இளைஞர்

பெயிண்ட் குறித்த அடிப்படை அனைத்தையும் கற்றுத் தருவது பெயிண்ட் டெக்னாலஜி படிப்புகள்.  ஆட்டோ மொபைல், ரியல் எஸ்டேட் ஆகிய இரு முக்கிய துறைகளை பெயிண்ட் தொழில் சார்ந்துள்ளது.  பெயிண்டுகள் இவ்விரண்டு துறைகளிலும் அதிக அளவில் பயன்படுத்தப் படுகிறது.    வாகனங்கள், கட்டடங்கள் அனைத்து தரப்பு மக்களாலும் பயன்படுத்தப்படுகின்றன.  அதனால் பெயிண்ட் தொழில் துறைக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.  குறிப்பாக பெயிண்ட் தொழில் நுட்பம் தெரிந்தவர்களுக்கு பெயிண்ட் தொழிற்சாலைகளில் பல்வேறு மட்டங்களில் பல்வேறு வேலை வாய்ப்புகள் உள்ளன.

பெயிண்ட் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, தரக் கட்டுப்பாடு, உற்பத்தி, சந்தைப்படுத்துதல், தொழில்நுட்ப உதவி, ஆலோசனை உள்ளிட்ட பல்வேறு மட்டங்களில் வேலை வாய்ப்புகள் உள்ளன.  பெயிண்ட் டெக்னாலஜியில் சாதாரண டிப்ளமோ முதல் எம்.டெக் மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் வரை உள்ளன. 

பெயிண்ட் டெக்னாலஜி படிப்புகள் :

B.Tech. Paint Technology

Diploma in Paint Application Technology

M.Tech. Paint Technoogy

Paint and Varnish Technology

B.Tech. Surface Coating Technology

M.Tech. Surface Coating Technology

Post Graduate Program in Paint And Coating Technology        

பல்வேறு பொறியியல் படிப்புகளை நடத்தும் பல்கலைக் கழகங்களும் பெயிண்ட் டெக்னாலஜி படிப்புகளை நடத்தி வருகின்றன.

மேலும் விவரங்களுக்கு:

http://www.isspa.org/members-area/educational.aspஅகில உலக அளவில் கிட்டத்தட்ட நிறைய முதல் பரிசுகள்.  எல்லாமே புதிய ஆராய்ச்சிகளுக்காக. பதினெட்டு வயதுக்குக் கீழே உள்ளவர்கள் அதாவது கல்லூரியைக் கூட எட்டாத பள்ளிக்கூட மாணவர்கள் மட்டுமே கலந்துகொள்ளக்கூடிய போட்டிகளில் பரிசுகளை வென்றிருக்கிறார் பிரசாந்த்.

அமெரிக்க லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த அகில உலக அறிவியல் மற்றும் இன்ஜினியரிங் கண்காட்சியில் கலந்துகொண்ட 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களில், இந்த மே மாதம் முதல் பரிசான 8000 அமெரிக்க டாலர்களைப் பரிசாகப் பெற்றுக்கொண்டு வந்த சாதனையாளர் அவர்.  இதற்காக ஒரு கிரகத்துக்கு இவர் பெயரைச் சூட்டியிருக்கிறார்கள்!  இது அங்கு வழக்கமாம்.

கடந்த 25 ஆண்டுகளில் இந்தப் பரிசு பெற்றவர்கள் வரிசையில் பிரசாந்த் மூன்றாவது இந்தியர். அப்பா ரங்கநாதன் சி.எஸ்.அய்.ஆர். எனப்படும் மத்திய அறிவியல் ஆய்வுக் கழக விஞ்ஞானி.  பிரசாந்தின் கொள்ளுத்தாத்தா, சேலத்தை அடுத்த வாழப்பாடியில் விவசாயியாக இருந்தவர். அவருடைய ஜீன் கொஞ்சமாவது பிரசாந்துக்குள் இல்லாமல் போகுமா என்ன? எதற்காக இப்படி எட்டாயிரம் டாலர்களைத் தூக்கிப் பரிசாகக் கொடுத்தார்கள்? க்ளோர்பைரிஃபோஸ் எனப்படும் பூச்சிகொல்லி மருந்து மனித குலத்துக்கும் கால்நடைகளுக்கும் மிகக் கொடியது. 

இது பூமியில் துளி அளவு இருந்தாலும் போதும், நிலத் தையும் பயிர்களையும் நாசமாக்கிவிடும்.  இந்தப் பூச்சிகொல்லி மருந்தை, வீடுகளில் கூட எலி - பெருச்சாளி களுக்கு எதிராகப் பயன்படுத்துவார்களாம். இதில் டாக்ஸிக் ரசாயனம் மிகுதியாக இருக்கும்.  இந்த ரசாயனத்தின் சிறு துளி, கர்ப்பிணிப் பெண்ணைப் பாதித்தால் போதும், பிறக்கும் குழந்தைகள் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களால் தாக்கப்படுவர்.  குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களையும் இது பாதிக்கும்.  இந்தப் பூச்சிகொல்லி மருந்தை நிலத்தில் உபயோகிக்கத் தொடங்கிய 8 ஆண்டுகளுக்குப் பிறகும், நிலத்தின் 13 கிலோ மீட்டர் சுற்றுவட்டாரத்துக்கு அதன் தாக்கம் இருக்கும். அதனால், நிலத்தில் மிச்சம் மீதி இருக்கும் இந்த மருந்தின் அபாயத்தை, நிலத்திலிருந்தும் நீரிலிருந்தும் அகற்றியாக வேண்டும். அப்போதுதான் மனித குலத்தையும், கால்நடை களையும் காக்க முடியும்.  ஆனால், சுற்றுச் சூழலுக்கு இசைந்த மாற்றாக   பிரசாந்தின் ஆராய்ச்சியில், நிலத்தில் உள்ள இந்த மீதி மருந்தின் பாதிப்பை அகற்ற, நிலத்தின் இயற்கையான பாக்டீரியாவை உபயோகித்தால் போதும்.  பூச்சி மருந்தின் தாக்கத்தை 90 சதவிகிதம் போக்கிவிடலாம் என்று இதைச் செய்து காட்டியதால் கடந்த மே மாதம், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இவருக்குப் பரிசு கிடைத்தது!

கோதுமைக்கும் பார்லிக்கும் பயன்படும் உரங்களில் இரும்புச் சத்து, அயர்ன் ஆக்சைட் வடிவில் அதிகமாகவே இருந்தாலும், அதைத் தாவரங்கள் அல்லது பயிர்கள் எளிதாக உறிஞ்சிக் கொள்ள முடிவதில்லை.  ஏனென்றால்,  ஆக்சைட் நீரில் எளிதில் கரையாது.  பழக்கத்தில் உள்ள, இரும்புச் சத்து அளிக்கும் உரங்களின் விலை அதிகமாக இருக்கிறது.  அதன் காரணமாக, விவசாயிகள் வாங்க முடியாது என்பது மட்டுமல்ல, நிலத்துக்கும் அது தீமை விளைவிக்கிறது.

ஃபெர்ரோ  ஃப்ளூயிட்ஸ் கோதுமைப் பயிருக்கும், பார்லிக்கும் மாற்று நுண் இரும்புச்சத்தை அளிக்குமா என்று ஆராய்ச்சி செய்து பார்த்தார் பிரசாந்த். அப்போதுதான் இந்தப் பயிர்கள் 20 முதல் 35 சதவிகிதம் அதிகமான உற்பத்தி தரும் என்பதைக் கண்டறிந்தார். இந்த உரம் 70 சதவிகிதம் விலை குறைவும் கூட.

அது மட்டுமல்ல, இதைப் பயன்படுத்தினால் நிலமும் பாதிக்கப்படாது.  இதற்குத்தான் இப்போது காப்புரிமைக்கு விண்ணப்பித்திருக்கிறார் பிரசாந்த்.   இதற்கு நச்சுத்தன்மை யுள்ள, சுற்றுச்சூழல் விஞ்ஞானத்தில் இந்த ஆண்டு அமெரிக்காவில் முதல் பரிசு பெற்றிருக்கிறார்.  
ஆகஸ்ட் மாதம் லண்டனில் நடைபெற இருக்கும் லண்டன் யூத் இன்டர்நேஷனல் சயன்ஸ் விழாவில் பங்கு கொள்ள பிரசாந்துக்கு அழைப்பு வந்திருக்கிறது.

இவர் ஏற்கெனவே பெற்ற பரிசுகள் ஏராளம்: அய்அய்டி கவுகாத்தியில் டெக்னோ-எக்ஸ்போவில் முதல் பரிசு. ரிக்கோ சஸ்டெய்னபிள் டெவலப்மென்ட் பரிசு, பிலடெல்பியாவில் 2015 ஆம் ஆண்டு, வார்ட்டன் பிஸினஸ் ஸ்கூலில், உலகம் முழுவதிலிருந்தும் 12 குழுக்களாக நூற்றுக்கணக்கான பள்ளிகளிலிருந்து வந்திருந்த மாணவர்களிடையே ந்டந்த போட்டியில் பரிசு  என்று இவர் பரிசுப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது!

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, செயற்கைக் கோள்களையும் அவற்றை விண்ணில் செலுத்துவதற்கான ராக் கெட்டுகளையும் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுவருகிறது. மத்திய அரசின் விண்வெளித் துறையின் கீழ் இயங்கும் இஸ்ரோவில் தொழில்நுட்ப வல்லுநர்கள், பொறியாளர்கள், தொழில்நுட்பம் அல்லாத நிர்வாகப் பிரிவு பணியாளர்கள் எனப் பல்வேறு பிரிவுகளில் ஏராளமானோர் பணியாற்றிவருகிறார்கள்.

அகமதாபாத், பெங்களூரு, டில்லி, சிறீஹரிகோட்டா, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் இஸ்ரோ மய்யங்கள் அமைந்துள்ளன. இவற்றில் நிர்வாகப் பிரிவில் உதவியாளர் பதவியில் 272 காலியிடங்களை நேரடியாக நிரப்புவதற்கு இஸ்ரோ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எழுத்துத் தேர்வு மூலம் தகுதியான நபர்கள் இப்பணிக்குத் தேர்வுசெய்யப்பட உள்ளனர்.

தேவையான தகுதி:  உதவியாளர் பணிக்கு இளங்கலைப் பட்ட தாரிகள் விண்ணப்பிக்கலாம். முதல் வகுப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டியது அவசியம். அதோடு அடிப்படைக் கணினி அறிவும் தேவை. வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 26 ஆக நிர்ணயிக் கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், உடல் ஊனமுற்றோருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

என்ன கேட்பார்கள்? எழுத்துத் தேர்வில் ஆப்ஜெக்டிவ்

முறையிலான வினாக்களும் விரிவாக விடையளிக்கக்கூடிய கேள்வி களும் இடம்பெறும். எழுத்துத் தேர்வில் தேர்ச்சிப் பெறுவோருக்குக் கணினித் திறன் தேர்வு  நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெற்றாலே போதும். எழுத்துத் தேர்வு, இட ஒதுக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் பணிநியமனம் நடைபெறும்.

உரியக் கல்வித் தகுதியும் வயது வரம்புத் தகுதியும் உடைய பட்டதாரிகள் இஸ்ரோ இணையதளத்தில் (www.isro.gov.in) கூடுதல் விவரங்களை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். இஸ்ரோவில் பணியாற்ற விரும்பும் கலை அறிவியல் பட்டதாரிகளுக்கு இது ஓர் அரிய வாய்ப்பாகும்.

 

உயரம் தாண்டுதலில் சாதனை படைத்த மாரியப்பனைப் போல், முயன்றால் நம்மாலும் சாதிக்க முடியும். இந்த நம்பிக்கையை பயிற்சிகளின் மூலமும் வேலைவாய்ப்புகளின் மூலமும் ஏற்படுத்திவருகிறது  யூத்4ஜாப்ஸ்  தன்னார்வ அமைப்பு. கை, கால் செயல்படுவதில் குறைபாடு, காது கேட்காத, வாய் பேசமுடியாத குறைபாட்டுடன் இருந்த 11 ஆயிரம் பேருக்குப் பலவிதமான திறன் பயிற்சிகளை அளித்திருக்கிறது இந்த அமைப்பு. இதில் 60 சதவீதத்துக்கும் அதிகமானோர் பணியில் இருக்கின்றனர் என்கிறார் இதன் நிறுவனர் மீரா ஷெனாய்.

சமூகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு வாழ்வாதாரத் தைக் கொடுப்பதற்காகக் கடந்த அய்ந்தாண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது இந்த அமைப்பு. இந்தியாவில் 11 மாநிலங் களில் 20 மய்யங்களில் இது செயல்படுகிறது.

