எழுத்துரு அளவு Larger Font Smaller Font

முன்பெல்லாம் குழந்தைகள் சுட்டிக்காட்டி இது என்ன மரம் என்று கேட்டுவந்தனர். இது மாமரம், இது வேப்ப மரம், இது ஆலமரம் எனக் குழந்தைகளுக்கு மரங்களைக் காட்டி உணர்த்திய காலம் ஒன்று இருந்தது. இன்று அவற்றைப் புத்தகங்களின் வாயிலாகத்தான் சுட்டிக் காட்ட வேண்டிய சூழல் உள்ளது. சென்னை போன்ற நகரங்களில் மரங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது.

வெயிலுக்கு ஒதுங்குவதற்கு மரங்களுக்குப் பதில் பிளாஸ்டிக் கூரையைத் தேடும் நிலையே இன்று நமக்கு உள்ளது. மும்பை, டில்லி போன்ற பெருநகரங்களுடன் ஒப்பிடும்போது சென்னை மிகவும் குறைவான பசுமை நிலப்பரப்பைக் கொண்டுள்ளது. பொதுமக்களின் உடல்நலனுக்குப் பசுமையற்ற இந்தச் சூழல் மிகுந்த ஊறு விளைவிப்பதாக உள்ளது.

பசுமையை மீட்டெடுக்கச் சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவின் இணை இயக்குநரான சுதா ராமன் ஒரு மாற்று வழியைக் கண்டுபிடித்துள்ளார். தொழில்நுட்பத்தின் உதவியுடன்    எனும் செய லியை அவர் உருவாக்கியுள்ளார். அது வெளிவந்த சில நாட்களிலேயே பொதுமக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அந்தச் செயலியில் 150 நாட்டு மரங்கள் குறித்த தகவல்கள் உள்ளன.

நமக்குத் தெரியாத மொழியின் சொற்களை அகராதியில் பார்த்துத் தெரிந்துகொள்வது போல, நமக்குத் தெரியாத ஒரு மரத்தின் பெயரையும் அதன் பயனையும் இந்தச் செயலியின் மூலம் தெரிந்துகொள்ளலாம். தமிழிலும் ஆங்கிலத்திலும் இந்தச் செயலி உருவாக்கப்பட்டுள்ளதை இதன் தனிச்சிறப்பு எனலாம்.

தகவல்களைத் தெரிந்துகொள்ள இப்போது யாரும் பேப்பரையும் புத்தகத்தையும் நம்பியிருக்கவில்லை, செல்பேசியைத்தான் நம்பி உள்ளோம். செல்பேசி மூலமாகத்தான் நிறைய செய்திகளை நாம் தெரிந்துகொள்கிறோம். இந்தச் செயலியை நான் உருவாக்கியதற்கான காரணமும் அதுவே என்கிறார் சுதா.

இந்தச் செயலியை செல்பேசிகளில் இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். இதுவரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இதைத் தரவிறக்கம் செய்துள்ளனர். கூகுள் ப்ளே ஸ்டோரில் 4.8 என்ற தரப்புள்ளியை இந்தச் செயலி பெற்றுள்ளது. இந்தச் செயலியை ஒரு முறை தரவிறக்கம் செய்துவிட்டால், மீண்டும் அதைப் பயன்படுத்த இணையதள வசதி தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக, அடுக்குமாடிக் குடியிருப்புகளிலும் நிறுவனங்களிலும் ஆழமாக வேர் விடும் மரங்களுக்கு மாற்றாக எதற்கும் பயன்படாத மரங்களை வளர்ப்பார்கள். அதற்குப் பதிலாக மூங்கில் போன்ற மரங்களை வளர்க்கலாமே என்பது போன்ற தகவல்களை இந்தச் செயலி அங்கு வசிப்பவர்களுக்கு வழங்குகிறது. வீட்டில் சிறிய தோட்டம் வைக்க நினைப்பவர்களோ விவசாயிகளோ, யாராக இருந்தாலும், அவர்களுடைய இடத்தில் என்ன மாதிரியான மரங் களையும் செடிகளையும் வளர்க்கலாம் என்றும் அதற்கான வழி முறைகளையும் இந்தச் செயலி வழங்குகிறது.

மின்சார தேவைக்கு தீர்வு கண்ட அமெரிக்க மாணவி

மானசா மெண்டு இன்னும் இந்த சிறுமிக்கு 15 வயதுதான் ஆகிறது. ஆனால், இவரது சாதனையை உலகமெங்கும் உள்ள மில்லியன்கணக்கானோர் போற்றுகின்றனர். அதற்கு என்ன காரணம் தெரியுமா?

அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தை சேர்ந்த இந்த சிறுமி, வளரும் நாடுகளின் மிகப் பெரிய பிரச்சினையாக உள்ள மின்சார தேவையை தீர்க்கும் எளிமையான வழியை கண்டறிந்துள்ளார்.

இந்த கண்டுபிடிப்புக்காக சில ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்காவின் முன்னணி இளம் விஞ்ஞானிக்கான போட்டியில் முதல் பரிசையும் வென்றுள்ளார்.

ஆனால், வல்லரசு நாடான அமெரிக்காவில் வாழும் ஒரு சிறுமி உலகின் மூலை முடுக்குகளில் வாழும் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கண்டறிந்தது எப்படி என்ற கேள்வி எழுகிறது.

தன்னுடைய குடும்பத்துடன் இந்தியா சென்றிருந்தபோது, முதல்முறையாக ஆயிரக்கணக்கான மக்கள் நாள் முழுவதும் எப்படி மின்வசதி இல்லாமல் வாழ்கிறார்கள் என்பதை நேரில் கண்டதாக மானசா கூறுகிறார்.

மானசாவை சிந்திக்க வைத்த அவரது இந்தியா பயணம். அவர் அமெரிக்காவிற்கு திரும்பிய பிறகு, வெறும் அய்ந்து டாலர் செலவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை கொண்டு மின்சாரத்தை கொடுக்கும் கருவி உருவாவதற்கு காரணமாக அமைந்தது.

“உலகின் பெரும்பாலானோருக்கு இருட்டே நிரந்தரமான வாழ்க்கையாக உள்ளது” என்று பிபிசியிடம் கூறிய மானசா, “நான் அந்த சூழ்நிலையை மாற்ற விரும்பினேன்” என்கிறார்.

இந்தியாவில் மின்சாரம் இல்லாமல் இருக்கும் சுமார் 50 மில்லியன் வீடுகளின் நிலையை மாற்றும் யோசனையை மானசா செயல்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

“ஹார்வெஸ்ட் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கருவியை செயல்பாட்டிற்கு கொண்டுவந்து உலகம் முழுவதும், குறிப் பாக வளரும் நாடுகளை சேர்ந்த மக்களுக்கு மின்சாரத்தை கொடுப்பதே இதன் நோக்கம்“ என்று அவர் மேலும் கூறுகிறார்.

இவர் உருவாக்கியுள்ள கருவி, காற்று, மழை மற்றும் சோலார் தகடுகளின் மூலம் மின்னாற்றலை உருவாக்கும் திறன் படைத்தது.

மின்னாற்றலை உருவாக்குதல்

“எரிசக்தி சேகரிப்பில் வியத்தகு நிகழ்வான அழுத்த மின் விளைவை பயன்படுத்தி எனது பரிசோதனையை தொடங் கினேன்.”

அழுத்த மின் விளைவு உபகரணங்கள் இயந்திர அதிர்வுகளை மின்சாரமாகவும், மின்சாரத்தை இயந்திர அதிர்வுகளாகவும் மாற்றும் திறன் கொண்டது.காற்றினால் ஏற்படும் அதிர்வுகளை மின்னாற்றலாக மாற்றும் கருவியை முதலில் உருவாக்கிய மானசா, அதன் பிறகே “சோலார் தகடுகளை” பதித்து அதன் மூலமும் மின்சாரத்தை உரு வாக்கும் வகையில் தனது கண்டுபிடிப்பை மேம்படுத்தினார்.

“நேரடி இயந்திர அதிர்வுகளை மின்னாற்றலாக மாற்று வதற்கு மட்டுமல்லாமல், காற்று போன்ற மறைமுக அதிர்வு களில் இந்த விளைவை ஏன் பயன்படுத்த கூடாது என்ற எண்ணம் எழுந்தது.”

“எனவேதான், நான் அழுத்த மின் விளைவை காற்றில் பயன்படுத்தி அதை மின்சாரமாக மாற்ற முடிவு செய்தேன்.”

“இந்த கருவியை சோலார் தகடுகளாக பயன்படுத்தியும் மின்சாரத்தை பெற முடியும்.” தான் கண்டுபிடித்த கருவியை வர்த்தக ரீதியாக வெற்றி பெற செய்வதே தனது லட்சியம் என்று இவர் கூறுகிறார்.

“மின்சாரத்தை உருவாக்குவதற்கான மூலங்களை அதிகரிப் பதன் மூலம் வளர்ச்சிக்கான தெரிவுகளை அதிகப்படுத்த முடியும்.”

புதிய சவால்கள்

“எனக்கு இருக்கும் மிகப் பெரிய சவாலே இதற்கான நிதியை உருவாக்கி, அதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் சரியான பங்குதாரரை தேடுவதுதான்” என்று அவர் மேலும் கூறுகிறார்.

“2016ஆம் ஆண்டின் தொடக்கத்தில், ஹார்வெஸ்ட் கருவி குறைந்தளவிலான எரிசக்தியை உற்பத்தி செய்தது. நான் அப்போதே இந்த கண்டுபிடிப்பை எளிதாக அடுத்த நிலைக்கு கொண்டு சென்றிருக்கலாம்.  ஆனால், நடைமுறை சாத்தியம் உள்ளதாகவும் மற்றும் மக்களுக்கு பயன்தரக்கூடிய வகையிலும் இருக்க வேண்டும் என்பதற்காகவே இதை உருவாக்கினேன்.” என்றார்.

தடகள வீராங்கனை சைனி வில்சன்

முப்பது ஆண்டுகளுக்கு முன் கேரளத்திலிருந்து தடகள வீராங்கனைகள் பலர் சர்வதேச அளவில் புகழ்பெற்றிருந்தனர். அவர்களில் சைனி வில்சனும் ஒருவர். 1992இல் பார்சிலோனாவில் நடைபெற்ற ஒலிம் பிக் போட்டியில் இந்திய தேசியக் கொடியை ஏந்திச் சென்ற வீராங்கனை என்ற சிறப்பைப் பெற்றவர் இவர்.

கேரள மாநிலம் தொடுபுழாவில் பிறந்த ஷை னிக்குச் சிறு வயது முதலே விளையாட்டின் மீது ஆர்வம். அவர் ஏழாம் வகுப்பு படித்தபோது, விளை யாட்டுப் போட்டியில் பங்கேற்று  வெற்றிக் கோப்பை யுடன் வீட்டுக்குத் திரும்பினார் ஷைனி. அதைப் பார்த்த அவருடைய பெற்றோர் பூரிப்படைந்தார்கள். உடனே ஷைனியைக் கோட்டயத்தில் உள்ள விளையாட்டுப் பயிற்சிப் பள்ளியில் சேர்த்துவிட்டனர்.

கேரளத்தில் பல்வேறு விளையாட்டுப் பயிற்சி மய்யங்களில் ஷைனி பயிற்சி பெற்றுத் திறமையை வளர்த்தெடுத்தார். இவர் பயிற்சிபெற்ற அதே காலகட்டத்தில்தான் பி.டி. உஷா, வல்சம்மா போன்ற தடகள வீராங்கனைகளும் பயிற்சிபெற்றார்கள். பி.டி. உஷாவோடு சேர்ந்துதான் ஷைனியின் கால்களும் மைதானங்களில் ஓடத் தொடங்கின.

பல்வேறு தேசியத் தடகளப் போட்டிகளில் பங்கேற்ற ஷைனி 1981இல்  800 மீட்டர் ஓட்டப் போட்டியில் தேசிய தடகள வாகையராக உருவெடுத் திருந்தார். அந்தப் பெருமையோடு 1982இல் டில்லியில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் தனது பயணத்தை ஷைனி  தொடங்கினார். 1984இல் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் ரிலே போட்டியில்  இந்திய மகளிர் அணி தடகளத்தில் அரையிறுதிவரை முன்னேறி கவனத்தை ஈர்த்தது. அந்தக் குழுவில் ஷைனியும் இடம்பெற்றிருந்தார்.

1985இல் ஜகார்தாவில் ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டி ஷைனியின் வாழ்க்கையில் மைல்கல். 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் ஷைனி தங்கப் பதக்கம் வென்றார். இதே போல 400 மீட்டர் ஓட்டப் போட்டியிலும் வெள்ளிப் பதக்கம் வென்று முத்திரை பதித்தார். ஷைனியின் ஆகச் சிறந்த வெற்றியாக இது பார்க்கப்பட்டது.  1995 இல் சென்னையில் தெற்காசிய விளையாட்டுப் போட் டிகள் நடைபெற்றன.  800 மீட்டர் தூரத்தை 1:59:85 விநாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்தார். ஷைனியின் திறமையை அங்கீகரிக்கும் வகையில் 1984இல் மத்திய அரசு அர்ஜூனா விருதையும் 1998இல் பத்மசிறீவிருதையும் வழங்கிக் கவுரவித்தது. தற்போது 53 வயதாகும் ஷைனி வில்சன், இந்திய உணவுக் கழக அதிகாரியாகப் பணியாற்றிவருகிறார்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner