
அலுவலகத்துல போய் உக்காந்து எழுந்து வர்றதுல விருப்பமில்லை. ஏதாவது சவாலான வேலையை செய்யணும்னு நினைச்சேன்... என்கிற சாரதா, தினம் 40 தென்னை மரங்கள் ஏறி இறங்குகிறார்.
சரசரவென நான்கே பாய்ச்சலில் நீண்டு வளர்ந்த தென்னை மரத்தின் உச்சியைத் தொட்டு நிற்கிறார் சாரதா. இரு தோள்களிலும் இரண்டு பைகள் வேறு. சர்வசாதாரணமாக மட்டையைப் பிடித்து ஜம்ப் செய்து மேலேறி உச்சியில் நின்று வேலையைத் தொடங்குகிறார். அண்ணாந்துப் பார்த்தாலே நமக்குத் தலை சுற்றுகிறது. ஆண்களே திக்கித் திணறும் நிலையில், தினம் தினம் தென்னை மரங்கள் ஏறி இறங்குகிறார் சாரதா.
இந்தியாவிலேயே அதிக பரப்பளவில் (790 ஹெக்டேர்) தென்னை மரங்களைக் கொண்ட மாநிலம் கேரளா. தென்னை உற்பத்தியை இன்னும் அதிகரித்து சாகு படியாளர்களுக்கு கூடுதல் லாபம் கிடைக்கச் செய்யும் நோக்கோடு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றன. அவற்றில் ஒன்று தான், புதிய வீரிய ரக தென்னை மர உருவாக்கம். மிகவும் பொறுமையாகவும் பொறுப்பாகவும் செய்யவேண்டிய கடினமான இப்பணியில் பெரும்பாலும் பெண்களே ஈடுபடுகிறார்கள்.
அவற்றில் ஒருவர்தான் மகரந்தச் சேர்க்கையாளர் -சாரதா. காசர் கோட்டை ஒட்டியுள்ள குத்திக்கோல் கிராமத்தைச் சேர்ந்த சாரதாவுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உண்டு. கணவர் கொத்த னார். தைரியமும் ஆர்வமும் இருந்தா யாரு வேணும்னாலும் எந்த வேலையையும் செய் யலாம். எல்லா வகையிலயும் தென்னை எங்க வாழ்க்கையோட கலந்திருக்கு.
தென்னை மரத்துல தேங்காய் வெட்ட, மரம் சுத்தம் செய்யன்னு ஏகப் பட்ட வேலைகள் இருக்கும். ஆனா, ஆட்கள் கிடைக்கிறது சிரமமா இருக்கும். தென்னை மரம் ஏறுறது ஆண் களுக்கான வேலைன்னு ஒரு இலக்கணம் இருக்கு. அதை சிறீமேனி ஜோசப்னு ஒரு விவசாயி தகர்த்துட்டாரு. எளிமையா தென்னை மரம் ஏறுற ஒரு மிஷினை கண்டுபிடிச்ச பிறகு ஆண், பெண் பேதமெல்லாம் காணாமப் போயிருச்சு. நான் டிகிரி முடிச்சவுடனே திருமணம் முடிஞ்சிடுச்சு.
குழந்தைகள் ஓரளவு வளர்ந்த பிறகு ஏதாவது வேலைக்குப் போகலாமேன்னு தோணுச்சு. அலுவலகத்துல போய் உக்காந்து எழுந்து வர்றதுல விருப்ப மில்லை. ஏதாவது சவாலான வேலையை செய்யணும்னு நினைச்சேன். கொச்சியில இருக்கிற தென்னை வளர்ச்சி வாரியம் ஒவ் வொரு மாவட்டத்துலயும் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் கோக்கனட்ஸ் அமைப்பை ஆரம்பிச்சாங்க. அந்த அமைப்புல இருந்து கேரள மாநில வேளாண் அறிவியல் நிலையம் மூலமா தென்னை மரம் ஏற பயிற்சி கொடுக்கிறதா விளம்பரம் வந்திச்சு.
பயிற்சிக்குப் போறேன்னு கணவர் கிட்ட சொன்னேன். முதல்ல அவர் உன் னால அதெல்லாம் முடியாது. கடினமான வேலைன்னு சொன்னார். முயற்சி பண்ணிப் பாக்குறேன்னு சொல்லிட்டு, ஏதோ ஒரு துணிச்சல்ல பயிற்சிக்குப் போனேன். போன பிறகுதான் தப்பா முடிவெடுத்துட்டோம்னு தோணுச்சு. மரத்தை அண்ணாந்து பாக்கும்போதே பயமா இருந்துச்சு. ஆனா, பாதுகாப்பு ஏற்பாடுகளோட ஏறினா எந்த பாதகமும் வராதுன்னு புரிஞ்சுக்கிட்டேன். ரொம்பவும் எளிமையா பழகிடுச்சு.
ஒரே மாசத்துல எவ்வளவு பெரிய மரத்தையும் ஏறக் கத்துக்கிட்டேன். பயிற்சி முடிச்சதும் பயங்கர பிஸி. தேங்காய் வெட்ட, மரம் சுத்தம் பண்ண, மட்டை வெட்டிப்போடன்னு தினமும் வேலை யிருக்கும். நல்ல வருமானமும் கிடைச்சுச்சு. இப்போ பண்ணைப் பயிர் ஆராய்ச்சி நிலையத்துல பாலினேஷன் வேலையை ஒப்பந்த அடிப்படையில செய்றேன்... என் கிறார் சாரதா. சாரதாவோடு கிருஷ்ண வேணி, பிந்து ஆகியோரும் மகரந்தச் சேர்க்கையாளர்களாக வேலை செய்கிறார்கள்.
கிருஷ்ணவேணி காசர்கோடு பை வலிக்கா கிராமத்தைச் சேர்ந்தவர். 24 வயதுதான். இன்னும் திருமணம் ஆக வில்லை. பத்தாம் வகுப்பு படித்திருக்கிறார். முதல்ல ஹார்ட்வேர் கடையில வேலை செஞ்சேன். விளம்பரம் பாத்துட்டுதான் நானும் போனேன். தென்னை மரம் ஏறுறது சாதாரண வேலையில்லை. முதல்ல தைரியம் வேணும்.
எது நடந்தாலும் தாங்கிக்கிற வைராக்கியம் இருக்கணும். பாதி தூரம் ஏறிட்டு கீழே பாத்தா கண்ணெல்லாம் இருட்டிக்கிட்டு வரும். அந்த மாதிரி பயந்து கீழே விழுந்து கை, கால் ஒடிஞ்சவங்கல்லாம் இருக்காங்க. பாதுகாப்பா ஏறணும்...என்கிறார் கிருஷ்ண வேணி.
பொதுவா செடி, கொடி, மரங்கள்ல இயற்கையாவே மகரந்த சேர்க்கை நடக்கும். மகரந்த சேர்க்கையில இரண்டு விதம் இருக்கு. அயல் மகரந்தச் சேர்க்கை, தன் மகரந்த சேர்க்கை... தென்னையைப் பொறுத்தவரை குட்டை தென்னை ரகங்கள்ல தன்மகரந்தச் சேர்க்கை நடக்கும். அதாவது, ஒரு மரத்துல பூக்கிற ஆண் பூவோட மகரந்தம் அதே மரத்துல முளைக்கிற பெண் பூவோட சேந்திடும். நெட்டை ரகங்கள்ல அப்படி நடக்கிற தில்லை. வெளியில் இருந்து மகரந்த சேர்க்கை நடக்கணும். தேனீக்கள், பூச்சிகள் வாயிலா இயற்கையா அது நடக்கும்.
அதையே நாங்க செயற்கையா செய் றோம். ஒரு நெட்டை மரத்தையும் ஒரு குட்டை மரத்தையும் கலக்க வச்சு புதிய ரகத்தை உருவாக்குறோம்... என்கிறார் பிந்து.