சில அமைப்புகளில் கல்விக்கு மட்டுமே முக்கியத்துவம் தருவார்கள். சாஃப்ட் ஸ்கில் பயிற்சி மட்டுமே தருவார்கள். இவர்களிலிருந்து எங்களின் அமைப்பு முற்றிலும் மாறுபட்டது. பெரும்பாலும் நாங்களே மாற்றுத் திறனாளிகளைத் தேடிப் போவோம். அவர்களின் குடும்பத்தோடு ஒருநாள் தங்கி யிருந்து, அவர்களைப் பற்றித் தெரிந்துகொள்வோம். நாங்கள் 60 நாட்களுக்கு என்னென்ன பயிற்சிகளை அளிக்கிறோம் என்று சொல்வோம். அவர்களின் முழு ஒப்புதலோடு இந்த மய்யத்திற்கு அழைத்து வருவோம். பயிற்சி நடக்கும் நாட்களில் அவர் களுக்கு உணவு, இருப்பிடம் அனைத்தையும் இலவசமாகவே அளிக்கிறோம்.

உடல் குறைபாட்டோடு பிறந்ததால் தங்களால் எதுவுமே செய்ய முடியாது என்று சமூகம் அவர்கள் மீது திணித்த அவநம்பிக்கையை, பயத்தைப் பலதரப்பட்ட எங்களின் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளின் மூலம் போக்குகிறோம். கடைசி 15 நாட்களில் இரண்டு விதமான நேர்காணலுக்கு அவர்களைத் தயார்படுத்துவோம். இந்தப் பயிற்சி தன்னம்பிக்கையோடு நேர்காணலைச் சந்திக்க உதவும். வேலை கிடைத்தாலும் ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளுக்கு அவர்களைக் கண் காணிப்போம். குறைந்தபட்சம் 8 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை அவர்களின் தகுதிக்கு ஏற்ப மாதச் சம்பளம் பெறும் பணியில் இருக்கின்றனர் என்கிறார் யூத்4ஜாப்ஸின் தமிழ்நாடு, புதுச்சேரிக்கான உதவித் திட்ட மேலாளர் ஜெய்சபரி பாலாஜி.

2 மாதப் பயிற்சிக்குப் பின்னர் அவரவருக்குப் பொருத்த மான வேலைவாய்ப்பு நிறுவனங்களில் நேர்காணலுக்குத் தயார்படுத்துகிறது இந்த அமைப்பு. வேலை கிடைத்த பின்பும் அவர்களுடைய முன்னேற்றத்துக்குத் தேவையான செயல் திறன் கலந்தாய்வையும் அளிக்கிறது. தற்போதைய நிலவரப் படி ஹைதராபாத், சென்னை, பெங்களூருவில் வேலை வாய்ப்புப் பெற்றுத்தரப்படுகிறது. அதிக வளர்ச்சியும் அதிக மனிதவள ஆற்றலும் தேவைப்படும் துறைகளான ஹாஸ் பிடாலிட்டி, ரீடெயில், பேங்கிங், ஃபைனான்ஸ், பி.பீ.ஓ., அய்.டி., டிராவல் அண்ட் டூரிஸம் ஹெல்த் ஆகியவற்றிலும் தொழிற் சாலைகளிலும் வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது. உள் ளூரிலும் அதே மாவட்டத்திலும் வேலைவாய்ப்பைப் பெற்றுத் தரவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அவ்வமைப்பினர் தெரிவிக்கின்றனர்.

தொடக்கப் புள்ளி:

இந்த அமைப்பைத் தொடங்கிவைத்து அதன் மூளையாகச் செயல்படுபவர் மீரா ஷெனாய். இந்தியாவிலேயே முன்மாதிரியாக, ஆந்திர மாநிலத்தின் கிராமப்புற மற்றும் பழங்குடி மக்களின் வேலைவாய்ப்பை உறுதிசெய்யும் திட்டத்தை 2004இல் தொடங்கி அதன் நிர்வாக இயக்குநராகவும் செயல்பட்டவர் இவர். தெற்காசியாவுக்கான உலக வங்கியின் ஆலோசகராகவும் இருந்தவர். மீரா ஷெனாய்

இவர் இந்த அமைப்பைத் தொடங்கியதற்கான காரணம் ஓர் ஆய்வு என்கிறார். இந்தியாவின் மக்கள்தொகையில் 2 கோடிக்கும் அதிகமானோருக்கு உடல்ரீதியான குறைபாடு இருப்பதாக அய்ந்தாண்டுகளுக்கு முன்பு தெரியவந்தது. உடலளவிலும் மனதளவிலும் தன்னம்பிக்கை இழந்து இருப்பவர்களுக்குத் தகுந்த பயிற்சியையும் ஒரு வாய்ப்பையும் வழங்கினால் அவர்களாலும் பொருளாதாரரீதியாக முன்னேற முடியும் என இந்த அமைப்பைத் தொடங்கினோம்.

1. உடல் குறைபாட்டோடு இருப்பவர்களும் நிச்சயம் சாதிக்க முடியும் என்பதைப் புரியவைப்பது.

2. அவர்களுக்கு இருக்கும் தாழ்வு மனப்பான்மையைப் போக்கி நம்பிக்கை அளிப்பது.

3. சாதாரணமாக இருப்பவர்களின் பணித்திறனுக்கு மாற்றுத் திறனாளிகளின் திறன் எந்த விதத்திலும் குறைந்ததல்ல என்பதை வேலை கொடுக்கும் நிறுவனங்களுக்குப் புரிய வைப்பது. இந்த மூன்று விதமான சவாலை நாங்கள் எதிர்கொள் கிறோம் என்றார் மீரா ஷெனாய்.
தொடர்புக்கு: 99499 95202, மற்றும் 98499 00801.

கூடுதல் விவரங்களுக்கு: www.youth4jobs.org


தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (தமிழ்நாடு மின்சார வாரியம்) விரைவில் 325 உதவி பொறியாளர்களை நேரடித் தேர்வு மூலம் தேர்வுசெய்ய உள்ளது. இதில் 300 காலியிடங்கள் எலெக்ட்ரிகல் இன்ஜினியரிங் பிரிவுக்கும், 25 இடங்கள் சிவில் இன்ஜினியரிங் பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மின்சார வாரியத்தில் எழுத்துத் தேர்வு மூலம் நேரடி நியமன முறையில் உதவி பொறியாளர்கள் தேர்வுசெய்யப்பட்டுப் பணியமர்த்தப்படுகிறார் கள். அந்த வகையில், 325 உதவிப் பொறியா ளர்களை நேரடி தேர்வு மூலம் நியமிக்க மின்சார வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான எழுத்துத் தேர்வை நடத்த அண்ணா பல்கலைக் கழகத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. எழுத்துத் தேர்வு அடிப்படையில் பணிநியமனம் நடைபெறும். நேர்முகத் தேர்வு எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

தேவையான தகுதி

உதவிப் பொறியாளர் (எலெக்ட்ரிகல்) பணிக்கு எலெக்ட்ரிகல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிகல் இன்ஸ்ட்ருமென்டேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி உள்ளிட்டவையில் ஏதேனும் ஒரு பிரிவில் பி.இ. அல்லது பி.டெக். பட்டம் பெற்றிருக்க வேண்டும். உதவி பொறியாளர் சிவில் பிரிவுக்கு பி.இ. சிவில் பொறியியலில் பட்டம் அவசியம்.

ஏ.எம்.அய்.இ. தேர்ச்சி பெற்றவர்களும் உதவிப் பொறியாளர் பணிக்கு விண்ணப்பிக்க லாம். வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு மட்டும் 30 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பி.சி., எம்.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. ஆகிய இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது. உதவிப் பொறியாளர் தேர்வுக்கான அறிவிப்பு வெகு விரைவில் வெளியிடப்பட உள்ளது. மின்சார வாரியத்தின் இணையதளத்திலும் (www.tangedco.gov.in)
அறிவிப்பு வெளியாகும். நேரடியாக உதவிப் பொறியா ளராகப் பணியில் சேருவோர் உதவி செயற் பொறியாளர், செயற்பொறியாளர், கண்காணிப்புப் பொறியாளர், தலைமைப் பொறியாளர் எனப் படிப்படியாகப் பதவி உயர்வு பெறலாம்.

Banner
Banner