
நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி மூலம் ப்ளூட்டோவின் 5ஆவது நிலா வையும் நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித் துள்ளனர். சூரியக் குடும்பத்தில் 10வது கிரகமாக சில காலத்திற்கு முன்பு வரை திகழ்ந்து வந்த ப்ளூட்டோ பின்னர் அதிலிருந்து விலக்கி வைக்கப்பட்டு விட்டது. ப்ளூட்டோவைச் சுற்றிலும் நான்கு நிலாக்கள் இருப்பது இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது 5ஆவது நிலாவை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். எஸ் 2012 என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புதிய நிலா, ப்ளூட்டோவிலிருந்து 12 மைல் தூரத்தில் உள்ளது. ஒழுங்கற்ற வடிவில் காணப்படுகிறது. ப்ளூட்டோவின் 5 நிலாக்களையும் சேர்த்துப் பார்க்கும்போது ரஷ்ய பொம்மை போல இருப்பதாகவும் நாசா விஞ்ஞானிகள் வர்ணித்துள்ளனர்.