எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழர்களின் பண்பாடும் பாரம்பரியமும் வெளி நாட்டவர்களால் போற்றிப் புகழப்படுகின்றன. வரலாற்றுச் சிறப்பு மிக்க அரிய பொக்கிஷங்கள் அருங்காட்சியகங்கள் மூலம் பாதுகாக்கப் பட்டுவரு கின்றன. பழம்பெரும் சிலைகள், தமிழர்களின் வாழ்வியல் முறையைப் பறைசாற்றும் பொருட்கள் போன்றவற்றை அருங்காட்சியகத்தைத் தவிர வேறு எங்கும் பார்க்க முடியாது. அருங்காட்சியகத்தைச் சுற்றிப் பார்க்க வருகிறவர்களில் பலர் கடமைக்காக அந்தப் பொருட்களை வேகமாகப் பார்த்துவிட்டுச் சென்றுவிடுகிறார்கள்.

ஒவ்வொரு பொருளுக்குப் பின்னால் இருக்கும் வரலாற்றைத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. இந்த நிலையில் தமிழர்களின் பாரம்பரியப் பெருமைகளை இளைய தலைமுறையினரும் அறிந்துகொள்ளும் வகையில் அவற்றை எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களின் அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி.

400 ஆண்டு பழமையான கலைப் பொருள் தவறிக் கீழே விழும் நொடியில் பல தலைமுறையாக நம் முன்னோர் அவற்றைப் பாதுகாத்துவந்ததின் அருமையை உணர முடியும். பழங்கால அரிய பொக்கிஷங்களை வைத்துதான் நம் மூதாதை யர்களின் வரலாறு, திறமை ஆகியவற்றை அறிய முடிகிறது. அதை எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே பள்ளி, கல்லூரி மாணவி யரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறேன். பெண் களால் கலைப் பொருளையோ, பொக்கிஷங் களையோ சிறப்பாகப் பேணிப் பாதுகாக்க முடியும்.

கல் காவியங்களையும் மரச் சிற்பங்களின் அழகை மட்டும் ரசிக்காமல் அவற்றின் தொழில் நுட்பத்தையும் கலை நுட்பத்தையும் சேர்த்தே ரசித்து உணர வேண்டும். சிலை செதுக்குபவரின் கவனம், சற்றுச் சிதறினால்கூட அதன் வடிவம் மாறிவிடும். அதுபோல்தான் வாழ்க்கையும் தடம் மாறாமல் செல்ல வேண்டும் என்பதைப் பழந்தமிழர் இலக் கணத்திலிருந்தே சுட்டிக் காட்டுவேன் என்கிறார் சிவ சத்தியவள்ளி.

ஆரோக்கியமான உணவுகளின் மகத்துவம் குறித்து இளைய தலைமுறை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகப் பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகளை இவர் நடத்திவருகிறார். சிறுதா னியங்கள் குறித்த கண்காட்சியையும் அருங் காட்சியகத்தில் அடிக்கடி நடத்திவருகிறார். குதிரை வாலி, கேழ்வரகு, கம்பு, சோளம் போன்ற சிறு தானியங்களில் இரும்பு, புரதம், கால்சியம், பொட்டாசியம் போன்ற சத்துகள் நிறைந்திருப் பதையும் தினமும் ஒரு வேளையாவது இந்த உணவை எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியத் தையும் வலியுறுத்திவருகிறார்.

கடல் ஆமை, சுறா, முதலை, பாம்பு, போன்ற வற்றின் எலும்புக் கூடுகளும் பதப்படுத்தப்பட்ட உடல்களும் கன்னியாகுமரி அருங்காட்சியகத்தை நோக்கிப் பார்வையாளர்களை ஈர்க்கின்றன.

இந்த உயிரினங்களால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும், பிளாஸ்டிக் கழிவுகளால் உயிரினங்கள் அழிவது குறித்தும், வருங்காலத்தில் அவற்றை எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார் சிவ சத்தியவள்ளி. - சிவ சத்தியவள்ளி

சிவில் சர்வீஸ் தேர்வெழுதி, இந்தப் பணி எனக்குக் கிடைத்தது. அருங்காட்சியகத்தில் உள்ள பொருட்களைப் பாதுகாப்பது மட்டும்தான் என் வேலை. ஆனால் அருங்காட்சியகத்தில் இருப்பவை வெறும் காட்சிப் பொருள்கள் அல்ல. ஒவ்வொன்றும் மனித வாழ்வின் அடிச்சுவடிகள்.

