எழுத்துரு அளவு Larger Font Smaller Fontசென்னை ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் பிசியோதெரபிஸ்டாகப் பணியாற்றும் திருநங்கை செல்வி, ஒரு பிரபலம் தன்னை உற்றுநோக்கும் கண்களைப் பொருட் படுத்துவதில்லை. பொருளற்ற அந்தப் பார்வைகள் உங்களை நொறுக்கிவிட முடியும் என்றால், மூன்றாம் பாலினத்தவரை தேற்றப்போவது யார்? நீங்கள் வெற்றிபெற்றுவிட்டீர்கள். உங்களை அனைவரும் பார்க்கட்டும். உங்களைப் பற்றியே பேசட்டும். உங்கள் வேலையில் உங்களுக்கென ஓர் அடையாளத்தை ஏற்படுத்துங்கள். அப்போது அது மூன்றாம் பாலினம் என்ற அடையாளமாக மட்டும் இல்லாமல், திறமையின் அடையாளமாக இருக்கும்.

என் பணியிடத்தில் நான் சிறந்த பிசியோதெரபிஸ்டாக இருக்கிறேன். எனது அணுகுமுறையால் நோ யாளிகள் திருப்தியடைகிறார்கள்.

சக ஊழியர்கள் பாராட்டுகிறார்கள். பணியிடத்தில் எனக்கு எவ்விதப் பாகுபாடும் தெரிய வில்லை. எனக்கு ஒரே ஒரு எதிர்பார்ப்பு மட்டும் தான் இருக்கிறது.

ஒவ்வொரு அலுவலகத்திலும் ஆண், பெண் ஊழியர்களுக்குத் தனித்தனியாக அலுவல் அறை இருப்பது போல் திருநங்கைகளுக்கும் தனியான அலுவல் அறை வேண்டும். அப்போது ஆண், பெண், மூன்றாம் பாலினத்தவர் என அனைவருமே சமமான கோட்டில் இயங்க முடியும். திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும். அதை அரசாங்கமே முன்னெடுக்க வேண்டும் என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner