் கற்றுத் தருவதுதான் இந்தப் படிப்பின் நோக்கம் என்று இந்தப் படிப்பைப் பற்றி விளக்கத் தொடங்கினார், முனைவர்

வி. சுரேஷ். அடிப்படையில் வழக்கறிஞரான இவர், மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தேசியச் செயலாளராகவும், சமூக மாற்றம் தொடர்பான களப் பணியாளராகவும் செயலாற்றிவருகிறார். இந்தப் படிப்பை உருவாக்கியதில் இவருக்கு முக்கியப் பங்குண்டு.   கூடுதல் விவரங்களுக்கு:: http://admissions.tiss.edu/view/10/admissions/stp-admissions/pg-diploma-in-facilitating-governance-reform/

வல்லம், பிப்.26, தமிழக அரசின் தஞ்சை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் தஞ்சை மாவட்ட வேலை வாய்ப்பு  மற்றும் பயிற்சித்துறையுடன் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மும், இணைந்து பட்டபடிப்பு மாண வர்கள் மேற்படிப்பு படிப்பதற்கும் மற் றும் வேலைவாய்ப்பு பெறுவதற்குமான வழிகாட்டும் நிகழ்ச்சி வாழ்க்கை வழி காட்டும் நிகழ்ச்சி 25.02.2017 சனிக்கிழமை காலை 10 -மணி முதல் பகல் ஒரு- மணி வரை பெரியார் மணியம்மை பல்கலைக் கழக - உள்விளையாட்டு அரங்கில் நடை பெற்றது.

மாணவர்களுக்கான வழிகாட்டும் இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாக பெரியார் மணியம்மை பல்கலைக்கழக துணை வேந்தர் கர்னல் பேராசிரியர் நல்.இராமச் சந்திரன்  நாம் முன்னேறுவதற்கு மொழி ஒரு தடை அல்ல. ஆகவே, நம் முன்னேற்றம் நம்முடைய கையில்தான் உள்ளது என, பல தகவல்களை சிறப்பாக வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில்  தஞ்சை மாவட்ட (பயிற்சி) உதவி ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த்  தலைமையுரை ஆற்றும் போது அரசு தேர்வுகள் பற்றிய பல தகவல் களையும் அதில் வெற்றி பெற பல்வேறு வழி முறைகளை எடுத் துக் கூறினார்.   அவர் தமது உரையில் ஹிறிஷிசி தேர்வுகள் பற்றிய பல தகவல் களையும், பல்வேறு வழிமுறைகளையும் கூறினார்.

தஞ்சை மாவட்ட இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் கோ.குழந்தைவேல், வேலை வாய்ப்பு அலுவலகத் தின் பல்வேறு பயன்கள் குறித்த தக வல்களை வழங்கினார். அவற்றில் 25 ஆண்டிற்கு முன்னாள் வேலைவாய்ப்பில் பதிவு பெற்றிருந்தால்தான் அவர்களுக்கு மூப்பு அடிப்படையில் அரசு அலுவல கங்களில் வேலை வாய்ப்பு பெற முடியும். ஆனால் இன்று மாணவர்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு பெற்றி ருந்தாலும் அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப் பது அரிது. இன்றைய கால கட்டத்தில் தேர்வு முறையின் மூலம் தான் மாணவர்கள் வேலைவாய்ப்பினை பெறுகிறார்கள்.

இதற்கான தேர்வுகள் தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசால் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு அதில் தர வரிசையின் அடிப்படையில் வெற்றிப் பெற்றவர்களுக்கு தான் வேலை வாய்ப்பு கிட்டுகிறது என்று கூறினார். மேலும் வேலைவாய்ப்பு அலுவலகத்தால் பட்டப் படிப்பு முடித்த மாணவர்களுக்கு வழங் கப்படும் உதவித் தொகை மாணவர்கள் அரசு தேர்வுக்கு விண்ணப்பிக்கதான் என்று கூறினார். அரசு மற்றும் மத்திய அரசு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பயிற்சிகளும் இலவசமாக வழங்கப் படுகிறது என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து பல்வேறு பயிற்சிகள் குறித்த தகவல்களை பல துறை வல்லுநர்கள் வழங்கினார்கள். அதில் உயர்கல்வி குறித்து பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின்  மேலாண்மை துறையின் துறை தலைவர் முனைவர் பா.மகேந்திரமோகன் வழங் கினார்.

அதனைத் தொடர்ந்து ஊடக துறை பயிற்றுநர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார்  வழங்கினார். போட்டித் தேர்வு குறித்த தகவல்களை பேரா இரா.சு.முருகன், (உதவிப் பேராசிரியர் தமிழ் பல்கலைக் கழகம்) அவர்கள் வழங்கினார். சுயவேலை வாய்ப்பு குறித்த தகவல்களை தஞ்சை மாவட்ட தொழில் மய்யத்தின் பொது மேலாளர்  ஜி.ரவீந்திரன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று பயன்பெற்றனர். தஞ்சை மாவட்ட மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் நலத்துறை அலுவலக உதவி கணக்கு அலுவலர் கோ.முத்துக்குமரன் நன்றி கூறினார்.

இந்திய விமான ஆணையத்தில் இளநிலை உதவியாளர் பணி

இந்திய விமான ஆணையத்தில் தீயணைப்பு பிரிவில் 2017ஆம் ஆண்டிற்கான 147 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.

நிறுவனம்:  ஏர்போர்ட்  அதாரிட்டி ஆப் இந்தியா  மொத்த காலியிடங்கள்: 147

பணியிடம்: தமிழ்நாடு, புதுச்சேரி. ஆந்திரா, தெலங்கனா, கர்நாடகா, கேரளா, லட்சசீவுகள்

பணி: இளநிலை உதவியாளர் (தீயணைப்பு துறை)

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 3 வருட டிப்பளமோ அல்லது +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: பொது பிரிவினருக்கு 18 - 30க்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினருக்கு - 33க்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 35க்குள்ளும் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.12,500 - 28,500

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, ஓட்டுநர் தேர்வு, மருத்துவ பரிசோதனை மற்றும் பொறுமைக்கான தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு மய்யம்: திருச்சி, அய்தராபாத், மங்களூரு, திருவனந்தபுரம், அகத்தி  தேர்வுக்கட்டணம்: ரூ.100.

விண்ணப்பிக்கும் முறை: www.airportsindia.in என்ற இணைய தளத்தில் கெடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப மாதிரியை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:  Regional Executive Director, Airports Authority of India, Southern Region, Chennai – 600027.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.03.2017

முழுமையான விவரங்கள் அறிய www.airportsindia.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

ஸ்டேட் வங்கியில் 2313 அதிகாரி பணியிடங்கள்

இந்தியாவில் உள்ள பொதுத் துறை வங்கிகளில் மிக அதிகமான கிளைகளுடன் தனது சேவையை சிறப்பாகச் செய்துவரும் பொதுத்துறை வங்கி இந்திய ஸ்டேட் வங்கி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வங்கியின் துணை வங்கிகளாக ஸ்டேட் பாங்க்  ஆஃப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் பைகானர், ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத், ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் பாட்டியாலா போன்ற அய்ந்து துணை வங்கிகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன.


பெதுத்துறை வங்கிகளுக்கான பணியிடங்கள் அய்.பி.பி.எஸ். எனப்படும் பொது எழுத்துத் தேர்வின் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. ஆனால், ஸ்டேட் வங்கி மற்றும் அதன் துணை வங்கிகளுக்கு தனியே எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வை நடத்தி தேர்வு செய்து குறிப்பிடத்தக்கது.

தற்போது பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 2,313 புரபேஷனரி ஆபீஸர் பணியிடங்களை நிரப்பு வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பட்டதாரி இளைஞர்கள் பயன்படுத்திக் கொண்டு பயனடைய வேண்டிய நேரமிது.

மொத்த காலியிடங்கள்: 2,313

பணி: புரபேஷனரி ஆபீசர்

கல்வித்தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக் கழகத்தில் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுபவர்கள் 1.7.2017ஆம் தேதிக்கு முன்பு தேர்ச்சி  பெற்றதற்கான சான்றிதழ்களைக் காண்பிக்க வேண்டும்.

வயது வரம்பு: 01.04.2017 தேதியின்படி 21 - 30க்குள் இருக்க வேண்டும். அதாவது, 2.4.1987 - 1.4.1996க்குள் பிறந்திருக்க வேண்டும். அரசின் விதிமுறைப்படி எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகை வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. எஸ்.சி., எஸ்.டி. மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.100. விண்ணப்பக் கட்டணத்தை கிரெடிட், டெபிட் மற்றும் நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம்.

தேர்வு மய்யங்கள்: தமிழகத்தில் சென்னை, கோய முத்தூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, மதுரை, நாகர் கோவில், நாமக்கல், பெரம்பலூர், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, தூத்துக்குடி, வேலூர்.

தேர்வுசெய்யடும் முறை: தேர்வானது இரு பிரிவுகளாக இருக்கும். அதாவது பிரிலிமினெரி தேர்வு மற்றும் மெயின் தேர்வு என இரு கட்டங்களாக நடத்தப் படும். இந்த தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படும். முதல் கட்ட தேர்வான பிரிலிமினெரி தேர்வில் ஆங்கிலம், கணிதம், ரீசனிங் ஆகிய 3 பகுதிகளிலிருந்து 100 கேள்விகள் கேட்கப்படும். இதில் தேர்ச்சி பெற்ற வர்கள்தான் அடுத்த கட்ட தேர்வான மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். இரண்டாம் கட்ட மெயின் தேர்வில் அப்ஜக்டிவ் வடிவிலான கேள்விகளும், கூடுதலாக விரிவாக விடையளிக்கும் வகையிலான வினாக்களும் இருக்கும். இதில் தர்க்கம், கணினி அறிவியல், டேட்டா அனாலிசிஸ், பொருளாதாரம், வங்கி நிர்வாகம், ஆங்கிலம் ஆகிய 4 பகுதிகளிலிருந்து 155 கேள்விகள் கேட்கப்படும்.

இரண்டு கட்ட தேர்விலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு குழு கலந்தாய்வு, நேர்முகத் தேர்வு நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெற்றுபவர்கள் பணிக்கான உத்தரவு வழங்கப் படும். ஆங்கில மொழித்திறனோடும், கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அறிவோடும், சரியான வழிகாட்டுதலை கடைப்பிடித்தலும் முறையாக பயிற்சி மேற்கொண்டு முயற்சிப்பவர்களுக்கே வேலை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

சம்பளம்: பணியில் சேருவோருக்கு ஆரம்ப நிலையில் மாதம் ரூ.27,620 வழங்கப்படும் மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படுகிறது.

அடுத்தடுத்துப் பதவி உயர்வுக்கான வாய்ப்புகளும் அதிகம். இளம் வயதி லேயே பணியில் சேருவோர் பின்னாளில் உயர் பதவிக்குச் செல்லலாம்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் ::http://statebankofindia.com அல்லது www.sbi.co.in என்ற இணையதளங்களின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன்பு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தையும் கையெழுத்தையும் ஸ்கேன் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். முறையாக விவரங் களை பூர்த்தி செய்து முடித்த பின்னர் விண்ணப்பத்தைச் சேமித்த பின்னர் தரப்படும் ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர், பாஸ்வேர்டு ஆகியவற்றைக் எதிர்கால பயன்பாட்டிற்காக குறித்துவைத்துக் கொள்வது நல்லது. விண்ணப்பித்த பின்னர், விண்ணப்பத்தையும் பணம் செலுத்தியதற்கான ஆன்லைன் ரசீதையும் பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.03.2017.

தேசிய பாதுகாப்பு அகாடமியில் எம்டிஎஸ், கிளார்க் பணியிடங்கள்

பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய பாதுகாப்பு அகாடமியில் நிரப்பப்பட உள்ள மல்டி டாஸ்க் சர்வீல் மற்றும் கிளார்க் போன்ற பணியிடங்களுக்கு இந்திய இளைஞர்களிடமிருந்து வரும் 25 ஆம் தேதிக்கு முன்னரே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: மல்டிடாஸ்க் சர்வீஸ், கிளர்க்

மெத்த காலியிடங்கள்: 66

கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18-25க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் திறனறி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப் படுவார்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 25.02.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய : http://www.davp.nic.in  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

சென்னை பெட்ரோலியம் கார்பரேஷனில் பணியிடங்கள்

மத்திய அரசு நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் 2017ஆம் ஆண் டிற்கான 97 இளநிலை பெறியாளர் உதவியாளர் மற்றும் இளநிலை டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து பிப்.27க்கு முன்பாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 94

பணியிடம்: சென்னை

தகுதி: பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.11,900 - 32,000

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் உடல் திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவி னருக்கு ரூ.300. விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 27.02.2017  மேலும் முழுமையான விவரங்கள் அறிய :https://www.cpcl.co.in/ பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Banner
Banner