எழுத்துரு அளவு Larger Font Smaller Font

டில்லியில் கூட்டு வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட நிர்பயாவின் மரணத்துக்குப் பின் நாடெங்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்குப் பல்வேறு நடவடிக்கைகளை அரசும் தன்னார்வ அமைப்புகளும் எடுத்தன. பொது இடங்கள், பேருந்து, ரயில் பயணங்களின்போது சீண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகும் பெண்களைக் காப்பாற்ற 2017 ஏப்ரலில் பெண்களுக்குத் தற்காப்புக் கலையைக் கற்றுத்தரத் தொடங்கியது கோட்டயம், கங்கழா கிராமத்தின் பஞ்சாயத்து.

கேரளக் காவல் துறையைச் சேர்ந்த அய்ந்து முதன்மைப் பயிற்சியாளர்கள் ஒரு துணைக் குழுவுக்குப் பயிற்சியளித்தனர். அந்தக் குழுவினர், கிராமத்திலிருக்கும் பெண்களுக்குப் பயிற்சியளிக்கும் வகையில் இந்தத் தற்காப்புப் பயிற்சித் திட்டத்தை வடிவமைத்தனர்.  தவறான நோக்கத்துடன் நெருங்கு பவர்களிடமிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்வது, தேவைப்பட்டால் தாக்குவது போன்றவற்றுடன் சட்டரீதியான விழிப்புணர்வு போன்ற பிற விஷ யங்களையும் இந்தப் பயிற்சியில் பெண் களுக்குச் சொல்லித் தந்திருக்கிறோம் என்கிறார் வைக்கம் காவல் நிலையத்தின்  காவல்துறை அதி காரியும் பெண்களுக்குத் தற்காப்புப் பயிற்சியளிக்கும் திட்ட ஒருங்கிணைப்பாளருமான ஹேமா சுபாஷ்.

 

 

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner