இளைஞர்


மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகளுக்குத் தேவைப்படும் எழுத்தர் உள்ளிட்ட குரூப்-சி ஊழியர்களும் குரூப்-பி சார்நிலைப் பணியாளர்களும் எஸ்.எஸ்.சி. எனப்படும் பணியாளர் தேர்வாணையம் மூலமாகத் தேர்வுசெய்யப்படுகிறார்கள்.

அந்த வகையில், கீழ்நிலை எழுத்தர், இளநிலைச் செயலக உதவியாளர், அஞ்சல் உதவியாளர், அஞ்சல் பிரிப்பு உதவியாளர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பதவிகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த மேல்நிலைக் கல்வித் தேர்வுக்கான அறிவிப்பை எஸ்.எஸ்.சி. வெளியிட்டுள்ளது.

தேவையான தகுதி: பிளஸ் 2 முடித்தவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பதவிக்கு மட்டும் அறிவியல் பிரிவில் கணிதத்தை ஒரு பாடமாகப் படித்திருக்க வேண்டும். வயது 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும். மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, அதிகபட்ச வயது எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 32, ஓ.பி.சி. பிரிவினருக்கு 30, மாற்றுத் திறனாளிகள் 37.

தேர்வு முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு (தட்டச்சு, டேட்டா என்ட்ரி) அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வு கிடையாது.

எழுத்துத் தேர்வு முதல்நிலைத் தேர்வு, 2ஆவது நிலைத் தேர்வு என இருநிலைகளை உள்ளடக்கியது. முதல்நிலைத் தேர்வு ஆன்லைன் வழியில் நடத்தப்படும். இதில், பொது ஆங்கிலம், ரீசனிங், அடிப்படைக் கணிதம், பொது அறிவு ஆகிய 4 பகுதிகளில் இருந்து தலா 25 கேள்விகள் வீதம் 100 கேள்விகள் இடம்பெறும். மொத்தம் 200 மதிப்பெண்கள். ஒரு மணி நேரத்தில் விடை அளிக்க வேண் டும். தவறான பதில்களுக்கு மைனஸ் மதிப்பெண் உண்டு.

இரண்டாம் நிலைத் தேர்வு, விரிவாகப் பதில் எழுதும் வகையில் அமைந்திருக்கும். இதற்கு 100 மதிப் பெண்.
இதில் தேர்ச்சி பெற்றவர்கள் பதவிக்கு ஏற்ப திறன் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இத்தேர்வில் தேர்ச்சி பெற்றாலே போதும். டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பதவிக்குக் கணினித் தேர்வும் இதர பதவிகளுக்குத் தட்டச்சு லோயர் கிரேடு தரத்தில் தட்டச்சுத் தேர்வும் நடத்தப்படும்.

இறுதியாக முதல்நிலைத் தேர்வு மதிப்பெண், மெயின் தேர்வு மதிப்பெண், இட ஒதுக்கீடு அடிப்படையில் மெரிட் பட்டியல் தயாரிக்கப்பட்டு அதன் பேரில் பணிக்குத் தேர்வுசெய்யப்படுவார்கள்.

ஆன்லைன்வழி முதல்நிலைத் தேர்வு நடைபெறும். சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி ஆகியவை தேர்வு மய்யங்கள் ஆகும். உரிய கல்வித் தகுதியும் வயது வரம்புத் தகுதியும் கொண்டவர்கள் www.ssconline.nic.in என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கியத் தேதிகள்

முதல்நிலைத் தேர்வு: மார்ச் 4 - 26, 2018

இரண்டாம்நிலைத் தேர்வு: ஜூலை 8, 2018

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்:
டிசம்பர் 18, 2017

தோட்டக்கலை படித்தவர்களுக்கு
தமிழக அரசில் பணி  

தமிழக அரசில் காலிப்பணியிடங்களை நிரப்பும் பணியில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஹார்டிகல்சர் (தோட்டக்கலை) துறையில் காலியாக உள்ள 130 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிட விவரம் : தோட்டக்கலை துணை இயக்குநர் பதவியில் 100 இடங்களும், தோட்டக்கலை அதிகாரி பதவியில் 30 இடங்களும் நிரப்பப்பட உள்ளன. வயது : 2017 ஜூலை 1 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். இவர்கள் முதுநிலைப் பட்டப்படிப்பு அல்லது பிஎச்.டி., ஆராய்ச்சிப் படிப்பை முடித்தவர்களாக இருந்தால் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி : தோட்டக்கலை துணை இயக்குநர் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள், எம்.எஸ்சி., (ஹார்டிகல்சர்) முடித்திருக்க வேண்டும். தோட்டக்கலை அதிகாரி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் பி.எஸ்சி., (ஹார்டிகல்சர்) முடித்தவராக இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை : பொது எழுத்துத் தேர்வு மதிப்பெண்கள், சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

தேர்வு மய்யங்கள் : சென்னை, மதுரை மற்றும் கோவையில் தேர்வு நடத்தப்படும்.

விண்ணப்பிக்க :www.tnpscexams.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். பதிவுக்கட்டணம் 150 ரூபாய். விண்ணப்பக்கட்டணம் 200 ரூபாய். கடைசி நாள் : 2017 டிச., 27.

விவரங்களுக்கு : www.tnpsc.gov.in/notifications/ 2017_29_not_horticultural.pdf

ரயில்வேயில் 1,050 காலியிடங்கள்

தென்கிழக்கு மத்திய ரயில்வே என்பது இந்திய ரயில்வேயின் அங்கம். இந்த புதிய மண்டலத்தில் பிலாஸ்பூர் கோட்டம் 2003 முதல் செயல்பாட்டுக்கு வந்தது.

நாக்பூர், பிலாஸ்பூர், ராய்பூர் என்ற கோட்டங்களை உள்ளடக்கிய தென் கிழக்கு மத்திய ரயில்வேயில் அப்ரென்டிஸ் பிரிவில் காலியாக இருக்கும் 1,050 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிட விவரம் : தென் கிழக்கு மத்திய ரயில் வேயின் நாக்பூர் கோட்டத்தில் 298ம், மோடிபாக் ஒர்க் ஷாப்பில் 15ம், ராய்பூர் கோட்டத்தில் 255ம், ராய்பூர் வேகன் ஒர்க் ஷாப்பில் 50ம், பிலாஸ்பூர் கோட்டத்தில் 432ம் என மொத்தம் 1,050 காலியிடங்கள் உள்ளன.

பிரிவுகள்: பிட்டர், கார்பென்டர், வெல்டர், பாசா, எலக்ட்ரீசியன், செக்ரட்டேரியல் பிராக்டிஸ், பைப் பிட்டர், பெயின்டர், ஒயர்மேன், எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், பவர் மெக்கானிக், மெக்கானிக் மெசின் மெயின்டனென்ஸ், டீசல் மெக்கானிக், அப் ஹோல்ஸ்டரர், பியரர், டர்னர், ஹெல்த் சானிட்டரி இன்ஸ்பெக்டர், ஸ்டெனோகிராபர், மெசினிஸ்ட், மெக்கானிக் மோட்டர் வெகிக்கிள் என்ற பிரிவுகளில் அப்ரென்டிஸ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விரிவான தகவல்களை இணையதளத்தை பார்த்து அறியவும்.

வயது : விண்ணப்பதாரர்கள் 14 - 24 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : விண்ணப்பிக்கும் பிரிவினைப் பொறுத்து கல்வித் தகுதி மாறுபடுகிறது. பொதுவாக பத்தாம் வகுப்பில் தேர்ச்சியும், என்.சி.வி.டி., அங்கீ காரம் பெற்ற அய்.டி.அய்., படிப்பையும் முடித்திருப்பது தேவைப்படும். விண்ணப்பிக்கும் பிரிவுக்கு ஏற்றபடி சிறப்புத் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி நாள் : 2017 டிச., 27. விபரங்களுக்கு : : www.secr.indianrailways.gov.in/view_section.jsp?lang=0&id=0,4,382

கப்பல் கட்டும்
தளத்தில் வேலை

நமது நாட்டிலுள்ள கப்பல் கட்டும் தளங்களில் கொச்சி கப்பல் கட்டும் தளம் முக்கியமானது. இங்கு சேப்டி அசிஸ்டென்ட் பிரிவில் 25 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன.

வயது : 2017 டிச., 10 அடிப்படையில் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு, இண்டஸ்ட்ரியல் சேப்டி பிரிவில் டிப்ளமோ அல்லது சான்றிதழ் படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறு வனத்தின் மூலமாக முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை : பிராக்டிக்கல் தேர்வு வாயிலாக தேர்ச்சி இருக்கும்.

பணியனுபவம் : ஏதாவது ஒரு பொதுத்துறை அல்லது தனியார் நிறுவனத்தில் தொடர்புடைய பிரிவில் ஓராண்டு காலம் பணி அனுபவம் தேவைப்படும்.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். கட்டணம் 100 ரூபாய். கடைசி நாள் : 2017 டிச., 10.

விவரங்களுக்கு:www.cochinshipyard.com/ca

ஆசிய மாரத்தானை வென்ற கோபி தொனாகல்

சீனாவின் டொங்குவான் நகரில் நவம்பர் 26 அன்று 2017ஆம் ஆண்டுக்கான ஆசிய மாரத்தான் வாகையர் பட்டப் போட்டி நடைபெற்றது. இந்த ஆசிய மாரத்தான் போட்டியில் ஆடவர் பிரிவில் தங்கம் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை நிகழ்த்தியிருக்கிறார் கோபி தொனாகல். 2 மணி நேரம், 15 நிமிடங்கள், 48 நொடிகளில் இந்த மாரத்தான் ஓட்டத்தைக் கடந்து இந்தப் பதக்கத்தை வென்றிருக்கிறார் கோபி.
உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரே பெட்ரோவ் வெள்ளி பதக்கமும் மங்கோலியாவைச் சேர்ந்த பியாம்பலேவ் வெண்கல பதக்கத்தையும் இந்த மாரத்தான் போட்டியில் வென்றிருக்கின்றனர். இதற்கு முன், ஆசிய மாரத்தானில் இந்தியாவைச் சேர்ந்த ஆஷா அகர்வாலும் (1985) சுனிதாவும் (1992) மகளிர் பிரிவில் தங்கப் பதக்கம் வென் றிருக்கின்றனர்.


