மகளிர்


மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் கடலூர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் தங்கப் பதக்கம் வென்றனர்.

தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாநில அளவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் குடியரசு தின மற்றும் பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள் திருச்சி மாவட்டம், முசிறியில் அண்மையில் நடைபெற்றன.

இந்தப் போட்டியில் 19 வயதுக்குள்பட்டோருக்கான லான் டென்னிஸ் இரட்டையர் பிரிவில், கடலூர் மஞ்சக்குப்பம் சிறீவரதம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 12ஆம் வகுப்பு மாணவிகள் ஏ.அபர்ணா, ஜே.ஜெயப்பிரியா ஆகியோர் பங்கேற்றனர்.

இவர்கள் இந்தப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று மாநில அளவில் முதலிடம் பிடித்தனர்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தனியே ஒரு நடைப் பயணம்!

பெண்களைப்  பொறுத்தமட்டில் மார் பகப் புற்றுநோய் அபா யம்  எப்பொழுது வரு மென்று  சொல்ல முடி யாது.

இந்த அபாயத்தைத் தவிர்க்க  விழிப்புணர்வு தேவை. மார்பகப் புற்று     நோய்  அபாயம்  குறித்த  விழிப்புணர்வு பெண் களிடையே ஏற்பட வேண்டும் என்பதற்காக  நீலிமா  என்ற பெண்மணி 350 கி.மீ. காலணி ஏதும் அணி யாமல் விஜய வாடாவிலிருந்து  விசாகப்பட்டணம் வரை பாத யாத்திரை செய்திருக்கிறார்.

விஜயவாடாவிலிருந்து  நீலிமா விசாகப்பட்டணம் போய்ச்  சேர எட்டு  நாள்கள் கால் நடைப்  பயணம்  செய்ய  வேண்டி வந்தது.  இந்த  நடைப் பயணம் மேற்கொள்ள நீலிமா  அய்ந்து மாதங்கள்  வெறும்  கால்களால்  ஓடி  பயிற்சி செய்திருக்கிறார்.  நடை பயணத்தின்  போது  நீலிமாவை  பயமுறுத்தியது சாலையில்  நெளிந்து சென்ற கணக்கிலடங்காத  பாம்புகளாம்.

புள்ளி விவரங்களின்படி  சென்னை, பெங்களூர், மும்பை  நகரங்களில் 35 முதல் 44 வயது பெண்களுக்கு  மார்பகப் புற்று நோய் வரும் அபாயம்  உள்ளதாம்.

கல்வித்துறையை மாற்றிய அனிதா

62 வயதான அனிதா தான் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் எனக்கு அனுப்பிய கடைசி செய்தி இது. ஒரு ஆவணப்படத்தின் தொடக்கக் காட்சியின் வசனங்கள் இவை. அவர் வாழ்நாள் முழுதும் நமக்கு போதித்ததும் இதைத்தான்.

காலத்திற்கும் கல்விக்காக பாடுபட்ட அனிதாவின் இறப்பு நாட்டின் கல்வி துறைக்கு ஏற்பட்ட பெரும் இழப்பு என்கிறார் சக அய்.ஏ.எஸ்.  அதி காரியும் எழுத்தாளருமான உமா மகாதேவன் தாஸ். கர்நாடக மாநிலத்தில் கல்வித் துறையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்திய இந்த அதிகாரி இன்று நம்மிடையே இல்லை. 62 வயதில் காலமானார்.

புதுடில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் எம்.ஏ(மொழியியல்) படித்தவர். ஜெர்மன் மொழியிலும் புலமை உண்டு. எந்தவொரு குழந் தையும் தோல்வியின் பயமின்றி, அச்சுறுத்தும் சூழலின்றி, மகிழ்ச்சியாக தனது கல்வியை கற்க வேண்டும் என்பது முன்னாள் இந்திய ஆட்சியா ளரான அனிதாவின் நோக்கம்.

அதற்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர் அனிதா. இவரது இந்த கல்விமுறை குழந்தைகளின் சுய சிந்தனைக்கு மதிப்பு அளித்தது.

ஒவ்வொரு குழந்தைக்கும் தனிப்பட்ட திறமை உண்டு என்ப தில்லாமல் ஒரே அளவுகோல் எல்லாருக்கும் பொருந்தும் என்ற கொள்கைப்படி எல்லா குழந்தைகளின் திறமைகளையும் ஒரே அள வீட்டால் அளப்பது என்னும் இந்த கல்விமுறையை எதிர்த்துப் போராடியவர் அனிதா.  தன் வாழ்வின் பெரும்பாலான நாட்களை அதற்காகவே செலவிட்டவர்.

அவரது கணவர் சஞ்சயும் இந்த செயற்பாட்டில் அனிதாவிற்கு உறுதுணையாக இருந்தார். என்னுடைய வேலையில் ஒரு சமயம் சோர்வு ஏற்பட்ட சமயத்தில் ஒரு மூத்தவராக அனிதாவிடம் ஆலோசனை கேட்ட போது எல்லா சோர்விலிருந்தும் நீங்கி களத்தில் இறங்கு என எனக்கு அறிவுரை தந்தார். பிறகு தான் பிதார் கிராமத்திற்குச் சென்றேன்.

அங்கே கர்நாடக நலிகலி முறையின் செயல்வழிக் கல்விமுறையின் அட்டைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டி ருந்தன. அவற்றைப் பயன்படுத்தி அந்த வகுப்பறையின் பழைய கல்வி முறையில் மாற்றங்கள் கொண்டு வந்தேன். பல ஆண்டுகளுக்கு முன்பு கருநாடகாவில் நலிகலி முறையை அறிமுகப்படுத்தியவர் அனிதா. ஆரம்பப்பள்ளிகளில் அது முக்கிய அங்கம் வகித்தது. கல்வித்துறை சம்பந்தமான பல்வேறு புதிய கண்ணோட்டங்களை செயல்பாடுகளை அறிமுகப் படுத்தியவர் அனிதா.

அந்த முறையில் பயின்ற ஒரு சிறுமி படிப்பதை ஆசிரியர்கள் பெருமை பொங்க பார்க்கும் ஒரு வீடியோவை அனிதாவிற்கு அனுப்பி இருந்தேன். அவர்களுக்கு இதைவிட திருப்தி வேறு எதுவும் இருந்திருக்காது என நினைக்கிறேன். பல ஆண்டுகளுக்கு முன், தான் தொடங்கிய கல்வி முறை இன்றும் பயன்பாட்டில் இருப்பது பெருமைக் குரிய விஷயம்தானே.  இது அனிதாவின் உள்ளார்ந்த பார்வைக்கும் கடின உழைப் பிற்கும் ஆழ்ந்த அர்ப்பணிப்புக்குமான பரிசு என்கிறார் உமா மகாதேவன் தாஸ்.  

கணினியில் தமிழ் வளர்க்கும் கிராமத்துப் பெண்கள்!

கேள்விகளற்ற மனதில் பயமும் தயக்கமும் மட்டுமே அலையடித்துக்கொண்டிருக்கும். முதல் தலைமுறை பட்டதாரிகளாக கல்லூரியில் காலடி வைக்கும் கிராமத்து இளம்பெண்களின் மனதில் தோன்றி மறையும் ஏக்க மின்னல்கள் அதிகம். நகரத்துப் பெண்களுடன் தன்னை ஒப்பிட்டு அவர்கள் தலையில் ஏற்றிக் கொள்ளும் தாழ்வு மனப் பான்மையே அவர்களின் சிந்தனைச் சாலையில் தடை கற்களாக விழுந்து எல்லாவற்றையும் மந்தப் படுத்தி விடுகிறது.

