Banner

இளைஞர்

youtube   ஐ நாம் இணையத்தின் டிவி என்று சொல்லலாம். மிகப் பிரபல மான இந்த தளத்தில் கிடைக்காத வீடியோக்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அவ்வளவு வீடியோக்கள் உள்ளன. ஒரு நிமிடத்தில் சராசரியாக 48 மணிநேர வீடியோ Youtube    தளத்தில் Upload செய்யப்படுகிறது. இதை ஒரு டிவி சேனல் என்று வைத்தால் இந்தியாவில் அதிகம் பேரால் பார்க்கப்படும் பத்தாவது மிகப் பெரிய சேனல் இது.

இவ்வளவு பெரிய தளத்தில் சாதாரணமானவர்களும் பணம் சம்பாதிக்க முடியும் என்றால் நம்பு வீர்களா? அது தான் உண்மை.  எப்படி என்று பார்ப்போம். Charlie bit my finger என்ற வீடியோவை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். இரண்டு சிறுவர்கள் இருக்கும் இந்த வீடியோ சேனல் பல கோடிகளை சம்பாதித்து உள்ளது. இதே போல நிறைய பேர் உள்ளார்கள்.  Digital Inspiration தளத்தின் நிர்வாகி அமித் அகர்வால் சேனல் இது  Labnol.. இவர் இந்தியாவின் மிகப் பெரிய Tech Blogger.

தனது தளம் மட்டும் இன்றி Youtube மூலமும் இவர் வருமானம் பெறுகிறார். தனி நபர்கள் மட்டும் இன்றி தொலைக்காட்சி நிறுவனங்கள், மற்ற நிறுவனங்கள் பலவும் Youtube மூலம் பணம் சம்பாதிக்கின்றன. விஜய் தொலைக்காட்சியின் சேனல்.

STARVIJAY  முதலில் இதற்கு என்ன தேவை என்று சொல்லி விடுகிறேன். நடிக்க தெரிய வேண்டும். அவ்வளவு தான். உடன் ஒரு கேமரா இருந்தால் போதும்.

எப்படி சம்பாதிப்பது?

Step – 1

ஒரு கேமரா எடுங்கள், உங்களுக்கு விருப்பமானதை எல்லாம் படம் பிடியுங்கள். நாய்க்குட்டி, பூனை குட்டி, உங்கள் குழந்தை செய்யும் சேட்டை, உங்கள் மனைவி செய்யும் சமையலை எப்படி என்ற குறிப் போடு, மிமிக்ரி, நடனம், பாட்டு, இசை என எது வேண்டும் என்றாலும்.

Step – 2

இப்போது எடுத்த வீடியோவை உங்கள் கணினியில் Movie Maker போன்ற வீடியோ எடிட்டிங் மென்பொருளில் போட்டு மெருகேற்ற வேண்டும். ஒன்றும் பெரிய விசயமில்லை, தேவை இல்லாத இடங்களை நீக்க போகிறீர்கள். பின்னணியில் குரல் சேர்க்க வேண்டும் என்றால்  ரெகார்ட் செய்து அதையும் சேருங்கள். ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால், வீடியோவை பார்க்கும் படி எடிட் செய்யுங்கள்

Step – 3

இப்போது Youtube  தளத்துக்கு செல்லுங்கள். உங்கள் ஜிமெயில் கணக்கை கொண்டு நுழைந்து  Upload  என்ற பட்டனை கிளிக் செய்து உங்கள் வீடி யோவை  Upload  செய்யுங்கள்.

Step – 4

இப்போது உங்கள் வீடியோ குறித்த தகவல்களை தர வேண்டும். எளிதில் கவரும் வண்ணம் ஆங்கிலத்தில் தலைப்பு வையுங்கள், வீடியோவில் என்ன உள்ளது என Description பகுதியில் சொல்லுங்கள். Tags பகுதில் வீடியோவை தேடுதலுக்கு எளிதான வார்த்தைகளாக கொடுக்க வேண்டும். எப்படி Tags கொடுப்பது என்று Youtube கொஞ்சம் ரகசியங்கள் என்ற பதிவில் சொல்லி உள்ளேன். இப்போது “Public” என்று தெரிவு செய்து Save செய்து விடுங்கள்.

Step – 5

முதல் நான்கு ஸ்டெப்களை தொடர்ந்து செய்து கொண்டே வாருங்கள்.

Step – 6

உங்கள் வீடியோக்களுக்கு நிறைய  ஏநைறள வந்தால் அல்லது உங்கள் வீடியோ உங் களுக்கு சொந்தமான வீடியோ என்றால் Youtube உங்களுக்கு கீழே உள்ளது போல “Invitation to earn revenue from your YouTube videos”  என்று  ஒரு மின்னஞ்சல் அனுப்பும். அதில் உள்ள லிங்கில் சென்று உங்கள் தகவல்களை நீங்கள் தர வேண்டும். அந்த - YouTube Partner Program: Interest Form:  இப்போது Youtube உங்கள் வீடியோக்களை சோதிக்கும், நிறைய வீடியோக்கள் இருக்க வேண்டும், நிறைய பேர் பார்க்க வேண்டும்.

இதை தான்  Youtube எதிர்பார்க்கும். எல்லாம் சரியாக இருப்பின் உங்களுக்கு  Partner என்ற அந்தஸ்து வழங்கப்படும். பலருக்கு இது நிராகரிக்கப்படலாம். மீண்டும் Apply செய்ய இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டும். ஆனால் வீடியோ Upload செய்யாமல் இருக்காதீர்கள்.

தொடர்ந்து உங்கள் வேலையை செய்யுங்கள். இரண்டு மாதத்துக்கு பின் இன்னும் அதிக Video, Views,  உடன் மீண்டும் Apply செய்யுங்கள். இடையில் உங்களுக்கு Adsense கணக்கு இருந்தால் அதன் மூலம் சம்பாதிக்கும் வாய்ப்பையும்  Youtube வழங்கும். (என் லெவல் இது தான்). இதில் வீடியோ Upload செய்த உடன்   Monetize My Video என்பதை கொடுக்க வேண்டும்.

இப்போது உங்கள் வீடியோ குறிப்பிட்ட சில நாட்களுக்கு Review செய்யப்படும். வீடியோ உங்களுடையது என்று Youtube  உறுதி செய்த உடன், Monetized என்று ஆகி விடும்.

Partner, Adsense இரண்டுக்கும் உள்ள வித்தியாசம்.  Adsense கணக்கு மூலம் வரும்,  Earning, Partner அய் விட குறை வாக இருக்கும்.  [Partner கணக்குக்கு Views க்கு 2.50$ என்று சொல்லப்படுகிறது இதில் Adsense கணக்கை சேர்க்க, நீங்கள் Youtube கணக்கில் நுழைந்த உடன், Youtube இதை கேட்கும். கேட்க வில்லை என்றால் காத்திருக்கவும்.

இரண்டில் எது உங்களுக்கு கிடைத்தாலும், உங்கள் வீடியோவுக்கு Youtube இரண்டு வகையான விளம்பரங்களை காட்டும்  Overlay in-video ads  - வீடியோவின் கீழே வரும் குட்டி விளம்பரம்   TrueView in-stream ads– வீடியோவுக்கு முன் வரும் சில நொடி விளம்பர வீடியோ நீங்கள் எவ்வளவு வீடியோ Upload செய்கிறீர்கள் என்பதை பொறுத்து தான் உங்களுக்கு பணம் கிடைக்கும். மிகக் குறைந்த வீடியோ என்றால் அதற்கேற்ப தான் வருமானமும்.

எந்த மாதிரி வீடியோக்களை Upload  செய்யலாம் ?

சமையல் குறிப்புகள், தொழில்நுட்ப விஷயங்கள், திரை விமர் சனங்கள், வீடியோ டுடோரியல்கள், அழகு குறிப்புகள், மிமிக்ரி, சுற்றுலா தள வீடியோக்கள், பாடல்கள், இசைக் கோவைகள், வீடியோ ப்ளாக்கிங், அனிமேஷன் முயற்சிகள். போன்றவை. கொஞ்சம் ஆங்கில அறிவு இருந்தால் இன்னும் அதிகமாக வருமானம் பெற முடியும். தமிழும் கூட பயன்படுத்தலாம். ஆனால் சினிமா வீடியோ, பாடல் எதையும் நீங்கள் இதில் பயன்படுத்த முடியாது. வீடியோவானது முழுக்க முழுக்க உங்களுடையதாக உங்களால் உருவாக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.

வீடியோவுக்கு எந்த காரணம் கொண்டும்  Youtube தரும்  Audio swap வசதியை பயன்படுத்தாதீர்கள். அந்த ஆடியோக்களை பயன்படுத்தினால் அதில் வரும் விளம்பரம் மூலம் வரும் வருமானம் உங்களுக்கு வராது. உங்கள் முயற்சிகளை பொறுத்து தான் இது ஈமு கோழி போடும் முட்டையா அல்லது, பொன் முட்டை இடும் வாத்தா என்பது தெரிய வரும்.   You tube குறித்த மற்ற கேள்விகளை கீழே கேளுங்கள். பதில் சொல்கிறேன்.

நன்றி: பிரபுகிருஷ்ணா
(கற்போம்)

அரசுத்துறை சார்ந்த பணி இடங்களை இந்தியாவின் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எனப்படும் யு.பி.எஸ்.சி., அமைப்பு செய்து வருவது நாம் அறிந்ததுதான். இந்தியாவின் பாதுகாப்புப் படைகளில் இணைவதற்காக நேஷனல் டிபன்ஸ் அகாடமி மற்றும் நேவல் அகாடமி ஆகியவற்றின் மூலம் சேர்க்கை நடத்தப்படுகிறது.

மொத்தம் 55 காலி இடங்களைக் கொண்ட இதற்கான தேர்வை நடத்த யு.பி.எஸ்.சி., அமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  திருமணம் ஆகாத ஆண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். இவர்கள் 02.07.1995க்கு பின்னரும் 01.01.1998க்கு முன்னரும் பிறந்தவராக இருக்க வேண்டும். நேஷனல் டிபன்ஸ் அகாடமிக்கு விண்ணப்பிப் பவர்கள் பிளஸ்2 அளவிலான படிப்பை வெற்றிகரமாக முடித்திருக்க வேண்டும்.

இதே அகாடமியின் நேவல் மற்றும் ஏர் போர்ஸ் பிரிவிற்கு விண்ணப்பிக்க பிளஸ்2 படிப்பை இயற்பியல் மற்றும் கணிதப் பாடங்களுடன் முடித்திருக்க வேண்டும்.  என்.டி.ஏ., மற்றும் அய்.என்.ஏ., பிரிவிற்கான யு.பி.எஸ்.சி., தேர்விற்கு விண்ணப்பிக்க ரூ.100/-அய் ஏதாவது ஒரு ஸ்டேட் வங்கிக் கிளையிலோ அல்லது நெட் பேங்கிங் முறையிலோ அல்லது டெபிட்/கிரெடிட் கார்டு வாயிலாகவோ செலுத்த வேண்டும்.

இதன் பின்னர் ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்துத் தேர்வு மற்றும் இதர வழிகளில் இந்தப் படிப்பிற்கான தேர்ச்சி முறை இருக்கும். எழுத்துத் தேர்வை தமிழ் நாட்டில் சென்னை, தாராபுரம், மதுரை ஆகிய மய்யங்களில் எழுதலாம். முழுமையான தகவல்களைப் பின்வரும் இணையதளத்தைப் பார்த்து அறிந்து அதன் பின்னரே விண்ணப்பிக்கவும்.

ஆன்-லைனில் பதிவு செய்ய இறுதி நாள்: 03.06.2013

இணையதள முகவரி: www.upsc.gov.in/exams/notifications/2013/bda2/nda2_13_eng.pdf

கோவை அருகே உள்ள தமிழ்நாடு பொறியியல் கல்லூரி (டி.இ.சி.) மாண வர்கள், அதிக மைலேஜ் தருவதுடன் குறைந்த அளவு புகையை வெளியேற்றும் வகையில் கார் என்ஜினை வடிவமைத்து காப்புரிமை பெற்றுள்னர்.

தமிழ்நாடு பொறியியல் கல்லூரியில் ஆட்டோ மொபைல் துறை இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் ஜி.பிரகாஷ், ஆர்.எஸ். முகுந்தன், பி.ஆர்.தேவக்குமார், ஜே.வசந்தகுமார். இவர்கள் நான்கு பேரும் சேர்ந்து பெட்ரோல் கார் என்ஜினை 4 ஸ்ட்ரோக்கில் இருந்து 6 ஸ்ட்ரோக்காக வடிவமைத்துள்ளனர்.

இதுதொடர்பாக மாணவர்கள் கூறி யது: உலகில் நாளுக்குநாள் பெட்ரோல் விலை அதிகரித்து வருகிறது. வாகனங் களில் இருந்து வெளியேறும் புகையால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. இதை முற்றிலும் தவிர்க்கும் வகையில், கார் என்ஜினை மாற்றி வடிவமைக்க முடிவு செய்தோம்.

இதன்படி கார் என்ஜினை 4 ஸ்ட்ரோக்கில் இருந்து 6 ஸ்ட்ரோக்காக மாற்றி சோதனை செய்தோம். இதன் மூலம் பெட்ரோல் பயன்பாடு குறைவதுடன் அதிக மைலேஜ் கிடைக்கும். என்ஜினில் சில உபகரணங்களை பயன்படுத்து வதால் என்ஜின் அதிக சூடு ஏற்படாமல் தவிர்க்கப்படுகிறது. மேலும், சுற்றுச் சூழலை பாதிக்கும் புகை வெளியேறுவதும் குறையும்.

இந்த புதிய முறையை கண்டுபிடிக்க ரூ.2 லட்சம் வரை செலவு செய்துள்ளோம். மாற்றி அமைக்கப்பட்ட என்ஜினை கொண்ட காரை பரிசோதனை முறையில் 200 முதல் 300 கிலோ மீட்டர் தூரம் வரை இயக்கிப் பார்த்தோம். இதில் 18 கிலோ மீட்டர் மைலேஜ் கொடுக்கும் காரை சோதனை செய்தோம். இதில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு அதிகபட்சம் 24 கிலோ மீட்டர் வரை மைலேஜ் கிடைக்கிறது.

இருசக்கர வாகனம், பேருந்து, லாரி களில் கூட என்ஜினை மாற்றி அமைத்து அதிக மைலேஜ் கிடைக்கச் செய்யலாம். அதேபோல நச்சுப் புகை வெளியேற்றப் படுவதையும் குறைக்க முடியும் என்றனர்.

மாணவர்களின் வழிகாட்டி ஆசிரியர் சாய் கணேஷ் கூறியது: பொதுவாக, கார்கள் 4 ஸ்ட்ரோக் வகையைக் கொண் டவை. இதில் மாணவர்கள் ஒரு ஸ்ட்ரோக் கில் மட்டும் தண்ணீரின் உதவி கொண்டு நீராவி மூலம் என்ஜினை இயக்க வைத்து மாற்றி வடிவமைத் துள்ளனர்.

இதன்மூலம் அதிக மைலேஜ் கிடைக்க வாய்ப்புள்ளது. சென்னை கிண்டியில் உள்ள அறிவுசார் சொத்துரிமை மய்யத் தின் மூலம் காப்புரிமை பெற்றுள்ளோம். ஆட்டோமொபைல் துறை தலைவர் கே.சம்பத்குமார் வழிகாட்டுதலின்பேரில் மாணவர்கள் இந்த என்ஜினை வடி வமைத்துள்ளனர் என்றார்.

கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பில் முதல் இடத்தில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 18 வயது இளைஞர்.

கொல்கத்தாவைச் சேர்ந்த ரிதங்கர் தாஸ் இச்சா தனையை நிகழ்த்தியுள்ளார். கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் கடந்த நூறாண்டுகளில் இச்சாதனையை நிகழ்த்திய இளவயது பட்டதாரி ரிதங்கர் தாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

பயோ-என்ஜினீயரிங், கெமிக்கல் பயாலஜி ஆகிய இரு பட்டப்படிப்புகளை இவர் மூன்று ஆண்டுகளில் முடித் துள்ளார். வேதியியல் துறையில் கடந்த 58 ஆண்டுகளில் இச்சாதனை புரியும் முதல் மாணவர் இவர். பயோ என்ஜியனீரிங் துறையில் சாதனை புரியும் முதல் மாணவராக இவர் திகழ்கிறார். தனது 13ஆவது வயதில் ரிதங்கர் விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் ஆய்வுப் படிப்பில் சேர்ந்தார். அதன்பின்பு எரிசக்தி தொடர்பான ஆய்வுகளில் அவர் கவனம் செலுத்தினார்.

அதே போல் சிறந்த கவிஞராகவும், எழுத்தாளராகவும் ரிதங்கர் தாஸ் திகழ்கிறார்.

இதுதொடர்பாக ரிதங்கர் தாஸ் கூறியது: எனது சாதனையை பெற்றோர்களுக்கும், ஆசிரியர் களுக்கும் அர்ப்பணிக்கிறேன். அவர்கள் இல்லையென் றால் இச்சாதனையை செய்திருக்க முடியாது என்றார். பட்டப்படிப்புக்கு பின்பு ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலை பயோமெடிக்கல் என்ஜினீயரிங் பிரிவில் சேர்ந்து படிப்பை தொடர உள்ளார்

இந்தியாவின் இரும்பு உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதற்காக ஸ்டீல் அதாரிட்டி ஆப் இந்தியா எனப்படும் செய்ல் நிறுவனம் துவங்கப்பட்டது. இந்த நிறுவனம் கட்டுமானம், பொறியியல், எரிசக்தித் துறை, ரயில்வே, ஆட்டோமோடிவ் மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கான இரும்பு உற்பத்திக்கு பிரசித்தி பெற்றது.

இந்தியாவின் பொதுத் துறை நிறுவனங் களில் இந்த நிறுவனம் ஒரு மகாரத்னா நிறுவன மாகவும் திகழ்கிறது. இந்த நிறுவனத்தின் ரூர்கேலா கிளையில் மெட்டலாஜி, கெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிகல், இன்ஸ்ட்ரூமெண்டேஷன், எலக்ட் ரானிக்ஸ் ஆகிய பிரிவுகளில் ஆப்பரேட்டர் கம் டெக்னீசியன் டிரெய்னி மற்றும் பிட்டர், எலக்ட்ரீசியன், வெல்டர், எலக்ட்ரானிக்ஸ் ஆகிய பிரிவுகளில் அட்டெண்டண்ட் கம்டெக்னீசியன் டிரெய்னி காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.

செய்ல் நிறுவனத்தின் டெக்னிக்கல் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 28 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இரண்டு பிரிவுகளிலான இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் தொடர்புடைய துறையில் பத்தாம் வகுப்புத் தகுதியுடன் 3 ஆண்டு டிப்ளமோ அல்லது அய்.டி.அய்., படிப்பை விண்ணப்பிக்கும் பதவிக்கு ஏற்றபடி முடித்திருக்க வேண்டும்.

இந்தப் பதவியில் இணைய எழுத்துத் தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும். செய்ல் நிறுவன காலி இடங்களுக்கு விண்ணப் பிக்க ரூ.250/-அய் கட்டணமாக செலுத்த வேண்டும். எழுத்துத் தேர்வுக்கான மய்யம் தமிழ் நாட்டில் கிடையாது. ரூர்கேலா, சம்பல்பூர், புவனேஸ்வர், கட்டாக், ஜம்ஷெட்பூர், ராய்பூர் அல்லது கோல்கட்டா ஆகிய ஏதாவது ஒரு மய்யத்திலேயே எழுத வேண்டும்.

இந்தப் பதவிக்கு ஆன்-லைன் முறையிலேயே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். முழுமையான விவரங்களைப் பின்வரும் இணையதளத்திலிருந்து அறியவும். விண்ணப்பிக்க இறுதி நாள் : 08.06.2013

இணையதள முகவரி: http://sail.shine.com/media/documents/home/HOME_FULL&232

அண்மைச் செயல்பாடுகள்