கண்டுபிடிப்புக்கும் - வயதுக்கும் தொடர் பில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் பத்தாம் வகுப்புப் பயிலும் மூன்று மாணவர்கள் புதிய இயந்திரம் ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். கடலில் கலக்கும் கச்சா எண்ணெயை அப்புறப் படுத்த ஆயில் சேவர் என்ற புதிய இயந்திரத்தை இந்த மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.

மதுரை மாவட்டம் வீரபாஞ்சான் பகுதியில் உள்ள லட்சுமி (அய்.சி.எஸ்.இ.) பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறார்கள் முத்து அய்ஸ்வர்யா, சாகித்ய நிருபன், கோமதி என்னும் இந்த மாணவர்கள். உத்தரப் பிரதேசத்தில் உள்ள அய்.அய்.டி. கான்பூர், தேசிய அளவிலான இளம் கண்டுபிடிப்பாளர்கள் இறுதிப் போட்டியை சில வாரங்களுக்கு முன்பு நடத்தியது. இப்போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து 1000-த்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். இறுதிப் போட்டிக்கு 16 குழுக்கள் தேர்வுசெய்யப்பட்டன. அவற்றில் ஒன்று இந்த மாணவர் குழு. ஆயில் சேவர் இயந்திரத்தின் செயல் முறை விளக்கத்தை மாணவர்கள் சிறப்பாக எடுத்துரைத்துள்ளனர்.  மாணவர்களின் கண்டுபிடிப்பு சுற்றுச்சூழலுக்கு உதவும் வகையிலும் மற்ற கண்டு பிடிப்புகளைவிடச் சிறப்பாக இருந்ததாலும் இளம் விஞ்ஞானி களுக்கான போட்டியில் இதற்கு முதலிடம் கிடைத்துள்ளது.

கடலுக்கு வாளி போதுமா?

சென்னை எண்ணூர் பகுதியில் இரண்டு சரக்குக் கப்பல்கள் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் கச்சா எண்ணெய் மெரினா கடற் பகுதியில் கொட்டியது.

இது மிக மோசமான சுற்றுச்சூழல் சீர்கேட்டையும் விளைவித்தது. கச்சா எண்ணெயை அப்புறப்படுத்துவதற்கு முறையான கருவிகள் இல்லாத காரணத்தால் கடல்சார் பொறியியல் படிக்கும் மாணவர்கள், மீனவர்கள், பொதுமக்கள் ஆகியோர் இணைந்து பல நாட்களாக பிளாஸ்டிக் வாளியால் கச்சா எண் ணெயை அப்புறப்படுத்திவந்தனர். அதிநவீன இயந்திரங்கள் கொண்டு இந்த கச்சா எண்ணெய் அப்புறப்படுத்தப்படும் என அரசு தரப்பு சொல்லிக்கொண்டிருந்த நிலையில் பிளாஸ்டிக் வாளிதான் கடைசிவரை பயன்படுத்தப்பட்டது.

இந்தச் சம்பவம் முத்து அய்ஸ்வர்யா, சாகித்ய நிருபன், கோமதி ஆகிய மூன்று மாணவர்களைச் சிந்திக்கவைத்திருக்கிறது. அப்போது, அவர்களுடைய ஆசிரியை லட்சுமி, கச்சா எண்ணெயைப் பிரித்து எடுக்கும் இயந்திரத்தை உருவாக்க முயலுங்கள் என்று ஊக்கு வித்திருக்கிறார்.

மூளையாகச் செயல்பட்ட மாணவி

கணினி நிரல்   உருவாக்குவதில் படுவேகமாகச் செயல்படுகிறார் மாணவி முத்து அய்ஸ்வர்யா. எட்டாம் வகுப்பு படிக்கும்போதே கணினி நிரல்களைச் சுயமாக எழுதக் கற்றுக்கொண்டவர் இவர். ஆயில் சேவர் இயந்திரத்தின் கணினி நிரலை எழுதியவர் முத்து அய்ஸ்வர்யாதான்.

கடலில் கொட்டப்பட்ட கச்சா எண்ணெய் யை மாணவர்கள் வாளியை கொண்டு அள் ளிய காட்சி எங்களை மிகவும் பாதித்தது. அதற்கான தீர்வு காண முடிவெடுத்தோம். நீரின் அடர்த்தியை விடவும் எண்ணெயின் அடர்த்தி குறைவு. அதனால்தான் எண்ணெய் தண்ணீரின் மேலே மிதக்கிறது. இந்த அடிப் படை அறிவியலைப் புரிந்துகொண்டு இயந்தி ரத்தில் கச்சா எண்ணெய்யைக் கண்டுபிடிக்க இன்ஃப்ரா ரெட் சென்சார் கருவியைப் பொருத் தினேன். கறுப்பு நிறத்தில் இருக்கும் கச்சா எண்ணெய் கொட்டிக் கிடக்கும் இடத்தை சென்சார் சுட்டிக்காட்ட அங்கு ஆயில் சேவர்  மிதந்து சென்று குழாய் மூலமாக கச்சா எண்ணெயை உறிஞ்சி இயந்திரத்தின் மேல்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள தொட்டியில் நிரப்பிவிடும். தொட்டி முழுவது மாக நிரம்பியவுடன் மீண்டும் கரைக்குத் திரும்பி விடும். பின்னர், வேறொரு குழாய் மூலமாக கச்சா எண்ணெய்யை வெளியேற்றி மீண்டும் பயன்படுத்தும் வகையில் ஆயில் சேவர்-அய் வடிவமைத்துள்ளோம் என்கிறார் முத்து அய்ஸ்வர்யா. மனித மூளையின் செயல்பாடு குறித்து அதிக ஆர்வம் கொண்ட இவருடைய லட்சியம் நரம்பியல் விஞ்ஞானி ஆவதாம்.

ஆயில் சேவர் இயந்திரத்தின் வடிவத்தைத் தீர்மானித்ததில் முக்கியப் பங்கு வகிக்கிறார் சாகித்ய நிருபன். என்ன மாதிரியான வடிவில் இயந்திரத்தை உருவாக்கலாம் என யோசித்துக் கொண்டி ருந்தேன். அப்போது எனக்கு உதவியது கார்ட்டூன் பொம்மைகள்தான். பென்10 கார்ட்டூனில் வரும் வில்லனின் தொப்பிதான் எனக்கு இயந்திரத்தை வடிவமைக்க உதவியது. இளம் கண்டுபிடிப்பாளர் போட்டிக்கு முதலில் நாங்கள் என்ன செய்யப்போகிறோம் என்பதை எழுதி அனுப்பினோம். முதல் சுற்றில் தேர்வானவுடன் எங்கள் இயந்திரத்தை வடிவமைக்கும் பணியில் தீவிரமாக இறங்கினோம். ஒருமாத இடைவெளியில் பலமுறை இயந்திரத்தின் வடிவத்தை மாற்றி சோதித்தோம்.

இறுதிப்போட்டிக்கு அய்.அய்.டி. கான்பூர் சென்றிருந்தபோது மற்ற கண்டுபிடிப்பாளர்களின் இயந்திரங்கள் பார்க்கச் சிறப்பாக இருந்தன. ஆனால், அவர்களால் தங்களுடைய கண்டுபிடிப்பைத் தெளிவாக விளக்க முடியவில்லை. எங்களுடைய இயந்திரத்தின் செயல் பாட்டைத் தெளிவாக விளக்க நாங்கள் தயார் நிலையில் இருந்தோம். அந்த நேரத்தில் எங்களின் இயந்திரம் திடீரென ஓடாமல் நின்றுவிட்டது. ஒரு நிமிடம் என்ன செய்வது என்றே புரியவில்லை. ஆனால், நாங்கள் மூவரும் பதற்றமாகாமல் இயந்திரம் குறித்த எங்களின் விளக்கத்தைத் தெளிவாகக் கூறினோம். சிரமங்கள் நடுவே நாங்கள் தைரியமாக விளக்கியதைக் கேட்ட நடுவர்கள் பாராட்டி முதல் பரிசு கொடுத்தார்கள் எனப் பூரிப்புடன் கூறுகிறார் சாகித்ய நிருபன்.

நாங்கள் கண்டுபிடித்துள்ள இயந்திரம் அனைவருக்கும் உதவும் வகையில், கட்டுப்படியாகக்கூடிய விலையில் இருக்க வேண்டும் என்பதில் மூன்று பேரும் கவனமாக இருந்தோம் என்கிறார் கோமதி.

சொந்த செலவில் சாலையைச் சீரமைத்த இளைஞர்கள்

விழுப்புரத்தில் சேதமடைந்த தார்ச் சாலையை இளைஞர்கள் தங்களது சொந்த செலவில் கிராவல் மண் அடித்து சீரமைத்தனர்.

விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கத்தில் ரயில்வே தரைப்பாலம் தொடங்கி, திரவுபதியம்மன் கோயில் வரையிலான சண்முகப் பெருமான் சாலை, முக்கிய கடை வீதியாகவும், அரசு மேல்நிலைப் பள்ளி, அரசு கலைக் கல்லூரி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வர பயன்படுத்தப்படும் பிரதான பாதையாகவும் உள்ளது. கடந்த சில மாதங்களாக விழுப்புரம் ரயில்வே மேம்பாலப் பணிகள் நடைபெற்றபோது, விழுப்புரம் - புதுச்சேரி சாலைக்கு மாற்றுச் சாலையாக இந்த சாலை பயன்படுத்தப்பட்டு வந்தது.

இதனால், இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமானது. மேலும், தற்காலிகமாக சீரமைக்கப்பட்ட நிலையிலும், தொடர் மழை காரணமாக சாலையில் நீர் தேங்கி, கடுமையாக சேதமானது.

இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று, அப்பகுதியில் இயங்கும் “யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனும் பொதுநல இளைஞர் அமைப்பினர், வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் தரப்பில் மாவட்ட ஆட்சியர், நகராட்சி நிர்வாகத்துக்கு தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

ஆனால், இந்தக் கோரிக்கைக்கு பலன் கிடைக்காத தையடுத்து, நீண்ட நாள்களாக புதுப்பிக்கப்படாத

ஒரு கி.மீ. தொலைவுள்ள இந்த சாலையை சீரமைக்கும் பணியில் “யாதும் ஊரே யாவரும் கேளிர்’ அமைப் பைச் சேர்ந்த இளைஞர்கள் களமிறங்கினர்.

தங்களது சொந்த செலவில் லாரிகள் மூலம் கிராவல் மண் கொண்டு வந்து சாலையில் கொட்டினர். கொட்டிய கிராவல் மண்ணை, தார்ச்சாலை பள்ளங் களில் பரப்பி, சாலையை சீரமைத்தனர்.

மேலும், இந்த தார்ச்சாலையை புதுப்பித்து சீரமைக்க வேண்டும் என்று அந்த அமைப்பினர் ஆட்சியருக்கு கோரிக் கையும் விடுத்தனர். இளை ஞர்கள் மேற்கொண்ட இந்த நற்பணியை அப்பகுதி மக்கள் வெகுவாகப் பாராட்டினர்.

ரிசர்வ் வங்கியில் காலிப் பணியிடங்கள்

இந்திய ரிசர்வ் வங்கியானது  526 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

இதற்கு 25 வயதுக்குள் இருக்கும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியான வர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த காலியிடங்கள்: 526 (இதில் சென்னைக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன)

பணி:  தகுதி: 01.11.2017 தேதியின்படி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.10,940 - 23,700

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப் படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.450. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.50 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.rbi.org.in என்ற இணைய தளத்தின் மூலம் ஆன்லைனில் விண் ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிப் பதற்கான கடைசி தேதி: 07.12.2017

எழுத்துத் தேர்வு:  வரும் 2018 ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடைபெறலாம். 120 மதிப் பெண்கள் கொண்டது. 120 வினாக்கள் அடங்கிய இந்த தேர்வு 90 நிமிடங்கள் நடைபெறும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறியwww.rbi.org.in செய்து தெரிந்துகொள்ளவும்.

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பாரின் டிரேடு எனப்படும் அய்.அய்.எப்.டி., கல்வி நிறுவனம் 1963இல் நிறுவப்பட்டது. இந்தியாவின் வெளிநாட்டு வணிகம் குறித்த சிறப்பான படிப்புகளைத் தருவதில் பிரசித்தி பெற்றது. டில்லி, கோல்கட்டா ஆகிய இரண்டு இடங்களில் உள்ளது. இங்கு காலியாக உள்ள அசிஸ்டென்ட் புரொபசர் காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன.

துறைகள்: எகனாமிக்ஸ், மார்க்கெட்டிங், பினான்ஸ், ஆபரேஷன்ஸ் ரிசர்ச்/ சப்ளை செயின் மேனேஜ்மெண்ட், இன்பர்மேஷன் டெக்னாலஜி, ஸ்ட்ராடஜிக் மேனேஜ்மென்ட், இன்டர்நேஷனல் டிரேடு ஆபரேஷன்ஸ், லாஜிஸ்டிக்ஸ், டாகுமென் டேஷன், எச்.ஆர்., பிசினஸ் கம்யூனிகேஷன்ஸ் போன்ற பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன.

தேவைகள் : பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் பிரிவில் முதுநிலைப் பட்டப் படிப்பு, பி.ஜி.டி.எம்., படிப்பை முழுநேரப் படிப்பாக முடித்தவர்கள், எம்.ஏ., படிப்பை எகனாமிக்ஸ், சைக்காலஜி, ஆர்கனி சேஷன் பிகேவியர், எம்.ஏ., ஸ்டாடிஸ்டிக்ஸ், மேத மேடிக்ஸ் பிரிவுகளில் முடித்தவர்கள், தொடர்புடைய பிரிவில் பிஎச்.டி., படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் இந்த தகுதியுடன் நெட், ஸ்லெட், செட் தேர்வையும் எழுதி வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை : கல்வித் தகுதி மற்றும் நெட்/ஸ்லெட்/செட் தேர்வு மதிப்பெண்கள் மற்றும் எழுத்துத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும் .

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் முறை யில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். கடைசி நாள் : 2017 நவ., 27. விபரங்களுக்கு http://tedu.iift.ac.in/iift/docs/vacanciesdoc/FAC_07112017.pdf

ரயில்வேயில் காலிப் பணியிடங்கள்இந்தியாவில் 1980க்கு முன் னர் வரை ரயில்களுக்கு தேவையான சக்கரங்கள் மற்றும் ஆக்சில் களை வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய் தனர். பின் உள்நாட்டிலேயே அவற்றைத் தயாரிக்கும் நோக் கத்தில் ரயில் வீல் பேக்டரி லிமி டெட் நிறுவனம் துவங்கப் பட்டது.  இந்த நிறுவனத்திற்கு உற்பத்தி மய்யங்கள் பல்வேறு இடங்களிலும் உள்ளது. பெருமைக்குரிய இந்நிறுவனத்தில் காலியாக உள்ள 192 அப்ரெண்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிட விபரம்: பிட்டரில் 85, மெஷினிஸ்டில் 31, மோட்டர் மெக்கானிக் வெகிக்கிளில் 8, டர்னரில் 5, சி.என்.சி., புரொகிராமிங் கம் ஆப்பரேட்டரில் 23, எலக்ட்ரீசியனில் 18, எலக்ட்ரானிக் மெக்கானிக்கில் 22ம் சேர்த்து மொத்தம் 192 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

வயது: 2017 நவ., 29 அடிப்படையில் விண்ணப்ப தாரர்கள் 15 - 24 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.  மேலும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறு வனத்தின் மூலமாக குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதன் பின்னர் தொடர்புடைய டிரேடிங் பிரிவில் அய்.டி.அய்., படிப்பை யும் முடித்திருக்க வேண்டும். பயிற்சி காலம்: சி.என்.சி., டிரே டிங் பிரிவுக்கு 6 மாத காலமும், இதர பிரிவு களுக்கு ஒரு ஆண்டு காலமும் பயிற்சி இருக்கும்.
மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்ச்சி செய்யப் பட்டால் மாதம் ரூ.6 ஆயிரம் வரை பெறலாம். மெரிட் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும். எழுத்துத் தேர்வை எதிர்கொண்டு வெற்றி கரமாக தேர்ச்சி பெற வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான படிவத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளைச் சேர்த்து பின்வரும் முக வரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பக் கட்டணம் 100 ரூபாய். இதனை போஸ்டல் ஆர்டர் அல்லது டி.டி., யாக செலுத்த வேண்டும்.

Chief Personnel Officer, Rail Wheel Factory, Yelahanka, Bangalore - 560064 

கடைசி நாள் : 2017 நவ., 29. விபரங்களுக்கு :www.rwf.indianrailways.gov.in/view_detail.jsp?lang= 0 & dcd =170&id=0,297, 310

மத்திய அரசின் பொதுப்பணித் துறை, மத்திய நீர்வள ஆணையம், அஞ்சல் துறை, மத்திய நீர் மின் ஆராய்ச்சி நிலையம், தேசியத் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் உள்பட மத்திய அரசின் பல்வேறு துறைகளிலும், பொதுத் துறை நிறுவனங்களிலும் ஜூனியர் பொறியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பணியாளர் தேர்வாணையம் மூலம் நேரடி நியமன முறையில் அவை நிரப்பப்பட உள்ளன.

சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் பொறியியல் ஆகிய பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன. சம்பந்தப்பட்ட பிரிவில் பொறியியல் பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும். சில பிரிவுகளுக்குப் பொறியியல் பட்டப் படிப்பு முடித்தவர்களும் விண்ணப் பிக்கலாம். வயதுவரம்பைப் பொறுத்த வரையில், குறிப்பிட்ட துறைகள் மற்றும் நிறு வனங்களுக்கு ஏற்ப 27, 30, 32 என வெவ்வேறு வயதுவரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

எனினும், மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, எஸ்.சி., எஸ்.டி. வகுப்பி னருக்குக் கூடுதலாக 5 ஆண்டுகளும் ஓ.பி.சி. எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பின ருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத் திறனாளி களுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு. தற்போது பி.சி., எம்.பி.சி. வகுப்பைச் சேர்ந்தவர்கள் ஓ.பி.சி. தகுதிச் சான்று பெறுவதற்கான வருமான உச்சவரம்பு ரூ.6 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு அடிப்படையில் பணிக்குத் தேர்வுசெய்யப்படு வார்கள். எழுத்துத் தேர்வில் முதல் தாள் அப்ஜெக்டிவ் முறையில் அமைந்திருக்கும். இத்தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும். இதில் ரீசனிங், பொது அறிவு, பொறியியல் ஆகிய வற்றில் இருந்து 200 கேள்விகள் இடம்பெறும். முதல் தாளில் தேர்ச்சி பெறுவோர் அடுத்த கட்டத் தேர்வான இரண்டாம் தாள் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

இரண்டாம் தாள், விரிவாக விடை அளிக்கும்வகையில் இருக்கும். உரிய கல்வித் தகுதியும் வயதும் உடையவர்கள் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தைப் (ஷ்ஷ்ஷ்.ssநீ.ஸீவீநீ.வீஸீ)பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன்வழியில் தாள் 1 தேர்வு பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. 2ஆம் தாள் தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப் படும். 

எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம் பணியாளர் தேர்வாணையத்தின் இணையத ளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

 


யு.பி.எஸ்.சி., யின் 414 பணியிடங்களுக்கான தேர்வு

யு.பி.எஸ்.சி., எனப்படும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன், மத்திய அமைச்சகப் பணி களுக்கான பொது எழுத்துத் தேர்வுகளை நடத்தி அதன் மூலம் நிரப்பி வருகிறது. இந்த அமைப்பின் சார்பாக ‘கம்பைண்டு டிபன்ஸ் சர்வீஸ் தேர்வு -  (சி.டி.எஸ்.,) 2018’அய் நடத்துவதற்கான அறி விப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வு மூலம் 414 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

காலியிடங்கள் டேராடூனிலுள்ள இந்தியன் மிலிடரி அகாடமியில் 100ம், எழிமலாவிலுள்ள இந்தியன் நேவல் அகாடமியில் 45ம், அய்தராபாத்திலுள்ள ஏர்போர்ஸ் அகாடமியில் 32ம், சென்னையிலுள்ள ஆபிசர்ஸ் டிரெய்னிங் அகாடமியில் (ஆண்) 225ம், சென்னையிலுள்ள ஆபிசர்ஸ் டிரெய்னிங் அகாடமியில் (பெண்) 12ம் என மொத்தம் 414 காலியிடங்கள் உள் ளன.
வயது, தகுதி, விண்ணப்பிக்கும் பிரிவுக்கு தகுந்தபடி வயது மாறுபடுகிறது. சரியான தகவல்களைப் பெற இணையதளத்தைப் பார்க்கவும். கல்வித் தகுதி அய்.எம்.ஏ., மற்றும் ஓ.டி.ஏ.,வுக்கு ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பு தேவைப்படும். நேவல் அகாடமிக்கு இன்ஜினியரிங்கில் பட்டப் படிப்பு தேவைப்படும். ஏர்போர்ஸ் அகாடமிக்கு விண்ணப்பிக்க இயற்பியல், வேதியியல், கணிதத்துடன் கூடிய பட்டப்படிப்பு தேவைப் படும். முழுமையான தகவல்களை இணைய தளத்தில் அறியவும். ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் : 200 ரூபாய்.

தேர்ச்சி முறை பொது எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்ச்சி இருக்கும். கடைசி நாள் : 2017 டிச., 4. விபரங்களுக்கு: www.upsc.gov.in/sites/default/ files/Notification_CDSE_I_2018_Engl.pdf


வளர்ச்சி என்ற பெயரில் இயற்கையை அழிக்கத் தொடங்கியதன் விளைவாக இன்று மனிதச் சமூகம் சுனாமி, புவி வெப்பமடைதல், ஓசோன் படலத்தில் ஓட்டை எனப் பல பிரச் சினைகளில் சிக்கித் தவிக்கிறது.
இந்நிலையில், திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை, தாராபுரம் சாலையில் உள்ள ஆர்.கே.ஆர். கிரிக்ஸ் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் க. திருவருள்செல்வன், வாகனங்கள் வெளியேற்றும் புகையால் காற்று மாசடை வதைக் குறைக்க மிகக் குறைந்த செலவிலான எளிய தீர்வை கண்டறிந்துள்ளார்.

அவரது புதிய கண்டுபிடிப்பு, அக்டோபர் 11,12,13ஆம் தேதி கரூரில் நடந்த அறிவியல் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டு, போட்டியில் முதல் பரிசும் பெற்றது.

அடுத்த கட்டமாக, தென்னிந்திய அளவிலான போட்டியில் பங்கேற்கவும் திருவருள்செல்வன் தேர்வு செய்யப்பட்டி ருக்கிறார். இவர் ஏற் கெனவே நீர் மேலாண் மைக்கு உதவும் வகையில் குறுஞ்செயலி ஒன்றை உருவாக்கி உள்ளார்.

தொழிற்சாலைகள், வாகனங்களில் இருந்து வெளியேற்றப்படும் புகையினால் கடுமை யான சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதைத் தவிர்க்க ஒரு மாத உழைப்பில் இரு சக்கர வாகனத்தில் பொருத்தப்படும் புதிய புகைப்போக்கியை உருவாக்கி உள்ளேன்.

சோற்றுக் கற்றாழையை மூலப்பொருளாகக் கொண்டு, நவீன அறிவியல் கண்டுபிடிப்பு களின் உதவியுடன் சிலிண்டரை வடிவமைத் துள்ளேன்.

இதன் மூலம் ஒரு முனையில் புகையை உள்வாங்கும் இக்கருவி அதில் உள்ள மாசினைக் குறைத்து வெளியே அனுப்பும். இவ்வாறாக 50 சதவீதம்வரை மாசுவைக் குறைக்கிறது. இதே தொழில் நுட்பத்தை மேம் படுத்தினால் 90 சதம்வரை மாசுவைக் குறைக்கலாம்.

தற்போது கண்டுபிடிக்கப்பட்ட கருவிக்கு ரூ.1800வரை செலவானது. இதை டி.வி.எஸ். 50 மோட்டார் சைக்கிளில் பொருத்திப் பரி சோதனை செய்து காண்பித்துள்ளேன். அதிக சி.சி. திறனுடைய மோட்டார் சைக்கிள்களிலும் இதைப் பொருத்தலாம். ஆனால், அதற்குச் சற்றுக் கூடுதல் செலவாகும் என்கிறார் திரு வருள்செல்வன்.

நவீன உலகத்தின் சவாலாக விளங்கும் மாசு குறைபாட்டுக்கு, இம்மாணவர் கண்டு பிடித்திருக்கும் கருவி பேருதவியாக இருக்கும் என்றே வல்லுநர்கள் கருதுகின்றனர்.

நீதிமன்றத்தில் பல்வேறு காலிப் பணியிடங்கள்   

சேலம்  மாவட்ட நீதிமன்றத்தில் பல்வேறு பிரிவுகளில் 23 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிட விபரம் : கம்ப்யூட்டர் ஆப்பரேட்டரில் 6ம், சீனியர் பெய்லியில் 2ம், ஜூனியர் பெய்லியில் 5ம், ஜெராக்ஸ் மெசின் ஆபரேட்டரில் 7ம், பதிவு எழுத்தரில் 3ம் சேர்த்து மொத்தம் 23 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

வயது : விண்ணப்பதாரர்கள் 18 - 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் பதவிக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேசன்ஸ் பிரிவு ஒன்றில் பட்டப் படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக முடித்திருக்க வேண்டும். பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம்., படிப்புடன் கம்ப்யூட்டர் அப்ளி கேசனில் டிப்ளமோ தகுதி உள்ளவர்களும் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். சீனியர் பெய்லி மற்றும் ஜூனியர் பெய்லி இரண்டு பதவிகளுக்கும் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஜெராக்ஸ் மெசின் ஆப்பரேட்டர் பதவிக்கு பத்தாம் வகுப்பில் தேர்ச்சியுடன் குறைந்த பட்சம் இரண்டு வருட காலம் ஜெராக்ஸ் மெசினை பயன்படுத்தியதற்கான அனுபவம் சான்றி தழுடன் தேவைப்படும். பதிவு எழுத்தர் பதவிக்கு பத்தாம் வகுப்பில் தேர்ச்சி தேவைப்படும்.

விண்ணப்பிக்க : பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பப் படிவத்தை முழுமையாக நிரப்பி, பாஸ்போர்ட் புகைப்படம் ஒட்டி, செல்ப் அட்டெஸ்ட் செய்த சான்றிதழ் நகல்களுடன் பதிவுத் தபாலில் மட்டுமே பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். முழுமையான தகவல்களை இணையதளத்திலிருந்து அறிந்து அதன் பின்னர் மட்டுமே விண்ணப்பிக்கவும்.  The Principal District Judge, Principal District Court, Namakkal 637 003..
கடைசி நாள் : 2017 நவ., 20.

விபரங்களுக்கு : http://ecourts.gov.in/india/tamil-nadu/namakkal/recruitment

மாணவர்கள் இணைந்து தொடங்கிய

“உதவிடத்தான் பிறந்தோம்” - வாட்ஸ்அப்

வீணற்றவைகளைப் பகிர்ந்துகொள்வதற்கு மட்டுமே சமூக வலைத்தளங்களைப் பலர் பயன் படுத்தும்போது, மருத்துவ உதவி, அப்பா இல்லாத குழந்தைகளின் கல்விக் கட்டண உதவி, தன்னார்வ அமைப்புகளுக்குத் தேவைப்படும் மளிகைப் பொருட்களை வாங்கித் தருவது, பழங்குடி மக்களின் குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்விஅளிக்க முயல்வது ஆகியவற்றுக்கு வாட்ஸ் அப், ஃபேஸ்புக் போன்ற வற்றைப் பயன்படுத்தி வருகின்றனர் தாம்பரத்தைச் சேர்ந்த சில கல்லூரி மாணவர்கள்.

கடந்த ஆண்டு 20 முதல் 30 மாணவர்கள் இணைந்து தொடங்கிய - உதவிடத்தான் பிறந்தோம் என்னும் வாட்ஸ்அப் குழுவில் தற்போது 300 பேர் இணைந்துள்ளார்கள். தந்தையை இழந்த

குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்றுக்கொள்வது, இன் னும் அவர்களுக்குத் தேவைப்படும் மற்ற உதவி களை அளிப்பதே இக்குழுவினரின் பிரதான நோக்கம்.

பளிச்சிடும் பள்ளிச் சுவர்கள்

சுற்றுப்புறச் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வைப் பள்ளி மாணவர்களுக்கு ஏற்படுத்திவரும் இக் குழுவினர் தாம்பரம், தியாகராய நகர், பெருங் களத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த அரசுப் பள்ளிகளின் சுவர்களுக்கும் வெள்ளையடிக் கிறார்கள்.

தொடக்கப் பள்ளிகளுக்கு ஆத்திசூடி எழுதுவது, நடுநிலைப் பள்ளிகளுக்குக் கல்வி தொடர்பான ஓவியங்களைத் தீட்டுவது இவர்களுடைய வார இறுதித் திட்டம். அதோடு பள்ளியை ஒட்டி அமைந்திருக்கும் பேருந்து நிறுத்தத்தில் ஒட்டப் பட்டிருக்கும் தேவையற்ற விளம்பர போஸ்டர்களை அப்புறப்படுத்தி, பேருந்து நிறுத்தத்தையும் சுத்தப் படுத்துகின்றனர்.

விளிம்பு நிலை மக்களுக்கான மருத்துவ முகாம் களை ஒருங்கிணைப்பது, கொடையாளர்களிட மிருந்து குருதி பெற்றுத் தருவது போன்ற பணிகளையும் செய்துவருகின்றனர்.

உதவி தேவைப்படுபவர்கள் இந்த குரூப்பில் பதிவிடுவார்கள். அவர்களின் கோரிக்கை என்ன, உண்மையிலேயே அவர்களுடைய நிலை என்ன என்பதை அவர்களின் வீட்டுக்குச் சென்று பரிசோ தித்தும், பள்ளி, கல்லூரிகளிலிருந்து குறிப்பிட்ட மாணவருக்கான கல்விக் கட்டணத்தை உறுதி செய்யும் சான்றிதழைப் பெற்றும் அவர்களுக்கான உதவியைச் செய்கிறோம். இப்படி இந்த ஆண்டு மட்டும் பொறியியல் மற்றும் கலைப் படிப்புகள் படிக்கும் மாணவர்களுக்கும் பிளஸ் 1 படிக்கும் ஒரு மாணவிக்கும் கல்விக் கட்டணத்தை உதவியாக வழங்கியிருக்கிறோம்.

கல்பாக்கம் பகுதியில் வாழும் இருளர், பழங்குடியின மக்களின் குழந்தைகளுக்குத் தொடக்கக் கல்வி வழங்கும் சேவையைத் தொடங்கும் முயற்சியில் இருக்கியிருக்கிறோம் என்கிறார் உதவிடத்தான் பிறந்தோம் குழுவில் ஒருவரான விஜய்.


Banner
Banner