வாழ்க்கை முறையில் முன்னோர்கள் பயன் படுத்திய பொருட்களை வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருப்பதில் என்ன இருக்கிறது? அதனால் அருங்காட்சியகத்துக்கு வருகிறவர்களிடம் வரலாற்றையும் பழம்பெருமையையும் எடுத்துச் சொல்வதுடன், பள்ளி, கல்லூரிகளுக்கும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறேன் என்கிறார் வித்தியாசமான சிந்தனை கொண்ட சிவ சத்தியவள்ளி.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மனதில் உறுதி இருந்தால் எந்த வேலையும் கடினமில்லை

ஆண்கள் மட்டுமே செய்துகொண்டிருந்த பல வேலை களை இன்று பெண்களும் செய்ய ஆரம்பித்துவிட்டனர். ஆட்டோ, டிராக்டர், பேருந்து ஓட்டும் பெண்களின் வரிசையில் சேர்ந்திருக்கிறார் குப்பை லாரி ஓட்டும் தூத்துக்குடி ஜெயலட்சுமி. குப்பை லாரி ஓட்டுவது என்றாலே பலரும் இழிவாகத்தான் பார்ப்பார்கள். ஆனால் அதுபோன்ற மனத் தடைகளை உடைத்திருப்பதில்தான் தனித்துத் தெரிகிறார் ஜெயலட்சுமி.

மாநகராட்சியில் வேலை செய்துவரும் ஜெயலட்சுமி, மனதில் உறுதி இருந்தால் எந்த வேலையும் கடினமில்லை என்பதற்கு உதாரணமாகத் திகழ்கிறார்.

ஆசிரியர் பயிற்சி பெற்ற ஜெயலட்சுமிக்கு லாரி ஓட்டுநர் ஆசை வந்தது ஏன்? தன் பெற்றோர் விருப்பப்படி ஆசிரியர் பயிற்சி முடித்தார்.

அவர்களுடைய வீட்டில் அம்பாசிடர் கார் இருந்ததால் தன் அப்பாவின் உதவியோடு கார் ஓட்டக் கற்றுக்கொண்டார். ஜெய லட்சுமியின் தந்தையின் நண்பர் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி வைத்திருந்தார். அதில் பெண் களுக்குக் கார் ஓட்டக் கற்றுக்கொடுக்குமாறு ஜெயலட்சுமியை அழைத்தார்.

நானும் அந்த வேலையைச் செய்து வந்தேன். மற்றவர்களுக்கு ஓட்டுநர் பயிற்சி கற்றுக்கொடுத்துக் கொண்டே நான் கனரக வாகனங்களை ஓட்டப் பழகிக்கொண்டேன். 1996ஆம் ஆண்டு கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று, வேலை வாய்ப்பு அலு வலகத்தில் பதிவு செய்தேன். ஆசிரியை வேலைக்கு முன்பாக ஓட்டுநர் வேலை தேடி வந்தது. அதை மகிழ்ச்சியோடு ஏற்று கொண்டேன் என்று புன்ன கைக்கிறார் ஜெயலட்சுமி.

இவர் முதலில் திருநெல்வேலி மாநக ராட்சியில் வேலை செய்தார். சில காலம் தண்ணீர் லாரி, டிராக்டர் போன்றவற்றை ஓட்டினார். பிறகு குப்பை லாரி ஓட்டும் பணி வழங்கப்பட்டது. கடந்த 12 ஆண்டுகளாகத் தூத்துக்குடி மாநகராட்சியில் குப்பை லாரி ஓட்டிவருகிறார்.

இடையிடையே மேயர், ஆணையரின் கார்களை ஓட்டியிருக்கேன். எனக்குக் கல்வித் தகுதி இருப்பதால், அலுவலகப் பணிக்கு மாறிவிடும்படி அதிகாரிகள் பல முறை சொன் னார்கள். நான் அதை மறுத்துட்டேன். குப்பை லாரியை ஓட்டுவது எனக்குப் பிடித் திருக்கிறது.  காலை ஆறு மணிக்கு வந்து மாலை  அய்ந்து மணிக்கு வீட்டுக்குப் போயிடலாம். இதனால் குடும்பத்தையும் கவனிக்க முடியும். மற்ற வேலையா இருந்தா என்னால குறிப்பிட்ட நேரத்துக்குப் போக முடியாது என்று சொல்லும் ஜெயலட்சுமி, பேக்கரி வைத்திருக்கும் கணவர் ராமமூர்த்திக்கு ஓய்வு நேரத்தில் உதவி செய்துவருகிறார்.

சுத்தம் செய்வது உயர்ந்த பணி

குப்பை லாரி ஓட்டுகிறோம் என்ற எண் ணம் எனக்கு ஒருநாளும் ஏற்பட்டதில்லை. ஒருநாளைக்குக் குப்பையை எடுக்க வில்¬ யென்றால் நகரம் நாற்றமடித்து விடும். அப்படின்னா நகரைச் சுத்தம் செய்யற உயர்ந்த பணியைத்தானே நான் செய்றேன்! இந்த வேலை எனக்கு மன நிறைவைத் தருது. எந்த வேலையா இருந்தாலும் இஷ்டப்பட்டுச் செய்தால் எந்தக் கஷ்டமும் தெரியாது என்கிறார் ஜெயலட்சுமி.

சக ஓட்டுநர்கள், சக பணியாளர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் என்று அனை வரும் கடினமான பணியை ஒரு பெண் செய்கிறாரே என்று ஜெயலட்சுமியை மிகவும் மதிக்கிறார்கள், பாராட்டுகிறார்கள்.

ஆரம்பத்தில் தயக்கம் காட்டிய குடும் பத்தினர், பின்னர் ஜெயலட்சுமியைப் புரிந்து கொண்டனர். கடினமாக இருந்தால் வேலையை விட்டுவிடும்படி பலமுறை கணவர் சொல்லியும், ஜெயலட்சுமிக்கு இந்த வேலையை விடும் எண்ணம் வந்ததில் லையாம்.

எந்த வேலையில் கஷ்டம் இல்லை? கனரக வாகனம் ஓட்டுவதில் ஒரு பெண்ணா எனக்குப் பல கஷ்டங்கள் இருக்கத்தான் செய்கிறது. இருந்தாலும் இந்த வேலையை நான் விரும்பித்தான் செய்யறேன். மனதில் உறுதி இருந்தால் பெண்களால் எந்தக் கடின மான வேலையையும் எளிதாகச் செய்துவிட முடியும். தூத்துக்குடி போன்ற நகரத்தில் வாகனம் ஓட்டுவது சவால்தான். ஆனாலும் எப்பேர்பட்ட போக்குவரத்து நெரிசலையும் என்னால் சமாளிக்க முடியும் என்று தைரிய மாகச் சொல்லும் ஜெயலட்சுமி, வாகனத்தில் ஏற்படும் சின்னச் சின்ன பழுது களைச் சரிசெய்யும் நுட்பங்களையும் கற்றுவைத்திருக் கிறார். சில விபத்துகளையும் சந்தித்திருக்கிறார்.

ஒருமுறை டிராக்டர் ஓட்டும்போது டயர் தனியாகக் கழன்று ஓடியது. அப்போது கொஞ்சம் பதற்றம் வந்ததே தவிர, பயப் படவில்லை என்கிறார் ஜெயலட்சுமி.

நேரம் கிடைக்கும்போது பெண்களுக்குக் கனரக வாகனம் ஓட்டக் கற்றுக் கொடுக்கணும், ஓய்வுக்குப் பிறகு ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி நடத்தணும்னு நிறைய திட்டங்களை வைத்தி ருக்கிறேன், பார்க்கலாம் என்று சொல்லும் ஜெயலட்சுமி, குப்பை எடுக்க நேரமாச்சு என்று சொல்லியபடி லாரியைக் கிளப்பினார்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தெரியுமா உங்களுக்கு....

பெண்களுக்கும் ஆண்களுக்கும் டெஸ்டே ஸ்டீரோன், புரொஜெஸ்டீரோன் என இருவகை ஹார்மோன்கள் சுரக்கின்றன. இந்த ஹார்மோன் சுரப்பு அளவின் அடிப்படையிலேயே ஆண், பெண் பாலினங்கள் பிரிக்கப்படுகின்றன. சில ருக்கு ஆண்களைப் போன்று முகத்திலும் மேல் தட்டிலும் தாடையிலும் முடி வளரலாம். இதற்குப் பரம்பரை காரணங்களும் இருக்கலாம். சில ருக்கு மாதவிடாய் நின்ற பின், வயதான காலத் தில் முகத்தில் முடி வளரும். சிலருக்குக் கருப் பைக் கட்டிகள், நீர்க்கட்டிகள், பிற காரணங் களால் முடி வளரலாம்.