பின் தனது தனித்திறமைகளை வெளிப்படுத்த தயக்கம் காட்டி, மதிப்பெண் எடுப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி, ஆங்கிலம் பேசத் தடுமாறி என்று அவர்களது நம்பிக்கையை உடைத்தெறியும் அத்தனை ஆயுதங்களும் அவர்களுக்குள்ளேயே உருவாகி  உருக்குலைத்து விடும்.நாமக்கல் மாவட்டம் தோக்கவாடியில் ஆயிரத்து 330 மாணவிகளுடன் நிற்கும் கே.எஸ்.ஆர். மகளிர் கல்லூரி மாணவிகளோ வேறு விதம்! தயக்கம், பயம் எல்லாவற்றையும் ஓட ஓட விரட்டிய இந்தப் பெண்களின் நிமிர்ந்த நன்னடை பிரமிக்க வைக்கிறது.

வாசிப்பு, யோசிப்பு, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பகிர்வு என உலக விஷயங்களை எல்லாம் கிளறி, பிரித்து, மேய்ந்து புதிய சிந்தனைக்கான வாசல்களை எப்போதும் திறந்தே வைத்திருக்கின்றனர் இவர்கள்! இணையத்தில் தமிழில் தகவல்களை ஏற்றும் கணித்தமிழ் பேரவையில் மாணவிகள் கலக்குகின்றனர். பல்வேறு புதிய தகவல்கள், கண்டு பிடிப்புகள் உள்பட படித்த, பிடித்த விஷயங்களை தமிழில் கட்டுரைகளாக எழுதுகின்றனர் (ksrcasw.blogspot.in).

இக்கல்லூரிக்கு வருபவர்கள் எல்லாமே கிராமத்து மாணவிகள். பெரும்பாலும் முதல் தலைமுறை பட்டதாரிகள். வகுப்பறைக்கு அப்பாலும் நடக்கும் புத்தக வாசிப்பே அவர்களது சிந்தனைக்கு சிறகு அளிக்கிறது. வள்ளுவர் வாசகர் வட்டம் புத்தக வாசிப்புக்கான களமாக உள்ளது. விருப்பம் உள்ள புத்தகங்களைப் படித்து வந்து வாசகர் வட்டத்தில் பகிர்ந்து கொள்ளலாம், விமர்சிக்கலாம். இதனால் புத்தகம் வாசிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித் துள்ளது.

மாணவிகளின் கலைத்திறனை வெளிப் படுத்த மெல்லினம் என்ற காலாண்டு இதழ் வெளி யாகிறது... என்று அறிமுகம் செய்கிறார் கல்லூரியின் செயல் இயக்குனர் கவிதா சீனிவாசன்.

துறை சார்ந்த புதிய தகவல்களை தெரிந்து கொள்ள பேராசிரியர்களைக் கொண்ட அறிவுப் பரிமாற்றம் மன்றம் இயங்குகிறது. மாணவிகளின் தயக்கத்தை உடைத்து, ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்க, போராடி ஜெயித்த வெற்றி யாளர்களின் வாழ்க்கை வரலாறுகளை தருகிறோம். கணித மேதைகளின் வாழ்க்கை வரலாற்றை சொல்ல Rhapsodical மன்றம் செயல்படுகிறது.

கணினி அறிவை மேம்படுத்த ஸ்மார்ட் ஸ்டார் மன்றம் இயங்குகிறது. வணிகத்தையும் வார்த்தை களோடு நிறுத்திக் கொள்ளாமல் அதற்கான மாடல் களை உருவாக்கி கண்காட்சி நடத்துகிறோம் என்கிறார் வணிகவியல் துறைத்தலைவர் ராதிகா. கணித்தமிழ்ப் பேரவை மாணவி வைசாலி இரண்டாம் ஆண்டு வணிகவியல் படிக்கிறார்... கல்லூரிக்கு வரும் முன்னர் கணினிப் பயன்பாடு பற்றி பெரிய அளவில் எனக்குத் தெரியாது. கணித்தமிழ் பேரவையில் கணினியைப் பயன்படுத்தி உலகம் முழுவதும் தொடர்பு கொள்ள கற்றுக் கொண்டேன். கணினியில் எனக்கு வேலைவாய்ப்பும் கிடைத் துள்ளது.

