Banner
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெங்களூரு, எம்.ஜி., ரோட்டில் உள்ள மெட்ரோ ரயில் நிலையம்...

வண்ண மய மான சிறகு ஒன்று, காற்றில் மிதந்து வருவது போல மெட்ரோ ரயில் வந்து நின்றது. பயணிகள் அனைவரும் இறங்கிய பின், கடைசியாக டிரைவர் கேபினில் இருந்து விமான பைலட் போல ஒரு பெண் இறங்கினார். அவர் தான்.....

மெட்ரோ ரயிலின் முதல் பெண் டிரைவர். பெயர் பிரியங்கா. வயது: 21. வீட்டிற்கு போகும் அவசரத்தி லும், புன்னகை சிந்தியபடி, தான் மெட்ரோ ரயில் ஓட்டுநரான கதையை கூறினார். எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் படிப்பில் டிப்ளமோ முடித்தவர். மின்சார பயன்பாட்டில் அதிக சக்தியுடன் இயங்கும் மெட்ரோ ரயில் ஓட்டுநராக வேண்டும் என்பது இவர் கனவு. இதற்காக நிறைய படித்து, நிறைய உழைத்து, தன் கனவை நனவாக்கி விட்டார்.

டில்லி சென்று, அங்குள்ள மெட்ரோ ரயிலை, ஆறு மாதகாலம் ஓட்டி, பயிற்சி எடுத்தார். பயணிகளின் பாதுகாப்பும், சிக்னல்களின் முக்கியத்துவம் குறித்தே நிறைய வகுப்புகள் எடுக்கப்பட்டன. பின், பெங்க ளூருவில் ஓடும் மெட்ரோ ரயிலின் முதல் பெண் ஓட்டுநராக நியமனம் பெற்று, ஆயிரம் பயணிகளுடன் மகாத்மாகாந்தி ரோடு நிலையத்தில் இருந்து, பையனப் பஹள்ளி வரை, ரயிலை ஓட்டிய முதல் அனுபவம் மறக்க முடியாதது. வயிற்றில் பட்டாம்பூச்சி பறந்த திரில்லான நேரமது என்கிறார். வெற்றிகரமாக இவர் மெட்ரோவை இயக்கி வருவதை அடுத்து, தற்போது மேலும், மூன்று பெண்கள், மெட்ரோ ஓட்டுநராக நியமனம் பெற்றுள் ளனர். வேலை முடிந்ததும், பேருந்தை பிடித்து பெங்களூருவில் இருந்து, 30 கி.மீ., தூரத்தில் உள்ள, தன் கனகபுரா கிராமத்திற்கு போய் விடுகிறார்.

விவசாயியின் மகளான இவர், தற்போது, வீட்டி லேயே அதிகம் சம்பாதிப்பவராக இருந்தாலும், நகரத் திற்கு இடம் பெயரவில்லை, காரணம், இனிமையான கிராம வாழ்க்கை பிடித்து விட்டது இவருக்கு. மெட்ரோ ரயிலை பிரமாதமாக ஓட்டும் பிரியங்காவிற்கு, இன்னமும் சைக்கிள் ஓட்டத் தெரியாது.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

அண்மைச் செயல்பாடுகள்