எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஒரு தோல்வி வரும் போது அதி லேயே மூழ்கிக் கிடக்காமல் அதிலிருந்து மீண்டு வருவதே வெற்றிதான். அதற்குப் பிறகு சாதிப்பது  என்பது பெரும் வெற்றி. ஒரு தொழிலில் பெரும் இழப்பை சந்தித்த பின் மீண்டும் முதலாளி ஆகி வெற்றிப் பெற்றிருக்கிறார்  திலகவதி. ஊக்கம் தரும் அவரது வார்த்தைகள் இதோ... நானும் என் கணவரும் சேர்ந்து அண்ணாசாலையில் உணவு விடுதி வைத்திருந்தோம்.  ஒரு கட்டத்தில் ஒரு மென் பொருள் நிறுவனங்களுக்காக பெரிய ஆர்டரை தொடர்ந்து கொடுத்துட்டு இருந்த வங்க திடீரென்று ஆர்டரை குறைச்சிட்டாங்க. மேலும் அதே பகுதியில் பல கடைகள் முளைத்த தால் எங்கள் வியாபாரம் படுத்துவிட்டது. நிறைய இழப்பு வேறு. அதற்குப்பிறகு சில நாட்கள் என்ன செய்வது என்று புரியாமல் திணறினோம் எனக் கூறும் திலகவதி தன் தோல்வியை மூட்டைக் கட்டி வைத்துவிட்டு வேறு தொழிலில் இப்போது ஈடுபட் டிருக்கிறார்.

வியாபாரத்தில் ஈடுபட விருப்பமின்றி என் கணவர் தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந் தார். வீட்டிலே இருந்த எனக்கு சும்மா  இருக்கப் பிடிக்கவில்லை. எப்படியாவது பாடுபட்டு மீண்டும் நல்ல நிலைமைக்கு வர வேண்டும் என்று எனக்குத் தோன்றிக்கொண்டே  இருந்தது. எதாவது சிறிய அளவில் வீட்டில் இருந்தபடியே தொழில் செய்ய லாம் என்று நினைத்து குடும்பத்தில் பேசியபோது என்  கணவர், மாமியார் எல்லாரும் ஒப்புக் கொண்டார்கள். சென்னையில் ஆயத்த இடியாப்பம் எல் லாம் செய்கிறார்கள். ஆனால், நாம ஏன் நம் சொந்த ஊரில் செய்வது போல சேவை என்கிற உணவு வகையை செய்து விற்கக்கூடாது என்று. இடியாப்பம் என்பது குருமா அல்லது தேங்காய்ப்பால் தொட்டு சாப்பிடலாம். ஆனால், சேவையைப் பயன்படுத்தி இனிப்பு, உப்புமா, எலுமிச்சை சோறு என பல வகைகள் செய்யலாம். அதை ஏன் நாம் செய்யக் கூடாதுன்னு தோன்றியது. அதன் பிறகு அதை செய்ய ஆரம்பித்தேன்.

மீண்டு எழலாம் என்று நினைத்த திலகவதிக்கு மேலும் மேலும் பிரச்சினைகள் வந்து கொண்டே இருந்ததாகச் சொல்கிறார்.  இதிலேயும் மறுபடி மறுபடி அடி விழுந்துகிட்டே இருந்தது. முதன் முதலில் இந்த சேவையை செய்து பக்கத்தில் இருந்த  கடைகளுக்குக் கொடுக்க ஆரம்பித்தேன். வாங்க வந்தவர்களில் இதன் அருமை புரியாதவர்கள் இடி யாப்ப விலையோடு இதை  ஒப்பிட்டுப் பார்ப்பார்கள். அதனால் பத்து பாக்கெட் கொடுத்தால் தினமும் ஆறு பாக்கெட்டாவது திரும்ப வந்துவிடும்.இவை வைத்து பாதுகாக்க முடியாத பொருள் என்பதால் தினமும் அவற்றைக் கீழே போட வேண்டி இருக் கும். அதனால் மறுபடி எங்களுக்கு நிறைய இழப்புகள்  மாவரைக்கும் இயந்திரம் எந்நேரமும் ஓடுவதால் உங்கள் வீட்டில் எந்நேரமும் ஒரே சத்தமாக இருக்கிறது என பக்கத்து  வீடுகளில் இருந்தவர்கள் குற்றம் சொல்ல ஆரம்பித்தனர். அதனால் வேறு வீடு மாற்ற வேண்டி இருந்தது. ஆரம்ப காலங்களில் 5  கிலோ அரிசி போட்டு தனியாளாய் அரைத்து வேகவைத்துப் பிழிந்து என எல்லா வேலைகளையும் நானே செய்வேன். அதை கொண்டு சேர்ப்பதில் என் கணவர் எனக்கு உதவி செய்வார்.

அப்போது நான் படும் துன்பத்தைப் பார்த்து வீட்டில் மாமியார், நாத்தனார் எல்லாம் இவ்வளவு சிரமப்பட்டு ஏன் செய்ய வேண்டும்  வேண்டாம் விட்டுவிடு என்றார்கள். இழப்பு ஏற்பட்ட போதும் நான் விடாமல் செய்து கொண்டிருந்தேன். அதி காலை 2.30 மணிக்கு  எழுந்து செய்ய ஆரம்பிப் பேன். ஆறு, ஏழு மணி நேரம் ஆகிவிடும். ரொம்ப களைப்பு இருக்கும். களைப்பை பார்க்காமல்  தொடர்ந்து செய்து கொண்டே இருந்தேன்.அதற்குப் பிறகு வீடுகளில் போய் பேசி, கொடுக்க ஆரம்பித் தேன். சுமையைத் தூக்கிக்கொண்டு அலைய வேண்டி இருக்கும். அதன் பிறகு அடுக்குமாடி குடி யிருப்புகளில் இருப்பவர்கள் வாங்க ஆரம்பித் தார்கள். அதற்குப்பிறகு சிறிய சிறிய உணவகங் களுக்குக் கொடுக்க ஆரம்பித்தேன். படிப்படியாக வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. இப்போது 50 கிலோ அரிசிவரை போட்டு செய்கிறேன். அதற் கேற்ப இயந்திரங்கள் வாங்கி விட்டேன். இப்போது என்னிடம் நான்கு பையன்கள் வேலை செய்கின் றனர்.படித்துக்கொண்டே சிலர் பகுதி நேரமாக காலை நேரத்தில் மட்டும் 2 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை செய்துவிட்டு செல்கின்றனர். தற்போது சென்னையின் பல பகுதிகளுக்கு கொடுத்து  வருகிறேன். பல பெரிய உணவகங்களிலும் வாங்கு கின்றனர். இப்போது வேலை செய்வதெல்லாம் அந்தப் பிள்ளைகள் தான். நான் ஆர்டர் எடுப்பது, மேற்பார்வை பார்ப்பது இவற்றைக் கவனித்துக் கொள்கிறேன். புதியதாகவே நாங்கள் கொடுப்பதால் இப்போது நுகர்வோர் பெருகிவிட்டனர். இப்போது ஒரு மாதத்திற்கு 50,000 முதல் ஒரு லட்சம் வரை  வருமானம் வருகிறது. என் உழைப்பிற்கும் விடா முயற்சிக்கும் கிடைத்த பலனாக இதை நினைக் கிறேன் என்கிறார்.  

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner