
கேப்டன் லட்சுமி என அனைவராலும் அழைக் கப்படும் லட்சுமி சாகல், 1943ஆம் ஆண்டு நேதாஜியால் தொடங்கப் பெற்ற இந்திய தேசிய இராணுவத்தில் பெண் கள் பிரிவான ஜான்சி ராணிப்படை பிரிவின் தலைமை பொறுப்பை வகித்தவர் ஆவார். இந்த ஜான்சி ராணிப் படையே ஆசியாவின் முதல் பெண் படையணியாகும். 20 சிங்கப்பூர் பெண் களை கொண்டு அமைக்கப்பட்ட இப்படையில் பின்னர் 1500 பெண்கள் வரை சேர்ந்தனர். நேதாஜியின் அமைச் சரவையில் ஒரே பெண் அமைச்சராகவும் லட்சுமி சாகல் திகழ்ந்தார். அடிப்படையில் மருத்துவரான இவர், சென்னையில் பிறந்தவர். உலகப்போருக்கு பின்னர் இந்திய மேலவை உறுப்பினராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது