இந்தியாவின் முதல் பெண் பைலட் கேப்டன் பிரேம் மாதூர். உத்திர பிரதேசத்தை சேர்ந்த மிகப்பெரிய விவசாய குடும்பத்தில் மூன்றாவது பெண்ணாகப் பிறந்த பிரேமா மாதூர். வீட்டில் மிகவும் கட்டுப்பாடு, அவரது பள்ளிப்படிப்பு முதல் கல்லூரி படிப்பு வரை வீட்டில் பெற்றோர்களின் கடுமையான எதிர்ப்பு.

வழக்கறிஞரான அவரது மூத்த அண்ணாவின் பரிவால் பெற்றோரின் தடைகளையும் மீறி பொறியியல் கல்வி பயின்று முடித்தார். அவர் பொறியியல் பயின்றது விமானம் ஓட்டத்தான் என்று அன்று யாருக்கும் தெரியவில்லை.
1947ஆம் ஆண்டு தனது மூத்த அண்ணாவிடம் தனக்கு விமானம் ஓட்ட வேண்டும் என்ற தனது ஆசையை சொன்னார். படிப்பை முடித்ததற்கே வீட்டில் இத்தனை எதிர்ப்புகள், விமானம் ஓட்ட விட்டில் இசைவார்களா? இருப்பினும் தனது பெற்றோருக்கு தெரியாமல் அலகாபாத்தில் உள்ள விமான பயிற்சி நிலையத்திற்கு பிரேமா மாதூரின் அண்ணன் அழைத்து சென்றார்.
விமான பயிற்சி பயில்வது 3 வாரங்களுக்கு பிறகுதான் வீட்டிற்கே தெரிய வந்தது. அவரது அண்ணன் அனைவரையும் சமாதனம் செய்து வைத்து பிரேமாவின் பைலட் கனவு தொடர ஆதரவு அளித்தார். 1948ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் கமர்சியல் பைலட் என்ற பெருமை அவரை சென்றடைந்தது.
அதை தொடர்ந்து அவர் உலகில் உள்ள 7 விமான நிறுவனங்களுக்கு பணிக்கான விண்ணப்பங்களை அனுப்ப சுமார் 5 வருடம் எந்த நிறுவனமும் இவரை கண்டு கொள்ளவில்லை. இடையில் பயிற்சி பைலட்டாக பணி புரிந்து கொண்டிருந்தார். டாடாவின் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் அலகாபாத்தில் தனது முதல் விமான ஓட்டத்தை துவங்கியது.
இந்த விமானத்தில் கோபைலட்டாக பணியாற்ற பிரேமாவிற்கு அழைப்பு விடுத்தது. ஒரு முறை புது டில்லியில் இருந்து கொல்கத்தா நோக்கி சென்று கொண்டிருக்கும்போது தனது சக பைலட்டிடம் நான் இந்த விமானத்தைக் கொண்டு செல்கிறேன் என்று சொன்னபோது அதற்கு அவருடன் பணி செய்து கொண்டிருந்த ஆண் விமானி நீங்கள் விமானத்தை ஓட்டுவது பற்றி பயணிகளுக்கு தெரிந்தால் அவர்களின் இதயம் நின்று விடும் என்று கூறினார். இந்த பதிலால் மனம் உடைந்த பிரேமா அந்த நிறுவனத்தில் இருந்து விலக முற்பட்டார்.
இதை அறிந்துகொண்ட ஜாம்ஷெட் ஜி டாடா தனது பர்சனல் பைலட்டாக அவரை பணியில் அமர்த்தினார். தனது வாழ்நாளில் சுமார் 7 வருடங்கள் பைலட்டாக பணியாற்றிய பிரேமா பணியில் உள்ள ஆர்வத்தால் திருமணம் செய்யாமல் இருந்தார். அவர் தனது 31ஆம் வயதில் மரணமடைந்தார்.