எழுத்துரு அளவு Larger Font Smaller Font

எலிசபெத் பிளாக்வெல், அமெரிக்காவின் முதல் பெண் மருத்துவர். பெண்களின் மருத்துவக் கல்விக்கான முன்னோடி அவர். 1821இல் இங்கி லாந்தில் பிறந்து 1830இல் நியூயார்கில் குடும்பத்துடன் குடியேறினார்.

பள்ளிக்கூடம் நடத்தினார். அதில் இழப்பு ஏற் பட்டதால் டியூஷன் எடுத்தார். மகளிர் உரிமைக்காகப் போராடினார். பிரச்சாரங்களில் பங்கேற்றார். உடல் நலம் குன்றி மறைந்த தோழியின் பிரிவு தந்த பாதிப்பால் மருத்துவம் பயின்றார்.

பெண் என்பதால் முதலில் நிராகரிக்கப்பட்ட அவர், இறுதியாக நியூயார்க் ஹோபர்ட் கல்லூரியில் படித்து, 1849இல் மருத்துவப் பட்டம் பெற்றார். நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஏராள மான சொற்பொழிவுகள் ஆற்றினார். பல கட்டுரை களை எழுதினார். பெண்களின் உடல், மன வளர்ச்சி குறித்துப் புத்தகம் எழுதினார். லண்டன் மருத்துவக் கல் லூரியில் விரிவுரை யாளராகப் பணியாற்றினார். 1910இல் 89ஆவது வயதில் மறைந்தார். அவரது 198ஆவது பிறந்தநாளைக் கொண் டாடும்விதமாக பிப்ரவரி 7 அன்று சிறப்பு டூடுலை கூகுள் வெளியிட்டது.