எழுத்துரு அளவு Larger Font Smaller Font

106 வயது யூடியூப் பாட்டி

ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தின் குடிவாடா கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தப் பாட்டி. அவருக்கு இப்போது வயது 106 என்கிறார். வயதைக் கேட்டதும் ஏதோ ஒரு மூலையில் முடங்கிக் கிடப்பார் என்று நினைத்துவிடாதீர்கள். இந்தியா, பாகிஸ்தான், அய்க்கிய அரபு நாடுகள், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற பல நாடுகளில் வசிப்பவர்களும்கூட அவரை அறிவார்கள். உலகம் முழுவதும் அவருக்கு ரசிகர்கள் உள்ளார்கள். அந்த அளவுக்குப் பெயர்பெற்ற அவரது பெயர் மஸ்தானம்மா. அவரது புகழுக்குக் காரணம், அவரது சமையல்தான். அவர் கைப்பக்குவமுள்ள சமையற்காரர்.

வழக்கமான சமையல்காரர்கள் போன்றவரல்ல அவர். சமையலுக்கென எந்தப் பிரத்யேக முன்தயாரிப்பும் இன்றி மிகவும் எளிய உடையில், வயல்வெளியின் திறந்த முற்றத்தில் விறகடுப்பிலேயே சமைத்து முடித்துவிடுகிறார் அவர்.
3 லட்சம் சந்தாதாரர்கள்

அவரது சமையலைப் போலவே அவரது துணிச்சலும் தன்னம்பிக்கையும் அடுத்த தலைமுறை அறிய வேண்டியது. கண்ட்ரி ஃபுட்ஸ் என்னும் அவரது யூடியூப் அலை வரிசையாலேயே பிரபலமானார். அந்த யூடியூப் அலைவரிசைக்கு சுமார் 3 லட்சம் சந்தாதாரர்கள் உள்ளார்கள். உலகின் மிக அதிக வயது கொண்ட யூடியூப் பிரபலமாக அவர் இருப்பதற்கான சாத்தியம்கூட இருக்கிறது. சிறிய கிராமத்திலிருந்த அவரை இன்று உலகம் அறியவைத்ததில் அவருடைய பேரன் லட்சுமணனுக்கும் பங்கிருக்கிறது. அவரும் அவருடைய நண்பரான நாத்தும் சேர்ந்துதான் மஸ்தானம்மாவின் சமையல் நிகழ்ச்சியை யூடியூபில் பதிவேற்றியிருக்கிறார்கள்.
அவர்கள் இருவரும் சேர்ந்து பிரம்மச்சாரிகளுக்கான சமையல் நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய ஒரு யூடியூப் அலைவரிசையை நடத்திவந்திருக்கிறார்கள். இருவருமே பாட்டியின் சமையலை அடிக்கடி சுவைத்தவர்கள்தான். அதன் பாரம்பரிய ருசி ஒரு தனித்த சுவையைத் தந்திருக்கிறது. பாட்டி சமையல் செய்வதை அப்படியே ஏன் யூடியூப் வீடியோவாக்கக் கூடாது என்று நினைத்திருக்கிறார்கள். முதலில் சோதனை முயற்சியாக ஒரு வீடியோவை உருவாக்கி யூடியூபில் பதிவேற்றியுள்ளார்கள். அதற்குக் கிடைத்த எதிர்பாராத வரவேற்பு அவர்களை முடுக்கிவிட்டிருக்கிறது. அதன் பின்னர் மஸ்தானம்மாவின் கைப்பக்குவமான சமையல் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து பதிவேற்றிவருகிறார்கள்.

வயதறியா சமையல்

சமையலில் உதவுவதற்காகத் தன் பேத்தி ராகினியை மட்டுமே மஸ்தானம்மா தன்னுடன் வைத்திருக்கிறார். வெற்றுக் கைகளில் தக்காளியையும், இஞ்சியையும் அவர் உரிக்கும் அழகே தனி. தோல் சுருக்கம் மட்டுமே அவரது முதுமையை நினைவுபடுத்துமே தவிர, அவரது செயல்பாடுகளில் முதுமை முகம் காட்டுவதேயில்லை.

பதினோரு வயதில் திருமணம் செய்துகொண்ட அவரது இல்லற வாழ்வு 22 வயதில் முடிவுக்கு வந்திருக்கிறது. வாழ்வு எப்போதும்போல கரிசனமின்றி நடந்துகொண்டது. ஆனால், அவர் தனது உழைப்பைத் தவிர எதையும் நம்பியிருக்கவில்லை. 5 பிள்ளைகளை வளர்த்தெடுத் திருக்கிறார். அதில் நான்கு பேர் இறந்துவிட்டனர். இழப்புகள் பற்றிய கவலையற்று அவரது வாழ்வு தொடர்கிறது.

உலகத்துக்கே பாட்டி

முட்டைக் கறி, கோழி பிரியாணி, மாட்டிறைச்சி பாயா என நீளும் அவரது சமையல் நிகழ்ச்சிகளில் அதிகப் பார்வையா ளர்களைப் பெற்றிருப்பது வாட்டர்மெலன் சிக்கன் தயாரிப்பு வீடியோதான். சமைப்பதைப் போலவே அதைப் பிறருக்குப் பரிமாறுவதையும் விருப்பத்துடன் செய்துவருகிறார் மஸ்தானம்மா.

இன்னும் தனியாகத்தான் காலம் தள்ளுகிறார். ஆனால் உலகம் முழுவதிலும் அவருடைய வீடியோக்களைப் பார்க்கும் பலருக்கும் அவர் பாட்டியாகவே இருக்கிறார். அவரது சமையலைச் சமைத்துப் பார்த்து ருசித்த ரசிகர் களுக்கு, அவர்களுடைய பாட்டிகளை அவர் நினைவு படுத்துகிறார். அவருடைய உணவின் சுவை நாக்கில் தங்கு வதைப் போலவே அவருடைய நினைவுகள் அவர்களின் நெஞ்சில் தங்கிவிடுகின்றன.

சிலம்பத்தில் பல பதக்கங்கள் பெற்ற புவனேஸ்வரி

ஆபத்தான சூழ்நிலைகளில் ஆயுதங் களைத் தேட முடியாது. ஆனால் கையில் கிடைக்கும் சிறு தடியைக்கூட ஆயுதமாக மாற்ற முடியும் என்கிறார் சிலம்பக் கலைஞர் புவனேஸ்வரி.

சிலம்பம் பல நூற்றாண்டுக் கால வரலாறு கொண்டது. ஈட்டி, வில், வேல், கத்தி போன்ற ஆயுதங்களுக்கு முன் தோன்றியது. விடுமுறையில் கராத்தே, ஓவியம், இசை, நடனம் போன்ற பயிற்சி வகுப்புகளுக்குக் குழந்தைகளை அனுப்பு கிறார்கள். பாதுகாப்புக்காகவும் பாரம் பரியக் கலையைக் காக்கவும் குழந்தை களுக்கு இந்தக் கலையில் பயிற்சியளிக் கலாம்.

பொறியியல் பட்டதாரியான புவ னேஸ்வரி, சிறு வயதிலிருந்தே சிலம்பம் பயிற்சி பெற்றுவருகிறார்.

நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது தோழிகள் தட்டச்சு,  ஓவியம் போன்ற வகுப்புகளுக்குச் சென்றனர். மாமா என்னைச் சிலம்பம் வகுப்பில் சேர்த்துவிட்டார். அந்த வயதில் சிலம்பம் என்றால் என்ன என்றே தெரியாது. முதலில் கம்பைத் தூக்கிச் சுழற்றவே கடினமாக இருந்தது. கொஞ்ச நாளிலேயே லகுவாகக் கம்பைச் சுழற்றக் கற்றுக் கொண்டேன். இப்போது ஆண்களால்கூட என் கம்பின் சுழற்சிக்கு முன்னால் நிற்க முடியாத அளவுக்குச் சிலம்பத்தில் தேர்ச்சி பெற்றிருக்கிறேன்என்று சொல்லும்போது புவனேஸ்வரியின் முகத்தில் பெருமிதம் தெரிந்தது.

தேசிய அளவில் மூன்று தங்கப் பதக்கங்களையும் இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும் பெற்றிருக்கிறார். சிலம்பக் கலையில் சிறப்பாகச் செயல் பட்டதற்காகத் தமிழக அரசின் கலை இளம் மணிவிருதும் புவனேஸ்வரிக்குக் கிடைத்துள்ளது.

சிலம்ப வகைகளான சுருள் வாள் சிலம்பம், இரட்டைக் கம்பு சிலம்பம், வேல் கம்பு, கத்தி கம்பு, புலி வேஷம், மான் கம்பு, கயிறு பந்து சிலம்பம், வளையம், அடி முறை சிலம்பம், அலங்காரச் சிலம்பம், செடி குச்சி, வால் கத்தி, கேடயம் சிலம்பம் போன்ற சிலம்பு முறைகளை மிக நேர்த்தியாகச் செய்கிறார் புவனேஸ்வரி.

கையில் ஒரு தடியை வைத்துக் கொண்டு சுழற்றுவதுதான் சிலம்பம் என்று பலர் நினைத்துக்கொண்டி ருக்கின்றனர். சிலம்பத்தில் சுமார் எழுபது வகைகள் இருந்தன. இப்போது முப் பதுக்கும் குறைவான சிலம்ப வகைகளே எஞ்சி யுள்ளன. கல்லூரி விழாக்களில் சிலம்பம் எடுத்து மேடையில் ஏறினால் அரங்கம் முழுவதும் கைத்தட்டல்களும் விசில் சத்தமும் எதிரொலிக்கும். தமிழகக் கல்லூரி விழாக்களில் நானும் என் சிலம்பமும் கட்டாயம் இருப்போம். பல கிராமியக் நிகழ்ச்சிகளில் என் குழுவின ருடன் சேர்ந்து பங்கேற்றுவருகிறேன் என்று சொல்லும் புவனேஸ்வரி, தற் காப்புக் கலை ஆண்களுக்கானது என்ற தோற்றமே பொதுவாக உள்ளது. சிலம்பம் கற்றுக்கொள்ளும் பெண்களின் எண் ணிக்கை கணிசமாக உயர்ந்துவந்தாலும் பாரம்பரியம் மிக்க கலைகளைப் பாது காக்கத் தொடர் ஊக்குவிப்பு அவசியம் என்கிறார்.

மாநில அரசு சிலம்பத்தை அங்கீகரித்துள்ளது. இதனால் கல்வி, வேலை வாய்ப்பபு ஆகிய துறைகளில் விளையாட்டு ஒதுக்கீட்டில் சிலம்பம் பயின்ற மாணவர்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்கும். கராத்தே கலையை அங்கீ கரித்துள்ள மத்திய அரசு சிலம்பத்தை அங்கீகரிக்கவில்லை. சிலம்பம் போன்ற கலைகளைப் பாதுகாப்பதில் அரசின் பங்கு முக்கியமானது என்று தன்னுடைய

ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் புவ னேஸ்வரி.

இரண்டில் ஒரு பெண்ணுக்கு ரத்தசோகை

மெட்ரோபோலிஸ் ஹெல்த்கேர் நோய் கண்டறியும் ஆய்வகம் சமீபத்தில் இந்தியா முழுவதும் 2 லட்சத்து 18 ஆயிரத்து 200 பெண்களின் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்தது. அதில் இரண்டு பெண்களில் ஒருவருக்கு ரத்த சோகை இருப்பது தெரியவந்துள்ளது. இரும்புச் சத்து குறைபாடு மட்டுமின்றி தாலசீமியா போன்ற வையும் பெண்களிடம் காணப்படுவது தெரியவந்துள்ளது. உலக அளவில் ரத்த சோகை அதிகம் உள்ள பெண்கள் இருக்கும் நாடாக இந்தியா திகழ்கிறது. பஞ்சாப் மாநில அரசும் டெல்லி மாநில அரசும் பெண்களுக்கும் பள்ளி மாணவிகளுக்கும் இரும்புச் சத்து மாத்திரைகளைக் கொடுக்க வுள்ளதாக அறிவித்துள்ளன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner