
எல்லா காலங்களிலும், எல்லா இடத்திலும், அனைத்துத் தரப் பினரும் வாங்கக்கூடிய விலையில் கிடைக்கும் வாழைப்பழத்தில் உடலுக்குத் தேவையான சத்துக்கள் மலிந்து கிடக்கின்றன. ஆப்பிளை விட பல மடங்கு சிறந்தது வாழைப் பழம் ஆப்பிளில் உள்ளதைவிட இரண்டு மடங்கு அதிகமாக வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட் உள்ளது. பாஸ்பரஸ் மூன்று மடங் கும், புரோட்டீன் அளவு இன்னும் அதிகமாக நான்கு மடங்கும் உள்ளது. வைட்டமின் ஏ மற்றும் இரும்புச்சத்தின் அளவு ஆப்பிளில் உள்ளதைவிட ஐந்து மடங்கு இதில் அதிகமாக இருக்கிறது. பொட் டாசியம் சத்தும் வாழைப்பழத்தில் செறிவாக உள்ளது.
வாழைப்பழத்தில் 23 கிராம் கார்போஹைட்ரேட், 12 கிராம் சர்க்கரை, 2.6 கிராம் நார்ச்சத்து ஒரு கிராம் கொழுப்பு மற்றும் 9 மில்லி கிராம் வைட்டமின் சி உள்ளது. அதாவது உடலுக்கு ஊட்டமளிக்கும் 90 கலோரிகள் இதில் உள்ளன. இத்துடன் எளிதில் ஜீரணத் தன்மை ஏற்படுத்தும் நார்ச்சத்தும் உள்ளதால் உடலுக்கு உடனடியாக புத்துணர்ச்சி கொடுக்கும் ஆற்றல் வாழைப் பழத்திற்குள்ளது. வாழைப் பழத்தில் வைட்டமின் பி நிரம்ப உள்ளது. இது நரம்பு மண்டலத் திற்கு வலு சேர்க்கிறது. இதிலுள்ள இரும்புச் சத்துக்கள் இரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. வாழைப்பழம் தொடர்ந்து உட்கொள்பவர்களுக்கு இரத்த சோகை ஏற்படாது. புகைப்பிடிக்கும் பழக்கம் உடைய சிலர் அப்பழக்கத்தை திடீரென விட்டு விடும்போது அவர்கள் உடலில் ஏற்கெனவே சேர்ந்திருக்கும் நிக்கோடின் என்ற நச்சுப்பொருளை வாழைப்பழத்தில் உள்ள பி6, பி12 வைட்டமின், பொட்டாசியம் மெக் னீசியம் ஆகிய சத்துப் பொருட்கள் சிறிது சிறிதாக உடலிலிருந்து அகற்றி விடும்.