இணையத்தில் ஆசிரியராகவும், எழுத்தா ளராகவும், மறுமொழியாளராகவும் இருக்கிறேன் என்கிறார் வைசாலி. பட்டிமன்றங்களில் பட்டை கிளப்பி வரும் பி.எஸ்சி. கணிதம் மூன்றாம் ஆண்டு மாணவி கு.நந்தினி சிந்தனை மன்றத்தால் செதுக்கப் பட்டவர். ஒரு காலத்தில் மேடை ஏறினாலே பேச்சு வராது. அவ்வளவு படபடப்பாக இருக்கும். சிந்தனை மன்றமே என் கண்களைத் திறந்தது.

எனக்குள் இருக்கும் பேச்சாற்றலை கண்டு கொள்ள உதவியது. சிறந்த தொகுப்பாளருக்கான விருதையும் பெற்றது பெருமையாக இருக்கிறது என்கிறார் நந்தினி.

மெல்லினம் இதழை தன் ஓவியங்களால் அழகு செய்யும் சுகன்யா இரண்டாம் ஆண்டு ஆங்கில இலக்கியம் படிக்கிறார். கல்லூரி வந்த பின்னரே ஓவியத்தில் புதிய முயற்சிகள் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. செய்திப் பலகையிலும் என் ஓவியங் களுக்கு தனி இடம் உண்டு. எனது ஓவியங்களை கல்லூரியின் முகநூல் பக்கத்திலும் வெளியிட்டு எனது திறமையை உலகம் அறியச் செய்கின்றனர் என்கிறார் சுகன்யா. மூன்றாம் ஆண்டு பி.எஸ்சி. கணிதம் மாணவி கீர்த்தனா கல்லூரியின் செல்லக் கவிதாயினி.

தலை நிமிர்ந்த பெண்கள்!

பாளையங் கோட்டை யைச் சேர்ந்த பெண்கள், அரசுத் திட்டத்தின் மூலம் தாங்கள் கற்றுக்கொண்ட பயிற்சியை களத்தில் வெளிப் படுத்தி வருகிறார்கள்.

கிராமப்புற பெண்கள் மேம்பாட்டுக்காக பாளையங் கோட்டை தூய சவேரியார் கல்லூரிப் பேராசிரியர்கள் கைகோத்தனர். மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை உதவியுடன் ஸ்டாண்ட் திட்டம் மூலமாகப் பெண்களுக்கு இயற்கை வேளாண்மை பயிற்சி அளித்தனர். சமூக, பொருளாதார நிலைகளில் பெண்களை ஆற்றல்படுத்தும் நோக்கத்துடன் கடந்த 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. தொழில்நுட்பப் பயிற்சிகள் மூலம் கிராமப்புறப் பெண்களின் விவசாயத் திறன்களை உயர்த்தி, அதன் மூலம் வருமானத்தைப் பெருக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டது.

இதற்காக ஸ்டாண்ட் திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களில் பெண்களை ஒன்றிணைத்து பெண்கள் கூட்டமைப்புகள் உருவாக்கப் பட்டன. மொத்தம் 30 கிராமங்களில் 600 பெண்கள் இந்தத் திட்டத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்தக் கூட்டமைப்புகளுக்குத் திறன்சார் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. அதன்படி கல்லூரி வளாகத்தில் பயிற்சி, கிராமங்களில் நேரடி பயிற்சி, அசோலா மற்றும் மண்புழு உரம் உருவாக்கும் களப்பயிற்சி என்று மூன்று கட்டமாகப் பயிற்சி அளிக்கப்பட்டது.

கிராமப்புற பெண்களுக்குப் பயிற்சி வழங்குவதற்காக தூய சவேரியார் கல்லூரி வளாகத்திலேயே இரண்டு இடங்களில் பயிற்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டன.

ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிறுக்கிழமைகளில் அசோலா வளர்த்தல், மண்புழு வளர்த்தல், திசு வளர்த்தல், அலங்கார மீன் வளர்த்தல் போன்ற பயிற்சிகள் தொடர்ச்சியாக அளிக்கப்பட்டன.

