Banner
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

1888 ஷில்லாங் நகரில் சாதாரணக் குடும்பத்தில் பிறந்த ஹேமந்த் குமாரி என்ற பெண்மணி பெண்கள் படும் துன்பங்களைக் களைய வழி தேடினார். தான் கற்ற கல்வியை வைத்து பெண்களுக்கு விழிப்புணர்வைக்கொண்டுவர முயற்சி செய்தார்.

புதிய சிந்தனைகளுடன் புறப்பட்ட அவர் ஆக்ரா, லாகூர், கொல்கத்தா ஆகிய நகரங்களில் சென்று பத்திரிகைத்துறை பற்றிய ஞானத்தை வளர்த்து கொண்டார். அதன் பிறகு அவர் அந்த பத்திரிகை துறையையே பெண்களின் துயரம் தீர்க்கும் ஆயுதமாக்கினார்.

1893ஆம் ஆண்டு முதல் முதலாக உத்திரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் சுகிரஹினி என்ற பத்திரிகையை பெண்களுக்காக ஆரம்பித்தார். ஆரம்பத்தில் அவரது பணிக்கு மக்களின் மத்தியில் அவ்வளவு ஆதரவு இல்லை. மனம் தளராத ஹேமந்த் ஜி தனது பணியை தொடர்ந்து நடத்தி வந்தார். சில வருடங்களில் அவரது பணி அனைவராலும் பாராட்டப்பட்டது.

அவரது பத்திரிகை பெண்களிடம் மிகவும் பிரபலமானது. பல மாதங்களாக ஒரு பிரதி கூட வாங்க ஆளில்லாமல் இருந்த பத்திரிகை உத்திரப் பிரதேசம் எங்கும் பிரபலமானது. இவரது பணியைப் பாராட்டி ஆங்கிலேய அரசு இவருக்கு சர் பட்டம் கொடுக்க முன் வந்தது.

ஆனால் ஆண் ஆதிக்கம் மிகுந்த உத்திரப்பிரதேசத்தில் இவருக்கு அந்த பட்டம் கிடைக்காமல் அரசியல் புள்ளி ஒருவரால் அது தடுக்கப்பட்டுவிட்டது. இவர் இந்தியாவின் முதல் பெண்  மாநகராட்சி ஆணையாளராக பணியாற்றிய பெருமையையும் தட்டி சென்றவர். டெராடூன் நகர மாநகராட்சி ஆணையர் பதவியை அலங்கரித்தவர் இவர்தான்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

அண்மைச் செயல்பாடுகள்