பயிற்சியின் முடிவில் தாங்களே அசோலா, மண்புழு உரம் தயாரிப்புப் பணியில் ஈடுபடும் அளவுக்கு கிராமப்புற பெண்கள் ஆற்றல் பெற்றனர். தற்போது வங்கிகளில் கடன் பெற்று சுயமாகத் தொழில் தொடங்கவும் பலர் காத்திருப்பதாகச் சொல்கிறார் இந்தத் திட்டத்தை நெறிப்படுத்தி நடத்தியவரும் தற்போது திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளராகவும் உள்ள ஜான் டி பிரிட்டோ.

இங்கு பயிற்சி பெற்ற பெண்கள் எதிர்காலத்தில் தலைநிமிர்ந்து நிற்பார்கள். பொருளாதார உரிமைகளைப் பெறும் இவர்கள், சமுதாயத்துடன் இணைந்து கிராம வளங்களை உயர்த்துவார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். சில பெண்கள் கடனுதவி பெற்று அசோலா தயாரிப்பில் ஈடுபட்டு, அவரது நம்பிக்கையைக் காப்பாற்றியிருக்கிறார்கள்!

பிரபல எழுத்தாளர் ஊர்வசி புட்டாலியா, இந்திய வரலாற்றில் மூன்று பெண்கள் மிகப் பெரிய செல்வாக்கு செலுத்தியவர்கள் என்று மதிப்பிடுகிறார். அவர்களில் மூன்றாவது நபர், 19 - 20ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த கைகுஸ்ரா ஜஹான். இவர் பேகம்ஸ் ஆஃப் போபால் என்று புகழப்படும் போபால் அரசிகளின் வம்சத்தைச் சேர்ந்தவர். பெண் கல்வி, நிர்வாகச் சீர்திருத்தம் போன்றவற்றுக்காக இன்றளவும் புகழ்பெற்றுள்ள அவர், மக்களால் சர்க்கார் அம்மா என்று அழைக்கப்பட்டார்.

சிறிய வயதில் பெரிய பதவி

போபால் அரச வம்சத்தின் ஷாஜஹான் பேகம் - முகம்மது கான் பகதூரின் மூத்த மகளாகப் பிறந்து உயிர் பிழைத்த ஒரே வாரிசு கைகுஸ்ரா ஜஹான். 1867இல் அவருடைய தந்தை முகம்மது கான் பகதூர் இறக்க, பட்டத்து இளவரசியாக அறிவிக்கப்பட்டார். அப்போது அவருடைய வயது 9. அவருக்கு ஆட்சிப் பொறுப் பாளராக பாட்டி சிகந்தர் பேகம் செயல்பட்டார். சிகந்தர் பேகத்தின் மறைவுக்குப் பிறகு கைகுஸ்ராவின் அம்மா ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். தாயின் இறப்புக்குப் பிறகு கைகுஸ்ரா ஆட்சிக்கு வந்தார்.

கல்விக்கு முன்னுரிமை

தனது பாட்டி, தாயைப் போல தன் ஆட்சிக் காலத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை கைகுஸ்ரா ஜஹான் மேற்கொண்டார். போபாலில் பல முக்கியக் கல்வி நிறுவனங் களைத் தோற்றுவித்தார். 1918இல் நாட்டிலேயே முதன்முறையாகக் கட்டாயத் தொடக்கக் கல்வி போபால் ஆட்சியின் கீழ் அறிவிக்கப்பட்டது. அவரது அரசால் அது இலவசமாகவும் வழங்கப்பட்டது.

அரசுக் கல்வி, அதிலும் குறிப்பாகப் பெண் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தியவர் கைகுஸ்ரா ஜஹான். அவரது ஆட்சிக் காலத்தில் பல்வேறு தொழில்நுட்பப் பயிலகங்கள், பள்ளிகள் உருவாக்கப்பட்டன. தகுதி பெற்ற ஆசிரியர்களின் எண்ணிக் கையையும் அவர் அதிகரித்தார். அகில இந்தியக் கல்வி மாநாட்டின் முதல் தலைவராகவும் கைகுஸ்ரா ஜஹான் செயல்பட்டுள்ளார்.

மேம்பட்ட சுகாதாரம்

இதற்கெல்லாம் மேலாக 1920-ல் இருந்து அவர் இறக்கும்வரை அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் நிறுவன வேந்தராக அவர் திகழ்ந்தார். இன்றைய நாள் வரை அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்துக்கு வேந் தராகச் செயல்பட்ட ஒரே பெண் என்ற பெருமையைக் கொண்டவர் கைகுஸ்ரா ஜஹான்.

கைகுஸ்ரா ஜஹானின் மற்றொரு முக்கியப் பங்களிப்பு பொது சுகாதாரம். பரவலான தடுப்பூசி மருந்துத் திட்டம், அரசு நீர் விநியோகம், சுகாதாரம்-தூய்மைக்கான தரத்தை மேம்படுத்துதல் என மக்களின் ஆரோக்கியத்திலும் அக் கறை காட்டினார். சமூக நலனை மேம்படுத்தும் அடிப்படைத் துறைகளான கல்வி, சுகாதாரப் பணிகளுக்கு இப்படிப் பல்வேறு வழிகளில் அவரது ஆட்சியில் மிகப் பெரிய முக்கியத்துவம் வழங்கப்பட்டது.

நிகரற்ற நிர்வாகம்

கல்வி, சுகாதாரத் துறைகளைப் போலவே வரி சீர்திருத்தம், ராணுவம், காவல்துறை, நீதித் துறை, சிறைத் துறை, வேளாண்மை விரிவாக்கம், பாசன வசதிகள், பொதுப்பணித் துறை போன்றவற்றிலும் கைகுஸ்ரா ஜஹான் பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். 1922இல் சட்டப்பேரவை கவுன்சில், மேலவை ஆகிய வற்றை உருவாக்கியதுடன், நகராட்சிகளுக்குத் தேர்த லையும் நடத்தியுள்ளார்.

1914இல் அகில இந்திய முஸ்லிம் பெண்கள் சங்கத்தின் தலைவராக இவர் இருந்துள்ளார். கல்வி, சுகாதாரம், மற்ற துறைகள் சார்ந்து பல புத்தகங்களை எழுதியுள்ளார். பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். கைகுஸ்ரா ஜஹான் தனது ஆட்சிக் காலத்தில் உலக நாடுகளுக்குச் சென்றிருக்கிறார். 1911இல் லண்டனில் நடைபெற்ற பிரிட் டன் அரசர் அய்ந்தாம் ஜார்ஜ் பதவியேற்பு நிகழ்வில் அவர் பங்கேற்றிருக்கிறார்.

மூவரசிகளின் ஆட்சி

1901 முதல் 1926 வரை 25 ஆண்டு காலத்துக்கு பல்வேறு சீர்திருத்த நடவடிக் கைகளுடன் கைகுஸ்ரா ஜஹான் ஆட்சியை நடத்தினார்.

1926இல் பதவியைத் துறந்து தனது கடைசி மகன் ஹமிதுல்லா கானிடம் ஆட்சிப் பொறுப்பை அவர் ஒப்படைத்தார். நான்கு ஆண்டுகளுக்குப் பின் 71 வயதில் இறந்தார். பேகம்ஸ் ஆஃப் போபால் என்றழைக்கப்படும் பாட்டி, அம்மா, மகள் கைகுஸ்ரா ஜஹானின் ஆட்சிக் காலத்தில் அனைத்து மதப் பண்பாட்டைச் சேர்ந்தவர் களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது குறிப் பிடத்தக்கது.

கைகுஸ்ரா ஜஹானின் அரண்மனையான சதார் மன்ஸி லில்தான் போபால் மாநகராட்சி தற்போது செயல் பட்டு வருகிறது.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கோடிகளில் கொடிகட்டும் தேன்மொழி

பள்ளிப் படிப்பை முடித்ததுமே திருமணம் செய்து வைக்கப்பட்ட தேன்மொழி, இன்று பல கோடிகள் புரளும் ஏற்றுமதித் தொழிலில் முத்திரை பதித்துவருகிறார்!
மதுரை செல்லூரில் பிறந்த இவர், பெண் குழந்தை பிறந்தாலே செலவு என்ற பொதுவான நம்பிக்கையிலிருந்து தப்பவில்லை. அடுத்தடுத்து அய்ந்தும் பெண்களாகப் பிறந் ததில் தேன்மொழியின் அப்பா தனக்குப் பொறுப்பு கூடிப் போனதாக உணர்ந்தார். அதனால் நல்ல வரன் கிடைத்ததுமே பள்ளிப் படிப்பை முடித்திருந்த தேன்மொழியின் திருணத்தை நடத்திவைத்தார். ஆனால் தேன்மொழிக்கோ நிறைய நிறைய படிக்க வேண்டும், ஏதாவது சாதிக்க வேண்டும், தன்னை நான்கு பேர் வந்து பேட்டி எடுக்க வேண்டும் என்றெல்லாம் பல கனவுகள் இருந்தன.

அதில் ஒன்றைக்கூட தன்னால் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கம் அவரது மனத்தை அரித்துக்கொண்டே இருந்தது. தன் தங்கைகள் நான்கு பேரும் கல்லூரியில் படித்தபோது அவரது எண்ணம் இன்னும் தீவிரமானது. கணவர், குழந்தை என்று நாட்கள் நகர்ந்தாலும் குடும்பத்துக்குத் தன்னால் ஆன பொருளாதாரத்தை ஈட்ட வேண்டும் என்ற விருப்பத்தை கணவரிடம் சொன்னார். அவரும் தேன்மொழியைப் புரிந்துகொண்டு ஊக்குவித்தார். அதுதான் தேன்மொழியின் வெற்றிக்கு ஆரம்பப் புள்ளி.

2005ஆம் ஆண்டு மதுரையில் மத்திய அரசு நடத்திய வீட்டில் இருந்தே ஏற்றுமதியாளர் (எக்ஸ்பேர்ட் ஃப்ரம் ஹேம்) கருத்தரங்கில் தேன்மொழி பங்கேற்றார். அந்தக் கருத்தரங்கில் பங்கேற்ற தாக்கத்தால், ஒரு ஏற்றுமதியாள ராகச் சாதிக்க வேண்டும் என்று முடிவுசெய்தார்.

ஒருகாலத்தில் ஆடைத் தொழிலுக்குப் பெயர் போன செல்லூரில் பிறந்து வளர்ந்தால் இந்தத் தொழிலைத் துணிச் சலுடன் தேர்ந்தெடுத்தேன். கணினி பயிற்சி பெற்றேன். எப்போதும் வீட்டு உபயோகப் பொருட்களின் தேவை இருக்கும் என்பதால் அதன் அடிப்படையிலேயே என் தேர்வு இருந்தது. வீட்டு வாசல், வரவேற்பு அறைகளில் பயன்படும் தரை விரிப்புக்கான ஆர்டர் கிடைத்தது என்று சொல்லும் தேன்மொழி இதற்கான போதிய பயிற்சி இல்லாததால், ஈரோடு சென்று தயாரிப்பு முறையைக் கற்றுக் கொண்டேன்.
முதலில் 30 ஆயிரம் ரூபாய்க்கு பிரான்ஸ் நாட்டில் இருந்து ஆர்டர் கிடைத்தது. நான் அனுப்பிய வண்ணத் தரைவிரிப்புகள் திருப்தியாக இருந்ததால், அடுத்து 5 லட்சம் ரூபாய்க்கான ஆர்டர் வந்தது. தொழில் மீது நம்பிக்கை பிறந்தது. தொழிலில் தீவிரம் காட்டினேன். வெளிநாடுகளுக்குச் சென்று தொழில், சந்தைபடுத்தல் நுணுக்கம் ஆகியவற்றைக் கற்றுக்கொண்டேன் என்று சொல்லும் தேன்மொழி, படிப் படியாகத் தன் திறமைகளை மேம்படுத்திக் கொண்டார் .

Banner
Banner